இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொள்வதற்காக, கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம் –
- மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள்?
- ஸத்வ, ரஜ மற்றும் தம – படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்
1. யோகா, பிராணாயாமம் (சுவாச பயிற்சி) வகுப்புகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சி – ஒரு அறிமுகம்
யோகா வகுப்புகளில் கலந்துகொள்வது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது. உடலில் உள்ள பிராண சக்தியை ஒழுங்குபடுத்துவதற்காக, பண்டைய யோகிகள் உருவாக்கியுள்ள யோகா (ஆசனங்கள்) மற்றும் பிராணாயாமம் (சுவாச பயிற்சிகள்) ஆகியவை பல யோகா வகுப்புகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. ஆன்மீக வளர்ச்சியில் முக்கியத்துவம் என்ற கண்ணோட்டத்தில், யோகாசனம் மற்றும் சுவாச பயிற்சியை முக்கியமாக உள்ளடக்கிய யோகா வகுப்புகளின் மூலம் எந்த விதமான ஆன்மீக நன்மைகள் பெறப்படுகிறது என்பதை ஆராய முடிவு செய்தோம்.
2. யோகா மற்றும் சுவாச பயிற்சி நமது ஸ்தூல தேஹம் (உடல்) மற்றும் பிராண தேஹத்தை தூய்மைப்படுத்துகின்றன
ஒருவர் யோகா மற்றும் சுவாச பயிற்சி செய்வதால், ஆன்மீக வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் சில வரம்புகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப். -னால் மேற்கொள்ளப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
யோகா மற்றும் சுவாச பயிற்சி மேற்கொண்டபின், நமது உடலின் பல்வேறு தேஹங்களின் மீது சராசரியாக ஏற்படும் ஆன்மீக நன்மையைப் பற்றி பின்வரும் அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
யோகாசனம் மற்றும் சுவாச பயிற்சி மூலம் உடலின் பல்வேறு தேஹங்கள் தூய்மையடைதல்*
யோகாசனம் | சுவாச பயிற்சி | |||
---|---|---|---|---|
பல்வேறு தேஹங்கள்(அதிகபட்ச சாத்தியமான தூய்மை) | அதிகபட்ச சாத்தியமான தூய்மை | தேவையான ஆண்டுகள் | அதிகபட்ச சாத்தியமான தூய்மை | தேவையான ஆண்டுகள் |
ஸ்தூல தேஹம் (20%) |
20% |
10 |
20% |
6 |
பிராண தேஹம் (30%) |
7% |
10 |
30% |
8 |
மனோ தேஹம் (100%) |
5% |
10 |
10% |
8 |
காரண தேஹம் (100%) |
2% |
10 |
2% |
8 |
மஹாகாரண தேஹம் (சூட்சும அகம்பாவம்)(100%) |
1% |
10 |
1% |
8 |
* தூய்மையடைதல் என்பது அந்த குறிப்பிட்ட தேஹத்தின் ஸாத்வீக தன்மை அதிகரிப்பதை குறிக்கிறது
இந்த அட்டவணையிலிருந்து, யோகா மூலமாக ஸ்தூல தேஹமும், சுவாச பயிற்சி மூலமாக பிராண தேஹமும் தூய்மையடைகின்றன, அதாவது, அவற்றின் ஸாத்வீக தன்மை அதிகரிக்கின்றது என்னும் ஆன்மீக நன்மையை நாம் காணலாம். உதாரணமாக, யோகா மூலம் உடலின் ஸாத்வீக தன்மை அதிகரித்து, 20% வரை தூய்மை அடைகிறது; இதற்கு சராசரியாக 10 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
3. விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு மேலும் சூட்சுமமான ஆன்மீகப் பயிற்சி தேவை
மனம், புத்தி மற்றும் சூட்சும அகம்பாவம் போன்ற அதி சூட்சும தேஹங்களின் ஸாத்வீக தன்மையை அதிகரிப்பதற்கு, மேலும் சூட்சுமமான ஆன்மீக பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் யோகாசனம் மற்றும் சுவாச பயிற்சி செய்து நம் ஸ்தூல மற்றும் பிராண தேஹத்தை தூய்மைப்படுத்துவது போல் மற்ற பல்வேறு ஆன்மீக பாதைகளை பின்பற்றி ஆன்மீக பயிற்சியை செய்வதன் மூலமும் தூய்மைப்படுத்த இயலும்.
4. யோகா மற்றும் சுவாச பயிற்சி ஆகியவற்றால் விதியின் விளைவுகளை தடுக்க இயலாமல் போகலாம்
உடலை தூய்மைப்படுத்துவதற்கும், அந்த உடலால் அனுபவிக்கப்பட வேண்டிய விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது முக்கியம். உதாரணத்திற்கு, ஒருவருக்கு விபத்து ஏற்பட வேண்டும் அல்லது தீவிர தசை நோயான டீஜெனரேடிவ் மயோபதி ஏற்பட வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தால், யோகாஸனங்களை பயில்வதால் அவற்றைத் தடுக்க முடியாது. எனினும், உடலை தூய்மைப்படுத்துவதால் விதியை எதிர்கொள்ளக் கூடிய உடல் திறனை அது அதிகரிக்கிறது.
5. இறப்புக்குப் பிறகு சுவர்க்கத்தை அடைய ஆன்மீக தூய்மை வேண்டும்
இறப்புக்குப் பிறகு, சுவர்க்கம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம் அல்லது சத்யலோகம் போன்ற உயர்நிலை லோகங்களில் ஒன்றை அடைய வேண்டும் என்பதும் ஆன்மீக வளர்ச்சியின் குறிக்கோள்களில் ஒன்றாகும். இறந்த பின், மேலே கூறப்பட்ட நல்ல லோகங்களில் மிகக் குறைவான ஸாத்வீக தன்மை நிறைந்த சுவர்க்கத்தை அடைவதற்கு கூட, மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேஹங்களும் குறைந்தபட்சம் 50% தூய்மையானதாக இருக்க வேண்டும்.
6. சுருக்கம்
- யோகாவும் பிராணாயாமமும், உலக வாழ்க்கையில் ஸ்தூல மற்றும் பிராண தேஹத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவுகின்றன. ஒரு ஆரோக்கியமான உடலைக் கொண்டுதான் ஸத்சேவை போன்ற ஆன்மீக பயிற்சியை சிறப்பாக செய்ய முடியும்.
- ஒருவர் யோகா மற்றும் சுவாச பயிற்சி செய்வதோடு, மனோ தேஹம் மற்றும் இதர தேஹங்களை தூய்மைப்படுத்த மற்ற வகையான ஆன்மீக பயிற்சியையும் சேர்ந்து செய்தால், அவர் தன் வாழ்நாளில் விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும். இதனால் ஒருவர், இறைவனுடன் ஒன்றிணையும் தன் வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி முன்னேற முடியும்.