அட்டவணை
- 1. மூல குறை பற்றிய சுய பரிசீலனையின் ஒரு அறிமுகம்
- 2. சுய பரிசீலனையின் ஒரு துரித மற்றும் சுலபமான வழி
- 2.1 வெளிப்பட்டது ஒருவரின் ஆளுமை குறையா அல்லது அகம்பாவத்தின் ஒரு அம்சமா? (பத்தி G)
- 2.2 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 1 – தவறான செயல்/செயலின்மை
- 2.3 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 2 – தவறான எதிர்மறை எண்ணம்
- 2.4 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 3 – தவறான செயல் (ஆழமாக ஆய்வு செய்தல்)
- 2.5 அட்டவணையை நிரப்புதல்
1. மூல குறை பற்றிய சுய பரிசீலனையின் ஒரு அறிமுகம்
இந்த அத்தியாயத்தில் (கடந்த அத்தியாயத்தின் தொடர்ச்சி), சுய பரிசீலனை கருவியை, அதாவது, ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை, எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்ந்து விளக்கப்படும். கடந்த அத்தியாயத்தில், ஒரு தவறின் தீவிரத்தன்மை மற்றும் தாக்கத்தை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த அத்தியாயத்தில், ஒரு தவறான செயல் அல்லது எதிர்மறை எண்ணத்தின் மூல காரணத்தை எவ்வாறு பரிசீலனை செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
2. சுய பரிசீலனையின் ஒரு துரித மற்றும் சுலபமான வழி
அடுத்த முறை நீங்கள் உங்களின் தவறை தானே உணர்ந்தாலோ அல்லது மற்றவர் அதை சுட்டிக் காட்டினாலோ – அது உள்முக சிந்தனைக்கும், தன்னைத்தானே பரிசீலனை செய்து சுய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் நல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தவறு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நம் மனதை அறிய உதவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. சுய பரிசீலனையின் இலக்கு, ‘என்னுடைய எந்த ஆளுமை குறையால் இந்த தவறு நிகழ்ந்தது?’ என்பதாக இருக்க வேண்டும்.
ஒரு தவறின் மூல காரணமாக அமையும் ஆளுமை குறை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, நம்மை நாமே ஏன் இம்மாதிரியான தவறான செயலை செய்தோம் அல்லது ஏன் இம்மாதிரியான தவறான எதிர்மறை எண்ணம் மனதில் எழுந்தது என்று கேள்வி கேட்டு சுய பரிசீலனை செய்ய வேண்டும். பிறகு இந்த சுய பரிசீலனையின் முடிவை, சுய பரிசீலனை கருவியான ஆளுமை குறைகளை களையும் அட்டவணையின் பத்தி G, H, I மற்றும் J –ல் பதிவு செய்ய வேண்டும். ஒருவரின் தவறை பதிவு செய்யும் சுய பரிசீலனை அட்டவணையின் மாதிரி தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2.1 வெளிப்பட்டது ஒருவரின் ஆளுமை குறையா அல்லது அகம்பாவத்தின் ஒரு அம்சமா? (பத்தி G)
G பத்தியில் ஒரு தவறை வகைப்படுத்த இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதாவது, ஒருவரின் அகம்பாவத்தால் அல்லது வெறும் ஆளுமை குறையால். பத்தி G -ல் உள்ள குறி அம்பு பட்டியலில் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதைப் பொருத்து, பத்தி H, I மற்றும் J -ல் அகம்பாவ வெளிப்பாடுகளின் அல்லது ஆளுமை குறைகளின் பட்டியல் வழங்கப்படும். அதிலிருந்து நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
எப்படி நாம், ஒரு தவறு ஆளுமை குறையால் ஏற்பட்டதா அல்லது அகம்பாவத்தின் வெளிப்பாட்டால் ஏற்பட்டதா என தீர்மானிக்க முடியும்?
உண்மையில், எல்லா ஆளுமைகுறைகளுமே அகம்பாவத்திலிருந்து உண்டானவை. அகம்பாவம் என்பது மனதில் மிகவும் ஆழமாக ஊன்றியது. ஆளுமைகுறைகள் என்பவை அகம்பாவத்தின் மேலோட்டமான வெளிப்பாடுகள் ஆகும். அதனால், ஒரு தவறு ஆளுமைகுறையால் ஏற்பட்டதா அல்லது அகம்பாவ கூறால் ஏற்பட்டதா என முடிவு செய்ய, அது எவ்வளவு ஆழமாக நம் மனதில் பதிந்துள்ளது என்பதை ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். அது சாதாரணமான குறையாக இருந்தால் ஆளுமைகுறையை தேர்ந்தெடுக்கவும். அது வலுவான ஆளுமை கூறாக இருந்தால் அகம்பாவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வழிகாட்டுதலுக்கு, பல்வேறு ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவ கூறுகளின் பட்டியலைப் பார்க்கவும். அது நம் தவறுகளை வகைப்படுத்த உதவும்.
