- ஸத்வ, ரஜ மற்றும் தம – படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்
- ஆன்மீக வாழ்வு (தினசரி வாழ்வில் ஆன்மீகம்) என்ற கருத்தின் அறிமுகம்
அட்டவணை
1. ஆடை அணியும் முறை– ஒரு அறிமுகம்
இன்று நான் என்ன அணிவது?
இதைப்பற்றி சிலர் அதிகம் சிந்திப்பார்கள், மற்றவர்கள் தனது அலமாரியில் முதலில் தென்படும் ஆடையை தேர்ந்தெடுப்பார்கள்.
நாம் செல்லும் இடம் மற்றும் வானிலையைப் பொறுத்து அன்றைய தினம் அணியவேண்டிய ஆடைகளை நாம் பொதுவாக தேர்வு செய்வோம். இதோடு நடைமுறையிலுள்ள போக்கு, ஆடையின் அளவுப்பொருத்தம், நமது மனநிலை, நேரம் போன்ற பல அம்சங்களை பொறுத்து இறுதி முடிவு எடுக்கிறோம்.
அனுதினம் மேற்கொள்ளும் இந்த செயல்முறையில்,நாம் அணியும் அல்லது வாங்கும் ஆடைகளின் ஆன்மீக விளைவுகளைப் பற்றிய கவனத்தை நாம் அரிதாகவே கருத்தில் கொள்கிறோம். நம்மில் பெரும்பாலும் (ஆடை தயாரிப்பாளர்களும்) நாம் அணியும் ஆடையால் ஆன்மீக ரீதியில் பாதிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கமாட்டோம். நாம் அணிவதற்கு தேர்ந்தெடுக்கும் ஆடை ஆன்மீக ரீதியில் நன்மை பயக்குமா அல்லது தீங்களிக்குமா என்று ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட தகவலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
2. ஆடை பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) மேம்பட்ட ஆறாவது அறிவினால் ஆடை மற்றும் அதை அணியும் முறையைப் பற்றிய ஆன்மீக ஆயர்ச்சி நடத்தப்பட்டது. பல ஆண்டுகள் ஆன்மீக பயிற்சி மேற்கொண்டும், முக்கியமாக பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலோடும் பெற்ற மேம்பட்ட ஆறாவது அறிவினால் ஸாதகர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பல்வேறு வகையான ஆடைகளிலிருந்து அதன் நிறம், உருவம், துணியைப் பொறுத்து உமிழும் ஆன்மீக அதிர்வலைகளை அவர்கள் உணர்ந்து ஆறாவது அறிவினால் தகவல்களை பெற்றார்கள். சில ஸாதகர்களுக்கு சூட்சும மட்டத்தில் நடப்பதைப் பார்க்கக்கூடிய பார்வைத் திறனும் உண்டு. சூட்சும ஞானம் மூலம் வரையப்பட்ட ஓவியங்களால், அவர்கள் பொது அறிவிற்கு அப்பாற்ப்பட்ட ஆன்மீக பரிமாணத்தின் ஒரு காட்சியை நமக்கு அளிக்கிறார்கள். இந்த பிரிவில் சூட்சும ஞானத்தால் பெறப்பட்ட அத்தகைய ஓவியங்களை நாங்கள் உங்களுடன் பகிர்ந்துகொண்டு நாம் அணியும் ஆடையின் விளைவுகளைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை அளிக்க முயற்சித்துள்ளோம்.
3. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ஆடையின் நோக்கம்
உலகியல் மற்றும் உளவியல் ரீதியாக ஆடைகளின் நோக்கத்தை நாமனைவரும் அறிவோம். ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ஆடைகளின் நோக்கம் இருவகைப்படும் :
Negative energies: At the Spiritual Science Research Foundation, we use the term 'negative energies' as a collective noun to represent all types of entities in the spiritual dimension that intend to harm humanity right from the 'common ghost' to the highest level 'māntriks'. If the spiritual strength of a common ghost is between 1 and 10 units, then a māntrik's strength ranges from a billion to close to infinity.
- ஸாத்வீகத்தை உள்வாங்கி வெளிப்படுத்தல் : நாம் அணியும் தன்மையைப் பொறுத்து வளிமண்டலத்திலுள்ள தெய்வீக மற்றும் நேர்மறை அதிர்வலைகளை நமக்குள் உள்ளிழுக்கும் ஒரு கருவியாக ஆடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் தூய்மை மற்றும் நேர்மறை அதிர்வலைகளை ஆடைகள் நமது மனதிற்குள் செலுத்தக்கூடும்.
- தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு : நாம் அணியும் ஆடைகள் நேர்மறை சக்திகளை ஈர்க்கத்தக்கதாக இருக்கையில் தீய சக்திகளிடம் இருந்து அது நம்மை பாதுகாக்கும். தாமஸீகமான ஆடைகள் ஆன்மீக பரிமாணத்திலிருந்து ஆவிகள், தீய சக்திகளை இழுக்கக்கூடும்.
4. நாம் அணியும் முறை மற்றும் அதன் ஆன்மீக விளைவுகள்
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான ஆன்மீக அதிர்வலைகள் உள்ளன.ஆடைகளின் அதிர்வலைகள், துணியின் வகை, உருவம், நிறம், வடிவமைப்பு, தையல் போன்ற காரணிகளைப் பொறுத்து இருக்கும். இக்காரணிகள் எவ்வளவு ஸாத்வீகமாக இருக்கின்றதோ அதைப்பொறுத்து இறுதி வடிவான அந்த ஆடைகளின் ஸத்வக்கூறும் அதிகமாகும். ஆன்மீக அறியாமையையும், தீய சக்திகளின் தொல்லைகளையும் அதிகரிக்கும் தம குணத்தை குறைத்து ஆடைகளின் தூய்மையை எவ்வாறு உயர்த்துவது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
4.1 துணியின் வகை

4.2 தையல் அளவு
துணியை வெட்டி தையல் மூலம் ஏராளமான ஓட்டைகளை உருவாக்கினால் அதில் தீய சக்திகள் ஈர்க்கப்படும். அதனால் குறைந்தளவு தையலிருக்கும் ஆடைகளை அணிவது நல்லது. இதனாலேயே தான் பாரதப் பெண்மணிகளின் பாரம்பரிய 9 கஜ சேலைகள் மிகவும் ஸாத்வீகமானவை என கருதப்படுகிறது. இதே காரணத்தால் தான் ஹிந்துக்கள் நான்கைந்து மீட்டர் அளவு செவ்வக வடிவில் தைக்கப்படாத துணியைக் கொண்டு, இடுப்பு மற்றும் கால்களுக்கிடையே சுற்றி பின்னர் இடுப்பில் ஒரு முடியுடன் கட்டும் பஞ்சகச்சம் அல்லது வேஷ்டியானது பொத்தான் வைத்து தைக்கப்படும் ஆடைகளை விட அதிக ஆன்மீக நன்மைகளைத் தருகின்றது.
இதனுடன் நாமஜபம் செய்து கொண்டே கைகளால் தயாரிக்கப்படும் ஆடைகள் நேர்மறை ஆன்மீக அதிர்வலைகளை ஈர்க்கும் தன்மை படைத்தவை. தையல் இயந்திரம் மூலம் அதிகளவு ஓட்டைகள் போட்டால் அது கஷ்டம் தரும் சக்திகளை ஈர்க்கக்கூடும்.
4.3 ஆடையின் நிறம்
வெள்ளை, மஞ்சள், நீலம் ஸாத்வீகமான நிறங்களாதலால் அவைகளுக்கு ஆன்மீக ரீதியாக நேர்மறை அதிர்வலைகளை ஈர்க்க அதிக திறனுண்டு. இதற்கு மாறாக கருப்பு நிறம் அதிக கஷ்ட சக்திகளை ஈர்க்கும். கருமையும் வெண்மையும் கலவையாக அணிந்தால் இரண்டின் ஆன்மீக அதிர்வலைகளும் மோதிக்கொண்டு தீய சக்திகளை ஈர்க்கும்.
நிறங்கள் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு கருப்பு ஆடை ஏன் அணியக்கூடாது என்பதை இக்கட்டுரையில் அறிக.
அடர்நிறங்கள் தம குண அதிர்வலைகளை ஈர்க்கும். நிறங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதாக இருக்க வேண்டும்.
4.4 துணியின் மீதான வடிவமைப்பும் அச்சீடும்
துணியின் வடிவம், அளவு அல்லது அந்த வடிவத்திலிருந்து எழும் அதிர்வலைகள்(அதிர்வெண்கள்) அந்த ஆடையிலிருந்து வெளிப்படும் ஆன்மீக நேர்மறை மற்றும் எதிர்மறை தன்மையின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
- இலை, மலர், புள்ளி மற்றும் கொடி போன்ற ஸாத்வீக வடிவமைப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
- ஸாத்வீக வடிவமைப்புகளில் பொதுவாக கூரிய முனைக்கொண்ட வடிவமைப்புகள் இருக்காது
- நெரிசலான வடிவமைப்பு கூடாது.
