அட்டவணை
ஆன்மீக பயிற்சியினை (ஸாதனை) தொடர்ச்சியாக செய்வதன் முக்கியத்துவம் பற்றி SSRF இந்த இணையதளம் முழுவதும் வலியுறுத்துகிறது.
நீங்கள் உங்கள் ஆன்மீக பயணத்தை (ஆன்மீக பயிற்சி) இன்றே துவங்க என்ன செய்யலாம் என்ற புரிதலை கொடுப்பதே இப்பகுதியின் நோக்கமாகும்.
SSRF பரிந்துரைப்பது யாதெனில் நீங்கள் எந்த மதத்தினை சார்ந்தவராக இருப்பினும் பின்வரும் 3 விஷயங்களை உடனே கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது ஆன்மீக பயணத்தினை துவங்கமுடியும் அல்லது பூரணப்படுத்த முடியும்.
1. நீங்கள் பிறந்த மதத்திற்குரிய இறைவனின் நாமத்தை ஜபித்தல்
நமது ஆன்மீக பயணத்தை துவங்குவதற்கு நாம் பிறந்திருக்கும் மதமே தகுந்த சூழலை அளிக்கிறது. அவ்வாறே நமது மதத்தின் வழிபாட்டு தெய்வமே நம்முடைய ஆன்மிக வளர்ச்சிக்கு அக்கட்டத்தில் உறுதுணை புரிகிறது. ஒவ்வொரு மதத்தின் பல்வேறு இறை நாமங்கள் ஒரே பரமாத்மாவின் பல்வேறு தத்துவங்களின் பிரதிநிதிகளாக உள்ளன. நாம் பிறந்துள்ள மதத்திற்குரிய தெய்வத்தின் நாமத்தை திரும்பத்திரும்ப உச்சரிக்கும்பொழுது அத்தெய்வ தத்துவமானது அழைக்கப்பட்டு அதனுடைய தெய்வ சக்தியை ஈர்க்க முடிகிறது. இது நம் எல்லோருக்கும் அவசியமான பொதுவான ஆன்மீக மருந்தொன்றை உட்கொள்ளுவதற்கு சமமாகும்.
நாம் பிறந்துள்ள மதத்திற்கேற்ப உச்சரிக்க வேண்டிய இறைநாமங்களின் சில உதாரணங்களை பார்ப்போம்.
எந்த இறைநாமத்தை ஒருவர் ஜபிக்க வேண்டும்?
பிறந்த மதம் | ஜபிக்க வேண்டிய இறை நாமம் |
---|---|
பெளத்தம் | ஓம் மணி பத்மே ஹம், நமோ புத்தாய |
கிறிஸ்தவம் | ரோமன் கத்தோலிக்கம் – அருள் நிறைந்த மரியே வாழ்க மற்றும் வேறு கிறிஸ்துவ பிரிவினர்கள் – கர்த்தராகிய யேசு |
ஹிந்து |
குல தெய்வத்தின் நாமம். குல தெய்வம் பற்றி தெரியாவிடில் ஸ்ரீ குல தேவதாயை நமஹ எனும் நாமத்தை உச்சரிக்க வேண்டும் குலதெய்வத்தின் நாமத்தை ஜபிக்கும் முறை : குலதெய்வ நாமத்தின் முன் ஸ்ரீ சேர்த்து நான்காம் வேற்றுமையில் நாமத்தை உச்சரித்து இறுதியில் நமஹ என்று முடிக்க வேண்டும். உதாரணத்திற்கு : குலதெய்வம் கணபதியாக இருந்தால், ‘ஸ்ரீ கணேஷாய நமஹ’; பவானியாக இருந்தால் ‘ஸ்ரீ பவானி மாதாயை நமஹ’ அல்லது ‘ஸ்ரீ பவானி தேவ்யை நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். |
இஸ்லாம் | யா அல்லாஹ், அல்லாஹு அக்பர், ரஹீம் முதலியன. |
ஜைன் | நவகார் மந்திரம் (ஓம் நமோ அரிஹந்தானம்) |
யூதர் | ஜெஹோவா, யாவே, அடோனை அல்லது யூத மதத்தைச் சார்ந்த பல நாமங்களில் ஏதேனுமொன்று |
சீக்கியர் | வாஹே குரு, ஸ்ரீ வாஹே குரு, சுக்மணி சாஹேப், ஜபஜி சாஹேப் |
ஜோராஸ்ட்ரியன் | 101 நாமங்கள் உள்ளன. ஸாதகர் தியானத்தின் மூலம் கிடைக்கும் எண்ணிற்குரிய நாமத்தை ஜபிக்க வேண்டும். |
நாமஜபம் செய்வதற்கான சில குறிப்புகள் :
இறுதியாக : இந்த ஆன்மீக பயிற்சியில் உங்களாலான மிகச்சிறந்த முயற்சியை குறைந்தது ஆறு மாதங்களாவது மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை நீங்களே உணர்வீர்கள்.
2. தற்போதைய காலத்திற்கு அதாவது 2025, ஆன்மீக ரீதியாக உகந்த ஒரு நாமஜபம்.
ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பல ஆண்டுகள் முதல் தற்போதைய 2025 வரை ஆன்மீக ரீதியாக உகந்த ஒரு நாமஜபத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
அந்த நாமஜபம் ||ஓம் நமோ பகவதே வாசுதேவாய||
https://www.spiritualresearchfoundation.org/userfiles/download.php?path=%2Fuserfiles%2Faudio%2Fchants_deities%2F7.+Shree+Krushna.mp3&as3cf-fix-wp-check-file-type-ext=.phpநாமஜபத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.
https://www.spiritualresearchfoundation.org/userfiles/download.php?path=/userfiles/audio/chants_deities/20210830_Krushna_MAV_T_30min.mp3&as3cf-fix-wp-check-file-type-ext=.phpநாமஜபத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.
