உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. திருநீறு(விபூதி) தயாரிப்பது எப்படி என்பது பற்றிய அறிமுகம்
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகளிலிருந்து சேகரிக்கப்படும் திருநீறானது ஒரு சிறந்த சுய ஆன்மீக நிவாரணியாகும். இது வழக்கமாக நேர்மறை ஆற்றலையும், ஆவிகளால்(பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) உருவாகும் கஷ்டங்களிலிருந்து நிவாரணமடையவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எப். ஊதுபத்தியிலிருந்து கிடைக்கும் திருநீறு புனிதமானது ஏனெனில்:
- எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்திகள்ஸாத்வீகப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு ஒளிரூட்டப்படும்போது பரிபூரண நெருப்பு தத்துவத்தை வெளியிடுகிறது. ஸாத்வீகப் பொருட்கள் மற்றும் பரிபூரண நெருப்பு தத்துவத்தின் வழி தயாரிக்கப்படும் சாம்பலை மற்ற உயிரற்ற பொருட்களின் மூலம் தயாரிக்கும் சாம்பலுடன் ஒப்பிடும்போது, முதலாவது கூற்றில் ஸாத்வீகத்தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது, அதனால் இது திருநீறு (விபூதி) என்றழைக்கப்படுகிறது.
- எஸ்.எஸ்.ஆர்.எப்.ஊதுபத்திகளில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட நறுமணமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் அம்சத்தை ஈர்ப்பதால் இதை சேகரித்து வைப்பது சிறந்தது.
இதைப்பற்றி மேலும் அறிய பின்வரும் கட்டுரைகளை காண்க:
- ‘ஆன்மீக நிவாரணம் அளிப்பதில் எஸ்.எஸ்.ஆர்.எப்.ஊதுபத்திகளின் சிறப்பு என்ன?’
- ‘ஆன்மீக நிவாரணத்தின் தத்துவம்’
2. எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்திகளிலிருந்து திருநீறு (விபூதி) எவ்வாறு தயாரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது
திருநீறு தயாரிக்க உங்களுக்குத் தேவையானவை
- எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்தி
- ஒரு ஊதுபத்தி தாங்கி
- திருநீற்றை சேகரிக்க ஒரு தட்டு
- ஒரு ஒளிர்ப்பான்(தீப்பெட்டி)
ஆன்மீக நிவாரணமடைவதற்காக கடவுளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வழிபடுவதால் இந்த முழு செயல்பாட்டையும் மிகுந்த பயபக்தியுடன் செய்ய முயலுங்கள், அது அதிக பலனைப் பெற உதவும். உங்கள் செயல்கள், எண்ணங்கள் மற்றும் அணுகுமுறை ஆகியவை கடவுளின் இருப்பை நீங்கள் உண்மையில் உணரக்கூடியதாக இருக்கவேண்டும்.
- எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்தியில் உள்ள குறிப்பிட்ட நறுமணத்தால் ஈர்க்கப்படும் குறிப்பிட்ட கடவுளின் அம்சத்தின் அதிகபட்ச திறன் அதிலிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தொடங்குங்கள்.
- பெட்டியிலிருந்து ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்தியை எடுத்து அதனை ஒரு ஒளிர்ப்பான் அல்லது தீக்குச்சியைக் கொண்டு ஒளிரூட்டவும்.
- ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்தியை ஒரு ஊதுபத்தி தாங்கியில் பொருத்தவும்
- சராசரியாக ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப்.ஊதுபத்தி 40-45 நிமிடங்கள் எரியக்கூடியது .
- ஊதுபத்தி எரிந்த பிறகு, திருநீற்றை உங்கள் வலது கையால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் சேகரித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக சுத்தமான கொள்கலனில் சேமிக்கவும்.