பாவத்தின் விளைவுகள்

Consequences of sin

1. முன்னுரை

 புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் என்றால் என்ன? என்ற கட்டுரையில், பிறரின் வீழ்ச்சிக்கு காரணமான ஒரு செயலின் விளைவுதான் பாவம் என்று விளக்கியுள்ளோம்.

இந்த கட்டுரையில் பாவம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் அல்லது தண்டனைகளை பற்றி விளக்குகிறோம்.

2. பாவம் செய்பவர்கள் ஏன் தண்டிக்கப்படுவது இல்லை?

குற்றவாளிகள், ஊழல்வாதிகள் அல்லது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்கள் பல பாவச் செயல்களைச் செய்தும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பதைக் காண்கிறோம். இவர்கள் செய்த பாவங்களுக்காக ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்பது   பலரது மனதிலும் எழும் கேள்வி ஆகும்.

இவர்கள் தங்களது முந்தைய பிறவியின் புண்ணியத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த புண்ணியத்தின் பங்குமுடியும் வரை கடவுளாலும் அவர்களை ஒன்றும் செய்ய இயலாது. இருப்பினும்,அதன்பின் அவர்கள் தங்கள் பாவச் செயல்களின் விளைவுகளாக நோய்கள், வறுமை, மரணத்திற்குப் பிறகு நரகத்திற்கு  செல்லுதல், துன்பம் போன்றவற்றை அனுபவிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், பாவங்களிலிருந்து யாரும் தப்பமுடியாது

முந்தைய பிறவிகளின் புண்ணிய பலன் இருந்தபோதிலும், அவர்களின் கெட்ட நடவடிக்கைகளால், தீயசக்திகள் அவர்களின் மனம் மற்றும் புத்தியை ஆக்கிரமித்து ஆளுமை குறைபாடுகளை வலுப்படுத்துகின்றன. இதன் விளைவாக, அவர்கள் மேலும் மேலும் பாவங்களைச் செய்வதால் புண்ணியங்களின் பலன்கள் மிகவிரைவாக தீர்ந்துவிடும். இதன்மூலம் அவர்களை தீய சக்திகள் அனைத்து வழிகளிலும் சூழ்ந்து, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பல்வேறு வகையான துன்பங்களை அவர்களுக்குத்தரும். இதனால் அவர்கள் இறந்தபிறகும், பல ஆண்டுகள் நரகத்தில் துன்பப்படுகிறார்கள்.

3. நரகத்தில் எதிர்கொள்ளும்  துன்பங்கள்

நரகத்தின் வெவ்வேறு லோகங்களில் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிய தகவல்கள், ‘மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு செல்வோம்?’ என்ற கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

4. மரணத்திற்குப் பின் ஏற்படும் துன்பம் மற்றும் முன்னோக்கிய பயணம்

பாவம் செய்தவர்கள் நரகத்தில் துன்பங்களை அனுபவித்து முடிந்தவுடன், அவர்களின் துன்பம் முடிவிற்கு வருகிறதா?

இப்படிப்பட்டவர்களின் பயணம் இரண்டு வழிகளில் தொடர்கிறது என்பது தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்.

4.1 குறைவானபாவங்கள்செய்திருந்தால்

பல வருடங்கள் துன்பம் மற்றும் கடுமையான வறுமைக்குப் பிறகு, பாவிகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு ஏழைகள் மீது பரிவுகாட்ட தொடங்குகிறார்கள். பிறர் மீது அவர்களின் மனமானது அன்பினால் நிறைந்துள்ளது.பல பிறவிகளுக்குப் பிறகு, அவர்களின் சுயநலம் குறைந்து,மிகவும் அன்பானவர்களாக மாறுகிறார்கள். எனவே, அத்தகைய நபர்கள் மரியாதை மற்றும் மனிதநேயத்தின் நற்குணங்களின் வலிமையினால் ஆன்மீக ரீதியாகவும் உன்னதம் அடைகிறார்கள்

இதனால் துன்பப்படும் மக்கள் இறுதியில் நல்லவர்களாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்

4.2 அதிக பாவங்கள் செய்திருந்தால்

மனிதப் பிறப்பைத் தவறாகப் பயன்படுத்திய மகாபாவிகளுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மீண்டும் மனிதப்பிறவி கிடைப்பதில்லை. நரகத்தில் தண்டனை அனுபவித்த பிறகு, சிலர் கீழே குறிப்பிட்டுள்ளபடி பிறக்கிறார்கள்.

  1. மரமாகவோ, கல்லாகவோ,வாழ்க்கையை நடத்த வேண்டும்
  2. பூச்சிகளாகப் பிறத்தல்
  3. மீன், கழுகுகள், வௌவால்கள் போன்ற இனங்களில் பிறத்தல்
  4. சுமைகளைச் சுமக்கப் பயன்படும் காட்டு மிருகங்களாகப் பிறத்தல் (பாவத்தின் அளவு மிக அதிகமாக இருந்தால், அவர்கள் முப்பது முதல் நாற்பது முறை அத்தகைய விலங்குகளாகப் பிறக்கவேண்டும், பின்னர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடினமாக உழைத்து வாழும் சூழ்நிலையில் பிறப்பார்கள்).
  5. அவலட்சணமாக, ஊனமுற்ற அல்லது நோயுற்ற நபராகப் பிறத்தல்
  6. சில வகையான புற்றுநோய்கள் போன்ற அரிய குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுதல்
  7. பிச்சைக்காரனாக மாறும் அவலநிலை

மேற்கூறியவற்றிலிருந்து, குற்றங்களைச் செய்யும் மனிதர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும், தண்டனையை எதிர்கொள்வதுதான் அதைத் தீர்ப்பதற்கான  ஒரே வழி என்பதையும் புரிந்துகொள்ளலாம். இதன்மூலம், அவர்கள் மாறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது, மேலும் அவர்கள் அதிக பாவங்களைச் செய்யாவிட்டால், தண்டனையின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள்.