நம் தவறுகளுக்கு மூல காரணமான ஆளுமை குறைகள் அல்லது அகம்பாவ கூறுகள் ஆகியவற்றை புரிந்து கொண்டு பரிசீலனை செய்து தெரிந்து கொண்ட பின் அடுத்த படியாக, பத்தி H, I மற்றும் J ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 2.2 – 2.6 பகுதிகளில், இந்த பரிசீலனையை எவ்வாறு செய்து அட்டவணையை சரியானபடி நிரப்புவது என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
2.2 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 1 – தவறான செயல்/செயலின்மை
கீழ்க்கண்ட தவறை நீங்கள் செய்ததாக உணர்ந்தீர்கள் என வைத்துக் கொள்வோம் – ‘காபி அருந்திய பின் காபி டம்ளரை நான் கழுவவில்லை’.
இது ஒரு தவறான செயலாகிறது. இந்த தவறான செயலின் பின்னணியை சுய பரிசீலனை செய்வதற்கு உதவியாக, நீங்களே உங்களிடம் இக்கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும், ‘நான் ஏன் இந்த காபி டம்ளரை கழுவவில்லை?’.
கீழேயுள்ள ஏதாவது ஒரு காரணத்தை நீங்கள் பதிலாக பெறலாம். காபி டம்ளரை கழுவவில்லை என்ற தவறின் பின்னணியில் மனதில் என்ன எண்ணவோட்டம் இருந்தது என்பதை சார்ந்தே மூல குறையின் பரிசீலனை அமையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், இந்த பரிசீலனை எவ்வாறு செய்யப்படுகிறது என விளக்கியுள்ளோம்.
தவறின் பின்னேயுள்ள எண்ணம் | மூல ஆளுமை குறை |
---|---|
அது என் கௌரவத்திற்கு குறைவு என்பதால் காபி டம்ளரை நான் கழுவவில்லை. என் நேரம் இதை விட முக்கியமான கணினி வேலை போன்றவற்றிற்கு உபயோகமாக வேண்டும். இவ்வேலையை என் மனைவி செய்யட்டும். | கர்வம் |
காபி டம்ளரை கழுவுவதாக இருந்தேன். ஆனால் மற்ற வேலைகளில் மூழ்கியதால், பிறகு இதை செய்ய முடியாமல் போயிற்று. | சரிவர திட்டமிடாமல் இருத்தல், ஒழுங்கற்ற செயல்பாடு |
எனக்கு உடனே செய்ய வேண்டும் என தோன்றவில்லை. பிறகு செய்து கொள்ளலாம் என்று சோபாவில் சாய்ந்து ஓய்வெடுத்தேன். | சோம்பல் |
நான் நிறைய காரியங்கள் செய்கிறேன். இவ்வேலையை என் குடும்பத்தினர் செய்யட்டும். | எதிர்பார்ப்புகள் |
மேலே குறிப்பிட்டுள்ளபடி, காபி டம்ளரை கழுவாததன் பின்னே என்ன எண்ணம் இருந்ததோ அதற்குத் தகுந்தாற்போல், பத்தி H, I மற்றும் J -ல் ஆளுமை குறையை நிரப்ப வேண்டும்
2.3 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 2 – தவறான எதிர்மறை எண்ணம்
இப்பகுதியில், தவறான எதிர்மறை எண்ணத்தைப் பற்றி பரிசீலனை செய்வோம்.
ஜெனிபர் தனக்குள் எதிர்மறை எண்ணம் ஏற்பட்டதை உணர்ந்தாள். என் மேலாளர் என்னை புகழாமல் என் சக ஊழியரான மேகாவை புகழ்ந்த போது எனக்கு கோபம் ஏற்பட்டது.
சுய பரிசீலனையின் ஆரம்பத்தில் ஜெனிபர் தன்னிடமே இக்கேள்வியை கேட்க வேண்டும், ‘என் மேலாளர் மேகாவை புகழ்ந்த போது நான் ஏன் கோபப்பட்டேன்?’
