1. அறிமுகம்
இங்கு நாம் பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை அவற்றின் அதிகபட்ச நிவாரணப்படுத்தும் திறனின் அளவைக்கொண்டு ஒப்பிடுகிறோம். முதலில் நாம் கூறுவதின் பொருளை புரிந்துக்கொள்வோம்.
நம்மில் பெரும்பாலோர், குறிப்பாக மருத்துவம் அல்லது நிவாரணப்படுத்தும் அறிவியலில் பயிற்சி பெறாதவர்கள், நிவாரணப்படுத்தும் செயல்முறையைப் பற்றிய மேலோட்டமான புரிதலை கொண்டுள்ளோம். பெரும்பாலும் இந்த செயல்முறையைப் பற்றிய நமது புரிதல் நமது நோயின் அறிகுறிகளைக் குறைப்பதில் மட்டுமே உள்ளது. எவ்வாறாயினும், நமது நோயின் அறிகுறிகளைத் தணிப்பது என்பது ஒரு பரந்த அளவிலான நிகழ்வுகளின் விளைவாக இருக்கலாம், அதாவது நோயை மறைத்தல் முதல் அதை ஒழிப்பது அல்லது நோயின் செயல்முறையை சூட்சும நிலையில் உணர்ந்து அதை வேரிலிருந்து அகற்றுவது வரையிலாகும்.
பின்வரும் பகுதிகளில், ஒவ்வொரு சிகிச்சை முறையும் எவ்வாறு ஆழமான மற்றும் விரிவான நிலையில் செயல்படும் திறனைக் கொண்டுள்ளது என்பதைக் காணலாம்.
2. அலோபதி
நோயின் அறிகுறிகளை விரைவாகக் கட்டுப்படுத்துவதே இந்த சிகிச்சையின் சிறப்பம்சமாகும். அதுவே இதன் வலுவான ஒரு புள்ளியாகும். முந்தைய கட்டுரைகளில் இந்த சிகிச்சை முறையில் பல குறைபாடுகளை நாம் பார்த்த போதும், பலரும் இதை தேர்ந்து எடுப்பதற்கான காரணமும் இதுவேயாகும்.
3. யுனானி மருத்துவம்
இந்த சிகிச்சையானது உடலின் சக்தி ஓட்டத்தை செயல்படுத்தும் திறன் கொண்டது. இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி திறன் மேம்பட்டு, முடிவில் நோயை சமாளிக்க செயல்படுகிறது.
4. அக்குபிரஷர்
இந்த சிகிச்சை முறையானது நோயை எதிர்த்துப் போராட உதவும் தேவையான உடல் செல்களை உருவாக்க செயல்படுகிறது. உடலில் உள்ள சேதனா சக்தியோட்டமானது நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் தேவையான செல்களை வளர்ப்பதற்காகவும் இயக்கப்படுகிறது. சேதனா என்பது உடல் மற்றும் மனதின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக உணர்வின் (சைதன்யத்தின்) அம்சமாகும்.
5. முத்ராக்கள்
முத்ராக்கள் உடலின் குறிப்பிட்ட உறுப்புக்கு தேவையான ஆற்றல் ஓட்டத்தை இயக்கி செயலாற்றுகின்றன. இந்த மேம்பட்ட சக்தி ஓட்டம் அந்த உறுப்பில் உள்ள நோயை எதிர்த்துப் போராடுவதோடு, ஒரு செயல்பாட்டு பாதுகாப்பு கவசத்தையும் உடலைச் சுற்றி உருவாக்குகிறது. இதனால் நோயின் தாக்கம் தடுக்கப்படுகிறது
6. ஹோமியோபதி
ஹோமியோபதி மேற்கூறிய மாற்று சிகிச்சை முறைகளை விட ஆழமான அளவில் செயல்பட்டு நோயை எதிர்த்துப் போராட, தேவைக்கேற்ப புதிய செல்களை உருவாக்கும் திறனை உடலுக்கு வழங்குகிறது.
7. ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் உடல் மற்றும் மன நிலையில் நோயை எதிர்த்துப் போராடுவதோடு, நோய்க்கு காரணமான தீய சக்தி மையங்களையும் கண்டறியும். எனவே அதன் செயல் மிக உயர்ந்த நிலையில், அதாவது ஆன்மீக மூல காரண நிலையில் உள்ளது. எனவே மேற்கூறிய மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாகும்.