ஆன்மீக பயிற்சியால் பித்ரு தோஷங்கள் அகற்றப்பட்டது
1. அறிமுகம்
ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்றாலும், சிறு வயது முதல் அதன்மேல் நாட்டங்கொண்டிருந்தேன். கடவுள் எப்போதும் என்னை கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது .
சடங்கு வழிபாட்டை தினமும் பின்பற்றும் இந்து குடும்பத்தில் நான் வளர்ந்தேன். 11ஆம் வயதிலிருந்தே நான் உபவாசம் இருக்க தொடங்கிவிட்டேன். கடவுளை, குறிப்பாக ஸ்ரீராம் (உயர்நிலை தெய்வம்) எனது இஷ்ட தெய்வம் ஆவார். ஸ்ரீராம ஸ்தோத்திரத்தை ( தெய்வ பாசுரம்) ஸம்ஸ்க்ருததித்தில் கற்க ஆரம்பித்தேன் மற்றும் புனித நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன்; எனக்கு மகான்கள் மீது விருப்பம் இருந்தது. 12ஆவது வயது முதல் ஸ்ரீராம் பெயரை, நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன்.
எங்களது குடும்பத்தில், எனது தம்பி எப்போதும் சில உடல் நலப் பிரச்சினைகளுடன் வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் அனுபவித்து கொண்டிருந்தான். என் இளமை பருவத்தில், எனது குடும்பம் பல சிரமங்களை எதிர்கொண்டது, உதாரணத்திற்கு வீட்டில் விரிசல் ஏற்படுவது, மிதிவண்டிகள் தொலைவது மற்றும் எனது சகோதரர் பல நாட்கள் காணாமல் போய்விடுவதுடன் எனது தாயாரும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதியுற்றார்.
பொதுவாக கடவுளிடம் நல்ல வாழ்க்கைக்கும், கல்வியில் வெற்றி பெறவும் பிரார்த்தனைகள் மூலம் வேண்டிக்கொள்வேன்.1997ஆம் ஆண்டு, ஒரு பெரிய மூளை அறுவை சிகிச்சையால் எனது தம்பியின் பார்வை பாதிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்களோ, தம்பி உயிருடன் இருப்பதே எங்களது அதிர்ஷ்டம் என்று கூறினார்கள். இது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடவுளிடம் கேள்விகளை கேட்டேன், ‘ஏன் இவ்வாறு எங்களுக்கு மட்டும் நடக்கிறது?’ எனது பெற்றோர் உணர்வு ரீதியாகவும், நிதி நெருக்கடியாலும் அவதியுற்றார்கள். இதனால் தொந்தரவு அடைந்த நான், என் சகோதரருக்குப் பதிலாக நான் கஷ்டங்கள் பட்டு, இறக்க வேண்டும் என்றும், எனது சகோதரரை காப்பாற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். என் தம்பியின் குறைபாடன பார்வையால் எல்லாவற்றிற்கும் உதவி தேவைப்படுவதையும் மற்றும் அதை சமாளிப்பதையும் கண்ட நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவரின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுவதுடன் எனது பெற்றோர்கள் வருந்துவதைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு 18 வயதாக இருந்தபோது (1996 இல்), எனது படிப்பை தொடர முழுநேர வேலை செய்யத் தொடங்கினேன் (இளங்கலை எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டம்). தினமும், நான் காலை 6 மணிக்கு எழுந்திருப்பேன், நள்ளிரவுக்குப் பிறகு (சில நேரங்களில் அதிகாலை 2-3 மணி ) படுக்கைக்குச் செல்வேன்.
2. என் மனதின் கேள்விகள்
எனது சகோதரரின் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ஏதோ ஒன்று எங்களுக்குத் தெரியாமல் நிச்சயம் நடக்கிறது என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். என் மனதில் பல கேள்விகள் இருந்தன. அவற்றுள் நினைவில் நிற்பவை ‘ஏன் என் தம்பி மட்டும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், நானோ என் மூத்த சகோதரனோ அல்லாமல்?. ‘மக்களிடம் ஏன் வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பாதைகள் உள்ளன?’ ‘வெற்றி நம் முயற்சிகளால் மட்டுமே நிகழ்கிறதா?’ ‘எல்லாமே நம் கையில் இருக்கிறதா?’ ‘யாராவது மரணத்தைத் தடுக்க முடியுமா?’
