இந்த கட்டுரை பற்றிய விரிவான தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நவீன விஞ்ஞானத்தின்படி மிகச் சிறிய துகள்கள் என்றால், எலக்-ட்ரான்கள், புரோட்டான்கள், மேசன்ஸ், குவார்க்ஸ், குளூன்ஸ் மற்றும் நியூட்ரான்கள் ஆகும். இருப்பினும் ஆன்மீக சாஸ்திரப்படி, நாம் எல்லோரும் மிக நுணுக்கமான துகள்கள் அல்லது கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளோம். இவற்றை நுண்ணோக்கிகள் போன்ற எந்த கருவிகளினாலும் பார்க்க முடியாது. இக்கூறுகளை, சூட்சும ஞானேந்த்ரியங்கள் மூலம் தான் உணர முடியும்.
இந்த சூட்சும துகள்கள், மூன்று அடிப்படை சூட்சும கூறுகள் (த்ரிகுணங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. இவை பின்வருமாறு உருவாக்கப்படுகின்றன:
|
இப்போதிலிருந்து இந்த ஆவணத்தில், ஸத்வ, ரஜ மற்றும் தம கூறுகளை ஒன்றிணைத்து த்ரிகுணங்களாக குறிப்பிடப்படும். அதற்கான உரிச்சொற்கள், ஸாத்வீகமான, ராஜஸீகமான, தாமஸீகமான என்பதாகும். உதாரணத்திற்கு ஒருவரை ஸாத்வீகமானவர் என்று நாம் குறிப்பிடும்போது, அவரிடம் ஸத்வ கூறுகள் அதிகம் உள்ளன என்று பொருள்படும்.
|
நம்மில், ஒவ்வொருவரும் இந்த அடிப்படை மூன்று சூட்சும கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளோம். இருப்பினும், மூன்று சூட்சும கூறுகளின் சதவிகிதம் ஒவ்வொரு நபரின் ஆன்மீக முதிர்ச்சிக்கு ஏற்ப வேறுபடுகிறது.
இன்றைய உலகில் சராசரியான ஒருவர் அதிக தம கூறுடன் காணப்படுகிறார். இந்த மூன்று சூட்சும கூறுகளின் (த்ரிகுணங்கள்) பல்வேறு வரிசைமாற்றங்கள் ஒரு நபரின் அடிப்படை தன்மையை வரையறுக்கின்றன.
ஒருவர் ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும்போது, தம கூறு ஸத்வ கூறாகவும், மேலும் ரஜ கூறு கூட சுத்தமாகிறது.
ரஜ கூறு எவ்வாறு தூய்மையாகிறது என்பதற்கான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தூய்மையற்ற ரஜ போக்குகள் ஒருகாலத்தில் கொந்தளிக்கும் கோப-மாகவும், கட்டுக்கு அடங்காத ஆசையாகவும் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ஆன்மீக பயிற்சியால் தற்பொழுது ரஜ போக்குகள் தூய்மையாக வெளிப்படுத்தபடுகிறது. இந்த நபர் இப்போது தனது ரஜ குணத்தின் நடவடிக்கைகளை மற்றவர்களுக்கு ஆக்கபூர்வமான நற்செயல்களை செய்தல், கடவுளுக்கு சேவை செய்தல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்துகிறார். ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சிறுமணி அளவில் ஓர் உள்ளார்ந்த மாற்றம் ஏற்பட்டு அந்த நபரின் ஆளுமையில் முற்று முழுதாக ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டு வருகிறது.
உதாரணத்திற்கு நான்காம் வகுப்பு மாணவர்களின் ஓர் வகுப்பை எடுத்துக் கொள்வோம். அதிக சத்தத்துடன் போக்கிரி கும்பல் போல் நடந்து கொள்ளும் அந்த மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு ஆசிரியர் மிகவும் கடினப்படுகிறார். அந்த ஆசிரியரின் குரலில் உறுதியிருந்தால், வகுப்பு அமைதியாக இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இதன் விளைவாக ஆசிரியரது முன்னிலையில் வகுப்பு அமைதியாக இருக்கிறது. ஆனால் ஆசிரியர் வகுப்பை விட்டுச்செல்லும் தருணத்திலேயே மாணவர்கள் பழைய குறும்பு நிலைக்கு திரும்பி விடுகிறார்கள். ஏனென்றால் அடிப்-படையிலேயே இந்த மாணவர்கள் ராஜஸீகமான மற்றும் தாமஸீகமான இயல்புயுடையவர்கள்.
மறுபுறம் வகுப்பில் ஒரு ஸாத்வீகமான குழந்தை இருக்கின்றது. சக மாணவர்கள் அந்த குழந்தையின் பங்கேற்பை சில தவறான செயல்களுக்கு, அதாவது கொடுமைப்படுத்துதல் மற்றும் மோசமான குறும்புகள் அல்லது ஏமாற்றுவதில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள். அடிப்படையில் ஸாத்வீகமான அந்த குழந்தை எந்த செயலிலும் ஈடுபடாது. அதன் சகமாணவர்கள் பரிந்துரைத்தவற்றை அனுபவிப்-பதற்கு மாறாக அதன் வயிற்றில் ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகும். அப்படியே தவறான செயலில் ஈடுபட்டிருந்தால், அக்குழந்தையால் தன்னிலையுடன் வாழ முடியாது.
குழந்தைகளை ஒழுக்க நெறி விரிவுரைகள் மூலம் மேலோட்டமாக மாற்ற முயற்சி செய்வதற்கு பதிலாக நிலையான மாற்றங்களை குழந்தைகளிடம் கொண்டு வருவதற்காக, ஆன்மீக பயிற்சி மேற்-கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை ஆன்மீக ரீதியிலான சூழலில் வளர்க்கவேண்டும்.