ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) அமைப்பு ஒருவர் ஆன்மீக பயிற்சிக்கு அடித்தளமாக இறைவனின் நாமஜபத்தை வலியுறுத்துகிறது. எனினும், ஏற்கனவே ஏதோவொரு ஆன்மீக பயிற்சி செய்து கொண்டிருக்கும் நம் வாசகர்கள் புதிதாக ஒரு நாமஜபத்தை மேற்கொள்வதை கடினமாக உணர்வார்கள். அதற்கான காரணங்களில் சில :
- விதிமுறைப்படி பூஜை செய்வது, ஸ்தோத்திரங்களை சொல்வது, ராமா–யணம், கீதை, பாகவதம் போன்ற புனித நூல்களை படிப்பது, கோவில்களுக்கோ, மசூதிகளுக்கோ, சர்ச்சுகளுக்கோ போவது அல்லது யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ஆகிய மேலே கூறியவற்றுள் ஏதாவது சில வகைகளில் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கலாம்.
- ஆன்மீக பயிற்சியாக இறைவனின் நாமஜபத்தை துவங்குவதற்காக அவர்கள் இப்பொழுது விரும்பி ஈடுபட்டிருக்கும் ஆன்மீக பயிற்சியை நிறுத்தி விட வேண்டுமோ என அவர்கள் நினைக்கலாம்.
- புதிதாக ஒன்றை துவங்குவதற்கு எதிரான எண்ணம் அவர்கள் மனங்களில் எழலாம்.
இம்மாதிரியான சூழ்நிலையில் நம் வாசகர்கள் பின்பற்றுவதற்கான எமது ஆலோசனைகள் :
- எந்தவிதமான ஆன்மீக பயிற்சியுடன் கூடவும் செய்யலாம் : இறைவனின் நாமஜபத்தை துவங்க வேண்டும் என்பதற்காக ஒருவர் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக பயிற்சியை நிறுத்த வே ண்டிய அவசியம் இல்லை. உண்மையில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக பயிற்சியுடன் கூடவே நாமஜபத்தையும் செய்யலாம்.
- தற்போதைய ஆன்மீக பயிற்சியை மேம்படுத்துகிறது : பெரும்பாலான ஸாதகர்களின் அனுபவம் என்னவெனில் நாமஜபம் செய்வதால் அவர்கள் செய்து கொண்டிருந்த ஆன்மீக பயிற்சி மேலும் மேம்பாடு அடைகிறது என்பதே ஆகும். உதாரணமாக, ஸாதகர்கள் விதிமுறைப்படி பூஜை, தியானம், புனித நூல்களை படிப்பது போன்றவற்றுடன் கூடவே நாமஜபமும் செய்வதால் அவர்களின் பக்தியும் மன ஒருமைப்பாடும் அதிகரிப்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.
- ஆன்மீக பயிற்சியில் தொடர்ச்சி : ஆன்மீக வளர்ச்சிக்கு ஆன்மீக பயிற்சி தொடர்ந்து நடத்தல் மிக அவசியம். தொடர் நாமஜபத்தின் மூலமாகவே இது சாத்தியப்படும். மனதினாலேயே நாமஜபம் செய்ய முடிவதால் எங்கும் எப்பொழுதும் நமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே நம்மால் தொடர்ந்து நாமஜபமும் செய்ய முடியும். ஒருவர் எந்த முறையான ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டவராக இருந்தாலும் இந்த தொடர் நாமஜபம் அவரது இடையறாத ஆன்மீக பயிற்சிக்கு உதவும். தொடர் நாமஜபத்தால் உண்டாகும் சில பலன்கள் :
-
- இதன் மூலம் ஒருவரின் மனமும் உடலும் ஸாத்வீகமாக அதாவது அமைதியான நிலையில் இருப்பதால் அவர் நல்ல பயனை அடைகிறார்.
- இதுவே ஆன்மீக நிவாரணமாகவும் ஆவதால் அவரது பக்தியும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.
- தற்போதைய யுகத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது : ஆன்மீக சாஸ்திரப்படி இந்த கலியுகத்தில் ஒருவர் பிறப்பினால் எந்த மதத்தை சார்ந்தவரோ அதை அடிப்படையாகக் கொண்ட நாமஜபம் அவருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. எனவே ஒரு ஸாதகர் தான் ஈடுபட்டுள்ள ஆன்மீக பயிற்சி மேலும் மேம்பாடு அடைய உதவும் ஒரு கருவியாகவே நாமஜபத்தை செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்மீக பயிற்சியின் 5-வது அடிப்படை கோட்பாடு என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
- அதிகப்படியான நன்மைகள் : ஒருவர் ஒரு புதிய வழியை முயன்று பார்த்தால்தான் அதனால் விளையும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் அவர் அவரது ஆன்மீக பயிற்சியை பலப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பை இழந்து விடுவார்.