1. ஆன்மீக உணர்வின் உந்துதலில் வரையப்பட்ட தெய்வீக சித்திரங்கள்
ஒருவரின் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் இறைவனின் இருப்பை உணர்தல் என்பது ஆன்மீக உணர்வு என்று கூறப்படுகிறது. சாதாரணமாக, நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய இருப்பையே நாம் உணர்கிறோம். நான் என்னும் உணர்வு நம் ஆழ்மனதில் நன்கு பதிந்திருப்பதால் நாம் அந்த ‘நான்’ என்ற உணர்வுடனேயே உலகரீதியான எல்லா சம்பவங்களையும் பார்க்கிறோம். இருந்தாலும் தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் ஒரு புது விழிப்புணர்வு நம் உள்ளத்தில் ஏற்படுகிறது. சிறிது சிறிதாக இறைவன் எங்கும் நிறைந்திருப்பது நமக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிய வருகிறது. நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் எங்கும் நிறைந்த இறைவனின் சாந்நித்யத்தை எப்பொழுது உணர்ந்து செய்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஆன்மீக உணர்வு நிறைந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
இக்கட்டுரை சக ஸாதகர்களால் உமா அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி உமா ரவிசந்திரன் அவர்களின் ஒருவித பக்தி உணர்வை வெளிப்படுத்துகிறது. பாரத நாட்டை சேர்ந்த உமா அக்கா தனது தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் எப்பொழுதும் ஆன்மீக உணர்வு தன்னுள் நிரம்பப் பெற்றவராக விளங்குகிறார். அவருக்கு சித்திரம் வரைவதில் எந்த விதமான முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் தான் எப்பொழுதும் கிருஷ்ணனுடன் இருப்பது போன்ற ஆன்மீக பக்தி உணர்வை அவர் வரைந்த ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஸ்ரீகிருஷ்ணனிடம் உள்ள ஆழ்ந்த பக்தி உணர்வால் அவர் வரைந்துள்ள சித்திரங்களினின்றும் தெய்வீக உயிரோட்டம் (அதாவது சைதன்யம்) வெளிப்படுகிறது. அதன் காரணமாக அந்த ஓவியங்களை பார்வையிடும் பார்வை யாளர்களுக்கு இறைபக்தியின் ஆனந்த உணர்வை நல்கும் ஒரு பொக்கிஷமாக இவை திகழ்கின்றன.
பல வகைப்பட்ட ஆன்மீக உணர்வுகளின் உதாரணங்கள் :
வாத்ஸல்யபாவம் – இது ஒரு தாயின் அன்பை ஒத்த ஆன்மீக உணர்வு . அதாவது இது யசோதை கிருஷ்ணனிடம் காட்டிய அன்பு.
தாஸ்யபாவம் – இது இறைவனுக்கு பணியாளாக இருந்து தொண்டு செய்வது .
சக்யபாவம் – இது இறைவனே எனது தோழன் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்வது.
இதில் உமா அக்காவினுடைய பக்தி உணர்வு ‘பாலக பக்தி’ என்ற வகையை சார்ந்தது. அதாவது ஒரு குழந்தையினுடைய பக்தி உணர்வு. இந்த வகையான ஆன்மீக உணர்வால் ஒரு ஸாதகர், ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் எவ்வாறு வெகுளியான தூய்மையான அன்பை செலுத்துமோ அந்த வகையில் இறைவனிடம் அன்பு கொள்கிறார். இந்த வகையில் மேலோங்கியிருக்கும் உணர்வு யாதெனில் ‘நான் இறைவனின் சிறு குழந்தை; இறைவன் மட்டுமே எனக்கு தாயும், தந்தையும், நண்பனும், பாதுகாப்பாளனும் ஆவான்’. தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் குழந்தை என்ற ஆன்மீக உணர்வு உமா அக்காவின் மனதை நிறைத்துள்ளது. இந்த வகையான ஆன்மீக உணர்வில் அவர் தன்னை ஒரு மூன்று வயது சிறுமியாக நினைத்துக் கொண்டு ஆன்மீக உணர்வு செறிந்த பல வகையான சித்திரங்களை வரைந்துள்ளார்.
‘ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமானமானது’, என்ற தொடரின் பொருள் என்னவெனில் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்து வெளியிடும் ஒரு கருத்தை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என்பதே ஆகும். ஸ்ரீகிருஷ்ணனிடம் ‘பாலக பக்தி’ உணர்வு கொண்ட திருமதி உமா ரவிசந்திரன் வரைந்த ஓவியங்கள் மேலே குறிப்பிட்ட தொடருக்கு ஓரளவு பொருந்துவனவாகும். ‘நான் ஏன் ஓரளவு என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்தாலும் அவரின் ஓவியத்திலுள்ள ‘பாலக பக்தி’ உணர்வை வர்ணிக்க இயலாது. ஆன்மீகத்தில் வார்த்தைகளுக்கு 2% பங்கே உள்ளது. 98% முக்கியத்துவம் அனுபவத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.’
