உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அட்டவணை
1. திருநீறு (விபூதி) கையாளுதல் பற்றிய ஒரு அறிமுகம்.
ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து உருவாக்கப்பட்ட திருநீறு(விபூதி) ஒரு சிறந்த ஆன்மீக நிவாரணமளிக்கும் கருவியாகும்.
“ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளின் சாம்பலை ஏன் திருநீறு(விபூதி) என்று அழைக்கிறோம்” என்று அறிய கட்டுரைப்பகுதியைப் பார்க்கவும்.
ஆன்மீக நிலையிலிருந்து இது செயல்படுவதால், அதனுடைய செயல்படும்திறன், அதன் ஸாத்வீகத்தன்மை, மரியாதை மற்றும் அது கையாளப்படும் அல்லது நடத்தப்படும் நம்பிக்கைக்கு நேரடியான விகிதாசாரமாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் திருநீற்றை(விபூதி) கையாளுவதில் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பின்வருவனவற்றிலிருந்து அறியலாம்.
2. திருநீற்றை(விபூதி) கையாளும் போது செய்ய வேண்டியவை
ஆன்மீக அளவில்
- மரியாதை : மிகுந்த மரியாதையுடன் அதனை பயன்படுத்த வேண்டும். ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டப்படி எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஊதுபத்திகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன. ஒளிரூட்டப்படும் போது அவை இறை தத்துவத்தின்(தெய்வம் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஈர்க்கின்றன. இதன் விளைவாக, சேகரிக்கப்பட்ட திருநீற்றிலும்(விபூதி) அந்த குறிப்பிட்ட இறை தத்துவம் அதிகமாக இருக்கும்.
- அமைவிடம் : அதன் ஸாத்வீகத்தை பாதுகாக்க, முடிந்தவரை பூஜை அறையில் வைக்கவும்.
- கூடுதல் பாதுகாப்பிற்காக : திருநீற்றின்(விபூதி) ஸாத்வீகத்தன்மையை பாதுகாக்க அதை வைத்திருக்கும் கொள்கலன் அல்லது அதன் மூடியில் கடவுளின் பெயர்(நாம படிவம்) அல்லது ஒரு தெய்வத்தின் படத்தை ஒட்டலாம்.
- வலது கையால் கையாளவும் : விபூதியை வலது கையால் கையாளுவது ஆன்மீக ரீதியில் சிறந்தது. இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கூட, வலது கையைப் பயன்படுத்துவது சிறந்தது, ஏனெனில் இது உடலின் ஆன்மீக சக்தி அமைப்பின் (குண்டலினி என்றும் அழைக்கப்படுகிறது) சூரியநாடியுடன் தொடர்புடையது, மேலும் அதன் வழியாக அதிக ஆற்றல் பாய்ந்து, அந்த கையை அதிக திறனுடன் செயல்படுத்துகிறது.
ஸ்தூல அளவில்
விபூதி மற்ற பொருட்களுடன் கலக்கப்பட்டாலோ அல்லது சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டாலோ பிற ஸ்தூல பொருட்களைப் போலவே தூய்மையற்றதாகிறது அல்லது மாசடைகிறது. ஸ்தூல அளவில் மாசுபட்ட விபூதியை, திறந்த காயங்களில் தடவுதல் மற்றும் புனித நீரில் கலந்து உட்கொள்வது போன்ற ஆன்மீக நிவாரணமுறைகளில் பயன்படுத்த முடியாது.
- சேமித்தல் : ஊதுபத்தி எரிந்தவுடன் அதன் சாம்பலை சுத்தமான, உலர்ந்த கொள்கலனில் சேமிக்கவும். இது மூன்று மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும், இல்லையெனில் அது ஸாத்வீகத்தை இழந்து ஸ்தூல அளவில் மாசுபடும் அபாயம் உள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சேமிக்கப்படாமல் விட்டுவிட்டால், அந்த விபூதி பிரதானமாகச் சேமிக்கப்படும் கொள்கலனில் சேர்க்கப்படக்கூடாது.
- அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும் : ஒவ்வொரு முறையும் கொள்கலனைத் திறக்கும்போது, விபூதியானது ஸ்தூல அளவிலும் ஆன்மீக அளவிலும் மாசுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதான சேமிப்புக் கொள்கலனில் அடிக்கடி தொட்டு எடுப்பதை தவிர்க்க அதிலிருந்து சிறிய பகுதியை எடுத்து தினசரி பயன்பாட்டிற்கு தனியாக வைத்துக்கொள்ளலாம்.
- தூய்மை : விபூதியைத் தொடும் முன்பு கைகளை கழுவ வேண்டும்.
3. திருநீற்றை (விபூதி) கையாளும் போது செய்யக் கூடாதவை.
ஆன்மீக அளவில்
- மாதவிடாய் காலத்தில் : மாதவிடாயின் அந்த ஐந்து நாட்களில் அல்லது இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும் நாள் வரை பெண்ணுள் சூட்சும அடிப்படைக் கூறுகளில் ஒன்றான ரஜ தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் அந்த பெண் விபூதியைத் தொடுவதால், அதில் உள்ள ஆன்மீகத் தூய்மை அல்லது சூட்சும அடிப்படை ஸாத்வீகத்தன்மை குறைகின்றது. எனவே, மாதவிடாய் காலத்தில் திருநீற்றைத்(விபூதி) தொடாமல் இருப்பது நல்லது. எனினும், ஒரு பெண் தனியாகத் தங்கியிருந்தால், அவள் மாதவிடாய்க்கு முன் விபூதியின் ஒரு சிறிய பகுதியை ஒதுக்கி வைக்கலாம், அதனால் அவள் பிரதான சேமிப்பை தொட வேண்டியதில்லை, இதன் மூலம் விபூதியில் ஆன்மீகத்தூய்மை குறைவு ஏற்படுவதை ஓரளவு தவிர்க்கலாம்.
- பிறப்பு மற்றும் இறப்பு : குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களின் பிறப்பு அல்லது இறப்புக்குப் பிறகு 12 நாட்களுக்கு விபூதியின் பிரதான சேமிப்பைத் தொடக்கூடாது. ஏனெனில் , நெருங்கிய சொந்தம் என்பதால் ரஜ-தம தன்மைகள் அதிகளவில் இருக்கும்.
- கருப்பு சக்தியால் ஆபத்து : சேமித்து வைத்த விபூதியை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அதில் கருப்பு சக்தி சூழப்படலாம். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியில் இருந்து எடுக்கப்பட்ட விபூதியை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகு அதை ஓடும்நீரிலோ அல்லது கடலிலோ கரைக்கப்பட வேண்டும். நீரோட்ட இடங்கள் அருகில் இல்லாத பட்சத்தில் அதை வீட்டின் பின்பக்கத்தில் அல்லது தோட்டத்தில் புதைக்கலாம்.
- பாதிக்கப்பட்ட நபர் : ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ள வீட்டில், ஆவிகளால்(பேய்கள், பிசாசுகள்,மற்றும் தீயசக்திகள்) மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாகும் நபர் விபூதியின் பிரதான சேமிப்புக் கொள்கலனைத் தொடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது அந்த விபூதியின் ஸாத்வீகத்தன்மையைக் குறைக்கும்.
- தூய்மை : கழிப்பறைக்குச் சென்று திரும்பிய பின் அல்லது வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பிய பின் கை, கால்களை சுத்தம் செய்யாமல் விபூதியின் சேமிப்பு கொள்கலனைத் தொடக்கூடாது. ஏனென்றால், ஒருவர் கழிப்பறையிலும், வீட்டிற்கு வெளியேயும் அதிக ரஜ-தம தன்மைகளால் பாதிக்கப்படுகிறார்.