1. முன்னுரை
நாம் அனைவரும் நல்ல ஓய்வெடுக்க எங்ஙனம் நன்றாக உறங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். நன்றாக எப்படி உறங்குவது என்பதற்கு, தொடர்புடைய பல காரணிகளில் ஒன்று உறங்கச் செல்லும் நேரமாகும். மாலையில் அலுவலகம் முடிந்து திரும்பியதும் சிறிது நேரம் உறங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இந்த கட்டுரையில், நாம் அந்தி நேரத்தில் உறங்கும்போது சூட்சும பரிமாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்குகின்றோம், இதன்மூலம் நன்றாக உறங்குவது எப்படி, அதற்க்காக எப்போது உறங்குவது என்பது பற்றிய தகவல் சார்ந்த முடிவை நாம் எடுக்கலாம்.
ஆரம்பத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது
- ஆன்மீகக் கண்ணோட்டத்தில், உறக்கம் என்பது அடிப்படையான சூட்சும தாமஸீக தன்மையுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். அதாவது, உறக்கத்தின் போது நமது உடலில் உள்ள அடிப்படையான சூட்சும தாமஸீகத்தன்மை அதிகரிக்கின்றது.
- இதனுடன் சேர்ந்து, நமது ஆன்மீக பயிற்சியும் உறக்கத்தின் போது மிகக் குறைவாக இருப்பதால், நாம் உறங்கும்போது ஆன்மீக ரீதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளோம். இதன் விளைவாக, நாம் உறங்கும்போது, அடிப்படையான சூட்சும ரஜ-தம ஆன்மீக மாசுபாட்டிற்கும், ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தாக்குதல்களுக்கும் நாம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளோம்.
2. நாம் உறங்கும்போது என்ன நடக்கின்றது?
நாம் உறங்கும்போது
- நாம் உணர்வுள்ள நிலையில் இருந்து செயலற்ற நிலைக்கு செல்கிறோம்.
- இதனால், உடலில் உள்ள உட்புற இடைவெளிகள், செல்கள் மற்றும் சுற்றோட்ட அமைப்பு (circulatory system) ஆகியவற்றின் செயல்திறன் மிகவும் குறைகின்றது. உட்புற இடைவெளிகள் என்பது உடலில் உள்ள 2 உறுப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் ஆகும்.
- உறங்கும் நிலையின் காரணமாக, உடலில் உள்ள உப-பிராண சக்திகள் இயங்க ஆரம்பிக்கின்றன. இது உட்புற வெளியேற்ற வாயுக்களை செயல்படுத்துகிறது மற்றும் அவை கீழ்நோக்கி நகரத் துவங்குகின்றன.
- இந்த கீழ்நோக்கிய ஓட்டத்தின் காரணமாக, நரகத்தின் பகுதிகளிலிருந்து வெளிபடுத்தப்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகள் உறங்கும் நபரை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
வளிமண்டலத்தில் உள்ள அடிப்படையான சூட்சும ரஜ-தம துகள்களின் வேகம், ஒரு நாளின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், அந்தி நேரத்தில் அதிகமாக இருக்கின்றது. நரகத்தின் பகுதிகளிலிருந்து வரும் தீய சக்திகள், அடிப்படையான சூட்சும ரஜ-தம துகள்களின் இந்த இயக்கத்தைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் எளிதாக நுழைகின்றன. ஆன்மீக ரீதியில் மாசுபட்ட இந்த வளிமண்டலத்தின் பாதிப்பின் காரணமாக, அடிப்படையான சூட்சும ரஜ-தம அதிர்வலைகள் ஒரு நபரின் உடலிலிருந்து அவரது பிராண தேஹத்திற்கு மிகக் குறுகிய காலத்தில் இடம் மாற்றப்படுகின்றன.
இதன் காரணமாக ஒரு நபர் பின்வரும் கஷ்டங்களை அனுபவிக்கலாம் :
- கெட்ட கனவுகள்
- உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுதல்
- உடல் நடுக்கம்
- மின்(மின்சாரம் பாய்வது) அதிர்ச்சி போன்ற உணர்வு
- ஆவிகளால் பீடிக்கப்படுதல்
இவ்வாறு, மாலையின் இந்த உறக்கத்தினால் நாம் உடல்ரீதியான நிலையில் ஓய்வாக உணரலாம், ஆனால் ஆழ்ந்த ஆன்மீக ரீதியான நிலையில் நாம் அதிக ஆபத்தில் இருக்கிறோம். இந்த அறிவியலைப் பற்றி நாம் அறியாததால், நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணர்வதில்லை மற்றும் மேலே கூறப்பட்டுள்ள எந்தக் கஷ்டத்தையும் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதுடன் இணைப்பதில்லை.
3. சுருக்கம்
ஆன்மீகக் கண்ணோட்டத்தில், அந்தி நேரத்தில் அடிப்படையான சூட்சும ராஜஸீக-தாமஸீக தன்மையின் விகிதம் அதிகமாக இருப்பதால், பிரதானமாக தாமஸீகமான உறக்கம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது.