அட்டவணை

1. நாமஜபம் மன நோய்களுக்கான ஒரு சிகிச்சை முறை

பெரும்பாலான மன நோய்களுக்கு நாமஜபம் பயனுடையதாக உள்ளது. ஆப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸாடர் (Obsessive compulsive disorder) எனப்படும் மன நோய்க்கு இறைவனின் நாமத்தை உச்சரித்தல் மிகவும் திறன்வாய்ந்த சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.

2. நாமஜபத்தின் மூலம் ஆழ்மனம் பரிசுத்தம் அடைதல்

இறைநாமத்தில் உள்ள பிரகாசமான சக்தி ஆழ்மனத்தில் காணப்படும் எண்ணப்பதிவுகளை அழிக்கின்றது.

எவ்வாறு சூரிய ஒளி மலக்கழிவுகளையும் அதனால் ஏற்படும் துர்நாற்றத்தையும் அழிக்கின்றதோ அதுபோல் இறைவனுடைய நாமம் அகத்தே காணப்படும் அழுக்குகளை இல்லாதொழிக்கிறது. – பரம்பூஜ்ய பக்தராஜ் மஹராஜ்

பின்வரும் வகையில் நாமஜபத்தின் மூலம் ஆழ்மனம் தூய்மை அடைகிறது.

2.1. நாமஜபத்தின் மேல் விருப்பத்தை உருவாக்கி கொள்ளுதலும் ஆழ்மனத்தை தூய்மை படுத்துதலும்

மனோ தத்துவத்தை பொறுத்தவரையில் இறைவனின் நாமத்தை உச்சரிப்பதும் உலகியல் சார்ந்த விஷயமொன்றை உச்சரிப்பதும் ஒன்றாகவே கருதப்படுகிறது. தன் குழந்தையின் பெயரை அழைக்கும் போதோ செவிமடுக்கும் போதோ ஒரு தாயின் ஆழ்மனத்தில் பல்வேறு உணர்வுகள் தோன்றுகின்றன. இது தாயன்பு, சந்தோஷம், கவலை, அபிலாஷைகள் போன்ற ஏதோ ஒன்றாக இருக்கலாம். இதன் காரணம் யாதெனில், ஒரு பொருளின் அதாவது குழந்தையின் பெயருடன் அதனை சார்ந்த உணர்வுகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. திரும்பத்திரும்ப அப்பெயரை செவிமடுத்தல் அல்லது அதன் நினைவு, உணர்வுகளை தட்டியெழுப்புகிறது. இது ஒரு தாயின் வாழ்வில் தன்னிச்சையானதும் மிகவும் ஆற்றல் கொண்டதுமான ஒரு உந்து சக்தியாகும். சில சமயங்களில் இந்த ஒரு சக்தியால் தன் குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய ஒரு தாய் தயாராக இருக்கிறாள்.

இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதினால் ஏற்படும் உளவியல் ரீதியான விளைவும் இது போன்றதே. அவருடைய நாமத்தை ஜபிப்பதால் உணர்ந்தோ உணராமலோ இறைவனை பற்றி ஒரு உருவம் அல்லது உணர்வினை கொண்டிருக்கின்றோம். இறைவனுடைய பண்புகளை பற்றிய கருத்துக்களையும் கொண்டிருக்கின்றோம். இறைவனுடைய கிருபையினை பெற முடியுமெனவும் இறை நாமத்தை உச்சரித்தல் அதனை அடைவதற்கான கருவி எனவும் விளக்கங்கள் மூலம் நாம் அறிவோம். ஆகையினால் மேன்மை பொருந்திய இறைவனின் நாமத்தை உச்சரிப்பதாக ஆன்மீக உணர்வு கொள்ளும்போது அந்த உணர்வு அவருடைய நாமத்துடனும் இணைந்திருக்கும். இந்த ஆன்மீக உணர்வினால், மரியாதை, அன்பு, இறைவன் மீது பக்தி, தவறுகள் செய்ய பயம் போன்ற உணர்வுகள் படிப்படியாக அதிகரிப்பதோடு மறுபுறம் விரும்பத்தகாத உணர்வுகள் குறைவடைகின்றன. இதனால் ஆழ்மனம் படிப்படியாக தூய்மை அடைகிறது.

