அட்டவணை
1. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் நவீன மருத்துவ அறிவியல் பற்றிய ஒரு அறிமுகம்
பழங்காலத்திலிருந்தே நோய் மற்றும் அதன் நிவாரணங்களுக்கான தீர்வுகள் மனிதகுலத்தை கவர்ந்துள்ளது. இன்று அலோபதி என்ற நவீன மருத்துவ அறிவியல் பிரபலம் அடைந்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. நவீன மருத்துவத்தின் முன்னேற்றங்கள் உலகியல் (உடல் ரீதியான) மற்றும் உளவியல் மட்டத்தில் நோய்கள் உண்டாவதற்கான காரணங்களை தெளிவு படுத்தியுள்ளது. ஆனாலும் பல நோய்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நவீன மருத்துவ அறிவியலால் இன்னும் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை என்பதும் உண்மை தான்.
2. நவீன மருத்துவ அறிவியலின் வரம்புகள்
நோயை குணப்படுத்துவதற்கு முன், அதன் பின்னால் உள்ள மூல காரணங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்; இருவருக்கும் ஒரு நோய்வயப்படுவதற்கு சமமான வாய்ப்பு இருந்தும், இருவரில் ஒருவருக்கு மட்டும் ஏன் அந்த நோய் தாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் நோய்க்கான மூல காரணத்தை அறிவதை போலவே முக்கியமானது. நோயின் மூல காரணங்களை நவீன அறிவியல் அதிகம் விளக்கினாலும் இருவரில் ஒருவருக்கு மட்டும் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விளக்க முடிவதில்லை. பல சமயங்கள் நவீன மருத்துவ அறிவியவில் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது என்பது நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதாக மட்டுமே அமைந்துள்ளது. அதனால் பல நோய்களின் அறிகுறிகளை குணமாக்கிய பின்பும், உண்மையில் நோயை குணப்படுத்தவே முடியாமல் அவைகளை அடக்கி வைக்க வாழ்நாள் முழுவதும் நிவாரணம் பெறவேண்டி உள்ளது. இதனால் நிரந்தர தீர்வே இல்லாமல் உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஒருவர் சிகிச்சையின் பக்க விளைவுகளுடன் நோயின் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
3. சிறந்த ஆரோக்கியத்திற்காக ஆன்மீக நிவாரண முறைகளின் முக்கியத்துவம்
ஆயுர்வேதம் என்ற பாரம்பரிய பாரதத்தின் ஆரோக்கிய அமைப்பு; உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் என்ற மூன்று நிலைகளில் நோயின் மூல காரணம் இருக்கும் என்று அங்கீகரிக்கிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் -இல் செய்யப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் நோய்களுக்கான பிரதான மூல காரணம் ஆன்மீக இயல்புடையது என நாங்கள் கண்டறிந்துள்ளோம். உண்மையில் ஒருவருக்கு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்கான மூல காரணம் 80% வரை ஆன்மீக இயல்புடையதாகத்தான் இருக்கும். தனது விதி அல்லது கர்மா, மறைந்த மூதாதையர்கள் அல்லது ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) போன்றவை ஆன்மீகக் காரணங்களாக இருக்கலாம். இந்த ஆன்மீகக் காரணங்கள் ஒரு தனிநபருக்கு உட்பட்டவையாக இருக்கலாம். இருவரும் நோய்வாய்ப்பட சமமான வாய்ப்புகள் இருந்தும் ஒருவருக்கு மட்டுமே ஏன் ஏற்படுகிறது என்பதன் துல்லிய காரணம் இது தான்.
நோயின் மூல காரணம் ஆன்மீக இயல்புடையதாக இருக்கும்போது அதிலிருந்து மீண்டுவர ஆன்மீக பயிற்சியும் ஆன்மீக நிவாரண முறைகளும் முக்கியமான கருவிகளாகும். ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் ஆன்மீக மூல காரணத்தை புரிந்துகொள்வதும், உணர்வதும் கடினம் என்பதால் அந்த நோயாளி ஆன்மீக நிவாரண முறைகளுடன் சேர்த்து வழக்கமான பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகப் பயிற்சியை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரது ஆன்மீக நிலை அதிகரித்து தனது ஆன்மீக அமைப்பில் உள்ளார்ந்த மாற்றத்தை காணலாம். மனத்திலும் உடலிலும் இதனால் ஒரு விளைவு ஏற்படுகிறது. இதன் பலன் நோய் மற்றும் அதனால் ஏற்படும் இதர கஷ்டங்களிலிருந்து அதிகரித்த பாதுகாப்பைப் பெறலாம். உதாரணத்திற்கு, ஒருவரை நோய் தாக்கினாலும் ஆன்மீகப் பயிற்சியே செய்யாதவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுடன் ஒப்பிடும்போது உடல் மற்றும் உளவியல் ரீதியான கஷ்டங்கள் குறைவானதாகவே இருக்கும். ஆன்மீகப்பயிற்சி மற்றும் ஆன்மீக நிவாரண முறைகளும் ஒருவரை நோயிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமின்றி அவரது மனதை ஆன்மீக ரீதியாக தூய்மையாக்கி தன்னலமற்றவராகவும் ஆக்குகிறது.
4. வரும் காலங்களில் மருத்துவ அறிவியலை விட ஆன்மீக நிவாரண முறைகளின் முக்கியத்துவம்
இவ்வுலகில் தற்போது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பும் எதிர்பாராத இயற்கை பேரழிவுகளும் ஏற்படலாம் என பல மஹான்கள் கணித்துள்ளனர். யுத்தத்தின் விளைவால் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். தொழிற்சாலைகள் மூடப்பட்டு மருத்துவ அறிவியல் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்காமல் போகும். அச்சமயங்களில் நாம் நோயை குணமாக்க கிடைக்கும் மாற்று சிகிச்சை மற்றும் ஆன்மீக நிவாரண முறைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இந்த முக்கியமான விஷயத்தை கவனித்து நாம் இப்போதிலிருந்தே ஆன்மீக நிவாரண முறைகளை கற்று பயிற்சி செய்வது நல்லது.
‘பல்வேறு நோய்களுக்கான ஆன்மீக நிவாரண நாமஜபங்கள்’ என்ற கட்டுரையை காண்க.