1. நாமஜபம் செய்யும்போது மன ஒருமைப்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய அறிமுகம்
நாமஜபம் செய்ய ஆரம்பித்ததும், மனதில் மற்ற எண்ணங்கள் தொடர்ந்து வருவதே நாம் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இவை நாமஜபத்தின் மீதான சந்தேகங்-களினாலும் ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணப்பதிவுகளாலும் ஏற்படுகின்றன. இந்த கட்டுரையில் நாமஜபத்தை மன ஒருமைப்-பாட்டுடன் செய்வதை மேம்படுத்துவதற்கான சில நடைமுறை குறிப்புகளை கொடுத்துள்ளோம். மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபம் செய்வதை கருவியாக கருதாமல், இலக்காக மனதில் நிறுத்திக்-கொள்ள வேண்டும்.
2. நாமஜபம் செய்யும்போது மன ஒருமைப்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது
நாமஜபம் செய்யும்போது எண்ணிக்கையில் கவனம் கொள்ளுங்கள்: மணிகளால் ஆன மாலை (ஜபமாலை) அல்லது எண்காட்டியை கையில் வைத்துக் கொண்டு ஒருவர் நாமஜபத்தின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தினால் மன ஒருமைப்பாட்டை அடையலாம்.
நாமஜபத்தை உரக்க கூறுங்கள்: நாமஜபம் செய்யும் வேளையில் மனம் அலைந்து கொண்டே இருக்கும் போது, சில நேரம் சத்தமாக நாமஜபத்தை செய்வது நல்லது அல்லது நாமஜப ஒலிப்பதிவை கேட்பது பயனளிக்கும். பிற எண்ணங்கள் குறைந்து மன ஒருமைப்பாட்டை ஓரளவு அடைந்தவுடனும் நாமஜபத்தை நாம் மனதளவில் தொடரலாம்.
நாமஜபத்தின் வேகத்தை அதிகரிக்கவும்: அதுபோல நாமஜபத்தின் வேகத்தை நாம் சிறிது நேரம் அதிகரிக்க செய்து, மன ஒருமைப்-பாட்டை அடைந்தவுடன் வேகத்தை குறைத்து கொள்ளலாம்.
ஒரு அமைதியான இடத்தில் நாமஜபம் செய்யுங்கள்: கவனம் செலுத்துவதில் நமக்கு சிரமம் இருந்தால் நாமஜபத்தை அமைதியான இடத்தில் அல்லது ஸத்வ கூறினை ஈற்கும் இயற்கையான சூழல் மற்றும் மத வழிபாடு ஸ்தலத்திலும் செய்யலாம்
விழித்தவுடனும் படுக்கைக்கு செல்லுவதற்கு முன்பும் நாமஜபம் செய்யுங்கள்: காலை விழித்தவுடனும் படுக்கைக்கு செல்லுவதற்கு முன்னும் மனதில் இவ்வுலக விஷயங்கள் பற்றிய செயற்பாடு குறைவாக இருப்பதால் இந்த நேரத்தில் மன ஒருமைப்பாடு அடைவது எளிதாக இருக்கும்.
சுவாசத்துடன் நாமஜத்தை ஒத்திசைக்கவும் : சுவாசத்துடன் நாமஜமத்தை ஒருங்கிணைத்தல் என்ற எங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, சுற்றுச்சூழலில் இருந்து எண்ணங்கள் ஒருவரது சுவாசத்துடன் மனதில் நுழைந்து விடுகிறது. நாம் சுவாசத்தையும் நாமஜமத்தையும் ஒருங்கிணைத்தால் எண்ணங்களால் ஏற்படும் தாக்கத்தின் விளைவு குறைகிறது.
முத்திரைகளுடன் நாமஜமத்தை முழுமையாக்குதல் : இரு கைகளிலும் உள்ள ஆள்காட்டி விரலின் முனையை கட்டைவிரல் நுனியுடன் தொடவும். இது எண்ணங்களை குறைக்க உதவுவதுடன் மன ஒருமைப்பாடு அடையவும் உதவும் முத்திரைகளில் ஒன்றாகும்.
நாமஜபத்திற்கான சுய ஆலோசனை முறை : தினந்தோறும் சுய ஆலோசனையை மீண்டும் மீண்டும் கூறுவதால் நாமஜபத்தில் முழு கவனம் செலுத்தும் திறன் மேம்படுத்தப்படுகிறது. நாம் சுய ஆலோசனையை பின்வருமாறு வடிவமைக்கலாம்: “எப்பொழு-தெல்லாம் நான் பயனற்ற எண்ணங்களை நினைக்கிறேனோ, அப்பொழுது அதனை புரிந்து கொண்டு கவனத்தை நாமஜபத்தின் மீது செலுத்துவேன்.” சுய ஆலோசனை எடுத்துக்கொள்ளும் முறை பின்வருமாறு:
- 1 -2 நிமிடங்கள் நாமஜபம் செய்யவும்
- மனதளவில் சுய ஆலோசனையை 5 முறை கூறவும்
- நன்றி செலுத்தவும்
தினமும் இவ்வாறு 3-5 முறை செய்ய வேண்டும்.