5. பாவச்செயல்களின் விளைவாக எதிர்கொள்ளும் நோய்களும் சிரமங்களும்.

கீழே உள்ள அட்டவணையில் பல்வேறு பாவங்கள் மற்றும் எதிர்கால பிறப்பு அல்லது மறுமையில் ஏற்படும் விளைவுகள் விளக்கப்பட்டுள்ளது.

பெண்களால் இழைக்கப்பட்ட பாவம்

மனிதனாகப் பிறப்பது

விலங்கினமாகப் பிறப்பது

கணவருடன் பொருத்தமற்ற நடத்தை

கணவரிடம் கோபத்துடன் பேசுவது

செவிடு, ஏழுபிறப்பிற்கும் வறுமை

ஒழுக்கம் தவறிய பெண் அல்லது வம்புக்காரி

கணவருடன் பகிர்ந்துகொள்ளாமல் தனியாக உண்பது

    –

வௌவாலாக முதலில் மண்புழுக்களை உண்டு பின்னர் தன் சொந்தகழிவுகளையே உண்ணுதல்
விபச்சாரம்

மற்ற ஆண்களை வாஞ்சையுடன் பார்ப்பது

தரித்திரம், மாறுகண்ணாக பிறத்தல்

    –

விபச்சாரம் செய்வது

    –

ஒழுக்கம் தவறிய பெண்

ஆண்கள் இழைத்த பாவம்

மனிதனாகப் பிறப்பது

விலங்கினமாகப் பிறப்பது
இரண்டாவதுதிருமணம் ஏழு பிறவிகளுக்கு அதிர்ஷ்டமின்மை

    –

ஒரு பெண்ணை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துதல்

மலட்டுத்தன்மை, குறுகிய ஆயுட்காலம் கொண்ட மகனைப் பெற்றெடுத்தல்

    –

விபச்சாரம் வேறொரு பெண்ணின் முகத்தை இச்சையுடன் பார்த்தல் கண்நோய்

    –

நண்பரின் மனைவியுடன் உடல்ரீதியான தகாத உறவு கொள்ளுதல்

    –

நாய்
சகோதரரின் மனைவியுடன் உடல்ரீதியான தகாத உறவு கொள்ளுதல்

    –

கழுதை அதைத்தொடர்ந்து பாம்பு இனத்தில் பிறந்து இறுதியில் நரகத்தை அடைதல்

 

இருபாலர் இழைத்த பாவம் (பெண்கள் மற்றும் ஆண்கள்)

மனிதனாகப் பிறப்பது

விலங்கினமாகப் பிறப்பது

தன்னுடைய மதத்தைத்தவிர பிறமதங்களை விமர்சிப்பது வறுமை

    –

பிறர் சாப்பிடும் அளவை கவனித்தல்

பார்வை இழப்பு(குருடராகப் பிறத்தல்)

    –

எப்போதும் அடுத்தவரின் பலவீனத்தைப் பற்றியே பேசுவது இருதயநோய்

    –

பாவிகளுடனான நட்பு

    –

கழுதை
துரோகம் சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்தல்

    –

திருடுவதால் ஏற்படும் பாவங்களின் விளைவுகள் பற்றிய விரிவான உதாரணத்தையும் உள்ளுணர்வையும் கீழே உள்ள அட்டவணை வழங்குகிறது.

திருடுதல் மனிதனாகப் பிறப்பது விலங்கினமாகப் பிறப்பது
பொது மோசமான நகங்கள்

    –

தண்ணீர்

    –

காகம்
பழம் அழகற்றத்தன்மை காட்டு விலங்கு
பால் தொழுநோய்

    –

தேன்

    –

கழுகு
உணவு மண்ணீரல்நோய்

    –

ஆடைகள், செம்பு, இரும்பு, பருத்திமற்றும்உப்பு வெண்குஷ்டம்

    –

வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள்

    –

காகம்
புத்தகங்கள் பார்வை இழப்பு(குருடராகப் பிறத்தல்)

    –

தங்கம் சிறுநீர்கோளாறுகள், சர்க்கரைநோய் புழு, பூச்சி

மரணப்படுக்கையில் இருக்கும் பொருட்கள்

ஆயுள்தண்டனை

   –

சமுதாயத்திற்குச் சொந்தமான பணம் கண்டமாலை ( முன்கழுத்து சுரப்பி வீக்கம் )

    –

6. சுருக்கமாக – பாவத்தின்விளைவுகள்

பாவத்தின் விளைவுகளை பாவம் செய்த தனிமனிதன் எதிர்கொள்ள வேண்டும். இந்த ஜென்மத்தில் அவைகளை எதிர்கொள்ளவில்லை என்றால், மறுமையிலோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ அவர்கள்  எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாவத்தின் விளைவாக நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகும் போது,நாம் நல்லவர்களாக மாறி ஆன்மீக ரீதியாக வளரலாம்.பாவத்திலிருந்து மீண்டு வருவதற்கு அந்த பாவத்திற்காக பிராயச்சித்தம்  செய்யும் முறை நமக்கு மேலும் உதவும்.