மனதில் தெளிவை ஏற்படுத்தி தூய்மைப்படுத்துவதற்கு நாமஜபம் எவ்வாறு உதவுகிறது?
எவ்வாறு நாமஜபத்தின் மூலம் பக்தி மையத்தை உருவாக்கி மனதை தெளிவுபடுத்துவது
நம் ஆழ்மனதில் பதிவாகியுள்ள எண்ணங்கள் எவ்வாறு நம் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி நம்மை செயல்பட வைக்கிறது என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்களானால், எதிர்மறை எண்ணங்களை பலவீனப்படுத்தி அவற்றை நீக்குவதன் மூலம் மட்டுமே நம்மால் மனதில் தெளிவை ஏற்படுத்தி அதன் மூலம் நல்ல வாழ்க்கை நடத்த முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் எவ்வாறு நாம் இதை நிறைவேற்றப் போகிறோம்?
எவ்வாறு கையிலோ அல்லது காலிலோ குத்திய முள்ளை ஊசியைக் கொண்டு அகற்றுகிறோமோ, அதேபோல் பழுதுபட்ட எண்ணங்களை அகற்ற புதிய பதிவுகளை நாம் ஆழ்மனதில் உருவாக்க வேண்டும். இந்த சக்தி வாய்ந்த புதிய பதிவுகள் பக்தி மையம் என்று அறியப்படுகிறது.
நமக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்களும் நாம் அடிக்கடி செய்யும் செயல்களுமே, பதிவுகளாக வலிமை அடையும்போது, மையமாக உருவாகிறது. புல்வெளியில் உருவாகும் நடைபாதை போன்றதே அது. புல்வெளியில் ஒருவர் தொடர்ந்து நடந்து வரும்போதே நடைபாதை உருவாகிறது.
பக்தி மையம் உருவாவதும் இதே முறையில்தான். நாம் பிறந்துள்ள மதத்தை சார்ந்த இறைவனின் நாமஜபத்தையே நாம் செய்கிறோம். இது எவ்வாறு செயல்பட்டு நம் மனதை தெளிய வைக்கிறது என்பதை இனி வரும் கட்டுரைகளில் நாம் பார்ப்போம்.