- மண்டையோடு போன்ற பயங்கரமான வடிவமைப்புகள் தீய சக்திகளை ஈர்க்கும்.
- சட்டையில் கிடைமட்ட கோடுகளைவிட செங்குத்தான கோடுகள் நல்லது. கோணலான கோடுகள் கஷ்ட சக்திகளை ஈர்க்கும்.
- வடிவங்களே இல்லாத ஸாத்வீக வண்ணமுடைய சுய நிற ஆடைகள் பொதுவாக நேர்மறை சக்தியை ஈர்க்கும்.
இக்கட்டுரையின் தொடக்கத்திலுள்ள படத்தை பார்க்கவும்.
4.5 ஆடைகளின் நிலை
ஆன்மீக மட்டத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்த துணியின் நிலையும் ஒரு பங்கு வகுக்கிறது.
துவைக்காத ஆடைகள் தீய சக்திகளை ஈர்க்கும். உதாரணத்திற்கு, ஒரு பிரபலமான ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனம் வாடிக்கையாளர்களை தனது ஜீன்ஸ்-ஐ சலவை செய்யாதீர் என்று பரிந்துரைக்கிறதாம். ஆன்மீக ரீதியில் ஆடைகளில் தூசியும் வியர்வையும் சேர்வதால் ரஜ-தம அதிர்வலைகள் சேரும். மாறாக சலவை செய்த துணிகளில் ஒருவரது அழுக்கு சேராததால் ஸத்வ குணத்தை ஈர்க்க அதிக திறன் படைத்திருக்கும்.
கிழிந்த ஆடைகள் அணிவது தற்போதைய இளைய தலைமுறையின் ஃபேஷனாக மாறிவிட்டது, ஆனால் அது தீய சக்திகளை ஈர்க்கும்.
பழையவற்றை விட புதிய ஆடைகள் அதிக தெய்வீக சக்திகளை ஈர்க்க வல்லது. உதாரணத்திற்கு, சலவை செய்த பழைய பட்டாடையைவிட சலவை செய்த புதிய பட்டாடை அதிகமாக தெய்வீக சக்தியை ஈர்க்கும்.
4.6 ஆடைகளின் நீளம்
கடந்த பத்தாண்டுகளாக ஆடைகளின் நீளம் குறைந்துவிட்டது, இது இக்காலத்தின் போக்கு என்று நம்பப்பட்டாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அதிக தீமைகளுக்கு இது வழிவகுக்கும். தீய சக்திகளிடமிருந்து ஆடைகள் நம்மை பாதுகாக்கிறது. குறுகிய ஆடைகள் எதிர்பாலினத்திடம் ஒரு காம வெறியைத் தூண்டுவது மட்டுமின்றி அருகிலுள்ள தீயசக்திகளின் கவனத்தையும் ஈர்க்கும். பெண்கள் தனது அங்கத்தை வெளிப்படுத்துவது போன்ற ஆடைகளை அணிந்தால் தீய சக்திகள் ஈர்க்கப்பட்டு அவர்களை சூட்சுமத்தில் தாக்கி தனது காமவெறியை தீர்த்துக்கொள்ள நினைக்கும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல் பல பெண்களை அவர்கள் அறிந்தோ அறியாமலோ தீய சக்திகள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம்.
4.7 ஆடைகளின் பாணி
ஆடைகளை அணியும் பாணி பல அம்சங்களை கொண்டுள்ளது அவற்றில் ஒன்று அதன் பொருத்தம். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் வசதியாக இருக்கவேண்டும். அதிகம் இறுக்கமாக இருந்தால் ஆடையும் நமது தோலும் உராய்ந்து காற்றில் ஒலிக் கதிர்களை எழுப்பி சுற்றுச்சூழலில் உள்ள கஷ்ட சக்திகளை அந்நபரை நோக்கி ஈர்க்கும். சற்று தளர்வான ஆடைகள் அணிந்தால் தோல் மற்றும் ஆடை நடுவில் சூட்சும ரீதியாக வெற்றிடத்தை உருவாக்கி சைதன்யத்தை ஈர்த்து சேமிக்க உதவும்.
