தீயசக்திகளால் நோய் அறிதலில் உருவாகும் தடைகள்

சில பிரச்சனைகள் உடல்ரீதியான அல்லது மனோரீதியான நிலையில் வெளிப்பட்டாலும், அவற்றின் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் உள்ளது. இத்தகைய பிரச்சனைகளின் தொடர்பாக நமது வாசகர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) இந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. பிரச்சனையின் மூல காரணம் ஆன்மீக ரீதியானதாக இருந்தால், ஆன்மீக நிவாரண முறைகளை உபயோகிப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என நாங்கள் கவனித்துள்ளோம். உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது. வாசகர்கள் தங்களது சொந்த விருப்பப்படி எந்தவொரு ஆன்மீக நிவாரணத்தையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த திரு.சந்தீப் மாதவன் அவர்கள், தனது வாழ்க்கையில் ஆன்மீக நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிப்படாத ஒரு நோயின் நிகழ்வை நமக்காக இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.

நான் 2001 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதே வருடத்தில் என் உடல் நிலை பலவீனமடைந்து, எடையும் இழக்க ஆரம்பித்தேன். நோய்வாய்ப்பட்ட 2வது மற்றும் 4வது மாதத்தில் மார்பு எக்ஸ்ரேயும் எடுக்கப்பட்டது. ஐந்து மாத காலத்திற்குள் உடல் நிலை படிப்படியாக மோசமடைந்தது. மார்பு எக்ஸ்ரே உட்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளிலும் எதுவும் கண்டறியப்படவில்லை. அந்தநேரத்தில் எஸ்.எஸ்.ஆர்.எஃப்.இன் ஸாதகர் ஒருவர் என்னை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் எடை இழந்து, மிகவும் பலவீனமாகி, சரியான சிகிச்சை தொடங்குவதற்கு எந்த நோயும் கண்டறியப்படாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். என்னுடைய இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது ஆன்மீகக் காரணம் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதை பற்றி அவர், எஸ்.எஸ்.ஆர்.எஃப்.இன் சூட்சும ஆராய்ச்சி துறையிடம், குறிப்பிட்டபோது, அது தீய சக்திகளினால் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு தீர்வாக “ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற நாமஜபத்தை ஜபிக்கச் சொல்ல அறிவுறுத்தினார்கள் .

நான் உடனே நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு மார்பு எக்ஸ்ரே எடுக்கச் சென்றேன். இந்த முறை அது நுரையீரல் காசநோயாக (TB) தெளிவாகக் கண்டறியப்பட்டது. நான் நோயை கண்டறிந்ததினால் நிம்மதியடைந்தேன். மேலும் மருத்துவர்களும் தற்போது கண்டறியப்பட்ட இந்த நோய் ஏன் முந்தைய எக்ஸ்ரேயில் அறியப்படவில்லை என்று ஆச்சரியப்பட்டனர்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப்.இன் கருத்துகள் :

  • நுரையீரல் காசநோய் என்பது மார்பு எக்ஸ்ரே மூலம் மிக எளிதாக கண்டறியப்படும் ஒரு நோயாகும்.
  • சில நேரங்களில் தீயசக்திகள் ஒரு நோயைக் கண்டறிவதில் தடைகளை ஏற்படுத்தலாம், இதனால் நோயின் அபாயம் அதிகரிக்கும்.
  • வழக்கமான ஆன்மீகப்பயிற்சி மற்றும் ஆன்மீக நிவாரணங்களை சரியான முறையில் செய்தால், இது போன்ற தடைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.