Sleeping positions

1. அறிமுகம்

நாம் ஒவ்வொருவரும் நன்றாக உறங்கி ஓய்வு எடுப்பதை பற்றி அறிய விரும்புகிறோம். நன்றாக உறங்குவதற்கு பல காரணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று உறங்கும் நிலை ஆகும். நாம் அனைவரும் அவரவருக்கு ஏற்ப பொதுவான ஒரு உறங்கும் நிலையை கொண்டிருக்கிறோம், அந்த நிலையில் உறங்கும் போது நாம் வசதியாக உணர்கிறோம். உடல் ஆரோக்கியத்திலும் நமது உறங்கும் நிலையால் தாக்கங்கள் இருப்பதை நாம் அறிவோம். வெவ்வேறு உறங்கும் நிலைகளின் விளைவுகளுக்கு பல உளவியல் விளக்கங்கள் உள்ளன. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் நன்றாக உறங்குவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விளக்கி உள்ளோம். நன்றாக உறங்குவதற்கு எந்த உறங்கும் நிலை சிறந்தது மற்றும் அது ஏன் என்பதற்கான காரணத்திலும் கவனம் செலுத்துதல் அவசியமாகும். உறங்கும் நிலை மூலம் சூட்சும பரிமாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்கி, நன்றாக உறங்குவது எப்படி மற்றும் அந்த உறக்க நிலையை எப்படி அடைவது என்பதைக் குறித்து கற்றறிந்த முடிவை எடுக்கலாம் வாருங்கள்.

தொடக்கத்தில் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • ஆன்மீகக் கண்ணோட்டத்தில் தூக்கம் என்பது சூட்சும அடிப்படை தம தன்மைகளுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். அதாவது, உறங்கும் போது உடலின் சூட்சும தம அடிப்படை தன்மை உயரும்.

  • இதனுடன் சேர்ந்து, நாம் உறங்கும் போது நமது ஆன்மீக பயிற்சியும் மிகக் குறைவாக இருப்பதால், ஆன்மீக ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறோம். இதன் விளைவாக, உறங்கும் போது ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவற்றின்) தாக்குதலுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறோம்.

உடலின் குண்டலினி சக்தி அமைப்பின் அடிப்படை புரிதலும் நமக்குத் தேவைப்படுகிறது.

குண்டலினி என்பது உடலில் உள்ளடங்கிய ஆன்மீக சக்தி அமைப்பாகும். இது 7 முக்கிய மையங்கள் அல்லது சக்கரங்கள், 3 முக்கிய நாடிகள் – சூரிய நாடி(வலது நாடி அல்லது பிங்கலா நாடி ), சந்திர நாடி (இடது நாடி அல்லது இடா நாடி ), மைய நாடி (ஸுஷும்னா நாடி) மற்றும் எண்ணற்ற நாளங்கள் மற்றும் நுண்நாளங்களை கொண்டுள்ளது.

கீழே உள்ள வரைபடம் ஒரு மனிதனின் செயலற்ற குண்டலினி சக்தி அமைப்பின் பிரதிநிதித்துவமாகும்.

செயலற்ற மைய நாடி கொண்ட குண்டலினி அமைப்பு

ஸ்தூல தேஹத்துடன்(உடலுடன்) தொடர்புடைய சக்கரங்களின் வரைபடத்தையும் பார்க்கவும்

உடல் மற்றும் மன செயல்பாடுகளுக்கான சக்தி, சூரிய மற்றும் சந்திர நாடிகள் வழியாக பாய்கிறது. மைய நாடி வழியாக பாயும் சக்தி ஆன்மீக வளர்ச்சியுடன் தொடர்புடையது.

சூரிய நாடி ரஜ தன்மையை பிரதானமாகக் கொண்டது, அதே சமயம் சந்திர நாடி ஸத்வ தன்மையை பிரதானமாகக் கொண்டது. இடா மற்றும் பிங்கலா வழியாக சக்தி மாறி மாறி பாய்கிறது. இந்த மாற்றம் ஒவ்வொரு 3-4 நிமிடங்களுக்கும் நடக்கும். சக்தி ஓட்டம் அடிக்கடி மாறினாலும், உடல் முழுவதும் இடா மற்றும் பிங்கலா குறுக்கு பக்கமாக இருப்பதால், உடலின் இரு பகுதிகளும் தேவையான சக்தி வகையைப் பெறுகின்றன. இதனால் இருவகையான சக்தி ஓட்டங்களுக்கு இடையில் சமநிலை பராமரிக்கப்படுகிறது.