அப்போது என் மாமா எனக்கு ஒரு ஆன்மீக நூலை கொடுத்து படிக்கக் சொன்னார். ஆனால் எனது குடும்பத்தினர் நான் அத்தகைய புத்தகங்களை படிப்பதை விரும்பவில்லை, மற்றும் நான் தொடர்ந்து இந்த புத்தகத்தை படித்தால் உலக வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் சென்றுவிடுவேன் என்று பயந்து, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி என் குடும்பத்தினர் கூறியதால், நான் மேற்கொண்டு ஆன்மீக நூலை படிக்க முடியவில்லை. தினந்தோறும் தொடர்ந்து ஒரு ஸ்தோத்திரத்தை ஓதுவதுடன், நாமஜபத்தையும் தொடர்ந்தேன். மேலும் இக்காலத்தில் ஸாத்வீக வாழ்க்கை முறையை பின்பற்றுவதை உறுதி செய்தேன். எந்த ஒரு தீங்கும் விளைவிக்கவில்லை என்றாலும், பல சமயம் பாம்புகள் என்னை தொந்தரவு செய்யும் கனவுகளை நான் அடிக்கடி காண்பதுண்டு. (இது மூதாதையர் ஆவிகள் தொடர்பான பிரச்சினைகளின் அடையாளம் என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப். மூலம் பின்னர் தெரிந்துக் கொண்டேன்).
3. அமெரிக்காவில் வாழ்க்கை முறை மாறுபட்டது
1999 இல் திருமணம் முடித்து, கணவருடன் அமெரிக்காவுக்கு சென்றேன். என் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது, நான் ஒப்பனை செய்யத் தொடங்கினேன் மற்றும் வெவ்வேறு வகையான ஆடைகளை (கருப்பு போன்றவை) அணிவதோடு, அழகு படுத்திக்கொள்வும், வெவ்வேறு முடி அலங்காரங்களில் ஆர்வம் காட்டவும் தொடங்கினேன். சுற்றுச்சூழலுடன் ஒத்துப்போவதிலும் சிரமம் ஏற்பட்டது மற்றும் சொந்த நாட்டைப் பற்றிய ஏக்கமும் இருந்தது.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நூலகத்திலிருந்து ஆன்மீக நூல்களைப் படிக்க எனக்கு போதுமான நேரம் கிடைத்தது.
2002 ஆம் ஆண்டு, ஒரு மகனை ஈன்று எடுத்தேன். எங்களை பார்க்க வந்த எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர் ஒருவர் எங்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றும் மன உந்துதலால் ஏதேனும் கேள்வி எழுந்தால் வலைத்தளத்தினுள் சென்று ஒவ்வொரு முறையும் படிக்க ஆரம்பித்தேன். நாமஜபம், ஸ்தோத்திரங்கள் கூறுவது மற்றும் தினசரி கடவுள் வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு, வேலையும் தேடிக்கொண்டிருந்தேன். மேலும், முதுகலைப் பட்டம் பெற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எனது படிப்பைத் தொடர விரும்பினேன்.
2004லிருந்து 2006 வரையிலான காலகட்டத்தில், கலிபோர்னியாவில் ஒரு முதுகலைப் பாடத்திட்டத்தில் சேர்ந்ததுடன் , முழுநேர வேலையும் செய்யத் தொடங்கினேன். எனது பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் சிறு குழந்தை, வேலை, வீட்டு பராமரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, என்னுள் அதிக அளவு மன அழுத்தம் உருவாகியது. தினசரி ஸ்தோத்திரங்கள் ஓதுவது மற்றும் கடவுளின் தினசரி வழிபாடும் நின்றுவிட்டது (நான் அதன் வார்த்தைகளை கூட மறந்துவிட்டேன்). சொந்த நாட்டில் எளிதாக நடந்த நாமஜபம், இங்கு மிகவும் கடினமாகிவிட்டது.