– பராத்பர குரு டாக்டர் ஆடவலே (14 செப்டம்பர் 2012)
2. பக்தி சித்திரங்களின் கண்காட்சி
சித்திரங்களை பார்வையிட வேண்டிய கண்ணோட்டத்திற்கான ஆலோசனைகள் :
ஒவ்வொரு ஓவியத்திற்கு அடியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களை படிக்கும் முன் உங்கள் மனதை அந்த ஓவியத்தில் லயிக்க விட்டு அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் உங்களை நிறைத்து இறைவனின் தனிப்பட்ட செய்தியை உங்களுக்கு வழங்கும்படி செய்யுங்கள். ஒவ்வொரு ஓவியமும் நீங்கள் இறைவனிடம் நெருக்கமான நம்பிக்கைக்கு உகந்த உறவினை ஏற்படுத்திக் கொள்ள இறைவன் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும். அதன் மூலம் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து சரணடையும் சக்தி நம் மனதிற்கு கிடைக்கிறது.
ஒவ்வொரு சித்திரத்திலும் இருக்கும் மூன்று வயது சிறுமி, இறைவனிடம் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அன்பின் சின்னமாக விளங்குவதால் அச்சிறுமி ‘குட்டி உமா’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
கடவுளின் வேலைக்காரன் என்ற பக்திநிலை (தாஸ்யபக்தி)
கோபியர் உணர்வை அடைவது மிக கடினம் என்பதால் ஶ்ரீகிருஷ்ணர் சனாதனின் கோபியர்களுக்கு தாஸ்ய பக்தி யுடன் தொண்டு பல்வேறு செயல்களின் மூலம் செய்ய பரிந்துரைக்கிறார். அவை;
• அவர்களின் சிகையை அலங்கரிக்க மலர்களை கொடுப்பது.
• அவர்கள் பிரசாதம் சாப்பிடும்போது அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது.
• ஆன்மீகத்கை பரப்புவதற்காக அவர்கள் வெளியே கிளம்பும் நேரம் அவர்களது காலணிகளை சுத்தமாகவும், தயார் நிலையிலும் வைத்துக் கொள்வது.
• மற்றும் அவர்கள் ஒய்வு எடுக்கும் நேரம் அவர்களது கைகளை அழுத்தி விடுவது (மசாஜ்).
ஸ்ரீகிருஷ்ணரிடம் கோபமாக இருப்பது போல் நடித்தல்
மூன்று வயது பால ஸாதகரான சிறுமி உமா, ஸ்ரீகிருஷ்ணரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவரிடம் கோபமாக இருப்பது போல் நடிக்கிறாள். அவர் பிரபஞ்சத்தை படைத்தவர் என்று தெரியும், இருந்தும் நாள்முழுவதும் தன்னுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகிறாள். அவளின் மன எண்ணத்தை அறிந்த ஸ்ரீகிருஷ்ணர் அவளை சமாதானம் செய்கிறார். அவரின் தெய்வீக ஆயுதங்களாகிய சுதர்சன-சக்கரத்தையும், சங்கையும் அவளிடம் விளையாட தருகிறார். இரண்டு பொருட்களையும் கையில் எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு உமா ஓடவும், ஸ்ரீகிருஷ்ணர் அவளை துரத்துகிறார். கடவுளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதால் அதீத ஆனந்தத்தை உமா அனுபவிக்கிறாள்.
ஆன்மீக பயிற்சி தொடங்குவதற்கு முன்னும் பின்னும் உள்ள வேறுபாடு
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்னிடம் நவ வித ஆன்மீக உணர்வுளை பற்றியும் அதன் நிலைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்; ஆன்மீக பயிற்சி தொடங்குவதற்கு முன், ‘நாம் எப்போதும் சரி’ என்ற நினைவில் சில நேரங்களில் கோபப்பட்டு எதிர்வினையாற்றுகிறோம். நமது அகம்பாவத்தினால் இவ்வாறு சிந்திக்கிறோம் என்று நமக்கு புரிவதில்லை. பிரார்த்தனையால் தெய்வீகம் உணரப்படுகிறது; காலப்போக்கில், இந்த அனுபவம் உடலிலும் உணரப்படுகிறது. எனவே ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்வது முக்கியம். ஆன்மீக பயிற்சியை தொடங்கிய பின் ; ஆன்மீக உணர்வின் ஒன்பது நிலைகள் இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது
i. ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தினால் கோபப்படுதல்
ii. ஆளுமை குறைகள் பற்றிய விழிப்புணர்வுக்குப் பிறகு திகைத்து போதல்
iii. உள்முக பார்வை
iv. கற்கும் நிலை
v. வருந்துதல்
vi. மன்னிப்பு கோருதல்
vii. ஆன்மீக உணர்வு
viii. நிலையான ஆன்மீக உணர்வின் அனுபவம்
ix. முழுமையான சரணாகதியுடன் சரணடைந்தல்
நான் ஒவ்வொரு சிறிய படத்தையும் சுற்றி ஒரு மலர் வரைந்து,அவற்றை அடுத்த, அடுத்த நிலையிலுள்ள மலர்களுடன் இணைத்தேன். நாம் கடவுளுடன் ஒன்றியிருந்தால் நமது உலகத்துடனான உறவுகள் எல்லாம் படிப்படியாக நீக்கப்பட்டு எல்லா நிலையிலும் கடவுள் நம்மை பாதுகாக்கிறார் என்பதை தெளிவாக உணர்ந்தேன்.