கருத்தூன்றிய நமது பார்வையை நிலை நிறுத்துவது: நாமஜபம் செய்யும் போது கண் சிமிட்டாமல் நமது பார்வையை ஒரு பொருள் அல்லது புள்ளியின் மீது நிதானமாகப் பார்ப்பதால், மனம் ஓருமைப்பாடு அடைகிறது.
நாமஜபத்தை கண் மூடிய நிலையில் செய்வது : வெளிப்புற கவனச்சிதறல்கள் காரணமாக எண்ணங்கள் அதிகரிக்கலாம். கண் மூடிய நிலையில் நாமஜபம் செய்யும்போது மன ஒருமைப்பாடு மேம்படுத்தப்படுகிறது. ஒருவரை தூக்கம் ஆழ்த்தினால், கண் திறந்த நிலையில் நாமஜபம் செய்வது நல்லது.
இறைவனின் அல்லது உச்சரிக்கும் தெய்வத்தின் உருவ படத்தின் முன் அமர்ந்து நாமஜபம் செய்வது: முடிந்தால் நாம் இறைவனின் உருவப்படத்தையோ அல்லது உச்சரிக்கும் தெய்வத்தின் முன் அமர்ந்தோ நாமஜபம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் மனம் இறை தத்துவத்தில் ஈர்க்கப்படுகிறது.
இறைவனை, அல்லது நாமஜபத்திற்குரிய தெய்வத்தை அல்லது ஒருவரது குருவை நினைவு கொள்ளலாம்: இது நம் ஆன்மீக உணர்வை அதிகரிக்கலாம். அவர்கள் மீதான பக்தியால் மன ஒருமைப்பாட்டுடன் கூடிய நாமஜபம் எளிதில் நேரிடுலாம். கூடுதலாக, ஆன்மீக உணர்வை அதிகரிக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நாமஜபத்தின் தரத்தை மேம்படுத்தும்.
பிரார்த்தனை: இடைவிடாது மெய்யுறுதிப்பாட்டுடன் பிரார்த்தனை செய்யலாம்: “அன்பார்ந்த கடவுளே தயவு செய்து நாமஜபத்தை ஒருமுகப்படுத்த எனக்கு உதவுங்கள்.”
ஆன்மீக நிவாரணம்: தற்போதைய காலங்களில், ரஜ கூறுகள் சுற்றுப்புறத்தில் அதிகமாக உள்ளது. இந்த தூய்மையின்மை நம் உடலில் நுழைகையில் நமக்கு பல விளைவுகள் ஏற்படுகிறது, அவற்றில் ஒன்று சிந்தனைகளின் அதிகரிப்பு ஆகும். மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபத்தை செய்வதற்கு தடையாக இருக்கும் நம்மை சுற்றியுள்ள இந்த கருப்பு படலம் நீங்குவதற்கு, ஆற்றல் வாய்ந்த ஆன்மீக நிவாரண வழிகளாகிய உப்பு நீர் நிவாரணம் , பெட்டி சிகிச்சை அல்லது ஊதுபத்தி ஏற்றுவது போன்றவற்றை செய்யலாம்.
பயிற்சி: மேலும் மேலும் நாமஜபம் செய்வதால், நம் எண்ணங்கள் படிப்படியாக குறைக்கின்றன. மன ஒருமைப்பாட்டை அதிகரிக்க பயிற்சி ஒரு எளிய வழியாகும். எந்தளவு நாமஜபத்தை பயிற்சி செய்கிறோமோ அந்தளவு மன ஒருமைப்பாடு மேம்படுகிறது.
குருவின் அருள்: இறுதியில் எல்லா எண்ணங்களையும் அகற்று-வதற்கு குருவின் அருள் அவசியமாகிறது. ஏனெனில், நம் சொந்த முயற்சியில் அனைத்து எண்ணங்களையும் நீக்கி நம் கட்டுப்-பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது நடக்காத காரியம். குருவின் கிருபையை அடைய வேண்டும் என்றால் இறைவனோடு இரண்டற கலக்கவேண்டும் என்ற தாபத்துடன் ஆன்மீக பயிற்சியை தவறாமல் செய்து வரவேண்டும்.
3. சுருக்கம்— நாம் நாமஜபம் செய்யும் போது மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துவது எப்படி:
நாம் மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபம் செய்தால் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். இது நமது ஆழ்மனதில் நாமஜபத்திற்கான எண்ணப்பதிவை உறுதிப்படுத்துகிறது மற்றும் மன ஒருமைப்-பாட்டுடன் நாமஜபம் செய்யும் போது கடவுளிடமிருந்து அதிக பாதுகாப்பைப் பெறுகிறோம்.
இருப்பினும், மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபம் செய்ய முடியாவிட்டாலும் கூட, நாமஜபத்தை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும். மன ஒருமைப்பாட்டை இறுதியில் அடைய முடியும். சுமார் ஆறு மாத காலப்பகுதியுள், நாமஜபம் செய்யும் போது மன ஒருமைப்பாட்டினை மேம்படுத்தப்படுவதை இலக்காக வைத்துக்-கொள்ளலாம்.