ஆன்மீக நிவாரண முறைகளுக்கு பின்னாலுள்ள செயல்முறை – ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்கள்

அட்டவணை

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

1. ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்களின் (ஹீலர்) அறிமுகம்

இந்தக் கட்டுரை “பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் ஆன்மீக நிவாரண முறைகளுக்கு பின்னால் உள்ள வழிமுறை” கட்டுரையின் தொடர்ச்சி ஆகும்.

இந்தக் கட்டுரையில் உள்ள ஞானத்தின் ஆதாரம் ஆன்மீக ஆராய்ச்சி ஆகும்.

ஓருவர் ஆன்மீக நிவாரணம் அளிப்பவராக பயிற்சி செய்ய, 50% ஆன்மீக நிலைக்கு மேல் இருக்க வேண்டும். எனினும், 60% ஆன்மீக நிலைக்கு மேல் இருப்பது விரும்பத்தக்கதாகும். இந்த ஆன்மீக நிலைக்கு கீழே உள்ள போதிலும் சில தருணங்களில் ஒருவர் ஆன்மீக நிவாரணம் அளிக்க முடியும், இது நடப்பதற்குத் தேவையான அளவுகோல்களை இந்தக் கட்டுரையில் விவரிக்கிறோம். ஒருவர் மற்றவர்களுக்கு நிவாரணமளிக்கும் சக்தியை வழங்குவதின் பின்னாலுள்ள அடிப்படை செயல்முறையை விளக்குகிறோம். நிவாரணம் அளிப்பவர் மற்றும் நிவாரணத்தை நாடுபவர், இவ்விருவர் கண்ணோட்டத்திலிருந்தும் இந்தக் கட்டுரை முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளது.

2. ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலையின் முக்கியத்துவம்

ஆன்மீக நிலை: இறைவனோடு இரண்டற கலந்தவரின் ஆன்மீக நிலை 100% என்று வைத்துக் கொண்டால், இன்றைய கலியுகத்தில் சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20% மட்டுமே. உலக மக்கள்தொகையில் 90%-திற்கும் அதிகமானோர் 35% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ளனர். ஒருவரை மகான் என்று ஒப்புக் கொள்வதற்கு, அவருடைய ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 70% இருக்கவேண்டும்.

ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலை மிகவும் முக்கியமான அம்சமாகும், இது கீழ்க்கண்டவற்றை வரையறுக்கின்றது :

  • அவரால் எப்படி மற்றவர்களுக்கு சிகிச்சை அல்லது நிவாரணம் அளிக்க முடிகிறது,
  • என்ன நிவாரண முறைகளை அவர் பயன்படுத்தலாம் மற்றும்
  • அவர் பயன்படுத்தக் கூடிய உலகளாவிய சக்திகளின் வகைகள்.

3. ஆன்மீக நிவாரணம் அளிப்பவர் நோயாளிக்கு எப்படி  நிவாரணம் அளிக்கின்றார் என்பதன் ஒப்புமை

மின்விளக்கை ஒளிரச் செய்யும் எளிய ஒப்புமையால் நாங்கள் இந்தப் பகுதியை விளக்கப் போகிறோம். ஒரு விளக்கை ஒளிரச் செய்வதற்கான முதல் படி பொருத்தமான மின்சொடுக்கியை (ஸ்விட்ச்) அழுத்துவதாகும். பிறகு மின்னோட்டம் ஒரு கம்பியின் மூலமாக பாய்ந்து இறுதி வெளியீடாக மின்விளக்கை ஒளிரச் செய்கிறது. எந்த மின்விளக்கை ஒளிரச் செய்யவேண்டும் என்பதைப் பொறுத்து, அதற்கான மின்சொடுக்கியை (ஸ்விட்ச்) நாம் அழுத்த வேண்டும். அதேபோல, ஆன்மீக நிவாரணத்தில், பல்வேறு நிவாரண முறைகள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எல்லா சந்தர்ப்பங்களிலும், நிவாரணத்தின் இறுதி விளைவு (அதாவது, இறுதியில் மின்விளக்கு ஒளிர்வது அல்லது இறுதி பலன்) பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களின்(பஞ்சபூததத்துவங்களின்) மூலம் கொண்டுவரப்படுகின்றது.

ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்கள் பயன்படுத்தும் ‘மின்சொடுக்கி’ என்பது நாமஜபம், பிரார்த்தனை, ரெய்கி, பிராணிக் ஹீலிங்க், ஸங்கல்பம் மற்றும் இருப்பு போன்ற முறைகளை குறிக்கின்றது. நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீகத் திறனைப் பொறுத்து, பல்வேறு ‘மின்சொடுக்கிகளை’ அணுகி, சக்தியை நோயாளி அல்லது நிவாரணம் தேவையான நபருக்கு அனுப்ப முடியும்.

4. ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலையின் முக்கியத்துவம் (கம்பி)

ஆன்மீக நிலையின் இந்த அம்சத்தை, ஒரு ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின், பல்வேறு நிலைகளில் உள்ள உலகளாவிய சக்திகளை அணுகும் முறை அல்லது அவற்றிற்கான ஊடகமாக விளங்கும், திறனுடன் ஒப்பிட்டுள்ளோம்.

மனிதர்களாகிய நாம், ஸ்தூல தேஹம்(ஐம்புலன்கள் இதில் அடக்கம்), பிராண தேஹம், மனம், புத்தி, சூட்சும அகம்பாவம் மற்றும் ஆத்மா ஆகியவற்றால் ஆக்கப்பட்டுளோம். மனம் என்பது உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களின் இருப்பிடம், புத்தி என்பது பகுத்தறியும் அல்லது நிகழ்வுகளுக்கு இடையிலான காரண-விளைவுகளைப் பற்றி ஆராயும் இடம். இந்த உடல் ஒவ்வொன்றும் மற்றொன்றை விட சூட்சுமமானவை ஆகும். “மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள்?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ஆன்மீக பயிற்சியின் மூலம் நாம் ஆன்மீக ரீதியில் முன்னேறும்போது, நம் ஐம்புலன்கள், மனம், மற்றும் புத்தியை நாம் கரைக்க ஆரம்பிக்கின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் நமது முயற்சிகள் மற்றும் சிந்தனையை, இறைவனை உணரும் அல்லது இறைவனோடு ஒன்றிணையும் திசையில் செலுத்துகின்றோம். இந்த செயல்முறையின் மூலம், நமது தனிமனித மனம் மற்றும் புத்தியை கடந்து, விச்வமனம் மற்றும் விச்வபுத்தியை அணுகும் திறனைப் பெறுகின்றோம். கீழே உள்ள வரைபடத்தில், ஆத்மா அல்லது நமக்குள் இருக்கும் இறை தத்துவம் எவ்வாறு பொருத்தமான ஆன்மீக பயிற்சியின் மூலம் பிரகாசிக்கத் தொடங்குகிறது என்பதன் ஆன்மீகக் காட்சியைக்  காட்டியுள்ளோம். இதன் விளைவாக, மற்றவர்களிடம் எதிர்பார்ப்பற்ற அன்பு (ப்ரீதி), பணிவு மற்றும் அகம்பாவம் இன்மை போன்ற தெய்வீக குணங்களை நாம் உள்வாங்குகின்றோம்.

ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின் கண்ணோட்டத்திலிருந்து, ஆன்மீக பயிற்சியின் காரணமாக அவருடைய பல்வேறு தேஹங்கள் அல்லது கோசங்கள் கரைய ஆரம்பிக்கும்போது, இன்னும் முக்கியமான ஒன்று நடக்க ஆரம்பிக்கின்றது. அவர் மேன்மேலும் உயர்ந்த நிலையிலுள்ள உலகளாவிய சக்திகளுக்கான அணுகலைப் பெறுகின்றார்.

ஒருவர் ஆன்மீக நிவாரணம் அளிப்பவராக பயிற்சி செய்ய, அவருடைய ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 50% இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால், இந்த ஆன்மீக நிலையில், நிவாரணத்திற்காக பயன்படுத்தக்கூடிய உலகளாவிய சக்திகளுக்கான அணுகலை அவர் பெற ஆரம்பிக்கின்றார். எனினும், 60% ஆன்மீக நிலை விரும்பத்தக்கதாகும், ஏனெனில் இந்த ஆன்மீக நிலையில், ஒரு ஸாதகரின் மனம் கரைய ஆரம்பிக்கின்றது. ஆகையால், அவரால் இன்னும் சிறந்த முறையில் ஒரு ஆன்மீக கஷ்டத்தின் மூல காரணத்தை சூட்சுமமாக புரிந்துகொள்ள முடிகிறது மற்றும் உயர்ந்த நிலையிலுள்ள ஆன்மீக பாதுகாப்பை பெற முடிகின்றது.

ஒருவரின் ஆன்மீக நிலையைப் பொறுத்து கடவுளின் வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாத சக்தியை அணுகுவதற்கான ஒருவரின் திறனைப் பற்றிய தகவலை பின்வரும் அட்டவணை வழங்குகின்றது. கடவுளின் வெளிப்படாத சக்தி அதிக சக்தி வாய்ந்தது.