சூரிய நாடியிலிருந்து சந்திர நாடிக்கு மாறும்போது, குறைந்த ஆன்மீக நிலை கொண்டவர்களின் மைய நாடி 1-2 வினாடிகளுக்கு சுருக்கமாகச் செயல்படுத்தப்படும். செயல்படுத்தப்பட்ட மைய நாடிலிருந்து, பெறப்பட்ட நன்மையை காண்பது மிகவும் குறைவு. ஒருவரின் ஆன்மீக நிலையை அதிகரிப்பதன் மூலம் மைய நாடியின் செயல்பாடு நேரத்தை அதிகரிக்கலாம். 55% ஆன்மீக நிலைக்கு மேல்,செயல்படுத்தும் காலம் 1-2 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். இந்த செயல்பாட்டின் காலம் நீடிக்கும் போது, ஆன்மீக வளர்ச்சியின் அடிப்படையில் சில நன்மைகள் விளைகின்றன.

நாடிகளின் செயல்பாடு உறங்கும் நிலையை சார்ந்துள்ளது. நாம் உறங்கும் நிலைக்கு எதிராக உள்ள நாடி முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. 55% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ளவர் மல்லாந்து உறங்கும் போது மைய நாடி செயல்படுத்தப்படுகிறது. இந்நிலைக்கு கீழே உள்ளவர்களிடம் , எந்த நாடியும் செயல்படுவதில்லை.

உடலின் தேவைக்கேற்ப சூரிய அல்லது சந்திர நாடி செயல்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு நாம் உணவு உண்டவுடன்,செரிமானத்தை எளிதாக்க சூரிய நாடி முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது.

உணர்ச்சிகள் மேலோங்கிய நிலையில், சூரிய நாடி செயல்படுத்தப்படுகிறது. மேலோங்கிய உணர்ச்சிகள் தணிந்தவுடன் சந்திர நாடி செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், உணர்ச்சிகளின் நிலையில் ஏற்ற இறக்கங்கள் என்று அடிக்கடி மாற்றம் காணும்போது, இரண்டு நாடிகளின் செயல்பாட்டில் விரைவான மற்றும் ஒழுங்கற்ற மாற்றம் ஏற்பட்டு சூரிய நாடி பிரதான செயல்பாட்டில் இருக்கும். இதனால் இரண்டு வகை சக்தி ஓட்டங்களிலும் (ரஜ மற்றும் ஸத்வ) ஏற்றத்தாழ்வு உள்ளது. ஒரு உணர்ச்சிகரமான நபரிடம் ஏற்படும் இந்த உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வு (ரோலர் கோஸ்டர்) ஆழ் மனதில் தூக்கத்தில் கூட தொடர்கிறது. ஏனென்றால், ஆழ் மனதில் உள்ள பதிவுகள் தூக்கத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மனதின் ஆன்மீக இயல்பு என்ற பயிற்சியை பார்க்கவும்

2. உறங்கும் நிலை 1 – மல்லாந்து உறங்குதல்

  • நாம் மல்லாந்து உறங்கும் போது, நமது உடம்பில் உள்ள அணுக்களின் சேதனா (மனம் மற்றும் உடலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக சைதன்யத்தின் அம்சம்) வெளிப்படாமலும், செயலற்றும் இருக்கும்.

 

சேதனா என்பது உடல் மற்றும் மன செயல்பாடுகளை நிர்வகிக்கும் தெய்வீக சைதன்யத்தின் அம்சமாகும், மேலும் உடலில் உள்ள ஐந்து முக்கிய பிராணசக்திகளையும் அது செயல்படுத்துகிறது.
  • உடலின் பெரும்பகுதி தரையை நோக்கி இயக்கப்படுவதால், நமது உடல் பாதாளம் பகுதி வரை அதிகம் வெளிப்படுத்தப்படுகிறது.

 

மேற்கூறிய இரண்டு காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவினால் பாதாளத்திலிருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வுகளின் தாக்குதல்களை, உடலின் அணுக்களால் தடுக்க இயலாது.

ஆன்மீக நிலை: இறைவனோடு இரண்டற கலந்தவரின் ஆன்மீக நிலை 100% என்று வைத்துக் கொண்டால், இன்றைய கலியுகத்தில் சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20% தான். உலக மக்கள்தொகையில் 90% க்கும் அதிகமானோர் 35% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ளனர். ஒருவர் மகான் என்ற நிலையை அடைவதற்கு குறைந்தபட்ச ஆன்மீக நிலை 70% அடைந்திருக்கவேண்டும்.

 

 

  • இருப்பினும், ஒருவரின் ஆன்மீக நிலைக்கு ஏற்ப இந்த உறங்கும் நிலையின் விளைவு மாறுபடும்.

 

 

காட்சி 1: ஆன்மீக நிலை 55%க்கு கீழ்

55% ஆன்மீக நிலை என்பது ஒருவரின் ஆன்மீக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஏனென்றால் இந்நிலையில் ஒரு ஸாதகர் ஆன்மீக வளர்ச்சியடைந்து,ஆன்மீக குருவின்(குரு) சீடராக மாறும் அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளார்.