எந்த எண்ணத்தால் கோபம் ஏற்பட்டதோ, அதைப் பொருத்து எந்த ஆளுமை குறையால் அந்த எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது என்பதை ஜெனிபரால் அறிந்து கொள்ள முடியும்.
கோபத்தின் பின்னேயுள்ள எண்ணம் | மூல ஆளுமை குறை |
---|---|
என் மேலாளர் மேகாவையே எப்பொழுதும் புகழ்கிறார். என் முயற்சியை எப்பொழுதும் புகழ்வதில்லை. நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. | பொறாமை |
இதற்கு முந்தைய பணியிலும் யாரும் என்னை புகழவில்லை. வீட்டிலும் புகழ்வார் யாருமில்லை. என்னிடம் ஏதும் திறமை இல்லையா? | பாதுகாப்பின்மை |
என் மேலாளர் பாரபட்சமானவர். மேகாவை விட அதிக திறமையாக வேலை செய்துள்ளேன். | பாரபட்ச எண்ணம் |
மேகாவை நான் பழி வாங்குவேன். அவளிடம் ஏதும் திறமை இல்லை. | கோபம், பழி வாங்கும் சுபாவம் |
2.4 சுய பரிசீலனை நடைமுறைக்குரிய உதாரணம் 3 – தவறான செயல் (ஆழமாக ஆய்வு செய்தல்)
சில சமயங்களில், தவறான செயல் அல்லது எதிர்மறை எண்ணத்தின் மூல ஆளுமை குறையை அறிய தன்னிடமே மேலும் கேள்விகளை கேட்டு, ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். ஒரு உதாரணத்தை பார்க்கலாம்:
சம்பவம்: பல வருடங்களுக்கு பிறகு பழைய பள்ளி நண்பர்களை சந்தித்தபோது நான் அளவுக்கு மீறி கேலி செய்தேன். என்னுடைய அத்து மீறிய கேலி பேச்சை சிலர் எதிர்மறையாக விமர்சித்தனர்.
(நகைச்சுவை என்பது கெட்டதல்ல – எனினும், அளவிற்கு மீறி கேலி செய்யும்போது அது மற்றவரை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதனால், அளவிற்கு மீறி கேலி செய்வது தவறாகிறது. இருந்தாலும், மேலும் பரிசீலனை செய்யும்போது, தன்னைப் பற்றிய ஆழமான சில விஷயங்களை தெரிந்து கொள்ள கூடும். அதனால், தவறு ஏற்பட்டதன் பல காரணங்களை பரிசீலனை செய்யும்போது, பலமுறை ‘ஏன்’ என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.)
2.5 அட்டவணையை நிரப்புதல்
ஒரு தவறுக்கு பல ஆளுமை குறைகளின் சேர்க்கை காரணமாக இருக்கலாம் என்று நாம் உணரலாம். இக்காரணத்தால், குறைகள்/அகம்பாவ வெளிப்பாடுகள் ஆகியவற்றை பதிவு செய்ய மூன்று பத்திகள் (H, I மற்றும் J) கொடுக்கப்பட்டுள்ளன. பத்தி H -ல் அடிப்படையான குறையை பதிவு செய்ய வேண்டும் மற்றும் பத்தி I மற்றும் J –ல் இரண்டாம்பட்சமான குறைகளை/அகம்பாவ வெளிப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.
உதாரணமாக, ‘இரவு உணவிற்கு பின் நான் பாத்திரங்களை கழுவவில்லை’ என்ற தவறில், அடிப்படையான ஆளுமை குறை ‘சோம்பேறித்தனம்’ ஆகவும், இரண்டாம்பட்சமான ஆளுமை குறை ‘காலதாமதம் செய்தல்’ ஆகவும் இருக்கலாம். அதற்கேற்ப, பத்தி G -ல் ‘ஆளுமைகுறை’ -யை தேர்வு செய்த பின்பு, இந்த தவறுக்கு குறை1 -ல் (பத்தி H) ‘சோம்பேறித்தனம்’ எனவும், குறை2 -ல் (பத்தி I) ‘காலதாமதம் செய்தல்’ எனவும் பதிவு செய்யலாம். வேறு எந்த குறையும் மனதிற்கு தோன்றவில்லை என்றால் பத்தி J -வை நிரப்ப வேண்டியதில்லை. ஆனால் ஒரு தவறிற்கு ஒரு குறையையாவது நிரப்ப வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.