சில உடல்ரீதியான, மனோரீதியான கஷ்டங்களின் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் உள்ளது; இவை பற்றிய வழிகாட்டுதலை வாசகர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) இந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. ஒரு பிரச்சனையின் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் இருக்கும்போது, ஆன்மீக நிவாரணங்களையும் சேர்த்துக் கொள்ளும்போது, சிறந்த பலன் கிடைக்கிறது என்பதை நாம் கவனித்திருக்கிறோம். உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். அறிவுறுத்துகிறது. வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாக தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அட்டவணை
1. சௌரப்பின் குழந்தைப்பருவம்
1996 -ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 -ஆம் தேதி, இரண்டு மாத குறைபிரசவமாக சௌரப் பிறந்தார். 21 நாட்களுக்கு இன்குபேடரில் அவர் வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் டாக்டர்கள், அவர் பிழைப்பது அரிது என்பதால், அவரின் பிறப்பைப் பற்றி மற்றவருக்கு தெரிவிக்க வேண்டாம் என அவரது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டனர். பிறகு சௌரப் உயிர் பிழைத்தாலும், கடுமையான குறைபாடுகளால் குழந்தை பருவம் முழுவதும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் துன்பப்பட்டார்.
இந்த தருணத்தில் தான் சௌரப்பின் பெற்றோர்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியை எஸ்.எஸ்.ஆர்.எஃப். வழிகாட்டுதலின் கீழ் துவங்கினர்.
சௌரப் பிறவியிலேயே கண் பார்வையற்றவராக பிறந்தார்; அத்துடன் இரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சினை இருந்ததால் அவரின் மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, எப்போது அவரால் நடக்க, பேச முடியும் அல்லது மனநிலை வளர ஆரம்பிக்கும் என மருத்துவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவருக்கு குடல் பிரச்சினைகள் இருந்தன; இதனை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்த பின்னர், அவருக்கு வலிப்பு நோய் ஏற்படத் துவங்கியது. சுமார் 4-5 மாதங்களுக்கு பின்னர் அவரது வலிப்பு நோய் நின்றது, ஆனால் அடிக்கடி மயக்கமடைய ஆரம்பித்தார். இதன் விளைவாக, சமயங்களில் நீண்ட நேரம் சௌரப் நினைவிழந்த நிலையில் இருந்தார். சௌரப்பின் குழந்தைப்பருவம், வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைகள் மற்றும் பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்வதில் கழிந்தது. எந்த ஒரு பெற்றோருக்கும், அவர்களின் குழந்தை இவ்வளவு துன்பங்களை அனுபவிப்பது என்பது தாங்கவொண்ணாத கொடிய கனவு போலாகும். திருமதி ஜோஷி, அந்த நேரத்தில், உலகிலேயே மிக மோசமான தாய்க்கு கூட இதை போன்ற பிரச்சனைகளைக் கொண்ட குழந்தை இருக்கக்கூடாது என்று நினைத்ததாகக் கூறுவார்.
2. சிகிச்சை அளிக்காமல் கருணைக்கொலை செய்வதுதான் ஒரே வழியா?
தங்கள் மகனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆண்டுகளில் சௌரப்பின் பெற்றோர் மனச்சோர்வடைந்து, வருங்காலத்தை பற்றி நம்பிக்கையற்று இருந்தனர். அவர்களுக்கு தங்கள் மகனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதில் பித்துக் பிடித்தவர்களாக பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவரை வாழ விடுவதா? அவரது குறைபாடுகள் மிகக் கடுமையானதாக இருந்ததால், சிலர் சிகிச்சை அளிக்காமல் அவர் இறக்க அனுமதிப்பதைக் கூட அறிவுறுத்தினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில், 1998 குருபூர்ணிமா சமயத்தில் (வருடந்தோறும் பிரபஞ்ச குரு தத்துவம் அதிக செயல்பாட்டில் இருக்கும் நாள்), சௌரப் மீண்டும் ஒருமுறை சுயநினைவு இழந்தார். அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர்கள், எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்து