சிறுமி உமா முன் ஸ்ரீகிருஷ்ணர் குழந்தை போல் தோன்றுதல்
குழந்தையாக இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் படத்தைப் பார்த்ததும், ஸ்ரீகிருஷ்ணர் குழந்தை வடிவில் என்னை தேடி வருவது போல் உணர்ந்தேன். குழந்தை போன்ற ஆன்மீக உணர்வு நிலையை நான் உணர்ந்தேன். இந்த நிலையை கடந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை அறிந்த ஸ்ரீகிருஷ்ணர் அதே ரூபத்தில் என்னிடம் வந்து, அவர் எனக்கு ஊட்டும் வெண்ணெய்,புல்லாங்குழல் மற்றும் மயில் இறகின் மூலம் மூன்று பரிசுகளாகிய அறிவு,பக்தி, பற்றின்மையை அளித்து என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்பு கோருதல்
மிகவும் பணிவுடன், ஸ்ரீகிருஷ்ணர் முன்பு சிறுமி உமா மன்னிப்பு கோரி கெஞ்சுகிறாள்: கிருஷ்ணா! உன் பாதத்தில் பணிந்து மன்னிப்புக் கோருகிறேன். நான் இதுவரை எத்தனை தவறுகள் இழைத்தேன் என்று கவனிக்கவில்லை, ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். எனக்கு பெற்றோராகவும், குருவாகவும் சகலமுமாக இருப்பதும் நீங்களே. நான் செய்த எல்லா தவறுகளுக்கும் நீரே பொறுப்பு. நான் பல தவறுகள் செய்த போதும் நீங்கள் என்னிடம் அதிருப்தி அடையவில்லை. உங்கள் புனித பாதங்களில் சரணாகதி அடைகிறேன் தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் குழந்தை ஸாதகரை பால கோபியர் போல அலங்கரித்தல்;
கோபியர்- ஸ்ரீகிருஷ்ணனின் பக்தர்களான ஆயர்குல பெண்கள் (பசுவிலிருந்து பால்கறக்கும் பெண்கள்)
தனது ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவம் அனைத்தையும் பட்டியலிட முயன்றபோது உமா மிகுந்த மனச் சோர்வு அடைந்ததால், தன்னை தானே புதுப்பித்துக் கொள்ள ஸ்ரீகிருஷ்ணரிடம், தன்னை குழந்தை போன்ற ஆன்மீக உணர்வு நிலைக்கு அழைத்து செல்லுமாறு பிரார்த்தனை செய்தார். உடனே பதிலளித்த கிருஷ்ணர் அவரை பால கோபியராக மாறும் ஆன்மீக அனுபவத்தை அருளினார்.உன்னத அழகு கொண்ட கிருஷ்ணர் பாலகோபியான சிறுமி உமாவை அழகுபடுத்துவதுடன்,ஒரு சிறிய மண்பானை நிறைய வெண்ணையை அவளிடம் தருகிறார். அன்பின் மதுரத்தில் மூழ்கிய உமா, கிருஷ்ணரை சந்திக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறாள்.
இந்த ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு, சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும்
உமா அவளது ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் பற்றிய குறிப்புகளை பட்டியலிட்டாள்.
ஶ்ரீகிருஷ்ணரின் கால்களை அழுத்தி விடும் போது அவர் தாயை போல் உணர்கிறேன்.
தான் ஒவியம் வரைந்து முடிக்கும் வரை ஶ்ரீகிருஷ்ணர் நின்றிருந்ததால் அவர் ஒய்வு எடுக்க வேண்டும் என்று சிறுமி உமா நினைக்கிறாள். அவள் அவர் மீது தான் கொண்டுள்ள தாயன்பை உணர்ந்து அவரது கால்களை பிடித்துவிட முடிவு செய்து அவர் இளைப்பாற ஒரு தாலாட்டும் பாடுகிறாள். அவ்வாறுசெய்யும் போது அவள் அவரது தாயின் வயதை ஒத்த ஒரு பெண்ணாக தன்னை உணர்கிறாள்.
வாத்சல்ய ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துதல்
நான் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தை என்பதால், இறைவனிடமிருந்து தாயின் அன்பை, ஸ்பரிசத்தை நான் அனுபவித்தேன். இருப்பினும்,பிள்ளைகள் தங்கள் அன்பான பெற்றோரைப் பின்பற்ற முனைகிறார்கள். அதனால் சிறு குழந்தையான ஶ்ரீகிருஷ்ணனை (பாலகிருஷ்ணன்) நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு மேலோங்கி, அவரை நீராடி, பின் அந்த ஈரத்தை ஒத்தி எடுத்து, சாம்பிராணி தூபம் காட்டி, உடை உடுத்தி, உணவு ஊட்டிய பின் சின்ன கண்ணனுடன் விளையாடி, தாலாட்டுப் பாடி பார்த்துக்கொண்டேன். ஆன்மீக உணர்வுடன் நான் செய்த செயல்களை போற்றுதலுடனும் அன்புடனும் பார்த்த ஸ்ரீகிருஷ்ணரின் பார்வையில், தாயின் வாத்சல்ய பாசத்தை உணர்ந்தேன். அவருடைய கிருபையினால் நான் பால ஸாதகர் பக்தி நிலையில் இருந்தாலும், தனித்துவமான தாய் அன்பின் ஆன்மீக அனுபவத்தைப் பெற்றேன்.
சிறுமி உமா ஶ்ரீகிருஷ்ணரின் வலியுணர்ந்து அழுத்திவிடுதல்
படம் 1: ஶ்ரீகிருஷ்ணர் ஒருமுறை தனது தோள் மற்றும் கழுத்து வலிக்கிறது என்று பாசாங்கு செய்கிறார். ‘சர்வ வியாபியும், வெல்லமுடியாதவனுமான கடவுளே எனக்கு எல்லாமுமாக இருப்பதால் அவர் வேதனையில் தவிப்பதை என்னால் பார்க்க இயலாது என்று சிறுமி உமா நினைக்கிறாள். அவளுடைய சிறிய கரங்களை கொண்டு அவரது தோள் மற்றும் கழுத்து பகுதியை அழுத்தி விடுகிறாள் (மசாஜ்). இதற்காகவே காத்து இருப்பவர் போல் ஶ்ரீகிருஷ்ணரும், சிறுமி உமா மசாஜ் செய்து முடிப்பதற்குள் தனது வலியெல்லாம் திடீரென மறைந்துவிட்டதாக கூறினார். அவர் சிரிப்பதை கண்டு உமாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படம் 2: சிறுமி உமா, 'நான் செய்த இந்தச் சிறிய சேவைக்காக, அவர் எனக்கு ஒரு பளபளப்பான இடுப்புப் பட்டையை பரிசளித்தார். பதிலுக்கு, நான் மிகுந்த பேரின்பத்துடன் அவரைத் தழுவி, கன்னத்தில் முத்தமிட்டேன்.'
குழந்தை உமாவிற்கு உணவூட்டும் போது ஶ்ரீகிருஷ்ணர் தனது பால்ய பருவத்திலிருந்து ஒரு கதையை சொல்கிறார்.
ஶ்ரீகிருஷ்ணர் சிறுவனாக இருந்த போது அவரது வாயில் முழு பிரபஞ்சத்தையும் காட்சியாக வெளிப்படுத்தியதை கண்டு அவரது தாய் யசோதை ஆச்சிரியப்பட்டு போனார். சிறுமி உமாவிற்கு தயிர்சாதத்தை ஊட்டிக்கொண்டே ஶ்ரீகிருஷ்ணர் தனது தெய்வீக நாடகத்தை விவரிக்கிறார். அவரது அன்பு தாயைப் போன்றது, சிறுமி உமா தனது கைகள் நம்பிக்கையுடன் வசதியாக அவர் மேல் ஊன்றியிருப்பதை பார்த்து வசீகரிக்கப்படுகிறாள்.
ஸ்ரீகுருவின் சேவை செய்தல்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கூட, அதர்ம சக்திகளுடன் போராடுகிறார். ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்கான அவரது நோக்கம் சூட்சும முறையில் தொடர்கிறது, அதாவது பொருள் சார நிலையில். தன் குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உமாவின் விருப்பத்தை புரிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் புன்னகை செய்த வண்ணம் கூறுகிறார்,குரு எனது முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு என்னை விடுவித்துள்ளார். ஆதலால் நாம் இருவரும் இணைத்து குருவின் சேவையைச் செய்வோம். ஆன்மீக உணர்வின் காரணமாக இறை சேவையில் ஈடுபவருக்கு கடவுளே சேவை செய்கிறார்.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் முன் அமைதியான மனதுடன் பேசுதல்
உடல் மற்றும் மன உளைச்சலை அனுபவித்த போது நான் வரைந்த படத்தை கீழே காட்டிள்ளேன். இதை வரையும் போது நிம்மதியையும், அமைதியையும் உணர்ந்தேன். குருவே நீரே எனது தாய் தந்தை மற்றும் சகோதரன் ஆவீர்! கடவுளே! நீயே எனது குரு மற்றும் எனது கிருஷ்ணன். கடவுளே என்னை விரைவாக உமது திருவடிகளுக்கு அருகில் அழைத்துச் செல்லவும்!
நவராத்திரி மற்றும் ஹாலோவீன் கொண்டாட்டங்களில் உள்ள வேறுபாடுகள்;
அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பண்டிகை இந்தியாவிலும், ஹாலோவீன் பண்டிகை உலகில் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. சிறுமி உமாவிற்கு ஶ்ரீகிருஷ்ணர் இரு பண்டிகைகளின் விளைவை காட்டுகிறார், மேலும் நவராத்திரி பண்டிகையை முறையாகக் கொண்டாடும் போது அது தெய்வீக உணர்வை எங்ஙனம் ஈர்க்கிறது என்பதையும் விளக்குகிறார். மறுபுறம் ஹாலோவீன் எந்தவொரு தெய்வீகத்தன்மையும் இல்லாத ஒரு பண்டிகையாகும். அது எதிர்மறையாக மட்டுமே ஊடுருவி எதிர்மறை ஆற்றல்களை வளர்க்கிறது. எனவே ரஜ-தம ஆதிக்கம் நிறைந்த பண்டிகைகளை கொண்டாடாமல் இருப்பது அவசியம்.
போகபூமிக்கும், யோகபூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை எடுத்துரைத்தல்
உமா அக்கா அமெரிக்காவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தபோது வரைந்த படம் இது. புதிய நாட்டில் அன்னியமாக உணர்ந்த உமா அக்காவுக்கு கடவுள் ஏற்படுத்திய உணர்வை இந்த படம் சித்தரிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணன் சிறுமி உமாவை தன் தோளில் சுமந்துகொண்டு வயல்வெளியில் நடந்து வருகிறார். ஒரு பக்கம் வயல்வெளியில் மஞ்சற்பூசணிக்காயும், மறுபுறம் சூரியகாந்தியும் நிரம்பி உள்ளது. இதிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் நிறைவாக வழங்கும் பூமி அன்னையின், அருளும் தன்மையை உமா அக்கா உணர்ந்தார்கள். இருப்பினும், இக்காலத்தில் நாம் இந்த வரத்தை அடிக்கடி தவறாகப் பயன்படுத்துகிறோம். மஞ்சற்பூசணிக்காயை ஹாலோவீனுக்கு கோரமான முகங்களாக மாற்றுவதை உதாரணமாக கூறலாம். வளர்ந்த நாடுகளில் குறிப்பாக, மக்கள் ஆடம்பரங்கள் மற்றும் பெளதீகவாதத்தில் மூழ்கியுள்ளனர், இது போகபூமி என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் பொருள் வசதிகள் மீது அக்கறை செலுத்துவது அவர்கள் வாழ்வின் முழு நோக்கமாக மாறுகிறது. இதற்கு மாறாக யோகபூமி என்பது ஸாதகர்கள் வாழும் நிலம். இந்த வகை சூழலில் எல்லாம் வழங்கப்பட்டாலும், ஸாதகர்கள் வளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றையும் அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
ஒரு தந்தையைப் போலவே ஶ்ரீகிருஷ்ணரும் அன்றாட வாழ்க்கையில் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறார்;
அதிகாலையில் கைகளை கூப்பி கடவுளின் தரிசனத்தை பெற உதவும் ஸமஸ்கிருத ஸ்லோகம் உட்பட, ஒவ்வொரு நல்ல நடத்தையையும் நல்ல தகப்பனை போல ஶ்ரீகிருஷ்ணர் எனக்கு கற்றுத் தருகிறார்.
பிரபஞ்சத்தின் படைப்பாளர் நம் கைகளில் இருக்கிறார், அவர் நமக்கு வேண்டும் நேரம் தரிசனத்தைத் தந்து, எல்லையற்ற அவருடைய அருளை நமக்கு தெரியப்படுத்துகிறார் என்பது இதன் தனித்துவமான கருத்தாகும். இந்த தரிசனத்தின் மூலம் ஒவ்வொரு காலையிலும் கைகளை கூப்பி நாம் வணங்கும் நேரம், தர்மத்தை நிலைநாட்டுவதற்கான சக்தியை கடவுள் நமக்கு வழங்குகிறார். நாம் கைகளை கூப்பும்போது அது தாமரையின் வடிவமாகவும், நம் கைவிரல்கள் தாமரையின் இதழ்களாகவும் மாறுகிறது. இந்தத் தாமரை கடவுளின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படுகிறது.
உலக வாழ்க்கை சாகரத்திலிருந்து அனைவரையும் கரைக்கு ஶ்ரீகிருஷ்ணர் அழைத்துச் செல்கிறார்.
ஒருமுறை ஒரு ஸாதகருக்கு காட்சியின் (கனவு) மூலம் ஆன்மீக அனுபவம் கிடைத்தது. ஶ்ரீகிருஷ்ணர் படகோட்டியாக வந்து வரவிருக்கும் பாதகமான காலங்களைக் குறிக்கும் கருநீர் (கடின வாழ்க்கை) குறுக்கே ஸாதகர்களை ஏற்றி பாதுகாத்து செல்கிறார். இந்த படம் அந்த ஆன்மீக அனுபவத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது.
