ஆன்மீக நிலை அல்லது திறனுக்கு ஏற்றவாறு ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளுதல்
நாம் மேற்கொள்ளும் ஆன்மீக பயிற்சி அவரவர் நிலை அல்லது திறனுக்கு ஏற்றதுதானா என்பதை சரி பார்க்க வேண்டும். மூன்றாம் வகுப்பு பாடத்தையே தொடர்ந்து படிக்கும் மாணவன் நான்காம் வகுப்பு தேர்வுக்கு அமருவது என்பது முடியாத காரியம்.
அதேபோல் ஆன்மீக ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியில் ஒரே நிலையில் தேங்காமல் அடுத்த நிலைக்கு செல்ல தன் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸாதகர்களின் ஆன்மீக நிலைக்கேற்றவாறு ஸ்தூல நிலை உபாசனையிலிருந்து அதி சூட்சும நிலை உபாசனைக்கு கூட்டி செல்லும் பல்வேறு ஆன்மீக முன்னேற்ற நிலைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
- ஆரம்ப நிலையில் நாம், வழிபாட்டு தலங்களுக்கு செல்வதாலும் தெய்வ சிலைகளை அல்லது தெய்வீக பிறவிகளை பிரார்த்தனை செய்வதாலும் மட்டுமே தெய்வீக தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியும் என நினைக்கிறோம்.
- அடுத்த நிலையில், சடங்குகள் செய்வது மட்டுமன்றி, நல்ல ஆன்மீக புத்தகங்களை அந்த வழிபாட்டு தலங்களில் அமர்ந்து படிப்பதால் தெய்வீக தன்மையுடன் ஒரு தொடர்பு ஏற்படுவதை உணர்கிறோம்.
- அதற்கடுத்த நிலையில் ஸ்தூலமான வார்த்தைகளைக் காட்டிலும் கோவில்களிலும் தேவாலயங்களிலும் உள்ள தெய்வீக அதிர்வலைகளை வெறும் அனுபவிப்பதே ஆன்மீக ஊட்டத்தை அளிக்க வல்லது என உணர்கிறோம்.
- அதன் பிறகு நாம் வழிபாட்டு தலங்களுக்கு போகாமலேயே, தெய்வீக தன்மையை, இயற்கை அழகில், வானுயர மலைகள் அடர்ந்த கானகங்கள், அமைதியான ஏரிகள் முதலியவற்றில் உணர ஆரம்பிக்கிறோம்.
- இன்னும் அதிகப்படியான நிலையில் இயற்கையே தேவையில்லை; அன்றாட வாழ்வில் இறைவனை உணர ஆரம்பிக்கிறோம். குப்பை மேடான சேரி, யுத்த களம் போன்ற மனதுக்கு ஒவ்வாத இடங்களில் நாம் இருந்தாலும் இறைவனின் இருப்பு நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குவதை நம்மால் உணர முடியும். அமைதியான இதயத்தோடு அங்கும் இறைவனை வழிபட முடியும்.