அலுவலக வேலைகள் அல்லது இதர தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதே எப்படி நாமஜபம் செய்வது சாத்தியம்?
ஆரம்ப காலத்தில், நாம் நாமஜபம் செய்யும் பொழுது, மன ஒருமைப்பாட்டுடன் நாமத்தை உச்சரிப்பதற்கு மிகவும் போராட வேண்டும் போல தெரிகிறது. நம்மில் பலர் மன ஒருமைப்பாட்டிற்காக ஜப மாலை கொண்டும் நாமஜபம் செய்கிறோம். அவ்வாறு இருக்கும்பொழுது யாரேனும் நம்மிடம் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதும், உரையாடும் பொழுதும் நாமஜபம் செய்தல் சாத்தியம் என்று கூறினால் அது கற்பனைக்கு அப்பாற்பட்டது போல தோன்றுகிறது. நம்முடைய மனமானது நாமஜபம் அல்லது தினசரி நடவடிக்கைகள், இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்த இயலும் என்பதுபோல் தோன்றுகிறது.
ஆனால் உண்மையில் நாம் ஆன்மீகத்தில் முன்னேறும் பொழுது, நம்முடைய நாமஜபமானது மிகவும் சூட்சும நிலையையும் தரமான நிலையையும் அடைகிறது. நம் உணர்வுகளில் ஏற்படுகின்ற ஆழ்ந்த நிலையையே சூட்சும நிலையை அடைதல் என்று இங்கு குறிப்பிடுகின்றோம். நாமஜப பயிற்சியின் உயர்ந்த நிலையில், உடல்ரீதியான அல்லது மனரீதியான வேலைகள் செய்யும் பொழுது கூட நம்மால் நாமஜபத்தை செய்ய இயலும். இது எப்படி நடக்கின்றது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நம் ஒவ்வொருவராலும் ஒரே நேரத்தில் எட்டு விதமான செயல்களில் நம் கவனத்தை செலுத்த இயலும். இவை அனைத்தும் ஐம்புலன்களாகிய ஐந்து புறக் காரணங்கள் (காது, சருமம், கண்கள், நாக்கு மற்றும் மூக்கு), மூன்று அந்தக்கரணங்களாகிய வெளிமனம், ஆழ்மனம் (சித்தம் ) மற்றும் புத்தி மூலமாக நடைபெறுகிறது. இந்த உறுப்புகள் அனைத்தும் அதனதன் வேலைகளை செய்கின்றன. நாம் ஒவ்வொரு நாளும் இந்த எட்டு வகையான விஷயங்களும் உள்ளடங்கிய செயல்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் சாலையை கடக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் சாலையை கடக்கும் நேரத்தில் அவரால் சாலை விளக்குகளை கவனிக்கவும், வாகனங்கள் வரும் சத்தம் கேட்கவும், சுற்றியுள்ளவற்றை நுகரவும், சுற்றுச்சூழல் வெப்பமானதா அல்லது குளிராக உள்ளதா என உணரவும், தனது நண்பருடன் உரையாடவும் என அனைத்து செயல்களும் ஒரே நேரத்தில் அவரால் செய்ய முடிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர் தன் மனதில் எவ்வளவு வேகமாக நடக்க வேண்டும், எந்தப் பாதையில் சென்றால் விரைவில் சென்றடைய முடியும் என்ற முடிவையும் எடுக்கிறார். இவ்வாறு நம் ஒவ்வொருவரும் எட்டு வகையான கவனத்தை நம் ஆழ்மனதில் வைத்திருக்கிறோம்.
ஆரம்ப காலத்தில் நாம் நாமஜபம் செய்யும்பொழுது, நாமஜபத்தின் பதிவு வெளிமனம் வரை மட்டுமே இருக்கும். அந்த நிலையில், நமக்கு பிற வேலைகளில் ஈடுபடும் பொழுது நாமஜபம் செய்வது என்பது சற்று கடினமாக தெரியும். நாம் ஆன்மீக பயிற்சியை ஆழ்ந்து செய்யும்பொழுது நாமஜபத்தின் புதிய பதிவுகள் நமது ஆழ்மனதில் பதிவாகிறது. இந்தப் பதிவுகள் பக்திமையம் எனப்படும் ஒரு மையத்தை உருவாக்குகிறது. நமது ஆழ்மனதில் இந்த பக்திமையம் வளர்வதால், நாமஜபம் பற்றிய எண்ணங்கள் ஒளிர்விட தொடங்குகின்றன.
இக்கட்டுரையைப் படிக்கவும் மனதில் தெளிவை ஏற்படுத்தி தூய்மைப்படுத்துவதற்கு நாமஜபம் எவ்வாறு உதவுகிறது?
பக்திமையம் ஆழ்மனதில் 50% க்கும் மேலாக இருக்கும் பொழுது இறைவனின் நாமத்தை ஜபிப்பது என்பது, பிற வேலைகளில் ஈடுபடும் பொழுதும் தன்னிச்சையாக நடக்கிறது. இது பொதுவாக 50% ஆன்மீக நிலையில் ஏற்படுகிறது.
ஆகையால் நாம் முன் குறிப்பிட்ட புரிதலின்படி, எட்டுவிதமான விஷயங்களிலும், நம்மால் ஆழ்மனதில் ஜபித்துக் கொண்டே பிற வேலைகளை மற்ற ஞானேந்திரியங்கள் மூலமாக செய்ய இயலும். எனவே நம்முடைய மனமும் வாயும் உரையாடலில் ஈடுபடும் பொழுது கூட நம்முடைய ஆழ்மனது ஜபித்தலில் ஈடுபடுகிறது. இந்த நிலையில் ஒருவர் தான் செய்யும் அனைத்து செயல்களிலும் இறைவனை ஞாபகப்படுத்திக் கொள்கிறார்.
நாம் சில காலம் தொடர்ச்சியாக நாமஜபத்தை செய்வதை வழக்கமாக கொண்டால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும். எவ்வளவு விரைவில் நாம் அடையலாம் என்பது கீழ் வருவனவற்றை பொருத்து உள்ளது:
- நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கான விருப்பம்
- நாமஜபத்தின் அளவு மற்றும் அதன் தரம்
- பிற விதமான ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுதல் அதாவது:
- ஆன்மீக ஸாதகர்களுடன் ஸத்சங்கம்
- கடவுளுக்கான சேவையில் ஈடுபடுதல் அதாவது ஆன்மீகத்தை பரப்பும் வேலைகளில் ஈடுபடுதல்