கடவுளின் திருவடிகளில், படங்களின் மூலம் ஒரு பிரார்த்தனை
‘எனது அருமை ஸ்ரீகிருஷ்ணா! இந்த குணங்களை எவ்வாறு வளர்ப்பது என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்:
I. யசோதா(பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாய்) அன்னையின் தாய்மை போன்ற ஆன்மீக உணர்வு
II. ராதா(ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மேல் கொண்ட ப்ரீதி
III. பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை தானே அர்ப்பணித்த மீராவின்(பக்தை ) ஆன்மீக உணர்வு
IV. துரௌபதியின் (ஸ்ரீகிருஷ்ணரின் பக்தை ) ஆன்மீக உணர்வுடன் கூடிய ஆத்மார்த்தமான பிரார்த்தனை
V. வில்வீரன் அர்ஜுனுக்கு நீர் வழிகாட்டியது போல் அநீதிக்கு எதிரான போரில் எனக்கு வழிகாட்டவும் (அர்ஜுன் அநீதியை எதிர்த்துப் போரிட்ட ஸ்ரீகிருஷ்ணரின்பக்தன்)
மன வழிப்பாடு செய்வது;
சிறுமி உமா கூறுகிறாள்; ’சம்பிரதாயப்படி தங்களை வழிபட நான் மிகவும் இளையவள் என்பதால் கடவுளை மனதிற்குள் வணங்க முடிவு செய்தேன்’.
ஶ்ரீகிருஷ்ணருடன் நடனம்
சிறுமி உமா, அருகில் இருப்பவர்கள், சுற்றியுள்ள சூழ்நிலைகள், தன் உடல் ஆகியவற்றை மறந்து தனது கடவுளுடன் நடனமாடுகிறாள். எப்போதெல்லாம் உள் மனம் கடவுளோடு நடனமாடுகிறதோ அப்போதெல்லாம் வெளிப்புற சூழ்நிலைகளும் மங்கிவிடும்.
யமுனை ஆற்றில் ஶ்ரீகிருஷ்ணருடன் விளையாடுதல்;
ஒரு கட்டத்தில் ஶ்ரீகிருஷ்ணர் தனது பால்ய பருவத்தை கழித்த கோகுலத்தில் சிறுமி உமா இருக்கிறாள், மேலும் கோவர்தன மலைக்கு அருகில் உள்ள யமுனை நதியில் அவருடன் விளையாடிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் சூட்சும நிலையில் குழந்தையின் தூய மனதுடன் பக்தி கடலில் மூழ்கும் ஸாதகரிடம் கடவுள் மகிழ்ச்சி அடைகிறார். ஶ்ரீகிருஷ்ணர் தெய்வீக உணர்வு செறிவூட்டப்பட்ட நீரை அவள் மேல் தெளித்து, அந்த அருளை பெற்றதால் அவள் அடைந்த மன உளப்பாங்கையும் பகிர்ந்து கொள்கிறார். தெய்வீக அன்புடன் பக்தி நதியில் நீராடினால் நமது சூட்சும உறைகள் அனைத்தும் தூய்மையடைந்து நம் உடல் உணர்வு நீங்கி, குழந்தை நிலையை அடைகிறோம். அந்த ஆன்மாவிற்கு அவர் தனது தெய்வீக உணர்வின் வடிவத்தை வெளிப்படுத்துகிறார்.
ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக்கொள்வது
பராத்பர குரு டாக்டர் ஆடவலே சொல்கிறார், "ஆன்மீக நிலை 70% அடையும் வரை கடவுளின் கைகளை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும். 70% ஆன்மீக நிலை அடைந்த பிறகு கடவுளே நமது கரங்களை நிரந்தரமாக பிடித்துக்கொள்வார்". இவ்வார்த்தைகளை கேட்டு சிறுமி உமா உத்வேகம் அடைகிறாள், ஆனால் ஸ்ரீகிருஷ்ணரின் கரங்கள் முழங்கால் வரை தான் எட்டுகிறது, அவர் கரங்களை சரியாக பிடிக்க இயலாத அளவு சிறியவளாக தான் இருக்கிறோம் என்றுணர்ந்து, தன்னால் தொடமுடியும் அவரது திருவடிகளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள முடிவெடுக்கிறாள்,. ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிகளை என்றைக்குமே விடக்கூடாது என உறுதியாக இருந்தாள். இந்நிலையில் அவளை ஸ்ரீகிருஷ்ணர் கண்டு மகிழ்ந்து யோசித்தாராம், "அடடா, இப்போது இச்சிறுமியை நான் எப்படி கையாள்வது என்று?"