இந்த நேரத்தில், பல வாரங்களாக நீடித்த சிறிய இருமலால் நான் நோய்வாய்ப்பட்டேன், அதற்கான மருந்துகளை நான் எடுத்துக் கொண்டபோது, பக்க விளைவுகளை அனுபவித்தேன். மருந்துகளில் ஒன்று என்னை மயக்கமடையச் செய்தது, மற்றொன்று என் தூக்கத்தைப் பாதித்தது. பக்க விளைவுகள் சில வாரங்களுக்கு நீடித்ததால், இதன் தாக்கம் நீண்ட காலம் நீடித்தது. மருந்து என் மனதிலும் பாதிப்பை விளைவித்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் பாதுகாப்பற்றதாக உணர ஆரம்பித்தேன், மேலும் தாழ்வு மனப்பான்மை அதிகரித்ததால், பல்கலைக்கழகத்தில் எனது மதிப்பெண் தரங்கள் குறையத் தொடங்கின. எந்தவொரு முயற்சி செய்தாலும் செய்ய வேண்டியவற்றை சிறப்பாகச் செய்ய என்னால் முடியவில்லை. என் கணவருடனான சண்டைகள் அதிகரித்தன. நான் வீட்டில் சில சூட்சும பொருளொன்று இருப்பதை அனுபவிக்க ஆரம்பித்தேன், பயந்தேன். எனக்கு இவ்வளவு பலவீனமான மனம் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. கனவு எது, நிஜம் எது என்று யதார்த்தத்தை அறிந்துக் கொள்ள முடியவில்லை. எனது கணவருக்கும் நண்பர்களுக்கும் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. நான் எங்கு சென்றாலும், பள்ளிக்கோ வேலைக்கோ ஏன் வீட்டில் கூட யாரோ ஒருவர் என்னை பின்தொடர்வது போல் சில நேரங்களில் உணர்ந்தேன். (ஆசிரியரின் குறிப்பு: ஒருவரின் ஆறாவது உணர்வு அவரைச் சுற்றியுள்ள சூட்சும அமைப்பைக் கவனிப்பதால், அவரால் இவ்வாறு உணர முடிகிறது)
4. விவரிக்கமுடியாத நிகழ்வுகள்
1. இரண்டு முறை நானும் எனது கணவரும் வீட்டின் சாவியை மறந்ததால் சில இக்கட்டுகளைச் சந்தித்தோம். ஒருமுறை நான் காரிலேயே சாவியை விட்டுவிட்டேன், அதனால் நான் பூட்டிய வீட்டிற்கு வெளியே நிற்கும்படி ஆகிவிட்டது.
2. ஒரு நாள், எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த நான், எனது அடுக்குமாடி வீட்டின் கதவு அகலமாக திறந்திருப்பதைக் கண்டேன். என் கணவர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார் என்று நினைத்தேன், ஆனால் நான் வீட்டிற்குள் நுழைந்தபோது வீட்டினுள் யாரும் இல்லை.
3. அந்தக் காலக்கட்டத்தில், எனது கணவர் மற்றும் மகன் மீதும் எனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.
4.நான் அவசர மருத்துவப் பிரிவுக்கு பல முறை செல்ல நேர்ந்தாலும் மருத்துவ ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னிடம் எந்த பிரச்சனையும் இல்லை.
5. ஒரு நாள் இரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ எனது வீட்டிலிருந்து வெளியே செல்வதை உணர்ந்ததால், திடீரென்று எழுந்து சென்று பார்த்த பொழுது எனது மகனும் (அந்த நேரத்தில் 2 வயது) என் கணவரும் வேறு அறையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டின் பிரதான கதவு திறந்திருந்தது.
6. நான் வீட்டில் தனியாக இருக்கும்போது வித்தியாசமான விஷயங்கள் நடக்கும் மற்றும் தேஜ–வு போன்ற ஒன்றை உணர்வதோடு, நான் ஏதேனும் ஒன்று மற்றும் பல நிகழ்வுடன் மீண்டும் வாழ்ந்து கொண்டிருப்பது போல் உணர்வேன்.
7. ஒரு நாள், எனது வாழ்கையில் அந்த சமயத்தில் என்ன நடந்து கொண்டிருந்ததோ அதே நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது எப்படி சாத்தியமாகும் என்று நான் ஆச்சரியப்பட்டேன்
இவை மற்றும் பிற ஒத்த அனுபவங்கள் காரணமாக, ஏன் நடக்கிறது என்ற காரணம் தெரியாமல், என் சிந்தனைத் திறனை இழப்பது போல் உணர்ந்தேன். எனது பயத்தால் மிகச் சிறிய விஷயங்களுக்கு கூட முடிவெடுக்கும் திறனை இழக்க ஆரம்பித்தேன். உதாரணத்திற்கு ‘நான் வெளியே செல்ல வேண்டுமானால் நான் என்ன அணிய வேண்டும்?’ என்று தீர்மானிக்க 15-20 நிமிடங்கள் எடுத்துக்கொண்டேன் மற்றும் ஒரு சட்டைக்கு இணையாக எது நல்லது என்று பல்வேறு துணிகளைச் சோதித்துக்கொண்டே இருப்பேன். ஒருமுறை ஒரு அங்காடி கட்டிடத்தில் நடந்து செல்லும்போது, எனது சக்தி முழுவதும் குறைந்தது போல் உணர்ந்ததால், அடுத்த அடி எடுத்து வைப்பது கூட சிரமமாக இருந்தது, அப்படியே தூங்க வேண்டும்போல் இருந்தது.