2.2. எண்ணப்பதிவுகள் குறைவடைதல்

நாமஜபம் நடைபெற்று கொண்டிருக்கும்பொழுது, ஆசை மற்றும் சுபாவ மையம், விருப்பு மற்றும் வெறுப்பு மையம், உளற்பாங்கான பண்பு மையம், புத்தி மையம் போன்ற ஆழ்மன மையங்களில் இருந்து எழும் எண்ண தூண்டுதல்களை நினைவு மனம் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு பலகாலம் தொடர்ச்சியாக நடைபெறும்பொழுது நாளடைவில்
இம்மையங்களில் உள்ள எண்ணப்பதிவுகள் குறைவடைந்து அமைதியான மனநிலையை ஒருவர் உணரமுடியும்.

2.3. புதிய எண்ணப்பதிவுகள் உருவாவதில்லை

நாமஜபம் நடைபெற்று கொண்டிருக்கும்பொழுது மற்றைய விஷயங்களை பற்றிய புதிய எண்ணப்பதிவுகள் ஆழ்மனத்தில் உருவாவதில்லை. இறைவனுடைய நாமத்தை உச்சரித்தலே, நினைவு நிலையில் புதிய எண்ணங்கள் ஆழ்மனத்திற்கு செல்வதை தடுக்கக்கூடிய மிக உகந்த முறையாகும். [ஒருமுகப்படுத்தல், தியானம் மற்றும் சமாதி நிலையில் (இறைவனுடன் ஒன்றியிருக்கும் மிக உன்னத நிலை) கூட மற்றைய விஷயங்களை பற்றிய எண்ணப்பதிவுகள் ஆழ்மனத்தில் உருவாக்கப்படுவதில்லை.]

2.4. நாமஜபத்தின் மூலம் ஆசைகள் நீங்குதல்

நாமஜபத்தினால் மனம் வெளிப்புற வசீகரங்களினால் திசை திரும்புவது குறைவாகவே காணப்படும். மனம் இவ்வாறு வழி தவறிப்போவது குறைவடையும்போது நம்மை மாயையின் பக்கம் இழுத்துச்செல்லும் ஆசைகளும் தேக புத்தியும் தன்னிச்சையாகவே தன்னுடைய சக்தியை இழந்துபோக, நம்மால் இன்னும் நாமஜபத்தில் மூழ்கியிருக்க முடியும். ஆசைகளை பூர்த்தி செய்வதை விடுத்து மனம் நாமஜபத்திலேயே ஊன்றிப்போயிருக்கும். எனவே ஆசைகள் குறைவடைந்து நாளடைவில் ஆசைகளே இல்லாமல் போய்விடும். ஆசைகள் சூட்சுமத்தன்மை வாய்ந்ததால் அவைகளை குறைக்க சூட்சும வழிகளே (நாமஜபம்) தேவைப்படுகிறது. ஆசைகள் குறைவடையும் போதோ அல்லது இல்லாமல் போகும்போதோ நம்மால் பேரானந்த நிலையில் இருக்க முடிகிறது. இந்நிலையினால் நமக்கு அகத்தே வழங்கும் திருப்தியானது மனதில் ஏற்படும் எந்தவொரு ஆசைகளை பூர்த்தி செய்வதை காட்டிலும் உயரியதாகும்.

3. நாமஜபம் அகமுகத்தன்மையினையும் சுய விசாரணையினையும் அதிகரிக்கும்

நம்மில் நல்ல குணங்களை விருத்தி செய்வதற்கு அகமுகத்தன்மையினையும் சுய விசாரணையினையும் அவசியமாகும். இவ்விரு குணங்களும் நாமஜபம் மூலம் விருத்தியடைய ஆரம்பிக்கின்றன.

அகமுகமாக நமது கவனத்தை செலுத்தும்போதே உண்மையில் நாமஜபம் தொடங்குகின்றது. நாமஜபமானது மனதளவில் நடைபெறுகிறதா என கவனிக்க வேண்டுமாயின், கவனத்தை உள்முகமாக செலுத்த வேண்டும், அதாவது ஆன்மீக ரீதியில் உள்நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.

