மாற்று ஆன்மீக சிகிச்சை மூலமாக புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது. வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இக்கேள்விக்கான பதிலை பெற பல காரணிகள் மற்றும் ஆய்வுகளை கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த வெவ்வேறு காரணிகளின் இடையே உள்ள தொடர்புகள் மிகவும் சிக்கலானதால் ஒரே கருத்தை மட்டும் தனியாகப் பிரித்து பார்க்க முடியாது.

இதைப் பற்றி மேலும் அறிய ஆன்மீக நிவாரண முறைகளின் செயல்திறனை பாதிக்கும் காரணிகள். என்ற கட்டுரையையும் காண்க.

ஆன்மீக நிவாரண சிகிச்சை முறையில் ஒரு தனிநபரின் குணமாகும் வாய்ப்புகளை பார்க்கும்போது கீழ்வரும் கண்ணோட்டங்களை மனதில் கொள்ளவேண்டும்.

1. விதி, ஆன்மீக பயிற்சி மற்றும் புற்றுநோய்க்கான மாற்று சிகிச்சை

புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் விதிக்கப்பட்டவை ஆகும். விதியென்றால் முற்பிறவிகளில் நாம் செய்த செயல்களின் பலனாக, நாம் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையின் ஒரு பகுதி, இது நாம் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். விதி நமக்கு இன்பத்தையோ துன்பத்தையோ தரக்கூடும்.

விதி மற்றும் குறிப்பாக வாழ்க்கை பிரச்சினைகளின் ஆன்மீக மூல காரணிகள் என்ற கட்டுரைகளை படிக்கவும்.

புற்றுநோய் விதிக்கப்பட்டது என்று சொன்னால் மூல காரணி (அதாவது விதி) ஆன்மீக ரீதியாக உள்ளது என்று பொருள். ஆகையால் அடிப்படையாக புற்றுநோய்க்கு மாற்று சிகிச்சையான போதிய ஆன்மீக பயிற்சியின் மூலமாகவே இதை வெல்ல முடியும். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம், ஆன்மீக பயிற்சி என்பது ஆறு அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளதாக இருக்கவேண்டும்.

விதியின் தீவிரத்தை பொறுத்து குறிப்பிட்ட அளவான ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஆன்மீக பயிற்சி :

  • விதியை பூஜ்ஜியமாக்கி புற்றுநோய் குணப்படுத்தப்படுகிறது. அல்லது,
  • விதியிலிருந்து ஒருவரை காக்கிறது, அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் துயரப்பட மாட்டார்கள்.

இவைகளில் ஒன்றால் புற்றுநோய் உண்டாகியிருந்தால் :

  • குறைந்த விதி : குறைந்த விதியின் காரணமாக புற்றுநோய் ஏற்பட்டால், மீளமுடியாத மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பே புற்றுநோயானது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகிறது. பொதுவாக இது தீங்கற்றது, மற்ற உடலுறுப்புகளுக்கு பரவாததால் குணமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்விதியிலிருந்து மீண்டுவந்து புற்றுநோய் குணமடைய மிதமான அளவு ஆன்மீக பயிற்சி (நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரம்) தொடர்ச்சியாக செய்யவேண்டும்.
  • மிதமான விதி : புற்றுநோய் மிதமான விதியினால் ஏற்பட்டிருந்தால் உடலுறுப்புகள் நன்கு மாற்றமடைந்தபின் பிந்தைய நிலையில் தான் கண்டறியப்படுகிறது. மிதமான விதியால் ஏற்பட்ட புற்றுநோயிலிருந்து மீண்டுவர கடுமையான ஆன்மீக பயிற்சி (நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம்) தொடர்ச்சியாக செய்யவேண்டும்.
  • தீவிர விதி : இந்த நிலையில் புற்றுநோய் பெரும் வலிமை கொண்டதாக இருக்கும், மீளமுடியாத மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு தாமதமாக கண்டறியப்படுவதால் குணமடைய வாய்ப்பே கிடையாது. இத்தகைய நோயிலிருந்து மீண்டுவர  கடுமையான ஆன்மீக பயிற்சி மற்றும் மகான் அல்லது கடவுள் அருள் பெற்றிருக்கவேண்டும்.

தீவிரமான விதி இருப்பவர்களுக்கு மிக வலுவான காரணங்கள் இல்லாதவரை (உதாரணம் ஒருவர் இறைவனோடு ஒன்றிணைவதற்காக கடுமையான ஆன்மீக பயிற்சி செய்கிறார் மேலும் அவர் குணமடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டால் ஆன்மீக வளர்ச்சி பெற நல்ல வாய்ப்புகள் உண்டு) மகான்கள் விதியில் தலையிட மாட்டார்கள்.

