நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு செயலை செய்யும் போதும் ‘நான்’ என்னும் உணர்வு ஆழ்மனதில் நன்கு பதிந்திருப்ப-தால் நமது இருப்பை மட்டுமே நம்மால் உணர முடிகிறது. நமது ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றின் மூலம் இவ்வாறு நாம் உணர்கிறோம். அதன்படியே எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன; நாம் பெறக்கூடிய அனுபவங்களும் இதற்கேற்றவாரே கிடைக்கின்றன. ஆன்மீக மொழியில் இதுவே ‘ஜீவபோதம்’ எனப்படுகிறது. இதற்கு மாறாக நம்முள் குடிகொண்டிருக்கும் ஆத்மாவை அல்லது இறைவனை ‘பரபோதம்’ என குறிப்பிடுகிறோம்.

நாம் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு அனைத்திற்கும் மேலான ஒரு சக்தி நம் வாழ்வை நடத்துவிக்கிறது என்பதை உணரத் துவங்குகிறோம். நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய அடைய நமக்கு உள்ளும் புறமும் இறைவனின் இருப்பை அதிகமாக உணரத் துவங்குகிறோம். பரபோதம் (ப) அதிகமாக அதிகமாக நமது ஜீவபோதம் (ஜீ) குறையத் துவங்குகிறது.
ஒருவரது வாழ்வில் தீவிரமாக இறைவனின் அல்லது குருவின் (இறைவனின் கற்பிக்கும் தத்துவம்) இருப்பை உணரும்போது ஜீவபோதத்தின் இடத்தை ஆன்மீக உணர்வு இட்டு நிரப்புகிறது. அன்றாட அலுவல்களை நிறைவேற்றும்போது இறைவன் அல்லது குருவின் இருப்பை எந்த உருவத்திலாவது தீவிரமாக உணர்வது மற்றும் இவ்வுணர்வை பின்புலமாக வைத்து வாழ்வை அனுபவிப்பது ஆகியவையே இறைவனிடம் அல்லது குருவிடம் கொண்ட ஆன்மீக உணர்வு எனப்படுகிறது.
ஒருவர் இம்மாதிரியான ஆன்மீக உணர்வில் திளைத்திருக்கும்போது அந்த குறிப்பிட்ட கால அளவிற்கு அவரது ஆழ்மனம் இறைவனுடன் ஒன்றியிருக்கிறது. அந்த நிலையில் அவரது மனமும் புத்தியும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவதால் அந்த நபர் இறைவனின் தொடர்பை அதிக அளவு உணர முடிகிறது. எனவே இந்த நிலையில் மனிதனுக்கு இறைவனை பற்றியோ ஆன்மீகத்தை பற்றியோ எந்தவித ஐயமும் எழுவதில்லை.
ஆன்மீக உணர்வு எனும் நிலை குருக்ருபாயோகத்தின் மூலமும் பக்தியோகத்தின் மூலமும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் அனுபவமாகும்.
ஆன்மீக உணர்வு கொண்டுள்ள ஒரு ஸாதகரின் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்டதே பின்வரும் வரைபடம். மிக நுண்ணிய ஆறாம் அறிவைப் பெற்ற எஸ். எஸ்.ஆர்.எப். ஸாதகரால் அவரது சூட்சும ஞானத்தைக் கொண்டு வரையப்பட்டதே இந்த வரைபடம் ஆகும்.
