நமது சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

1. அறிமுகம்

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) ஒருவரின் ஆன்மீக பயிற்சிக்கு அடித்தளமாக இறைவனின் நாமஜபத்தை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறது. ஒருவர் தான் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது அதனுடன் நாமஜபத்தை இணைப்பதால் அடையும் நன்மைகள் பல. அதாவது அவரது ஆன்மீக பயிற்சியாகிய நாமஜபம் மேலும் மேலும் மேன்மை அடைகிறது.

2. ஒருவரின் சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் ஏற்படும் விளைவுகள்

நமது நாமஜபமாகிய ஆன்மீக பயிற்சியினால் எவ்வாறு நாம் ஆன்மீகத்தில் படிப்படியாக வளர்கிறோம் என்பதன் முக்கியத்துவம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

நாமஜபத்தின் அம்சம்

முக்கியத்துவம்

இறைவனின் நாமத்தை மட்டும் ஜபித்தல் 10%
சுவாசத்துடன் இணைந்து ஜபித்தல் 30%
சுவாசத்தில் மட்டுமே கவனம் செலுத்துதல்1 50%
நாமஜபத்தின் பலனை அனுபவித்தல் 2
உதாரணத்திற்கு ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தியை அனுபவித்தல்
70%
தான் இறைவனிடமிருந்து பிரிந்து தனித்துள்ளோம் என்றும் தன்னிருப்பையும்  மட்டுமே உணர்தல் 90%
இறைவனுடன் ஒன்றிய நிலையை அனுபவித்தல் 100%

அடிக்குறிப்புகள் :

  • நாமஜபம் செய்வது இறுதியில் நாம் ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.
  • நாம் ஆன்மீகத்தில் வளர வளர நமது ஆன்மீக பயிற்சியினால் நமக்கு கிடைக்கும் ஆன்மீக அனுபவங்களும் அதிகமாகும். அடிப்படையில் நாம் ஆன்மீகத்தின் முதிர்ந்த நிலையை அடைந்தோமானால் இறை நாமத்தின் சூட்சும அம்சங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்போம்.

3. சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் விளையும் நன்மைகள் என்ன?

3.1 வேண்டாத சிந்தனைகள் குறைதல்

தற்காலத்தில் சூழ்நிலையில் சூட்சுமமான ரஜ-தம அதிர்வலைகள் அதிகரித்துள்ளது. இந்த கலிகாலத்தில் மக்களின் ஆன்மீக நிலை மிகவும் குறைந்த அளவில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எந்த மனிதர்களிடம் ரஜ-தம குணங்களின் ஆளுகை அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு பொதுவாக கோவம், பொறாமை, பேராசை போன்ற வேண்டாத சிந்தனைகளும் இருக்கும். இந்த வேண்டாத எண்ணங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சூட்சும நிலையில் சூழலை மாசுபடுத்துகிறது.

நாம் சுவாசிக்கும்போது இந்த வேண்டாத சிந்தனைகளின் சூட்சும அதிர்வலைகள் நம் சுவாசத்துடன் நம்முள் சென்று மனோரீதியாக நம் உறுதி நிலையை பாதிக்கிறது. எனவே நம் சுவாசத்துடன் இறைவனின் நாமஜபத்தை இணைக்கும்போது சூழலில் நிறைந்துள்ள இந்த வேண்டாத சிந்தனைகள் நம்முள் நுழைவதை அது தடுக்கிறது.

அதன் காரணமாக ஒருவர் ஆசைகள் குறைந்து மன அமைதியை அனுபவிப்பதோடு அல்லாமல் மனமும் ஆரோக்கியமான நிலையை அடைந்து அதி விரைவாக மகிழ்ச்சியின் உச்சநிலையான ஆனந்த நிலையை அனுபவிக்கிறார்.