2006 ஆம் ஆண்டு நடக்கும் அனைத்தையும் தாங்க முடியாததால், வேலை மட்டும் படிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
இந்த நேரத்தில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளம் எனக்கு உதவியது. ‘பேய்கள் உண்மையில் இருக்கிறதா?’ ‘நான் என்ன அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்?’ போன்ற எனது கேள்விகளுக்கு தீர்வு காணவும் மற்றும் எனது ஆர்வம் மிகுதியால் நான் பல்வேறு ஆன்மீக தளங்களைப் பார்வையிட்டேன். பெரும்பாலும் நான் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் புகைப்படம் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் தளப் பகுதிக்கே செல்வேன். ஆனால் ஏனோ தெரியவில்லை, பராத்பர குரு அவர்களின் புகைப்படத்துடன் கோபமாக பேசுவேன்.
5. ஆன்மீக பயிற்சியைத் தொடங்குதல்
2007ஆம் ஆண்டு வேலை மற்றும் படிப்பிலிருந்து குறுகிய இடைவெளி எடுத்த போது கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். எனது அன்றாட சடங்கு வழிபாட்டையும், நாமஜபத்தையும் மீண்டும் தொடங்கினேன். மீண்டும் எனக்கு வேலை கிடைத்தது. 2008 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு புதிய வீட்டை வாங்கி வேறு பகுதிக்கு சென்றோம். ஒரு வருடத்திற்குள், மீண்டும் நான் கருவுற்ற பொழுது, எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகருடன் தொடர்பு கிடைத்தது. 2009 இல், கருவுற்ற சமயத்தில் எனது ஆன்மீக பயிற்சி தொடங்கியது.
எஸ்.எஸ்.ஆர்.எஃப் இலிருந்து, பித்ரு தோஷம் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதற்கான நாமஜபத்தை பற்றியும் ஆவிகள், தேஜ-வு போன்றவற்றை பற்றியும் அறிந்து கொண்டேன். ஆரம்பத்தில், ஸ்ரீ குரு தேவ் தத்தாவின் நாமத்தை மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபம் செய்வதில் சிரமப்பட்டேன், அதற்குப் பிறகு மன ஒருமைப்பாடுடனான நாமஜபம் இயற்கையாகவே நடக்கத் தொடங்கியது. ஜூலை 2009 இன் தொடக்கத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட அமெரிக்காவிற்கான எஸ்.எஸ்.ஆர்.எஃப் பொது ஸத்சங்கத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.ஆர்.எஃப் உள்நுழைவு வசதி மூலம் நான் கேள்விகளைக் கேட்டேன். உண்மையான அர்த்தத்தில் வலைத்தளத்தைப் பற்றிய எனது ஆய்வு தொடங்கியது. ஸத்சங்கத்தின் போது என்னுடைய பல கேள்விகளுக்கு கேட்காமலே பதில் கிடைத்தது. (ஆசிரியரின் குறிப்பு: இறைவனின் போதனை தத்துவம் இவ்வாறாக செயல்படுகிறது.)
சிறு வயதிலிருந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது, மேலும் விதியின் கோட்பாடை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பாம்பு கனவுகளை ஏன் நான் காண்கிறேன் மற்றும் ஏன் அறுவை சிகிச்சையை என் இளைய சகோதரர் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது என்பதை உணர்ந்தேன். நான் ஆன்மீக பயிற்சி ஈடுபட்டவுடன், ஸத்சங்கத்தில் கற்றுக்கொண்டவற்றையும் செயல்படுத்தத் தொடங்கியதும், பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டதால் எனது நம்பிக்கை அதிகரித்தது மற்றும் கடவுளை அடைய, இது ஒரு உன்னதமான பாதை என்பதையும் அறிந்தேன். பல ஆண்டுகளாக நான் இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் என்பதை உணர ஆரம்பித்தேன். ஆன்மீக நிவாரண முறைகள், ஸத்சங்கம், ஸத்சேவை, ஆன்மீக வாஸ்து ஸூதி முறைகளை அறிந்தமைக்கு என்றும் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். மேலும், என் கணவருக்கும் எனக்கும் இடையிலான சண்டையை குறைக்க இது பெரிதும் உதவியது. முடிந்தவரை ஸாத்வீகமான உணவை சாப்பிடவும், ஸாத்வீகமான ஆடைகளை அணியவும் (உதாரணத்திற்கு நான் கருப்பு நிறத்தை அணிவதை நிறுத்திவிட்டேன்) ஸாத்வீகமான முறையில் தலைமுடியை கட்டவும் ஆரம்பித்தேன். எனது கணவரும் ஸத்சங்கத்தில் கலந்து கொண்டு, அவரது ஆன்மீக பயிற்சியைத் தொடங்கினார்.
6. பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களை சென்று தரிசனம் காணல்
2010 ஆம் ஆண்டில், எனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் மிகவும் உன்னதமான மகானை (பூஜ்ய பாண்டே மகாராஜ்) சென்று தரிசனம் கண்டேன். நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் என்னிடம் கேட்டார், என் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. நான் எந்த காரணமும் இல்லாமல் அழ ஆரம்பித்தேன். அவரைப் பார்க்க நான் விரும்பவில்லை. என் கண்கள் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டிருந்தன என்பதை பின்னர் நான் அறிந்து கொண்டேன் (ஏனென்றால் உன்னத ஆறாவது அறிவு கொண்ட ஒரு ஸாதகர் என்னிடம் கூறினார்); இதன் விளைவாக, என்னால் ஏன் மகானைப் பார்க்க முடியவில்லை என்பதை புரிந்துகொண்டேன். ஒரு மகானுக்கு முன்பு ஒருவர் வருத்தத்துடன் அழுதால் பாவங்கள் கரைந்துவிடும் என்பதையும் நான் அறிந்தேன். அவர் என்னை அருகில் உட்கார அழைத்தார், அவரது அணைப்பால் ஆசீர்வதிக்கப்பட்டேன். அவர் மீது எனக்கு இருக்கும் அபரிமிதமான அன்பை உணர்ந்தேன். வெதுவெதுப்பாகாவும் மற்றும் அதிகளவான நேர்மறை ஆற்றலை உணர்ந்தேன். இவ்வுலகில் நான் எப்போதும் தேடிக்கொண்டிருந்த மிகவும் பாதுகாப்பான இடத்தை கண்டது போல் உணர்ந்தேன். அவருடைய இருப்பால் ஆன்மீக நிவாரணம் எனக்கு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். (ஆசிரியரின் குறிப்பு: பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்கள் ஒரு மகான் ஆவார், அவரின் ஆன்மீக நிலை 86% ஆகும். உண்மையாகவே ஆன்மீக நிவாரணம் அவர் முன்னிலையில் தானாகவே நிகழ்கிறது.)
பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்கள், எனது ஒரு வயது மகளையும் எட்டு வயது மகனையும் பார்த்து, இந்த குழந்தைகள் சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியிலிருந்து (உச்சா ஸ்வர்க்க லோகம்) பிறந்தவர்கள் என்று என்னிடம் கூறினார். இது மறுமைக்குப் பிறகு அடையும் லோகங்களில் ஒன்றாகும். நான் ஆச்சரியம் அடைந்தேன். பிரபஞ்சத்தின் உயர் பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இந்த சிறிய குழந்தைகள் ஏற்கனவே கடவுளின் ஸாதகர்கள் மற்றும் அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக எங்கள் குடும்பத்திற்கு வந்துள்ளனர் என்று அறிந்தவுடன் எனது நன்றியுணர்வு மேலோங்கியது.
எனது ஆளுமை குறைகளாகிய கோபம் மற்றும் பிடிவாதத்தை களையும் படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆன்மீக பயிற்சியான, ஆளுமை குறைகளை களைதல் செயல்பாட்டு முறையை நான் தொடங்கினேன். எனது கோபம் குறைய கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது, இருந்தாலும் மெதுவாக என்னைப் பற்றி நன்றாக உணர ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் குருக்ருபா யோகத்தின் படி ஆன்மீக பயிற்சியின் இந்த அம்சம் எனது ஆளுமை குறைகளை மெய்யான அர்த்தத்தில் குறைக்க உதவுகிறது என்பதை உணர ஆரம்பித்தேன்
என்னுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலின் துயரத்தையும், சத்தியத்திற்கான ஸத்சேவை செய்வதில் நான் சந்தித்த பல தடைகளையும் ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாக இருந்தது. பலமுறை சத்தியத்திற்கான ஸத்சேவை செய்வதற்கான திறன் எனக்கு இல்லை என்று உணர்வதுண்டு. ஆனால் அப்பொழுதெல்லாம் துணை ஸாதகர்கள் எனக்கு உதவினார்கள், நான் ஸத்சேவை தொடங்குவதற்கு முன்பு ஆன்மீக நிவாரண முறைகளை செய்ய என்னை ஊக்குவித்தனர். ஆன்மீக நிவாரண முறை மற்றும் நாமஜபத்திற்கு பிறகு இந்த எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன.