இந்த நாமஜபத்தின் பொருள் ‘படைப்பு அனைத்தையும் காக்கும் தெய்வீக தத்துவத்தின் முன் நான் தலைவணங்குகிறேன்’ என்பதாகும்.
தற்போதைய காலகட்டம் மற்றும் உலகில் நிகழும் நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற நாமஜபத்தை அடிப்படையான நாமஜபமாக செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நாமஜபம் வரும் காலங்களில் உங்களுக்கு தேவையான ஆன்மீக சக்தியையும், பாதுகாப்பையும் தரவல்லது. நீங்கள் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று ஜபிக்கத் தொடங்கிவிட்டால் உங்கள் பிறந்த மதப்படி உள்ள நாமஜபத்தை செய்ய வேண்டியது இல்லை.
ஒருவர் எந்த கடவுளின் நாமத்தை ஜபிக்கத் தேர்வு செய்தாலும் அதை தொடர்ந்து செய்வது மிகவும் இன்றியமையாதது ஆகும். ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் ஆன்மீக பயிற்சியில் முன்னேறுவதற்கும், கடவுளை நோக்கி செல்வதற்கும் உதவும் ஒரே வழியாக நாமஜபம் பரிந்துரைக்கப்படுகிறது.
3. மறைந்த மூதாதையர்களால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து மீள உதவும் ஒரு பாதுகாப்பு நாமஜபம்
இன்றைய உலகில் நாமனைவரும் மறைந்த மூதாதையர்களால்(பித்ரு தோஷம்) உருவாகும் பிரச்சனைகள் ஏதோ ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளோம்.இதைப் பற்றி மேலும் அறிய மறைந்த மூதாதையர்களால் உருவாகும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை காண்க;
‘ஶ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை தொடர்ந்து கூறுவதன் மூலம்(இது மறைந்த மூதாதையர் பிரச்சனைகளில் இருந்து காக்கும் கடவுளின் அம்சம்) இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
பாதுகாப்பிற்கு உகந்த நாமஜபமான ‘ஶ்ரீ குருதேவ தத்த’ கேட்பதற்கு இங்கே அழுத்தவும்.
பாதுகாப்பிற்கு உகந்த நாமஜபமான ‘ஶ்ரீ குருதேவ தத்த’ கேட்பதற்கு இங்கே அழுத்தவும். பாதுகாப்பிற்கு உகந்த நாமஜபமான ‘ஶ்ரீ குருதேவ தத்த’ கேட்பதற்கு இங்கே அழுத்தவும்.
நாமஜபம் செய்வதற்கான சில குறிப்புகள்:
- அளவு : மூதாதையர் பிரச்சனைகளால் ஏற்படும் துயரத்தின் தீவிரத்திற்கீடான அளவு ஸ்ரீ குருதேவ தத்த நாமஜபம் செய்வதற்கு நாம் பரிந்துரைக்கிறோம். மூதாதையரினால் ஏற்படும் துன்பம்/பிரச்சனைகள் பற்றி அறிந்துக்கொள்ள ‘மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் என்ன‘ என்கின்ற கட்டுரையை வாசியுங்கள்.
- துன்பமேதும் இல்லாவிடில் அல்லது குறைவான துன்பத்தினை எதிர்கொண்டால், வருங்காலத்தில் இவ்வகையான தொந்தரவுகளை தவிர்க்க 1-2 மணிநேரம் வரை தினமும் இந்நாமத்தை ஜபிக்கவேண்டும்.
- நடுத்தர அளவிளான துன்பமாக இருந்தால், 2-4 மணிநேரம் வரை தினமும் ஜபம் செய்யவேண்டும்.
- தீவிரமான துன்பத்தை எதிர்நோக்கினால் 4-6 மணிநேரம் வரை தினமும் தத்த நாமஜபம் செய்யவேண்டும்.
குறிப்பு : சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட நாமஜபத்தின் அளவு மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் வருங்காலத்தில் மூதாதையர் மற்றும் தீய சக்திகளால் அதிகரிக்கக்கூடிய துன்பத்தினை கருத்தில்கொண்டு நாமஜபத்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- உங்கள் வசதிக்கேற்றவாறு : ஒரு அமர்விலோ அல்லது பல அமர்வுகளிலோ இதனைச்செய்யலாம்.
4. ஆன்மீக ஞானத்தை வளர்த்துக்கொள்ளுதல்
படித்தல் : தினமும் ஆன்மீக பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி உணர்ந்துகொள்ள மற்றும் உங்களுடைய ஆன்மீக பாதையில் ஏற்படக்கூடிய ஐயங்களை தெளிவுபடுத்துவதற்கு ஆன்மீக விஞ்ஞானத்தின் பல்வேறு அம்சங்களை முறையாக படித்தல் உதவுகின்றது. பின்வரும் பகுதிகள் அல்லது கட்டுரைகளை நீங்கள் வாசிப்பதற்கு பரிந்துரை செய்கின்றோம்.
- நீடித்த மகிழ்ச்சிக்கு ஆன்மீக ஆராய்ச்சி அதனுடன் ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை தத்துவங்கள்
- ஆன்மீக பயிற்சி தொடர்பான பகுதி
குறிப்பு : ஆன்மீக பயிற்சியினை துவங்கியபின் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் ஐயங்களை தயைகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.