ஆயுர்வேத சிகிச்சை – வருங்காலத்திற்கான பண்டைய மருத்துவ அறிவியல்

1. முன்னுரை

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் (உயர் நிலை மகானும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் -இன் உத்வேகமும்) அருளிய பொன் வாக்கு:

“பல தடவை ஒரு நோயாளி சிகிச்சைக்காக அலோபதி மருத்துவரிடம் செல்கிறார். அலோபதி சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை என்றால் ஆயுர்வேத சிகிச்சையை நாடுகிறார். அதற்குள்ளேயே உடலில் அந்த நோய் தங்கிவிடுகிறது, நிறைய பணம் செலவாவதுடன் பக்க விளைவுகளும் உண்டாகிறது. ஆயுர்வேத சிகிச்சை பெற்ற பின்பு தான் நோய் குணமாகிறது என்று நோயாளி உணருகிறார். ‘அடாடா, தொடக்கத்திலிருந்தே ஆயுர்வேத சிகிச்சையை பெற்றிருக்கலாமே’ என நினைக்கிறார். இந்த சிந்தனையையும், பாதகமான பக்க விளைவுகளையும் தவிர்க்க ஆரம்பத்திலிருந்தே ஆயுர்வேத சிகிச்சை பெறுவது அவசியமாகும்.”

தற்போதைய காலத்தில் நமக்கு நோய் ஏற்பட்டால் நவீன மருத்துவத்தில் (அலோபதி) தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் நாம் செல்கிறோம். இந்த காலத்தில் அலோபதி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதால் மாற்றுச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவரிடம் செல்லவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை. இருப்பினும், மாற்றுச் சிகிச்சை முறைகள்பல உள்ளன, பல்வேறு நோய்களை தடுத்தும், குணப்படுத்தியும் அவை நமக்கு நன்மை அளிக்கின்றன. அப்படிப்பட்ட மாற்றுச் சிகிச்சையின் ஒரு அமைப்பு பண்டைய பாரதத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆயுர்வேதம் ஆகும். இக்கட்டுரையில் ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளும்,அது எவ்வாறு தோன்றியது என்றும், அலோபதியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது மற்றும் வரப்போகும் காலங்களில் ஆயுர்வேத சிகிச்சையின் முக்கியத்துவம் மற்றும் அதை படிப்பதன் அவசியம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

2. வரைவிலக்கணம்

ஆயுர்வேதம் என்ற பெயர், ஆயுர் (பொருள்: வாழ்க்கை) மற்றும் வேதம் (பொருள்: ஞானம்) என்ற இரண்டு சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஆரோக்கியமான வாழ்வைப் பற்றிய ஞானமே ஆயுர்வேதம் ஆகும். வெறும் நோயை மட்டும் அலோபதி மருந்துகள் குணப்படுத்தும் ஆனால், ஆயுர்வேதம் என்பது நோயையும் நோயாளியையும் முழுமையான முறையில் குணப்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

3. ஆயுர்வேத சிகிச்சையின் வரலாறு

பாரத நாட்டில் மலர்ந்து பண்டைய காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை மருத்துவ துறையில் பரிணாம வளர்ச்சியும் மற்றும் இன்றுவரை ஒரு தனித்துவமான அமைப்பாக இருப்பது ஆயுர்வேத சிகிச்சை முறை ஆகும். பண்டைய புனித நூல்களான வேதங்கள் காலத்திலிருந்தே ஆயுர்வேதத்தின் உண்மையான வரலாறு தொடங்குகிறது. ஆயுர்வேதத்தின் கருத்தும் சாராம்சமும் இந்த அண்டத்தை படைத்த பிரம்மதேவரே வெளிப்படுத்தினார் என பல அறிஞர்கள் கூறுகின்றனர். வேதங்கள் போன்ற முழுமுதற் நூல்களில் இதன் மருந்துகளின் குறிப்புகள் காணப்படுகின்றன. அக்னிவேசர் எழுதிய சம்ஹிதை என்ற நூல் இன்று வரை உபயோகத்திலுள்ளது. இது சரகரால் உலகிற்கு அளிக்கப்பட்டு சரக சம்ஹிதை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கி.மு 6-ஆம் நூற்றாண்டில் சரகர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. மருத்துவ தகவல்களின் முழுமையான தொகுப்பே இந்த சம்ஹிதை, இதில் நோயியல், நோயின் குறியியல், சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பு உள்ளடங்கியுள்ளது.சரகசம்ஹிதையைப் போலவே சுஸ்ருத சம்ஹிதையும் அதற்கு இணையான தொகுப்பாகும். இதில் அறுவை சிகிச்சை, கண், காது போன்ற உறுப்புகளின் நோய்களை பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன.

நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளிக்கும் தெய்வீகத் தாவரங்கள் மீண்டும் கண்டெடுக்கப்படுகின்றன. ஆயுர்வேதத்தின் சில கிளைகளில் வல்லமை படைத்த பல புகழ்பெற்ற வைத்தியர்கள் (ஆயுர்வேத நிபுண மருத்துவர்கள்) பாரதத்திலும் மற்ற சில நாடுகளிலும் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளனர். ஆயுர்வேதம் தொடர்பான பண்டைய கலாச்சாரமும் பாரம்பரியமும் மீண்டும் தலையெடுத்துள்ளன, இது நவீன உலகிற்கு பண்டைய நாகரீகம் அளிக்கும் பரிசாகும்.

4. ஆயுர்வேதசிகிச்சையின் கோட்பாடுகள்

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய ஒரு  சமுதாயத்தை உருவாக்குவதே ஆயுர்வேதத்தின் நோக்கமாகும்.

ஆயுர்வேத சிகிச்சையின் இரண்டு முக்கியமான நோக்கமானது:
  • ஆரோக்கியமானவர்களின் உடல்நலத்தை தக்கவைப்பது
  • நோயாளிகளின் நோயை குணப்படுத்துவது
  • ஆயுர்வேதத்தின் படி பஞ்சபூத தத்துவங்களால் நமது சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது, ஆகாயம், காற்று, கனல், நீர் மற்றும் நிலம். இயற்கையைப் போலவே மானிடர்களும் பஞ்சபூத தத்துவங்களால் ஆனவர்கள்.  சுற்றுச்சூழலில் பஞ்சபூத தத்துவங்களில் ஒன்றேனும் சமநிலையை இழந்தால் அதன் தாக்கம் நம் மீது ஏற்படும். நாம் உட்கொள்ளும் உணவும் வானிலையும் இந்த தத்துவங்களின் தாக்கத்தின் உதாரணங்கள் ஆகும்.

    மனித உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று அடிப்படை தோஷங்களாக பஞ்சபூத தத்துவங்கள் வெளிப்படுகின்றன. உடல் இழையங்களின் (திசுக்கள்) படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை இம்மூன்று தோஷங்கள் தான் நிர்வகிக்கின்றன. ஒவ்வொரு மனிதரும் இம்மூன்று தோஷங்களின் தனித்துவமான கலவையுடன் பிறக்கிறார், இதுவே அவரது பிரக்ருதி (இயல்பு) என்ற அடிப்படை அமைப்பை தீர்மானிக்கிறது.

    • உடலசைவு அம்சத்தை வாத தோஷம் நிர்வகிப்பதால் நரம்பு தூண்டுதல், இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் அகற்றல் போன்றவற்றை இயக்கும் விசை என்றே அதை கூறலாம்.
    • பித்த தோஷம் என்பது மாறுதல் மற்றும் வளர்சிதை மாற்றம் என்ற செயல்முறையை நிர்வகிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவை நமது உடலில் ஏற்கத்தக்க சத்துக்களாக மாற்றுவது பித்த தோஷத்தின் செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உடலுறுப்பு வளர்சிதை மற்றும் உடலிழைய (திசுக்கள்) அமைப்பின் மாற்றங்களையும் இது நிர்வகிக்கிறது.
    • கப தோஷம் வளர்ச்சிக்கு பொறுப்பாகும். அது பாதுகாப்பையும் அளிக்கும், உதாரணத்திற்கு மூளை தண்டுவட திரவம் உருவில் மூளையையும் முதுகெலும்பையும் பாதுகாக்கும். இரைப்பையின் பாதுகாப்பு படலமும் திசுக்களை பாதுகாக்கும் வேலையும் கப தோஷத்தின் செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    ஆயுர்வேத மருத்துவ முறை ஒரு நபரது குறிப்பிட்ட உடல்நல சவால்களை தீர்க்க முயற்சிக்கிறது. எந்தவொரு தோஷமும் அதிகம் சேர்ந்தாலோ அல்லது சமநிலை இழந்தாலோ அதற்கேற்ற வாழ்வு முறையையும் சத்துள்ள உணவையும் ஆயுர்வேதம் அறிவுறுத்தி அதிகப்படியான அந்த தோஷத்தை குறைக்கிறது. நோயையும் சமநிலை இன்மையையும் குணப்படுத்த மூலிகை மருந்துகளையும் பரிந்துரைக்கப்படுகிறது.