ஆன்மீக நிலை வெளிப்பட்ட (ஸகுண) சக்தி வெளிப்படாத  (நிர்குண) சக்தி
60% 100 0
70% (மகான் நிலை ஆரம்பிக்கின்றது) 70 30
80% 50 50
90% 20 80
100% 0 100

ஆரம்பத்தில், நிவாரணமாளிக்கும் திறன் கடவுளின்  வெளிப்பட்ட (ஸகுண) சக்தியை அணுகுவதால் கிட்டுகின்றது. மேன்மேலும் உயர்ந்த நிலையிலான ஆன்மீக பயிற்சியால் ஒரு மனிதரின் மனம், புத்தி மற்றும் அகம்பாவம் கரையும்போது, அவர் கடவுளின் வெளிப்படாத (நிர்குண) சக்திக்கான அணுகலை இன்னும் அதிகமாக பெறுகின்றார். 90% ஆன்மீக நிலையில், இந்த வெளிப்படாத சக்தி, வரம்பற்ற அளவில் ஆன்மீக நிவாரணமளிக்கும் திறனைக் கொடுக்கின்றது.

மகான்களால் ஸங்கல்பம் மற்றும் இருப்பு ஆகிய நிலையில் செய்யப்படும் நிவாரணம், இறைவனின் விருப்பத்தால் மட்டுமே செய்யப்படுகின்றது. ஒரு மகானின் பல்வேறு தேஹங்கள் அதிக அளவில் கரைந்துவிட்டதால், அவரால் இறைவனின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு அதன்படி நடக்க முடிகின்றது.

பிரபஞ்சத்தின் ஒரு சக்தியாக விளங்கும் ஸங்கல்பம் மற்றும் பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

5. குறைந்த ஆன்மீக நிலையில் நிவாரணம் அளிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள்

ஒருவருக்கு அதிக ஆசை இருந்தால், 40% ஆன்மீக நிலையிலும் நிவாரணம் அளிக்கலாம். எனினும், இந்த நிலையில் ஒருவரால் மற்றொரு நபரை பாதிக்கும் கீழ்நிலை ஆவிகளின் தாக்கத்திற்கு மட்டுமே நிவாரணமளிக்க முடியும். இந்த வரையறுக்கப்பட்ட திறனுடன், குறைந்த ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் மற்றவர்களுக்கு நிவாரணமளிக்க முயற்சிப்பதால், கடுமையான ஆபத்துகள் ஏற்படலாம்.

  • நிவாரணம் பெறுபவரின் ஆன்மீகக் கஷ்டத்தால் நிவாரணம் அளிப்பவர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
  • நிவாரணம் பெறுபவர் அதிக பலம் பொருந்திய தீய சக்தியால் பீடிக்கப்பட்டிருந்தால், அது நிவாரணமளிப்பவருக்கு எதிராக கடுமையாக செயல்படக்கூடும். இதன் விளைவாக, நிவாரணம் அளிப்பவர் பாதிக்கப்படலாம்.
  • மேலும், குறைந்த ஆன்மீக நிலையில், நிவாரணம் அளிப்பவர் வரையறுக்கப்பட்ட சக்தியைக் கொண்டுள்ளதால், தாக்குதலை சூட்சும நிலையில் எதிர்கொண்டு நிவாரணம் பெற அதிக நேரம் தேவைப்படுகின்றது.
  • ஆகையால் ஆன்மீக நிவாரணத்தின் விளைவுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கலாம், இதனால் மக்களுக்கு ஆன்மீக நிவாரணத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையலாம். இதன் விளைவாக, எதிர்பார்த்தபடி நிவாரணம் பெறாததால், நோயாளி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.
  • குறைந்த ஆன்மீக நிலைகளில், நிவாரணம் அளிப்பவரின் அகம்பாவம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, ஆன்மீக கண்ணோட்டத்தில் இது பெரும் தீங்கை விளைவிக்கும். ஆன்மீக நிவாரணம் அளிப்பவரிடம் அதிக அகம்பாவம் இருந்தால், தீய சக்திகள் இதனைப் பயன்படுத்தி அவரை பாதிக்கலாம் அல்லது பீடிக்கலாம்.

உலகிய அங்கீகாரத்திற்காக ஒருவர் நிவாரணம் அளித்தால், அப்பொழுதும், காலப்போக்கில் அவர் தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆளாகலாம்.

ஆன்மீக ரீதியில் நேர்மறையாகவும், பொருள் சார்ந்த ஆதாயத்தில் கவனம் செலுத்தாமல் தன்னலமற்ற முறையில் நிவாரணம் அளிப்பவர்களாகவும் இருக்கும் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ள நிவாரணம் அளிப்பவர்கள், தங்கள் ஆன்மீக நேர்மறைத் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் ஆன்மீக நிவாரணம் அளிக்கும்போது இது உண்மை.

மறுபுறம், பெரும் அகம்பாவம் உடைய மற்றும் புகழ், பணத்திற்காக நிவாரணம் அளிப்பவர்கள், தீய சக்திகளினால் பீடிக்கப்பட்டு அவர்களின் ஆன்மீக சக்தியை படிப்படியாக இழக்கின்றனர்.

