நாம் பிறந்த மதத்தை சார்ந்த இறைவனின் நாமஜபத்தையோ அல்லது நமக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜபத்தையோ செய்யும்போது சில சமயங்களில் நமக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனோரீதியாகவோ சில அசௌகரியங்கள் ஏற்படலாம். தலைவலி, குமட்டல் போன்ற உடல்ரீதியான அசௌகரியங்களும் மனோரீதியாக எரிச்சல், அமைதியற்ற தன்மை போன்றவையும் ஏற்படலாம்.
ஒருவருக்கு நாமஜபம் செய்யும்போது மேற்கூறிய அசௌகரியங்கள் ஏற்பட்டால் கலவரப்படத் தேவையில்லை என்பதற்கு ஒரு எளிமையான விளக்கம் உள்ளது.
நாம் செய்யும் நாமஜபத்தின் மூலமாக அதற்குரிய தெய்வீக சக்தியுடன் தொடர்பு ஏற்படுகிறது. இது நமது ஸாத்வீகத் தன்மையை (ஆன்மீக புனிதத்தன்மை) நம்முள் அதிகரிக்க செய்கிறது. பெரும்பாலான மக்களிடம் ரஜ-தம குணங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த ரஜ-தம குணங்களுக்கும் நாமஜபத்தால் அதிகரிக்கும் ஸாத்வீகத் தன்மைக்கும் இடையே மோதல் ஏற்படுவதால் அந்த நபர் அசௌகரியத்திற்கு ஆளாகிறார். அத்துடன் அந்த நபர் ஆவிகளின் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால், அவைகள் இந்த நாமஜபத்தின் மூலம் ஏற்படும் ஸாத்வீகத் தன்மையினால் எரிச்சல் அடைகின்றன. இது ஏனெனில் ஆவிகளிடம் சூட்சுமமான ரஜ-தம அதிர்வலைகள் நிரம்பியிருப்பதால் அவைகளால் இந்த சூட்சும ஸத்வ அலைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. நாமஜபத்தினால் ஏற்படும் ஸாத்வீக அதிர்வலைகளுக்கும் ஆவிகளின் ரஜ-தம அதிர்வலைகளுக்கும் இடையே சூட்சுமமாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூட்சும உலகில் ஏற்படும் உராய்வு சில தேக அசௌகரியங்களாக வெளிப்படுகின்றன.
தலைவலி போன்ற உடல் அசௌகரியங்கள் கடுமையாக உள்ளபோது நாமஜபத்தை நிறுத்தி விடுவது நல்லது. பிறகு தலைவலி குறைந்தவுடன் நாமஜபத்தை மறுபடியும் ஆரம்பிக்கலாம்.
நாமஜபத்தினால் வெளிப்படும் தூய்மைக்கு உடல் பரிச்சயப்படும் வரை, அதாவது ஓரிரு வாரங்கள் இந்த உடல் அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்த தேக அசௌகரியங்கள் நாளடைவில் மறைந்து விடும் என்பதால் நாம் நாமஜபத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.