    5. அலோபதியுடனான ஒப்பீடு

    ஆயுர்வேதம் ஆயுர்வேதம்
    1. படைப்பு கடவுளின் படைப்பு மனிதனின் படைப்பு
    2. வரலாறு பழங்காலத்திலிருந்தே உள்ளது சில நூற்றாண்டுகளே பழமையானது
    3. நோக்கம் நல்ல ஆரோக்கியத்தை பேணுதல்,, நோய் தடுப்பு மற்றும் குணமாக்குதல் நோய்களையோ அல்லது அதன் அறிகுறிகளையோ குணமாக்குதல்
    4. கோட்பாடு பழங்காலத்திலிருந்தே மாறாதது தொடர் மாற்றம்
    5. காரணங்களின் வரம்பு தற்போதைய மற்றும் முற்பிறவிகளின் காரணங்களை ஆராய்கிறது தற்போதைய மற்றும் முற்பிறவிகளின் காரணங்களை ஆராய்கிறது
    6. இடம்,பொருள், ஏவல்,காலம், பருவம், அமைப்பை பொறுத்து நிவாரணம் அளித்தல் ஆம் இல்லை
    7. மருந்துகளின் வடிவம் இயற்கையானது. உடனடியாக கிடைக்கும் தாவரங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி குறைந்த விலையில் கிடைக்கும் செயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்டதால் உயர்ந்த விலையோடு பக்க விளைவுகளுடன் கிடைக்கும்
    8. மருந்துகளை தயாரிக்கும் முறை நாமஜபம் செய்துகொண்டே தயாரித்தல் இயந்திர ரீதியாக
    9. சிகிச்சை நோயின் வேர் வரை செல்கிறது வெளிப்புறமாக
    10. நோயாளி செய்யவேண்டிய ஆன்மீக நிவாரணங்கள் உண்டு இல்லை
    11. வரம்பு உடல், மனம் மற்றும் புத்தியின் நலத்தை கவனிக்கிறது அதிகப்படியாக உடல் மட்டுமே, சிறிதளவு மனம்

    6. வரப்போகும் காலங்களில் ஆயுர்வேத மருத்துவ ஞானத்தின் அவசியம்

    இவ்வுலகில் தற்போது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பும், எதிர்பாராத இயற்கை பேரழிவுகளும் ஏற்படலாம் என பல மகான்கள் கணித்துள்ளனர். யுத்தத்தின் விளைவால் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். தொழிற்சாலைகள் மூடப்பட்டு மருத்துவ அறிவியல் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்காமல் போய்விடும். அச்சமயங்களில் நாம் நோயை குணமாக்க கிடைக்கும் மாற்றுச் சிகிச்சை மற்றும் ஆன்மீக நிவாரண முறைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இதனாலேயே தான் இப்போதிலிருந்தே ஆயுர்வேதத்தைப் பற்றி கற்றுக்கொள்ளவது அவசியமாகும். இதன் நன்மைகள் என்னவென்றால் எந்தவொரு அதிநவீன கருவிகளின்றி மூலிகைகள் மற்றும் தாவரங்கள் போன்ற பொதுவான வீட்டுப் பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிதாக மருந்துகளை தயாரிக்கலாம். பொதுவான மனிதனுக்கு இயற்கையான தாவரங்கள் மற்றும் மூலிகைகளை மருந்துகளாக உபயோகிக்கத்  தெரிந்தால் ஆபத்துக்காலத்தில் துணையாக இருக்கும்.