பொதுவாக, 30% நிவாரணம் அளிப்பவர்கள் ஆன்மீக ரீதியில் நேர்மறையாக உள்ளனர், 70% தீய சக்திகளின் பாதிப்பின் கீழ் நிவாரணம் அளிக்கின்றனர். ஆன்மீக ரீதியில் நேர்மறையாக உள்ள 30% நிவாரணம் அளிப்பவர்களில், 10% ஆன்மீக பரிமாணத்தில் உள்ள நல்ல சக்திகளால் உதவப்படுகின்றனர் மற்றும் 20% அவருடைய சொந்த ஆன்மீக சக்தியை பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட ஆதாயம் அல்லது அங்கீகாரம் பெறும் நோக்கத்துடன் சொந்த ஆன்மீக சக்தியை பயன்படுத்தும் ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்கள், அவர்களுடைய ஆன்மீக சக்தியை செலவழிக்கின்றனர்.

ஆதாரம்: எஸ்.எஸ்.ஆர்.எஃப்.(SSRF)-ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி

6. விதியின் காரணமாக ஒரு நபரின் கஷ்டங்களின் தொடர்பில், இந்த மூன்று முறைகள் எத்தனை சதவிகிதம் நிவாரணமளிக்க முடியும்?

நாங்கள் இங்கு குறிப்பிடும் 3 முறைகள்:

  1. உயிரற்ற பொருட்களின் மூலம் நிவாரணம்
  2. மனிதர்களின் (நிவாரணம் அளிப்பவர்கள்) மூலம் நிவாரணம்
  3. மகான்களின் மூலம் நிவாரணம்

ஒருவரின் விதியைப் பொறுத்து, அவர் வாழ்க்கையில் பல்வேறு அளவில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றார். நாம் முன்பே குறிப்பிட்டது போல், விதியை வெல்ல அல்லது குறைந்தபட்சம் அது ஏற்படுத்தக்கூடிய கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறுதியான வழி, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளின்படி ஆன்மீக பயிற்சி செய்வதாகும்.

மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களின் தீவிரம் மற்றும் மூன்று நிவாரணமளிக்கும் முறைகள் (பொருட்கள், மனிதர்கள் மற்றும் மகான்கள் மூலம்) கஷ்டங்களை குறைக்க எப்படி உதவலாம் என்பதன் முறிவை பின்வரும் விளக்கப்படம் விளக்குகின்றது.

வாழ்வின் கஷ்டங்கள் மற்றும் ஆன்மீக நிவாரணத்தின் முறைகள்

குறைந்த மத்யம தீவிர
வாழ்வின் கஷ்டங்கள்
குறைந்த, மத்யம மற்றும் தீவிர கஷ்டங்களின் தீவிரத்தன்மையின் அளவு என்ன? 10% 40% 70%1
2006-இல் இருந்த தீவிரத்தின் அடிப்படையில் கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட உலக மக்கள் தொகையின் சதவிகிதம் 30% 60% 10%
ஆன்மீக நிவாரணம் எவ்வாறு உதவும்?
உயிரற்ற பொருட்களின் மூலம் நிவாரணம் 30% 10% 10%2
மனிதர்களின் மூலம் நிவாரணம் 50% 30% 30%
மகான்களின்  மூலம் நிவாரணம் 70% 50% 50%

அடிக்குறிப்புகள் :

  1.  100% என்பது அகால மரணத்தை விளைவிக்கும் கஷ்டங்களைக் குறிக்கும்
  2.  இந்த அட்டவணையை படிக்கும் விதத்தின் உதாரணமாக, உயிரற்ற பொருட்களின் மூலம் செய்யும் நிவாரணத்தால் வெறும் 10% மத்யம அளவு கஷ்டங்களை குறைக்க முடியும் என்பதே இதன் பொருள்.

7. ஆன்மீக சக்திகளை அணுகுவதற்கான வினையூக்கி (catalyst) என்ன?

  • ஒருவரிடம் நிவாரணம் அளிக்கும் திறன் உள்ளதா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணி அவரது ஆன்மீக நிலை ஆகும். உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் ஆன்மீக நிவாரணம் அளிப்பதில் அதிக திறன் கொண்டுள்ளனர்.
  • தொடர்ந்து செய்யும் ஆன்மீக பயிற்சி ஒருவரின் ஆன்மீக நிலையை அதிகரிக்கின்றது. ஒருவரின் ஆன்மீக நிலை அவர் இந்த பிறவியில் அல்லது முற்பிறவிகளில் செய்த ஆன்மீக பயிற்சியின் காரணமாக இருக்கலாம்.

இந்த தொகுப்பில் உள்ள அடுத்த கட்டுரையைப் படிக்கவும், “ஒரு ஆன்மீக நிவாரணம் அளிப்பவர் எவ்வாறு நிவாரணம் அளிக்க வேண்டும்?”.