எஸ்.எஸ்.ஆர்.எஃப் மகானான பூஜ்ய அதுல் திகே மூலம் பேட்டி
ஒரு மகான் என்னை பேட்டி எடுக்கப் போகிறார் என்று அறிந்து நான் பதற்றம் அடைந்தேன். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரின் வழிகாட்டுதலால் இவ்வனுபவம் ஆனந்தமாகவும், ஆன்மீக நிறைவுடனும் இருந்தது.
தெய்வத்திடம் அடைக்கலம்
சிறுமி உமா சொல்கிறாள், "உன்னை சம்பிரதாய முறையில் வழிபட நான் இன்னும் இளையவள் என்பதால் மனதளவில் கடவுளை வழிபட முடிவெடுத்தேன்".
ஸ்ரீகிருஷ்ணரின் அருளாலேயே எல்லா சேவைகளும் நடக்கின்றது என்ற அனுபூதி
நாங்கள் ஒன்றும் அறியாத குழந்தைகள், எங்களுக்கு எதுவுமே தெரியாது. இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணர் எங்கள் மூலம் ஏதாவது செய்துவிட்டு, பின்னர் ஒரு பெருமையான தந்தையைப்போல் "நீ நன்றாக பணியாற்றினாய்" என்று சொல்வார். இயல்பான நிலையில் அவளுக்குள் இருக்கும் குழந்தை கவலையின்றி கணினி முன் கால்களை ஆட்டிக்கொண்டு இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் மீது மட்டுமே அவளது கவனம் உள்ளது, உடல் விழிப்புணர்வு இல்லை. குழந்தைப்போன்று ஆன்மீக உணர்வின் அடையாளம் இது.
ஸ்ரீகிருஷ்ணரின் மடியில் ஊஞ்சலாடுதல்
உமா அக்கா கூறினார்: "நானொரு 3 வயது குழந்தை என்றும் ஸ்ரீகிருஷ்ணர் என்னை கவனித்துக்கொள்வதால் நிம்மதியை உணர்கிறேன் என்ற ஆன்மீக உணர்வு உண்மையில் அதை அனுபவிக்க எனக்கு உதவியது.". ஊஞ்சலாடுவதன் பொருள் கவலைகளின்றி முற்றிலும் நிம்மதியாகவும், நிதானமாகவும் இருத்தலாகும். ஸ்ரீகிருஷ்ணருடன் ஊஞ்சலாடும்போது குழந்தைப்போன்ற ஆன்மீக உணர்வை சித்தரிக்கும் ஸாதகர் பட்டாம்பூச்சிக்கு இணையான மென்மை நிலையை பெறுகிறார்.
ஆளுமை குறைகளை களைதல்
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார், "விளையாடியது போதும், புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்". ஆகையால், ஆளுமை குறைகளை களையும் பள்ளிக்கு என்னை அழைத்துச்சென்று 'சொல்லிக்கொடுப்பதை கவனமாக கேட்டு அதற்கேற்ப நடந்துக்கொண்டு, மகானின் பாராட்டை வென்று வா", என்று சொன்னார். ஸ்ரீகிருஷ்ணரை பக்தியோகத்தின் மூலம் அடைவதை பற்றி இந்தப்படம் காட்டுகிறது. இந்தப்படம் மூலம் ஆளுமை குறைகளை களைந்து அகம்பாவத்தை அழித்து மகான்களின் அருளை பெறமுடியும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், பிறகு கர்மயோகத்தால் அவரை அடைய முடியும்.
ஸ்ரீகிருஷ்ணரின் தோளில் உறங்குதல்
சிறுமி உமா நம்பிக்கைக்கு ஏற்ற ஒவியம், முற்றிலும் தான் பாதுகாப்பாக இருப்பாள் என்று அறிந்து கடவுளின் தோளில் உறங்குகிறாள்.
ஸ்ரீகிருஷ்ணருடன் கண்ணாமூச்சி விளையாடுதல்
ஸ்ரீகிருஷ்ணருடன் கண்ணாமூச்சி விளையாட சிறுமி உமாவிற்கு மிகவும் பிடிக்கும். குருவின் மேஜைக்கு அடியில் ஒளிந்துக்கொண்டு தான் ஒளிந்திருப்பதை ஸ்ரீகிருஷ்ணருக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று குருவை வேண்டுகிறாள். ஸ்ரீகிருஷ்ணரோ அவளை எளிதில் கண்டுபிடித்தார். இருப்பினும், 'ஸ்ரீகிருஷ்ணர் குருவுடன் ஒன்றிணைந்து விட்டதால், அவரை நான் கண்டுபிடிக்க முடியாது' என்று உமா உணர்கிறாள். குருவின் அன்பினால் மாயையின் ஸாத்வீக படலம் அகன்று ஸாதகருக்கு இறை தரிசனம் கிடைக்கிறது. ஆனாலும், குருமாயை என்ற மற்றொரு மாய வளையத்தை குரு அகற்றும்போது 'குருவே கடவுள்' என்ற ஆன்மீக அனுபூதி ஸாதகருக்கு கிடைக்கிறது. இத்தகைய ஆன்மீக அனுபூதி ஸாதகருக்கு கிடைக்கும்போது ஜீவாத்மாவிற்கும் சிவாத்மாவிற்குமான கண்ணாமூச்சி விளையாட்டு உண்மையான உணர்வுடன் நிறைவுபெற்று கடவுளின் முழுமையான தரிசனம் கிடைக்கிறது.