உடலில் ஆடைகளை அணியும் விதம் ஆற்றல்களை ஓட்டவோ தடுக்கவோ உதவும் வல்லமை படைத்தது. சேலையை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், முன்பக்கம் ஏன் கொசுவங்கள் உண்டு என்பதற்கான காரணத்தை எமது ஆன்மீக ஆராய்ச்சி கண்டறிந்தது. அந்த மடிப்புகளிலிருந்து ஆற்றல் நிலத்திற்கு ஓடி சூட்சும பாதாள லோகத்திலிருந்து(நரகம்) எழும் தீயசக்திகளிடமிருந்து பெண்களைக் காக்கும்.
ஒவ்வொரு காலத்திற்கேற்ப ஆடை வடிவமைப்பாளர்களின் தேடலுக்கு ஏற்றவாறு ஃபேஷன் மாறும். இருப்பினும் பல நூற்றாண்டுகளாக 9 மற்றும் 6 கஜம் சேலை தான் பெண்மணிகளுக்கு ஆன்மீக ரீதியாக பயனுள்ள ஆடை என்று எமது ஆன்மீக ஆராய்ச்சி கண்டறிந்தது.
ஆடை அணியும் முறை – சேலையும் பாவாடையும் (skirt) என்ற கட்டுரையைப் படிக்கவும்.
4.8 ஆடைகளை கடன் வாங்குவது – ஒருஆன்மீகத் தடை
ஆடை, காலணி, தொப்பிகளை நண்பரிடமிருந்து கடன் வாங்குவது தற்காலிகமாக ஒருவரது அலமாரியை நீட்டிக்கலாம் ஆனால் அதன் ஆன்மீக தீமைகள் நன்மைகளைவிட அதிகம்.
இப்போதைய உலகத்தின் அதிகளவான சமுதாயம் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தத் தீய சக்திகளின் அதிர்வலைகள் ஆடைகளில் கஷ்ட சக்தியாக தங்கியிருக்கும். தீய சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நபரின் ஆடைகளை அணிந்தால் ஆன்மீக ரீதியில் தீமையே உண்டாகும். தீய சக்திகளால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அறிய நமக்கு ஆறாவது அறிவு இல்லாததால் பிறரிடமிருந்து ஆடைகளை கடன் வாங்காமல் இருப்பதே நல்லது.
உலகின் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் ஆவிகளால் பாதிக்கப்பட்டோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளனர் என்ற பக்கத்தை பார்க்கவும்.
உபயோகிக்கப்பட்ட ஆடைகளை வாங்கும்போதும் இதேபோல் அனுபவம் உண்டாகும். இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றபோது ஆடைகளை அணிவதற்கு முன் ஆன்மீக ரீதியாக தூய்மைப்படுத்த வேண்டும்.
ஆடைகளிலிருந்து சூட்சுமவாசத்தை அகற்றுவதைப் பற்றி இங்கு படிக்கவும்.
5. சுருக்கம் – ஆடை அணியும் முறை
ஆன்மீக ரீதியில் ஆடைகள் நம்மை பாதிக்கும் முக்கியமான முறைகளை பற்றி இக்கட்டுரையில் உள்ள தகவல் சொல்கிறது. வழிகாட்டும் இந்த கொள்கைகளை கடைபிடிக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை ஸாத்வீக வாழ்வுமுறைக்கு ஒருபடி நெருங்கச் செய்கிறது. நடைமுறை மட்டத்தில் மேலுள்ள சில அம்சங்களை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுத்தலாம், உதாரணத்திற்கு கருப்பு ஆடைகளை தவிர்ப்பது. நாம் அதிகமாக இந்த மாற்றங்களை ஆடை அணிவதில் செயல்படுத்தும்போது அதிகளவு நன்மை பெறுவோம்.
இதற்கு மாறாக மேலே சொன்ன மற்ற சில விஷயங்களை கடைபிடிக்க அவ்வளவு எளிதாக இருக்காது. நம்முள் ஸத்வ குணத்தை வளர்த்துக்கொள்ள தேவையான முயற்சிகளை செய்வது நமது ஒட்டுமொத்த தூய்மையை அதிகரிக்கும்,ஆடைகளை தேர்வு செய்யும்போது குறைந்தளவு இவற்றை செய்யவேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும்.
ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீகத்தை பயின்றால் நமது ஆறாவது அறிவு செயல்படும். மேலே உள்ள தகவல்களை நாம் அதிர்வலைகள் மட்டத்தில் உணரலாம். சூட்சும அதிர்வுகளை உணரும் திறனை பெற்றவுடன் நமது தினசரி நடவடிக்கைகளில் நாமே முடிவெடுக்கலாம், இதனால் நாம் ஸாத்வீகமான முழுமையான வாழ்வை பெறலாம்.