1. அறிமுகம்
இந்தக் கட்டுரையில் பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை அவற்றின் வரம்புகளின் அளவோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில், பல்வேறு சிகிச்சை முறைகளை பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் மற்றும் அதன் நிவாரணப்படுத்தும் தன்மையிலிருந்தும் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட மாற்று சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் வரம்புகளைப் புரிந்துகொள்வது ஆழ்ந்த நுண்ணறிவைத் தரும். மேலும் மாற்று சிகிச்சை முறையின் வரம்பு பற்றிய எங்களின் ஆய்வை அதன் குணப்படுத்தும் திறனிற்காகவோ அல்லது வேறுவிதத்திலோ நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. எங்கள் வாசகர்களின் நலனுக்காக குறிப்பிட்ட வரம்புகளின் புள்ளி அளவை நாங்கள் ஆராயந்தோம்.
2. அலோபதி
அலோபதி சிகிச்சையின் வரம்பானது, நமது உடலின் எதிர்ப்பு சக்தி குறைகிறது மேலும் சிகிச்சைக்குப் பிறகு சோர்வை ஏற்படுகிறது. இதற்கான காரணம், இந்தத் தொடரின் பின்வரும் கட்டுரையில், ஒவ்வொரு மாற்று சிகிச்சையிலும் ஏற்படும் அபாயங்களை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
3. யுனானி மருத்துவம்
இந்த மாற்று சிகிச்சை முறையின் பலன் அந்த நபரின் மனநிலையை பொறுத்து என்பதை நாம் பார்த்தோம். பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், யுனானி சிகிச்சையின் குணப்படுத்தும் விகிதம் குறைவாக உள்ளது.
4 அக்குபிரஷர்
அக்குபிரஷர் சிகிச்சையின் செயல்திறனை மற்ற காரணிகளைப் பொறுத்தது, பெரும்பாலும் சரியான அக்குபிரஷர் புள்ளிகளைக் கண்டறியும் சிகிச்சையாளரின் திறமை பொறுத்து அது அமைகிறது. அக்குபிரஷர் புள்ளிகள் உடலில் (உடற்கூறியல்) வெளிப்படையாக இருக்காது. இவற்றைக் கண்டறிவது சிகிச்சையாளருக்கு உள்ள திறமை, அனுபவம் மற்றும் ஓரளவிற்கு அவரின் உள்ளுணர்வை அறியும் திறனின் செயல்பாடைப் பொறுத்து அமைகிறது. எனவே சரியான (குறிப்பிட்ட) அக்குபிரஷர் புள்ளிகளைக் கண்டறிவது கடினமாதலால், நோயைக் கடப்பதும் ஒரு வரம்பிற்குள்ளாகிறது.
5. முத்ராக்கள்
சிகிச்சையின் பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இந்தத் தொடரின் கட்டுரையில், நோயுற்ற உடல் பாகத்தில் உள்ள சூட்சும தீய சக்திகளை வெளியேற்ற உடல் செல்களின் சக்தியை முத்ரா சிகிச்சை அதிகரிக்கிறது என்பதை நாம் பார்த்தோம். பாதிக்கப்பட்ட உடல் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் இந்த சூட்சும தீய சக்திகள், அந் நபரின் அதிர்வலைகளுடன்சுமத்தப்படுகிறது.இதனால்வளிமண்டலத்தைசுற்றியுள்ளஆவிகள் இந்த சூட்சும தீய சக்தியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தி அந்த நபரைப் பாதிக்கலாம். இதன்மூலம் ஆவிகளால் தாக்குப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
6. ஹோமியோபதி
இந்தத் தொடரின் முந்தைய கட்டுரையில், பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை அவற்றின் செயல்பாட்டின் நிலையில் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஹோமியோபதி முறையானது உடல் உயிரணுக்களில் சேதனாவை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது என்பதைக் கண்டோம். சேதனா என்பது உடல் மற்றும் மனதின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக உணர்வின் (சைதன்யா) அம்சமாகும். உயிரணுக்களில் சேதனா உருவாகினாலும், நோயாளியின் எண்ணங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்த மாற்று சிகிச்சை முறையின் பலன்களிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் இந்த மாற்று சிகிச்சை முறை சூட்சும உடலில் செயல்படுவதால், எண்ணங்களின் தாக்கம் அதிகம் இல்லை, எ.கா. யுனானி மருத்துவத்தைப் போலவே. இருப்பினும் ஒரு வரம்பு என்னவென்றால், அடிக்கடி உணர்ச்சிகளின் பெருக்கு ஏற்படும் சமயம் சேதனாவிலும் குறைவு சாத்தியமாகும்.
7. ஆயுர்வேதம்
இந்த மாற்று சிகிச்சை முறையானது உயிரணுக்களில் உள்ள இடைவெளிகளில் தெய்வீக உணர்வை உருவாக்குவதன் மூலம் மிக உயர்ந்த நிலையில் செயல்படுவதை நாம் பார்த்தோம். இருப்பினும் ஆயுர்வேதம் ஆன்மீக அளவில் செயல்படுவதால், அதன் செயல்பாடு நோயாளியின் ஆன்மீக உணர்வை சார்ந்துள்ளது. ஆயுர்வேதத்தின் முழு நோக்கத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள், அதனால் ஆன்மீக உணர்வு இல்லாதவர்களாகிறார்கள் மேலும் குறுகிய பலனைப் பெறுகிறார்கள். இந்த சிறந்த மாற்று சிகிச்சை முறையின் மூலம் பலர் முழுமையாகக் குணமடைவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று, அதற்கான ஆன்மீக உணர்வை அவர்கள் அனுபவிப்பதில் உள்ள வரம்பாகும்.
மற்றொரு வரம்பு என்னவென்றால், நோயாளி ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)பாதிக்கப்பட்டவராக இருந்தால், அவர்களின் தெய்வீக உணர்வும் எதிர்மறையினால் பாதிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஆன்மீக ஆராய்ச்சி, உலக மக்கள் தொகையில் 90% பேர் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் ஆவிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஆயுர்வேதத்தில் பலர் விரைவான மற்றும் அல்லது முழுமையான குணம் பெறாததற்கு இதுவும் ஒன்றாகும். மேலும், பெரும்பாலான மக்கள் பெரும்பாலும் ரஜ-தமவாக இருப்பதால், அலோபதியின் மூலம் விரைவான நிவாரணம் பெற்றாலும் அவர்கள் குறுகிய காலமே வாழ்வார்கள்.