55% ஆன்மீக நிலைக்கு கீழ் உள்ளவர்களின் ஆன்மீக உணர்வை அவர்களின் உணர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது உணர்ச்சிகளின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் நாடிகளிடையே ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால் உடலின் குண்டலினி சக்தி அமைப்பின் சூரிய சந்திர நாடிகளின் சக்தி ஓட்டத்திலும் நிலையான ஏற்றத்தாழ்வு உள்ளது.

மேலே கூறியது போல், 55% ஆன்மீக நிலைக்குக் கீழ் இருப்பவர்கள் மல்லாந்து உறங்கும் போது, அவர்களின் மைய நாடி இயங்காது. உணர்ச்சி மிகுந்த நிலையினால் உடலின் சக்தி ஒரு சமநிலையற்ற தன்மையில் இருக்கும். சூரிய, சந்திர ஆகிய இரண்டு நாடிகளின் சக்தி ஓட்டங்களுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வு சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருக்கும், சூட்சும அடிப்படை ரஜ-தம கூறுகளை உடலுக்கு விரைவில் மாற்றும். சூட்சும அடிப்படை ரஜ-தம கூறுகள் அதிகரிக்கும் போது, நரகத்தின் பகுதிகளிலிருந்து வரும் துன்பகரமான அதிர்வுகளால் அந்நபர் அதிக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகிறார். இருப்பினும் ஒருவர் வெளிப்படாத ஆன்மீக உணர்வு நிலைக்கு ஆன்மீக ரீதியாக முன்னேறியவுடன், சக்தி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியும். அதுவரை மல்லாந்து தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் தரை மற்றும் உடலின் அதிகமான தொடர்பு பாதாளம் வரை வெளிப்படுகிறது.

நிவாரணம்: இருப்பினும், சில காரணங்களால் ஒருவர் மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால், எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) இன் ஸாத்வீகமான ஊதுபத்தியை தூங்குவதற்கு முன் படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்வது, தலையணைக்கு அடியில் கடவுளின் படம் வைத்துக்கொள்வது மற்றும் படுப்பதற்கு முன் படுக்கையறையை ஆன்மீக முறையில் சுத்தம் செய்தல், குறிப்பாக படுக்கைக்கு அருகில் இரவு முழுவதும் கடவுளின் நாமத்தை மென்மையாக ஒலிப்பது போன்ற ஆன்மீக நிவாரண முறைகள் மூலம் இன்னல்களை குறைக்கலாம்.

காட்சி 2 : ஆன்மீக நிலை 55%க்கு மேல்

ஆன்மீக பயிற்சி மூலம் பெறப்பட்ட ஸாத்வீகமான அறிவை அதாவது ஸத்வ தன்மையை பிரதானமாகக் கொண்ட அறிவு மேலோங்கி உள்ளது. இதை உலகியல் அம்சங்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட இறைசேவை செய்வதற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அர்ப்பணிக்கவேண்டும். ஸாத்வீகமான அறிவு இருந்தால் மட்டுமே புனித நூல்களின் மறைமுகமான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

55%க்கு மேல் ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் மல்லாந்து உறங்கும் போது, அவரது குண்டலினி அமைப்பின் மத்திய நாடி செயல்படுத்தப்படுகிறது. ஆன்மீக உணர்வு மேலோங்கிய நிலையில், உணர்வுகளின் தாக்கம் வெகுவாகக் குறைகிறது. 55%க்கு மேல் ஆன்மீக நிலையில் இருக்கும்போது, தேவைக்கேற்ப உடலில் உள்ள அடிப்படை சூட்சும ரஜ-தம ஓட்டத்தை தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது ஒருவரின் வெளிப்படாத ஆன்மீக உணர்வு நிலையில் நிகழ்கிறது. ஏனென்றால் ஒருவரது ஆன்மாவின் சக்தி (ஆத்ம-சக்தி) மேலும் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் ஆன்மீக நிலை 55%க்கு கீழே உள்ளவர்கள் மனோ சக்தி (மனாஹா-சக்தி) நிலையில் செயல்படுகிறார்கள். இந்த ஆத்மா சக்தி குண்டலினி அமைப்பின் சூரிய சந்திர நாடிகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்கின்றது..

சூட்சும ஞானத்தின் அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் மூலம் 55%க்கு மேல் ஆன்மீக நிலையில் உள்ளவர் மல்லாந்து உறங்குவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய வரைபடம் கீழே வரையப்பட்டுள்ளது.