2. ஒருவரின் விதியை தீர்மானிக்கும் மற்ற ஆன்மீக மூல காரணிகள் என்னென்ன?

மூதாதையர்கள் அல்லது ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) மூலமாக விதியானது புற்றுநோயை ஏற்படுத்தினால் இந்த ஆன்மீக அம்சத்தின் கண்டறிதலும் அதற்கேற்ற சிகிச்சையும் மாற்று சிகிச்சையின் செயல்திறனை அதிகமாக்கி குணமடைவதற்கான நேரத்தையும் குறைக்கிறது. இந்நிலையில் ஆன்மீக பயிற்சிக்கு கூடுதலாக அந்த ஆன்மீக அம்சத்தை நோக்கி ஏவப்பட்ட குறிப்பிட்ட ஆன்மீக நிவாரணமும் சேர்க்கவேண்டும்.

தீவிர விதி அல்லது ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) நோயுற்று இருந்தால், புற்றுநோய் உள்ளது என்ற கண்டறிதல் கூட தாமதமாகும், இதனால் குணமடைவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும்.

3. ஒருவர் ஆன்மீக பயிற்சியை தொடங்கும் நேரம்

ஒருவர் ஆன்மீக பயிற்சியை தொடங்கும் நேரத்தை பொறுத்து தனக்கு விதிக்கப்பட்ட நோயை முற்றிலுமாக தவிர்க்கலாம், அல்லது அதன் தீவிரத்தை பெரிதளவு குறைக்கலாம். விதியின் தீவிரத்தை காட்டிலும் துயரத்தின் தீவிரத்தை குறைப்பது நாம் செய்யும் ஆன்மீக பயிற்சியின் திறன் மற்றும் அளவுடன் நேர் விகிதாச்சாரமாக இருக்கும்.

கீழ்வரும் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம் :

  • மாதப்பனுக்கு வயிறு புற்றுநோய் உள்ளது
  • ஜனவரி 2004 அன்று புற்றுநோய் ஆரம்பித்தது, ஆனால் செப்டம்பர் 2005 அன்று “இரண்டாம் நிலை புற்றுநோய்” என்று கண்டறியப்பட்டது.
  • ஜனவரி 2007 அன்று “மூன்றாம் நிலை புற்றுநோய்” ஆக முன்னேறியது.
  • மிதமான விதி தான் ஆன்மீக மூல காரணம். வேறு எந்த ஆன்மீக காரணிகளும் இதனை சிக்கல் படுத்தவில்லை.
  • மாதப்பன் தனது வாழ்நாளில் 100 யூனிட் துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் அதில் 10 யூனிட் துன்பத்திற்கு புற்றுநோய் காரணமாக இருக்கும்.

ஆன்மீக பயிற்சியை தொடங்கும் நேரம் மற்றும் தீவிரத்தை பொறுத்து பல்வேறு நிகழ்வுகளின் விளைவை இப்போது பார்க்கலாம்.

நிகழ்வு சாத்தியமான முடிவுகள்
அ: ஒருவர் மிதமான ஆன்மீக பயிற்சியை 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து செய்தார் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டாலும் ஒன்றாம் நிலையோடு தடுக்கப்பட்டு செப்டம்பர் 2005-ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதோடு தேவையான சிகிச்சையை உடனடியாக பெற்றார். ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு வாழ்வின் தரமும் மேம்படுகிறது. வெறும் 3 யூனிட் மட்டுமே துன்பம் அனுபவித்தார்.
ஆ: ஒருவர் தீவிர ஆன்மீக பயிற்சியை 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து செய்தார் அவருக்கு புற்றுநோயே ஏற்பட்டிருக்காது.
இ: ஒருவர் தீவிர ஆன்மீக பயிற்சியை ஜூலை 2006 ஆரம்பித்து தொடர்ந்து செய்தார் மூன்றாம் நிலை வரை புற்றுநோய் முன்னேறாது,  சிறு யூனிட்டாக துன்பம் குறைக்கப்படும்.

மேலுள்ள உதாரணத்தை பார்த்தால் தடுப்பது தான் சிறந்த மாற்று சிகிச்சை. எச்சரிக்கையாக தவறிழைப்பது எப்போதும் நல்லதே, அதனால் தொடர்ச்சியாக அதிகளவு கடுமையான ஆன்மீக பயிற்சி செய்யவேண்டும். இதனால் நமது விதி கழிந்து ஆன்மீக வளர்ச்சியும் பெற்று வாழ்க்கையின் நோக்கத்தையும் பூர்த்தி செய்கிறோம்.

