1. சிரார்த்தம் சடங்கை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் பலனை அனுபவித்தல்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழிகாட்டுதலின் கீழ் எனது ஆன்மீக பயிற்சியைத் தொடங்கிய பிறகு, பித்ருபக்ஷத்தைப் (மறைந்த மூதாதையர்களுக்கான இரண்டு வார காலம்) பற்றி அறிந்துகொண்டேன். நான் பௌத்த மதத்தை சார்ந்து இருந்ததால், பித்ருபக்ஷத்தைப் பற்றியோ, மறைந்த மூதாதையர் மூலம் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியோ முன்னமே எனக்கு தெரியாது. மறைந்த மூதாதையர்களால் எற்படும் எக்சிமா(தோல் சம்பந்தபட்ட பிரச்சனை), கருச்சிதைவுகள், தாம்பத்ய ஒற்றுமையின்மை, நிதி சிக்கல்கள், உடல்நல கோளாறுகள் மற்றும் பல பிரச்சனைகளை நானும் எனது குடும்பத்தினரும் எதிர்கொண்டோம். இந்த காலகட்டத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை தெளிவாக வழிநடத்தி, இந்த அறிவை வழங்கிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் க்கு எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். எளிய சிரார்த்தம் சடங்குகளை பல ஆண்டுகளாக செய்வதன் மூலம், எனது ஆன்மீக நடைமுறையில் உள்ள தடைகள் எவ்வாறு களையப்படுகிறது என்பதையும், மூதாதையர்களால் நான் எதிர்கொண்ட பிரச்சனைகளும் காலப்போக்கில் குறையத் தொடங்கும் என்பதையும் அனுபவம் மூலம் தெரிந்துகொண்டேன்.
இந்த வருடம் பித்ருபக்ஷத்தின் போது, கனடாவின் வான்கூவரில் (Vancouver) உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எஸ். எஸ். ஆர். எஃப் இன் எளிய முறையில் சிரார்த்தம் செய்வது எப்படி என்ற கட்டுரையின்படி, ஸ்ரீ குருதேவ தத்தரிடம் பிரார்த்தனை செய்து சைவ உணவை(அதாவது சிறிய தட்டில் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் தண்ணீர்) வீட்டின் கொல்லைப்புறத்தில் எனது மூதாதையர்களுக்காக படையலிட்டேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஏதேனும் காகங்கள் அல்லது வேறு பறவைகள் வந்து உணவை எடுத்ததா என்று ஜன்னல் வழியாகப் பார்த்தேன். படைக்கப்பட்ட உணவு தீண்டப்படாமல்,அப்படியே இருப்பதைக் கண்டு, கொஞ்சம் கவலையும் ஏமாற்றமும் என்னுள் ஏற்பட்டது. ஆன்மீக சாஸ்திரத்தின்படி, மறைந்த மூதாதையர்களின் ஆவி, காகத்தினுள் சென்று படைக்கப்பட்ட உணவை அது உண்டால், படையல் ஏற்றுக்கொள்ளபட்டதற்கான அறிகுறியாகும்.
காககங்களோ, மிருகங்களோ படைக்கப்பட்ட உணவை உண்ணவில்லை என்றால் இந்த படையல் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா என்று மனதளவில் கடவுளிடம் கேட்டேன். பிறகு, திடீரென்று படையலைச் சுற்றி கொல்லைப்புறத்தில் மங்கலான சாம்பல் நிறத்தில் மக்களின் வடிவங்களைப் பார்க்க முடிந்தது . சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், மற்றும் சிலர் உணவுக்காக நின்று கொண்டிருந்தார்கள். இந்த தரிசனத்தைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். கடவுளின் அருளால் எனது முன்னோர்கள் படையலை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்ள இந்த ஆன்மீக அனுபவத்தை கடவுள் எனக்கு நல்கியதாக உணர்ந்தேன்.
சூரிய அஸ்தமனத்திற்கு முன் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்த கொல்லைப்புறத்திற்குச் சென்று, படைக்கப்பட்ட உணவு மிச்சங்களை பூமியில் புதைத்தேன். சடங்கிற்குப் பிறகு நான் மன அமைதியை அனுபவித்தேன். இந்த எளிய முறை சிரார்த்தம் மூலம் நமது மூதாதையர்கள் ஆன்மீக ரீதியாக பயன் பெற உதவிய கடவுளுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் போது எனது ஆன்மீக உணர்வு மேலோங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்தேன்.
பித்ரு பக்ஷம் முழுவதும், ‘ஸ்ரீ குருதேவ தத்த ‘ நாமத்தை ஆத்மார்த்தமாக ஆன்மீக உணர்வுடன் நான் ஜபித்தேன். நாமஜபத்திலிருந்து வெளிப்படும் சக்தியானது எனது முன்னோர்களுக்கு உதவும் என்றுணர்ந்து மிகவும் சிரத்தையுடன் நாமஜபம் மேற்கொண்டேன். சில சமயங்களில் பித்ரு பக்ஷத்தின் போது எனது ஆன்மீக கஷ்டங்கள் (/)அதிகரிக்கும் ஆனால் அதே சமயத்தில் கடவுளின் இருப்பை நான் அனுபவித்தேன். தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள இது என்னை ஊக்குவித்தது. இந்த ஞானத்தை மனிதகுலம் அனைவருடனும் பகிர வாய்ப்பு கிட்டியதற்காக கடவுளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் , உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த தெய்வீக ஞானத்தால் பயனடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.