அட்டவணை
1. விரும்பப்படும் பண்புகளும் விரும்பத்தகாத பண்புகளும்
இதற்கு முந்தைய கட்டுரைகளில், எவ்வாறு ஒரு நபர் இருபது முதல் முப்பதுவரையான பிரதான குணாதிசயங்களை கொண்டிருக்கலாம் எனவும், அது எவ்வாறு அவர்களின் ஆளுமையை நிர்ணயிக்கிறது எனவும் கண்டோம்.
இக்குணாதிசயங்களை இரு வகையாக பிரிக்கலாம்
- விரும்பப்படும் குணாதிசயங்கள் : இவை கடின உழைப்பு, அல்லது நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துதல் போன்ற குணாதிசயங்களை குறிக்கும்.
- விரும்பத்தகாத குணாதிசயங்கள் : பொய் கூறுதல் மற்றும் பிடிவாதம் போன்றவைகள்
விரும்பப்படும் குணாதிசயங்கள் ஆளுமை குணங்கள் எனவும், விரும்பத்தகாத குணாதிசயங்கள் ஆளுமை குறைகள் எனவும் அறியப்படும். இதன்படி குணாதிசயங்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குணங்களானவை ஒருவரின் பொதுவான நல்வாழ்விற்கும் மற்றையோருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் உறுதுணையாக விளங்கும். மாறாக, குறைகளானவை அவற்றை கொண்டுள்ளோருக்கும் அவர்களுடன் தொடர்புடையோருக்கும் துன்பத்தையே அளிக்கிறது.
2. ஆளுமை குறைகளையும் பண்புகளையும் ஆய்வு செய்தல்
நடத்தை வடிவங்களை விவரிக்க ஆங்கில மொழியில் கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் வார்த்தைகள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இவ்வார்த்தைகளில் நூறு முக்கிய விரும்பத்தகாத குணாதிசயங்களை (வகை 1 என கூறப்படும்) தேர்வு செய்து அதற்கு ஏற்புடைய விரும்பத்தக்க குணங்களை (வகை 2 என கூறப்படும்) தேர்வு செய்துள்ளோம். ஆளுமை குறைகளை வெற்றிகொள்ளுதல் எனும் பகுதியில் இவற்றை கண்டு நீங்களே உங்களை ஆய்வு செய்து கொள்ளலாம். பொதுவாக, வகை 1 என்பது நடைமுறையில் விரும்பத்தகாத குணாதிசயங்களையும் வகை 2 என்பது அதற்கு ஏற்புடைய விரும்பத்தகும் குணாதிசயங்களையும் உள்ளடக்கும். உதாரணமாக, வகை 1 இல் ‘மரியாதையின்மை’ எனும் குணாதிசயத்திற்கு ஏற்புடைய விரும்பத்தக்க குணமாக வகை 2 இல் ‘மரியாதையுடன் நடத்தல்’ என்பதை குறிப்பிடலாம். ஒருவனின் விரும்பத்தக்க குணங்களை தெரிந்துக்கொள்வதால் அவன் தன் கஷ்டங்களில் இருந்து வெளிவர உதவும் சக்தியின் மூலத்தை அறிந்து கொள்கிறான். தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் போராடும் ஒருவர், தன்னிடமுள்ள விரும்பத்தக்க குணங்களை அறிந்து கொள்வதனால் அதனை சரி செய்து கொள்ளமுடியும்.
3. சில விதிவிலக்குகள்
நாம் முன்பு குறிப்பிட்டதை குறைவாக சொல்லாத, கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. ஒரு குணாதிசயம் விரும்பப்படுவதா அல்லது விரும்பத்தகாததா என கருதப்படுவதும் ஒவ்வொரு தனிநபரை பொறுத்ததாகும். உதாரணமாக, அடக்கம், தாழ்மையாக பேசுதல், பணிவுடன் நடத்தல் என்பவை பணியாள் ஒருவருக்கு உகந்த விரும்பப்படும் குணாதிசயமாகவும், ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அவை விரும்பத்தகாத பண்புகளாகவும் கருதப்படுகிறது. பொதுவாக, சந்தேக குணம் என்பது விரும்பத்தகாத பண்பாக இருப்பினும் குற்றவியல் துறையினை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு அவை விரும்பத்தக்க குணாதிசயமாகவே கருதப்படுகிறது.