விட்டனர்; அத்துடன் அவரை கவனிப்பதில் எந்த நாட்டமும் காட்டவில்லை. அவரது தாயார் விடாது பிரார்த்தனை செய்த பின்புதான் டாக்டர்கள் தயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அடுத்த இரண்டு வாரங்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் சுயநினைவற்றுக் கிடக்கும் தன் மகனுடன் திருமதி ஜோஷி தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தார். இதன் விளைவாக குருபூர்ணிமா ஏற்பாடுகளிலும் அவரால் ஸாதகர்களுடன் சேர்ந்து பங்கேற்க முடியவில்லை. இவையெல்லாம் சௌரப்பின் அம்மாவிற்கு அதிக மனச்சோர்வை ஏற்படுத்தியது. மிகுந்த மனஅழுத்தத்திற்குள்ளான நிலையில். சௌரப்பிற்கு தேவைக்கு அதிகமான அளவு வலிப்பு நோய் மருந்தைக் கொடுத்து விடலாமா என்று கூட அவருக்குத் தோன்றியது. அந்த சிந்தனையைத் தொடர்ந்து உடனடியாக, பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர் முன் தோன்றி, ‘ஓ, உனக்கு எப்படி இவ்வாறான ஒரு சிந்தனை ஏற்பட முடியும்? இந்த குழந்தை உயர் ஆன்மீக நிலையில் பிறந்த ஒரு சிறப்பு குழந்தை மற்றும் தங்கள் விதியை முடிக்க மட்டுமே இத்தகைய சூட்சும உடல்களை எடுத்து பிறக்கிறார்கள்’ என்றும் கூறினார். அதற்கு பின் ஒரு விசித்திரமான விஷயம் நடந்தது. மோசமான நிலையில் இருந்த சௌரப் மயக்க நிலையிலிருந்து மீண்டு, மனம் குளிர சாப்பிட்டார். சௌரப்பை கவனித்து வந்த டாக்டர்கள், அவருடைய தொடர்ந்த மயக்க நிலைக்கும் காரணம் தெரியாமல், மயக்கத்திலிருந்து மீண்டதற்கும் காரணம் தெரியாமல் திகைத்தனர்.
3. சௌரப்பின் ஆன்மீக பின்னணியை அறிந்து கொள்ளுதல்
அதற்குப்பின் சௌரப்பின் பெற்றோர்கள் பராத்பர குரு டாக்டர் ஆடவலே யை சந்தித்தார்கள். கடவுள் தான் அவர்களை பார்த்துக் கொண்டார் என்றும், அதனால்தான் அவர் தாயார் அதிகப்படியான மருந்தை கொடுக்கும் முட்டாள்தனமான செயலை நிறுத்திவிட்டார் என்றும் கூறினார்.
இந்த நிகழ்விற்கு முன்பே, சௌரப்பை பற்றி மற்றொரு மகானும் உயர்வாகக் கூறியிருந்தார். அவர்கள் ஒருமுறை சௌரப்பை பரம் பூஜ்ய ககனகிரி மஹராஜிடம் அழைத்துச் சென்றிருந்தனர். அந்த சமயத்தில் அவர் யாருடனும் பேசாமல் கண்கள் மூடியபடி இருந்தார். அவரது காலடியில் சௌரப்பை வைக்க அவர்கள் அவரை அணுகியபோது, அவர் கண்களைத் திறந்து அவர்களைத் தடுத்தார். மாறாக, அவர் சௌரப்பின் தலையில் தன் கையை வைத்து ‘ஓம் சைதன்ய’ என்று சொன்னார். பின்னர் அவர் ஜோஷி தம்பதியைப் பார்த்து அவர்களது மகனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார். பின்னர் அவர் தனது கண்களை மூடி எவருடனும் பேசாமல் முந்தைய நிலைக்கு சென்று விட்டார்.
இந்த புதிய ஆன்மீக கண்ணோட்டத்திற்குப் பிறகு, ஜோஷி குடும்பதினரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. சௌரப் தனது குழந்தை பருவத்தில் வெளிக்காட்டிய பல நல்ல குணங்களை அவர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். கடுமையான குறைபாடுகள் இருந்தாலும், சௌரப் எப்போதும் புன்னகையுடன் இருந்தார், உடல்நிலை குன்றி இருந்தாலும் மகிழ்ச்சியுடனும் இருந்தார். அவரது முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருந்தது, முகத்தில் தெய்வீக உணர்வு (சைதன்யம்) நிரம்பியிருப்பதாக மற்ற ஸாதகர்கள் உணர்ந்தனர். பலர் அவரது அருகாமையில் தங்களின் துயரங்களை மறந்தனர். அவரிடம் ஒரு வெகுளித்தனம் காணப்பட்டது, அமைதியான தியானமே அவரின் சுபாவமாக இருந்தது. அவரது குழந்தை பருவத்தில், அவர் அழுவதோ அல்லது ஏதாவது பொருளைக் கேட்டு பெறுவதோ மிக அரிதாகவே இருந்தது. அவர் விரும்பிய உணவை அளிக்கும்போது அவர் திருப்தி அடைவதற்கு முன்னரே உணவு முடிந்தால் கூட, அவர் இன்னும் வேண்டும் என்று அழுததில்லை என்று திருமதி ஜோஷி குறிப்பிடுகிறார். பல குறைபாடுகள் கொண்டிருந்தாலும், சௌரப் எப்பொழுதும் பொறுமையை கடைபிடிக்கிறார், நிகழ்காலத்தில் இருக்கிறார்.