3.2 நிகழ்காலத்தில் வாழ்வது

பெரும்பாலான நேரங்களில் நமது எண்ணங்கள் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டோ அல்லது வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சி குறித்த சிந்தனைகளிலோ சுழன்று திரிந்து கொண்டிருக்கும். இவ்வாறு ஒரு சிந்தனையிலிருந்து பல எண்ணங்கள் கிளைத்து எழுந்து அதன் பயனாக நமது கவனத்தை ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றோடு பலமாக இணைக்கும். உதாரணமாக ஒருவர் எதிர்கொள்ளவிருக்கும் பரீட்சை பற்றியோ அல்லது கடந்த காலத்தில் தன்னை மிகவும் புண்படுத்திய நிகழ்வு பற்றியோ எண்ணி பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

ஆன்மீகத்தில் முன்னேறுவதன் ஒரு அம்சம் யாதெனில் கடந்த கால நிகழ்வுகளை எண்ணி வருந்திக் கொண்டிராமலும் எதிர்காலத்தை எண்ணி கவலை கொள்ளாமலும் எல்லாவற்றையும் விடுத்து நிகழ் காலத்தில் இறைவனை உணர்ந்து கொண்டு வாழ கற்றுக் கொள்வதே ஆகும். மிக உயர்ந்த உன்னதமான ஆன்மீக நிலையில் காலம் என்று ஒன்று இருப்பது இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார். அதனால் கடந்த காலமும், நிகழ் காலமும் மறைந்து எப்பொழுதும் இறைவனுடன் ஒன்றி இருக்கும் ஆனந்த அனுபவத்தைப் பெற முடிகிறது.

எனவே சுவாசத்துடன் இறைவனது நாமஜபத்தை இணைப்பதில் ஒருவர் கவனம் செலுத்துவது என்பது அவர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய பயிற்சியாகும்.

3.3 தொடர்ந்து இறைவனின் நாமஜபம் செய்வது

நாள் முழுவதும் நாம் நமது முயற்சி எதுவும் இன்றியே இடையறாது சுவாசித்து கொண்டிருக்கிறோம். அந்த சுவாசத்தோடு நாமஜபத்தை இணைத்து விட்டால் நமது நாமஜபமும் நாம் மூச்சு விடுவது போன்று நமது இயல்பாகி விடும்.

இது எவ்வாறு நமக்கு மேலும் உதவுமென்றால்

  • இறைவனின் நினைவு நாள் முழுவதும் நம் நினைவில் நிற்கும்.
  • இறைவனின் சக்தியை நாம் மேலும் மேலும் அனுபவத்தில் உணர்வோம்.

3.4 சுற்றுப்புற சூழலின் தூய்மை

நாம் இறைவனின் நாமஜபத்துடன் மூச்சை வெளியே விடுவதன் மூலம் சுற்றுப்புற சூழலை தூய்மையாக்குகிறோம்.

4. நாமஜபத்துடன் கூடவே சுவாசிப்பதை பற்றிய ஆலோசனைகள்

முதலில் சாதாரணமாக மூச்சு விடவும். பிறகு காற்றை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் அத்துடன் நாமஜபத்தை இணைக்க முயற்சிக்கவும்.

ஒருவர் உயிருடன் இருப்பது சுவாசிப்பதினாலேயே அன்றி நாமத்தினால் அல்ல. அதனால் மூச்சு சீராக விடுவதில் அதிக கவனம் செலுத்தி அத்துடன் நாமத்தை  இணைக்க முயற்சி செய்ய வேண்டும். நாமஜபத்திற்கு தகுந்தபடி சுவாசத்தை மாற்றக் கூடாது.

4.1 சுவாசத்துடன் ஜபம் செய்வதற்கான உதாரணம்

பல்வேறு கடவுள்களின் நாமங்களை எவ்வாறு நம் சுவாசத்துடன் இணைப்பது என்பதை பிரதிபலிக்கும் வரைப்படம் பின்வருமாறு. அதிலிருந்து நாமத்தின் எந்தப் பகுதியை மூச்சை உள்ளிழுக்கும்-போது சொல்ல வேண்டும், நாமத்தின் எந்தப் பகுதியை மூச்சை வெளிவிடும்போதும் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

நமது சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?