பாம்புகள் பற்றிய எனது கனவுகளும், எனது அமைதியின்மையால் விரைவாக இயங்கிய எனது கால்களும் ஆன்மீக பயிற்சியின் முதல் சில ஆண்டுகளில் நின்றுவிட்டன மற்றும் மனமும் அமைதியடைந்தது. இரவில் நான் தாமதமாக படுக்கைக்குச் செல்வதும் படிப்படியாக நின்றுவிட்டது.
7. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆன்மீக ஆராய்ச்சி மையத்திற்கு 2012 ஆம் ஆண்டு எனது முதற் பயணம்
ஒருவரது மனதில் உள்ள அனைத்து சிந்தனைகளை எவ்வாறு கடவுள் அறிகிறார் என்னும் மிகப்பெரிய கற்றலை இந்த பயணம் மூலம் அறிந்து கொண்டேன். யாரிடமும் கேட்காமல் கடவுளிடம் மட்டுமே என் மனதால் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. கடவுளோடு ஒன்றிணைவது என்ற ஒரே நோக்கத்துடன் ஸாதகர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் செயல்படுவதை நான் கண்டபோது, நன்றியுணர்வு என்றால் என்ன என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி மையம் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) முழுவதும் நான் நேர்மறை ஆற்றலை அனுபவித்தேன். நான் கடவுளிடமிருந்து பிரிந்திருக்கிறேன் என்பது என் உணர்வு மட்டுமே என்பதையும் உணர்ந்தேன் கடவுளிடம் சரணடைந்து எல்லாவற்றையும், தியாகம் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக தீர்மானித்தேன் (உண்மையில், எதுவும் என்னுடையது அல்ல எல்லாமே அவருக்கு சொந்தமானது). என் அகம்பாவத்தால் என் மனதில் இருப்பவை மற்றவர்களுக்குத் தெரியாது என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன், ஆனால் கடவுள் அனைத்தையும் அறிவார் என்பதை இப்போது உணர்ந்தேன்.
எனது முதல் வருகைக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நான் 2012 டிசம்பரில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தின், ஆன்மீக செயல்பாட்டு முகாமிற்கு வந்தேன். எதிர்பாராத வகையில் இந்த வருகை அமைந்தாலும், மிகவும் ஆனந்தமாக இருந்தது. எனது ஆளுமை குறைகளை களைதல் மற்றும் அகம்பாவம் அகற்றும் செயல்முறை மிகவும் ஆழமான முறையில் நிகழ்ந்தது. இந்த செயல்பாட்டு முகாமிற்கு பிறகு, என்னுள் ஆழமாக வேரூன்றிய ஆளுமை குறைபாடுகளை உணர்ந்தேன். உண்மையான ஆன்மீக உள்முக பார்வை என்றால் என்ன மற்றும் தவறுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது மற்றும் அவற்றை சரிசெய்யும் முறைகளையும் நான் கற்றுக்கொண்டேன். விதியை அமைதியாக எதிர்க்கொள்வது ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதி என்றும், சில சமயங்களில் எனது சிந்தனை எவ்வாறு பிடிவாதமாக இருந்தது என்பதையும், எனது ஆளுமை குறைபாடுகளால் வாழ்நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தேன் என்றும் புரிந்துகொண்டேன்.
8. நன்றியுணர்வு
எனது சந்தேகங்களை தெளிவுபடுத்தியதற்காகவும், கடவுளை நோக்கி என்னை வழிநடத்தியதற்காகவும் கடவுளுக்கும், எஸ்.எஸ்.ஆர்.எஃப் -க்கும் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஆன்மீக பயிற்சியில் நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்த வண்ணம் கடவுளை நோக்கி சிறிய அடிகள் எடுத்து வைத்து வருகிறேன்.
– திருமதி வி.எஸ்., அமெரிக்கா
குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்கம் செய்ய , தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்