மேலே கூறப்பட்ட அவரது வாழ்க்கையின் உடல் மற்றும் மனோரீதியான அம்சங்கள், சௌரப்பின் ஆன்மீக குணத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. ஸாத்வீக சூழ்நிலையில் இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் இருக்கிறார். கோயில், மகான்களின் ஸத்சங்கம் போன்ற ஸாத்வீக சூழலிலோ அல்லது ஸந்த் பக்தராஜ் மஹராஜ் பாடிய பஜன்களைக் கேட்கும்போதோ அவரால் தூய்மையான ஆன்மீக அதிர்வலைகளை உணர முடிகிறது.
4. தொடர்ந்து வரும் உடல்நலக்குறைவு
காலம் கடந்தாலும், உடல் ரீதியான குறைபாடுகள், சௌரப்பை தொடர்ந்து பாதித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் நோய்வாய்ப்பட்டால், திரும்ப குணமடைய குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகிறது. அவரது கால்களை நகர்த்த இயலாமல் இருப்பதாலும், தொடர்ச்சியாக படுத்திருப்பதாலும், அவரது முதுகு மற்றும் இடுப்பு பகுதி புண்ணாகி விடுகிறது. முன்பு ஏற்பட்ட தொடை எலும்பு முறிவினால் அவரால் நேரான நிலையில் தூங்க இயலாது. 2005 -ம் ஆண்டு முதல் அவர் ஒரே புறமாக படுத்துக் கொண்டிருப்பதால், அவரது முதுகெலும்பு மற்றும் இடுப்பு வளைந்திருக்கிறது. தொடை எலும்பு அவரது இடுப்பு பகுதியில் நீண்டுள்ளதால் அவரது இரு கால்களின் நீளம் வேறுபட்டதாக உள்ளது. அவரது கழுத்து நீண்டுள்ளதால் அவரால் அதை கட்டுப்படுத்த முடிவதில்லை, அவரது உறுப்புகள் தொடர்ந்து பலவீனமானதாக உள்ளன, தொற்று நோய்கள் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன.
5. மகான்களிடமிருந்து சௌரப் பற்றி மேலும் வழிகாட்டுதல்
சௌரப்பினால் அவர் பெற்றோர்கள் பல ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். அவரது 8 -வது பிறந்த நாளில், அவர்கள் மூன்று மகான்களிடம் ஆசி பெற அவரை அழைத்து சென்றனர். ஒரே நாளில் தனித்தனியாக அவர்கள் பரம் பூஜ்ய யோகிராஜ் டாக்டர் ராஜ் அகமது ஷா படேல்பாபா, பரம் பூஜ்ய துளசிதாஸ் மஹராஜ் மற்றும் பரம் பூஜ்ய பருலேகர்பாபாவை சந்தித்தார்கள். அவர்களுக்கு மற்ற மகான்கள் சௌரப்பை சந்தித்தனர் என்பது தெரியாது என்றாலும், அவர்கள் மூன்று பேரும் சௌரப்பை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் மூவரும் மராட்டிய மொழியில் ‘என்று ஒரு மகான் நம் வீட்டிற்கு வருகிறாரோ, அன்றே தீபாவளி, தசரா’ என்ற ஒரே வாக்கியத்தை கூறினர். சௌரப்பை தங்களின் காலடியில் கிடத்த வேண்டாம் என்று கூறி கைகளால் அவரை ஆசீர்வதித்தனர். சௌரப்பைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் எனவும் அவர் பெற்றோரிடம் கூறினர். இதிலிருந்து, மகான்கள் பார்ப்பதற்கு வெவ்வேறாக தோன்றினாலும், வெவ்வேறான இடங்-களிலிருந்து வந்திருந்தாலும், கடவுளிடமிருந்து ஒரே மாதிரியான சிந்தனை அவர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது என்பதை ஜோஷி தம்பதியர் நேரடியாகக் கண்டனர்.
அடுத்த நாள் பரம் பூஜ்ய ரகுவீர் மஹராஜ் அவர்கள் வீட்டிற்கு வந்தார். முந்தைய நாளின் கதையை விவரிக்கையில், அவரும் சௌரப்பைப் பார்க்கும்போது அதே ஆனந்தம் தோன்றுவதாகக் கூறினார்.
