நாம் ஏன் குறிப்பாக ஸ்ரீஹனுமனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்?
சிரஞ்சீவி ஸ்ரீஹனுமான் இறை தத்துவத்தின் ஒரு அம்சமாவார், அவரிடம் பிரார்த்தனை செய்வதால் பின்வரும் பண்புகள் (மற்ற இதர பண்புகளை தவிர) கிடைக்கப் பெறலாம் :
- சர்வ வல்லமை படைத்தவர் : அனைத்து தெய்வங்களைக் காட்டிலும், கஷ்டம் தரும் சக்தியால் தொந்தரவு செய்ய முடியாத ஒரே கடவுள் ஸ்ரீஹனுமான் மட்டுமே.
- பூதங்களின் தலைவர் : ஶ்ரீ ஹனுமானே பூதங்களின் தலைவர் ஆவார். எனவே, ஆவிபிடித்த ஒருவரை ஸ்ரீஹனுமான் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது அவரைப் பற்றிய பாடல்களை(ஸ்லோகங்களை)பாடச் சொல்வார்கள்.
- வெளிப்படும் தெய்வீக ஆற்றல் : பார்வையாளர் பயன்பாட்டு முறையில் இருக்கும் பரப்பிரம்ம இறை தத்துவமானது, பிரபஞ்சத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் ஈடுபடுத்தப்படுவதில்லை. பல்வேறு தெய்வங்கள், பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட செயல்பாடுகளை எளிதாக்கும் குறைவான இறை தத்துவத்தின் அம்சங்களாகும். எந்தவொரு செயல்பாட்டையும் செயல்படுத்த, வெளிப்படும் தெய்வீக சக்தி தேவை. அனைத்து தெய்வங்களைக் காட்டிலும் ஸ்ரீ ஹனுமனிடம் அதிகமான வெளிப்படும் சக்தி உள்ளது. எனவே கஷ்டங்களில் இருக்கும் ஒருவர் ஸ்ரீ ஹனுமனிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்யும்போது, அவர் சீக்கிரம் தோன்றி அந்நபருடைய கஷ்டங்களை அதிவேகமாகக் குறைக்கிறார்.