மனதின் குணம் அலைபாய்வதும் வெளிப்புற தூண்டுதல்களில் கவனம் செலுத்துதலும் என்பதால் நாமஜபத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும். இதை நாம் உணர்ந்தபின் மனதை மீண்டும் நாமஜபத்தில் ஈடுபடுத்தவேண்டும். இந்த செயற்பாட்டில் மனதை அலைபாய விடும் நமது எண்ணங்களை அல்லது குறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவே சுய விசாரணை ஆகும்.

4. நாமஜபம் நமது மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது

ஆழ்மனமாது நாமஜபத்தினால் தூய்மை அடையும்போது, ஆழ்மனத்திலிருந்து நினைவு மனத்திற்கு வரும் தூண்டுதல்கள் குறைவடைவதால், ஒருமுகப்படும் ஆற்றல் அதிகரிக்கிறது. இவ்வழியில் நாம் செய்யும் எந்தவொரு செயலும் மிகவும் அமைதியான முறையில் ஒருமுகப்படுத்துடனும் சரியான முறையிலும் செய்யப்படுவதோடு, நமது வெற்றிகரமான வாழ்விற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏதுவாக அமைகிறது.

நாமஜபத்தினால் பெற்ற ஒருமுகப்படும் ஆற்றலால் கல்வி பயிலுதல் மேம்படுதல்: எப்படி நாமஜபம் செய்வது என்பது பற்றி அறிந்து கொண்டபின் வீட்டிற்கு வந்து நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய மாமா தொலைக்காட்சி பார்க்க தொடங்கிய பின்பு கூட எனது கவனம் சிதறவில்லை. எனது பாடங்களில் வெகுவாக கவனம் செலுத்த முடிந்தது. – குமாரி சுவேதா திலிப் பார்தே மும்பை, இந்தியா

5. நாமஜபம் ஒருவரின் பேச்சினை தூய்மையாக்கிறது

நாள் முழுவதும் உலகியல் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடும் பொழுது நமது ஆழ்மனத்தில் மாயை சார்ந்த எண்ணங்கள் வலுவாக்கப்பட்டு, மனம் தூய்மை அற்றதாக மாறுகிறது. நாமஜபமானது அதனுடைய தெய்வீக சக்தியால் நமது ஆழ்மனத்தை தூய்மையாக்கி பேச்சினையும் பரிசுத்தமாக்குகிறது.

6. நாமஜபத்தினால் கிடைக்கும் நன்மை மௌனத்தினால் கிடைக்கும் நன்மைகளை ஒத்ததாகும்

இறைவனின் நாமத்தை உச்சரித்தல் ஒருவகை மௌனமாகும். ஆகையால் மௌனத்தினால் கிடைக்கும் பின்வரும் அனுகூலங்கள் நாமஜபத்தினாலும் கிடைக்கின்றன;

A. உலகியல் பிரச்சனைகள் குறைவடைதல்: பெரும்பாலான உலகியல் பிரச்சனைகள் நமது பேச்சினாலேயே ஏற்படுகின்றன. மௌனத்தை பயிற்சி செய்வதால் அது இயற்கையாகவே தவிர்க்கப்படுகின்றன.

B. பொய் பேசுவதை தவிர்க்க முடியும்

C. அறு பகைவர்கள் எனப்படும் பிரதான குறைகள் மீது கட்டுப்பாடு ஏற்படுதல்: அறு பகைவர்கள் என்பவை நம் அகத்தே காணப்படும் உலகியல் வாழ்வுடன் நம்மை பிணைக்கும் அடிப்படை குறைகளாகும். இவையே நம் துன்பத்திற்கு காரணம். அவை காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் (காமம், கோபம், தற்பெருமை, பேராசை, பொறாமை மற்றும் பற்று) ஆகியன. இவைகள் வெளிப்படுத்த படாதபோது, நாமஜபத்தின் மூலம் படிப்படியாக இவற்றினை ஆட்கொள்ள முடியும்.

7. சுருக்கம் – நாமஜபத்தின் நன்மைகள்

இன்றைய வேகமான மன அழுத்தம் நிறைந்த சூழலில் நாமஜபம் நமக்கு அமைதியான வாழ்வை அளிப்பதோடு கூடிய வினைத்திறன், பொறுமையாகவும் அமைதியாகவும் மற்றவர்க்கு உதவுதல், அன்பான குணம், சுய நலம் குறைவடைதல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.