4. புற்றுநோய்க்கு மாற்று  சிகிச்சை பெறுவதற்கு முன் உடலுறுப்புகள் பழுதாகிவிட்டால் என்ன செய்வது?

உடலுறுப்புகள் பழுதாகிவிட்டால் பெரும்பான்மை சூழ்நிலைகளில் புற்றுநோய்க்கு மாற்று  சிகிச்சையால், ஏற்பட்ட மாற்றங்களை  திருப்ப முடியாது. உடலுறுப்பு பழுதானதன் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் இருந்தாலும் இதன் வழி நோயின் தீவிரம் குறைய வாய்ப்புகள் உண்டு.

5. புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவருடனான கொடுக்கல்-வாங்கல் கணக்கு

நாம் மருத்துவருடன் வைத்திருக்கும் கொடுக்கல்-வாங்கல் கணக்கு கவனம்கொள்ள மற்றொரு அம்சமாகும். எதிர்மறை கணக்கு வைத்திருந்தால் பல ஆண்டு அனுபவம் இருந்தும் மருத்துவர் நோயாளியின் முக்கிய அம்சங்களை தவறவிட்டு துயரத்தை நீடிக்க வைப்பார். நேர்மறை கணக்கு இருந்தால் அவரது கைராசி நோயை குணப்படுத்திவிடும்.

இதனால் தான் சில நேரங்களில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தும் நோயாளி இன்னமும் பாதிக்கப்படுகிறார்.வெளிப்புறமாக மருத்துவரின் அலட்சியத்தை தான் நாம் பார்ப்போம். ஆனால் ஆன்மீக மட்டத்தில் பெரும்பாலும் எதிர்மறை கணக்கை தீர்ப்பதே மெய்யானது. கொடுக்கல்-வாங்கல் கணக்கின் காரணமாகத் தான் நாம் ஒரு மருத்துவரை விட்டுவிட்டு வேறொருவரை தேர்ந்தெடுக்கிறோம்.

6. சுருக்கம்

  • புற்றுநோய் போன்ற பெரிதளவு ஆட்கொல்லி நோய்கள் அனைத்துமே விதிக்கப்பட்டதோடு ஆன்மீக மூல காரணங்கள் உடையவை.
  • மாற்று ஆன்மீக சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான அம்சங்கள் மிக சிக்கலானது, பல்வேறு கண்ணோட்டங்களை கருத்தில் கொள்ளவேண்டும். நவீன மருத்துவ அறிவியலானது ஸ்தூல மற்றும் உளவியல் ரீதியான பரிமாணங்களோடு நிறுத்தப்படுகிறது.
  • மருத்துவ சிகிச்சையோடு ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக நிவாரணங்களை இணைப்பது விரைவில் குணமடைய உதவுகிறது, அல்லது தீவிர விதி இருந்தால் குறைந்தபட்சம் நோயின் தன்மையையாவது குறைக்கிறது.
  • கீழ்கண்ட இரண்டும் இருந்தால் 100% குணமடையலாம் :
    1. ஆன்மீக மூல காரணத்தின் 100% குறிப்பிட்ட நோயறிதல் செய்தல்.
    2. 100% குறிப்பிட்ட மாற்று நிவாரண சிகிச்சையை தேவையான அளவு மற்றும் நேரத்திற்கு அளிக்கப்படுவது.
  • இறுதியானதோடு மிக முக்கியமாக, வாழ்க்கையின் ஆன்மீக நோக்கம் என்ற கண்ணோட்டத்தில் நாம் வாழும் வாழ்வை பார்க்கும்போது பெரும்பாலானவருக்கு ஆன்மீக வளர்ச்சி அடைய எண்ணமே இல்லை. முற்றிலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில், கொடிய நோயைத் தொடர்ந்து ஒரு நபரின் ஆயுட்காலம் இன்னும் 4-5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டாலும் பயனில்லை, ஏனென்றால் அவர் அதை உலக நோக்கங்களுக்காக வீணடிப்பார். ஆனால் கடவுளை நாடும் உண்மையான ஸாதகர் பூலோகத்தில் இன்னும் சில ஆண்டுகள் ஆன்மீக பயிற்சி செய்து இறந்தபின் மேலுலகம் அடையவேண்டும் என்றபோது கடவுளே அவரது ஆயுட்காலத்தை நீட்டிப்பார்.