ஒரு நபர் ( ஆன்மீக நிலை 55% க்கு மேல் உள்ளவர் ) மல்லாந்து உறங்குவதால் ஏற்படும் விளைவு

3. உறங்கும் நிலை 2 – வயிற்றில் தூங்குவது(குப்புறப்படுப்பது)

வயிற்றில் உறங்கும் நிலை (குப்புறப்படுத்தல்)

ஒருவர் தனது வயிற்றில் உறங்கும் போது(குப்புறப்படுக்கும் போது), வயிற்றில் உள்ள இடைவெளிகளில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் அடிவயிற்று இடைவெளிகளில் உள்ள சூட்சும கழிவு வாயுக்களின் கீழ்நோக்கி ஓட்டத்தை தூண்டுகிறது. சில நேரங்களில் இந்த சூட்சும கழிவேற்ற வாயுக்களின் அளவு மார்பில் அதிகமாகும்போது, அவை மேல்நோக்கி நகர்ந்து மூக்கு மற்றும் வாய் வழியாக உடலை விட்டு வெளியேறும். இவ்வாறு கழிவேற்ற வாயுக்கள் வெளியேறும் போது, வெளிப்புற சூழலில் இருக்கும் சூட்சும ரஜ-தம கூறுகளின் அதிர்வெண்களை உள்வாங்க அதிக உணர்திறன் உடல் கொண்டிருக்கும். இந்நிலையில் ஒருவர் உறங்கும்போது, சூட்சும கழிவேற்ற வாயுக்களின் அழுத்ததினால், உடல் உறுப்புகளின் இயக்கங்கள் மெதுவாகி, உறுப்புகளைச் சுற்றியுள்ள இடங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, உறுப்புகளில் இருந்து வெளியேறும் சூட்சும கழிவேற்ற வாயுக்கள் உறுப்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகளில் நிரப்பப்படுகின்றன. இந்த காலகட்டத்தில், நபரின் உடல் சூட்சும நிலையில் அடிப்படை ரஜ-தம கூறுகள் பரிமாற்றத்தில் அதிக உணர்திறன் கொண்டிருக்கும். இதன் விளைவாக, அந்நபர் சுற்றுச்சூழலில் இருந்தும் நரகத்தின் பகுதிகளிலிருந்தும் ஆவிகளின் தாக்குதல்களால் பாதிப்பு அடையலாம்.

சூட்சும ஞானத்தின் அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் மூலம் ஒருவர் வயிற்றில் உறங்குவதால்(குப்புறப்படுத்து உறங்குவதால்) ஏற்படும் விளைவுகள் பற்றிய வரைபடம் கீழே உள்ளது.

வயிற்றில் உறங்குவதால் (குப்புறப்படுத்து உறங்குவதால்) ஏற்படும் சூட்சும விளைவுகள்

4. உறங்கும் நிலை 3 – பக்கவாட்டில் தூங்குதல்

 இடது பக்கம் உறங்கும் நிலை
ஒரு நபர் தனது பக்கவாட்டில் உறங்கும் போது, குண்டலினி அமைப்பின் சூரிய அல்லது சந்திர நாடிகள் முதலில் செயல்படுத்தப்படுகின்றன.

கீழே உள்ள சூட்சும ஞானத்தின் அடிப்படையாகக் கொண்ட வரைபடம் வலது பக்கத்தில் உறங்குவதால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது.

வலது பக்கத்தில் தூங்குவதால் ஏற்படும் சூட்சும விளைவுகள்

  • ஒருவர் வலது பக்கத்தில் உறங்கும் போது சந்திர நாடி செயல்படுத்தப்படுகிறது.

கீழே உள்ள சூட்சும ஞானத்தின் அடிப்படையாகக் கொண்ட வரைபடம் இடது பக்கத்தில் உறங்குவதால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது.

இடது பக்கத்தில் உறங்குவதால் ஏற்படும் சூட்சும விளைவுகள்

  • ஒருவர் இடது பக்கத்தில் உறங்கும் போது சூரிய நாடி செயல்படுத்தப்படுகிறது, எனவே இது ஒரு சிறந்த உறக்க நிலையாக கருதப்படுகிறது.

சூரிய அல்லது சந்திர நாடிகள் செயல்படுத்தப்படும் போது, உடல் அணுக்களில் உள்ள சேதனா செயல்படும். இதனால் குறைந்த அளவில் சூட்சம அடிப்படை தம கூறுகள் உருவாக்கப்படுவதால், ஆவிகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட சேதனா உதவுகிறது.

5. சுருக்கம்

ஆன்மீக பார்வையில் ஒருவரது ஆன்மீக நிலை 55% குறைவாக இருப்பின், உடலின் பக்கவாட்டில் இடது பக்கத்தில் உறங்குவது சிறந்த உறக்க நிலை ஆகக் கருதப்படுகிறது.