பூஜ்ய யோயா வாலேயை மகான் என்று அறிவிக்கப்பட்ட நாள்
பூஜ்ய யோயா வாலே படைத்திருந்த நன்றியுணர்வை இந்தப் படம் மிக அழகாக சித்திரிக்கிறது. அவர் ஸ்ரீகிருஷ்ணரின் அன்பை அனுபவிப்பதை காட்டுகிறது. ஸத்குரு சிரியாக் வாலேயின் பணிவுடைமை மற்றும் ஆன்மீக உணர்வையும் காட்டுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அவரையும் மகான் என்று அறிவித்தனர். அவர்களது 7 வயது மகள் அனஸ்டாசியாவும், நானும் இந்த தனித்துவமான நிகழ்வை கண்டு ஆச்சரியம் அடைந்தோம். பொதுவாக பூஜ்ய யோயா வாலே சூட்சும ஞானத்தின் அடிப்படையில் எல்லா ஸாதகர்களின் ஓவியங்களை வரைவார், ஆனால் இன்றைய முக்கியமான நிகழ்வில் பூஜ்ய யோயாவின் ஓவியத்தை வரைய ஸ்ரீகிருஷ்ணர் என்னை ஊக்குவித்தார். ஸாதகர்களை மகான்களாக பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களே வடிவமைக்கிறார். மிக அருமையாக பூஜ்ய யோயா வாலேயின் நன்றியுணர்வையும், ஸத்குரு சிரியாக் வாலேயின் பணிவுடைமை உணர்வையும் அவர் வெளிப்படுத்தினார். - திருமதி உமா ரவிச்சந்திரன்
பிறந்த சிசுவை வரவேற்கும் ஸ்ரீகிருஷ்ணர்
'தெய்வீக சகாப்தத்தை' அமைக்க உதவும் ஒரு மழலை ஜீவாத்மா, பிறந்ததை ஸ்ரீகிருஷ்ணர் வரவேற்கிறார். 100% சரணாகதியுடன் திகழும் குழந்தை என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் தனது மார்புடன் அணைத்து அக்குழந்தையை ஆழ்ந்து நோக்கி தனது இறுதி இடமான மோட்சத்தை அடைய ஆசீர்வதிக்கிறார். சிறுமி உமாவும் ஆனந்தத்துடன் ஸ்ரீகிருஷ்ணரை அணைத்துக்கொண்டு குழந்தையை தன் கையில் கொடுக்குமாறு கேட்கிறாள்.
நன்றியுடன் ஶ்ரீகிருஷ்ணரை இறுக்கமாக தழுவுதல்.
தெய்வீக துகள்களை அளித்ததற்கு நன்றியுணர்வாய் சிறுமி உமா ஶ்ரீகிருஷ்ணரை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள். கடவுள் மீதான ஆன்மீக உணர்வைவிட நன்றியுணர்வே முக்கியமானது, ஏனென்றால் கடவுள் மீதான ஆன்மீக உணர்வில் கூட அகம்பாவம் இருக்கலாம், ஆயினும் அவருக்கு நன்றி செலுத்தும்போது ஆன்மீக உணர்வு மட்டுமே இருக்கும், இதனால் அகம்பாவம் குறைவாக இருக்கும்."
3. இந்த தெய்வீக சித்திரங்களை வெளியிட்டிருப்பதன் பின்னுள்ள முக்கியமான செய்தி
இறைவனின் தெய்வீக மதுர பாவத்தினால் ஈர்க்கப்பட்டு அதிலேயே லயிக்கும் தன்மை ஏற்பட்டால் ஒழிய நமது பக்தி பரிபூரணம் அடையாது. ஒவ்வொரு ஓவியமும் ஸ்ரீகிருஷ்ணனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் மென்மலரென நம்மால் உணர முடிகிறது. அதன் காரணமாக உன்னத தெய்வீக ஓவியங்களான இவைகளை காணும் சிலர் தாங்களும் கிருஷ்ண பக்தி பிரவாஹத்தில் நனைந்து அவனது புனித பாதங்களில் சரணடையும் ஆர்வத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கலாம். இத்தகைய ஓவியங்களுக்கு புத்திபூர்வமாக செயல்படும் சமூக மட்டத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் ஒரு மாற்றத்தை ஏறபடுத்தும் சக்தி இருக்கிறது. இந்த வலைதளத்தில் இந்த சித்திரங்களை வெளியிடுவதன் நோக்கம் இதைப் பார்க்கும் நேயர்கள் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் அல்லது மேலும் தொடர்ந்து செய்ய ஊக்கம் பெற வேண்டும் என்பதே ஆகும்.