மாற்றத்தின் விதி
இந்த வெளி உலகம் ஏன் நமக்கு இடைவிடாத நிலையான சந்தோஷத்தை ஒரு போதும் கொடுக்க முடியாது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பதில்: வெளி உலகம் ஒருபோதும் நிலையானது அல்ல – வெளி உலகத்தில் ஒரே ஒரு விஷயம் நிலையானது, அது என்னவென்றால் “தொடர் மாற்றமே”.
உதாரணமாக: நீங்கள் இப்போது உங்களுக்கு கிடைத்த புதிய வேலையை நேசிக்கலாம், மேலும் அது உங்களை வளப்படுத்தலாம் மற்றும் உங்கள் உற்சாகத்தை தூண்டுவதாகவும் இருக்கலாம். ஆனால் இன்னும் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்ன ஆகும்? நீங்கள் தொடர்ந்து ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் சோர்வடையலாம், அல்லது உங்கள் அலுவலகத்தின் குழு உறுப்பினர்கள் மாறலாம், இதனுடன் உங்களுக்கு புதிய ஊழியர்களின் சகவாசம் சந்தோஷத்தை தராமல் போகலாம்? இந்த வெளி உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது – எனவே அங்கே நிரந்தரமான மற்றும் நீடித்த சந்தோஷத்தை காணமுடிவதில்லை.
இப்போது, நாம் நிரந்தரமான உண்மையான சந்தோஷத்தை விரும்பினால், நாம் நமது நேரம் மற்றும் முயற்சியை நிலையான மற்றும் நித்தியமான செயல்களில் முதலீடு செய்ய வேண்டும். நம்மில் உள்ள ஆன்மா மட்டுமே நித்தியமானது மற்றும் நிலையானது. மாறாக, நாம் இயல்பிலேயே நிலையில்லா செயல்களில் நம்மை முதலீடு செய்தால், நமக்கு அதைப்போலவே குறுகிய காலம் மற்றும் நிலையற்ற சந்தோஷமே கிடைக்கும்.