பரம் பூஜ்ய படேல்பாபா, ‘இந்த குழந்தை கைவல்ய நிலையில் (பரமபத நிலை) உள்ளது. இந்த ஆன்மீக நிலையை அடைய 75 ஆண்டுகள் எடுக்கும், ஆனால் இவர் அதை ஒரு குறுகிய காலத்தில் அடைந்துவிட்டார். அவரிடம் எந்தவொரு ஆளுமை குறையோ, உடல் உணர்வோ, மன உணர்வோ, பற்றுதலோ அல்லது அகம்பாவமோ இல்லை. எந்த ஆன்மீக அறிவையும் அளிக்காவிட்டாலும், அவர் ஒரு உண்மையான ஞானி. அவர் கொண்டிருக்கும் ஆன்மீக புரிதல் அவரை பற்றற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நீங்கள் உண்மையில் ஒரு மகானுக்கு சேவை செய்கிறீர்கள். அவரைத் திட்டாதீர்கள், அவரைப் பார்த்துக் கொள்வதை உங்கள் ஆன்மீக பயிற்சியாக ஏற்றுக்கொளுங்கள்.’ என்றார்.
6. சௌரப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி
பின்னர், எஸ்.எஸ்.ஆர்.எஃப். மூலம் சௌரப்பின் ஆன்மீக வாழ்க்கையின் பல விவரங்கள் ஆன்மீக ஆராய்ச்சி மூலம் வெளிவந்தன. சில நேரங்களில், உயர் ஆன்மீக நிலையிலுள்ள சூட்சும உடல்கள் மரங்களாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் பிறக்கின்றனர் அல்லது பித்தர்களைப் போல நடந்து கொள்கின்றனர். எந்த தொந்தரவு இல்லாமல் தங்களின் ஆன்மீக பயிற்சியை தொடர இது அவர்களுக்கு உதவுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், சௌரப் முந்தைய பிறவியில் தியானயோகம் பயின்றார் என்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவரின் பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதன் விளைவாக அவர் இந்த வாழ்வில் 50% ஆன்மீக நிலையுடன் பிறந்தார். கடந்த பிறப்புகளில் செய்த சில தவறுகள் காரணமாக, சௌரப் இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் பிறந்தபோதே உயர் ஆன்மீக நிலையுடன் பிறந்ததால், அவரின் ஆன்மீக அடித்தளம் மிக உறுதியாக இருந்தது. அவர் பிறந்த நேரத்தில் இருந்து, அவரின் ஆழ்மனதில் எப்போதும் கடவுளின் நாமஜபம் நடந்து கொண்டே உள்ளது. 12 வயதிலேயே, சௌரப் தன் ஆழ்மனதில் நடந்துவரும் ஆன்மீக பயிற்சியால் 60% ஆன்மீக நிலையை அடைந்தார்.
எப்படி நாமஜபம் பலனளிக்கிறது? – என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
7. இன்னும் சில ஆன்மீக அனுபவங்கள்
ஒரு நாள் திரு. ஜோஷி வேலையிலிருந்து திரும்பிய பின், சௌரப்புடன் விளையாடத் துவங்கினார். அவர் மிக அருமையான வாசனையைக் நுகரத் துவங்கினார்; அவருடைய மனைவிடம், அவர் அங்கு ஊதுபத்தி ஏற்றினாரா அல்லது வாசனைதிரவியம் தெளித்தாரா என்று கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தபோது, திரு. ஜோஷியின் பார்வை சௌரப் பக்கம் திரும்பியது. அந்த வாசனை உண்மையில் சௌரப்பின் இதயப்பகுதியிலிருந்து வெளிவருவதை உணர்ந்தார். திரு. ஜோஷி கூறுகிறார், ‘நான் மிகுதியான அளவில் தெய்வீக உணர்வு மற்றும் ஆனந்தத்தை அனுபவித்தேன், அமைதியாக நிகழ்காலத்தில் இருந்து கொண்டு அந்த நறுமணத்தை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.’
அவரால் வீட்டில் சண்டைகள் சமாதானப்பட்டு அமைதி ஏற்பட்டது. மன அழுத்தம் மிகுந்த சமயங்களில், சௌரப் சிரிக்கத் துவங்குவார், பேசுவார், பல்வேறு முத்திரைகளை அல்லது கைகளால் சைகைகளை செய்வார். இதனால் வீட்டிலுள்ள அழுத்தமான சூழல் தானே மாறி விடும்.
8. மகானின் நிலை
செப்டம்பர் 2, 2013 அன்று சௌரப் மகானின் நிலையை அடைந்தார். சௌரப்புக்கு உடலை பற்றி உணர்வு கிடையாது; அவரது தேவைகளுக்காக மற்றவர்களை முற்றிலும் சார்ந்து இருக்கிறார். அவரால் மறு பக்கம் ஒருக்களித்து படுக்க கூட முடியாது. அவர் பிறந்ததிலிருந்து ஒரே பக்கத்தில் படுத்துக் கொண்டிருப்பதால் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறார், அதை வெளிப்படுத்த முடியாமலும் இருக்கிறார். இருந்தும், அவர் எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கிறார்.