பாவத்திலிருந்து மீண்டு வருவதற்கு பிராயச்சித்தம் செய்தல்

    இந்த கட்டுரையைப் புரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரைகளை நீங்கள் படிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம் :

    1. முன்னுரை

    செய்த தவறுக்காக வருந்துவதும் அதை ஈடுசெய்ய முயற்சிப்பதும் மனிதர்களின் இயல்பான போக்கு ஆகும். தவறு செய்த ஒரு சிறு குழந்தை கூட இதைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்கிறது.

    ஒரு மனிதன் தவறுகள் அல்லது தீய செயல்களைச் செய்வதால் பாவத்திற்கு ஆளாகிறான். நாம் அனைவரும் சில சமயங்களில் பாவத்திற்கு ஆளாக நேரிடும். பாவத்தின் விளைவுகளை நீக்க நாம் என்ன செய்யலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

    2. பாவத்திலிருந்து மீண்டு வருவது எப்படி?

    நம்பிக்கையோடும் தைரியத்துடனும் தர்மத்தைக் கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் மிகப்பெரிய பாவத்தையும் களைய முடியும்.

    நமது அடிப்படை மனநிலை, வாழ்க்கையின் கட்டங்கள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, தர்மத்தைக் கடைப்பிடிப்பது என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம் :

     

    இந்தியாவைச் சேர்ந்த உன்னத மகான் ஆதி சங்கராச்சாரியாரின் (8 - 9 -ஆம் நூற்றாண்டு) கூற்றுப்படி, தர்மம் என்பது 3 பணிகளை நிறைவேற்றுவது. அவை சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல் ஒவ்வொரு உயிருக்கும் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.   - ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்
    • தவம் (உதாரணத்திற்கு, ஹடயோகத்தைப் பின்பற்றுபவர்கள் நீண்ட காலம் உடலை அசெளரியங்களுக்கு உட்படுத்தி அதை உள்ளடக்கியிருக்கலாம்)
    • மனம், ஞானேந்த்ரியங்கள் மற்றும் கர்மேந்த்ரியங்களின் மீது கட்டுப்பாடு (உதாரணத்திற்கு, தேவையான அளவே பேசுதல், காம இச்சையின் மீது கட்டுப்பாடு போன்றவை)
    • உடலின் மீது கட்டுப்பாடு (உதாரணத்திற்கு, சுவாசத்தின் வேகம் போன்றவை)
    • தியாகம்
    • நடத்தையில் ஒழுக்கம் போன்றவை

    தர்மத்தைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்வதும் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது.

    எனினும், தற்போதைய கலியுகத்திற்கேற்ற ஆன்மீக பயிற்சியில் ரஜ-தம பிரதானமான வாழ்க்கைமுறையின் காரணமாக, பெரும்பாலோருக்கு இத்தகைய தார்மீக வாழ்க்கைமுறையை பின்பற்றுவது எள்ளளவே சாத்தியப்படுகிறது.

    பாவங்களின் விளைவுகளை நீக்க மற்றொரு வழி பிராயச்சித்தம் செய்வதாகும்.

    3. பிராயச்சித்தம் என்றால் என்ன?

    பிராயச்சித்தம் என்பது செய்த தவறுகள் அல்லது தீய செயல்களுக்காக வருந்தி, அவற்றால் ஏற்பட்ட பாவத்திலிருந்து மீண்டு வருவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் தகுந்த தண்டனை ஆகும். பிராயச்சித்தம் என்பது தவம் மற்றும் உறுதியை உள்ளடக்கியதாகும்.

    பிராயச்சித்தம் செய்வதால் உண்டாகும் சில நன்மைகள் :

    • பிராயச்சித்தம் ஒரு மனிதனை அவன் செய்த தவறான செயலினால் உண்டாகும் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கிறது.
    • பிராயச்சித்தம் ஒரு மனிதனை அவன் செய்த பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுவிக்கிறது, ஆகையால் அந்த பாவம் அடுத்த பிறவிக்கு கொண்டுசெல்லப்படுவதில்லை. இதனால் உலகிய மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தில் உள்ள தடைகள் அகற்றப்படுகின்றன.
    • பிராயச்சித்தம் தனிமனிதனுள்ளும் அவனைச் சுற்றியுள்ளவர்களிடமும் ஒருவித மனநிறைவான உணர்வை வளர்க்க உதவுகிறது.
    • தனக்கு அநீதி இழைத்த ஒருவன் அவன் தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்வதைக் காண்பதால், பாதிக்கப்பட்டவரின் மனதிலுள்ள வெறுப்புணர்வு குறைகின்றது.

    4. பிராயச்சித்தத்தின் வகைகள்

    பாவத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, பிராயச்சித்தங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.

    பொதுவாக, மனமார வருந்துவதன் மூலம் அல்லது பகிரங்கமாக ஒப்புக்கொள்வதன் மூலம் தெரியாமல் செய்த பாவங்களிலிருந்து விடுதலைப் பெறலாம். மறுபுறம், தெரிந்தே செய்த பாவங்களுக்கு கடுமையான பிராயச்சித்தம் பரிந்துரைக்கப்படுகின்றது.

    பிராயச்சித்தங்களின் சில உதாரணங்கள் :

    • தீர்த்தயாத்திரை செல்வது
    • தானம்
    • உண்ணா நோன்பு

    ஒவ்வொரு வகையான பாவத்திற்கும் செய்யவேண்டிய குறிப்பிட்ட பிராயச்சித்தத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் பல்வேறு புனித நூல்களில் உள்ளன.

    5. தண்டனை மற்றும் பிராயச்சித்தத்தின் இடையே உள்ள வேறுபாடு – வருந்துவதின் முக்கியத்துவம்

    தண்டனைக்கும், பிராயச்சித்தத்திற்கும் இடையிலான வேறுபாடு, பாவத்திற்கான பிராயச்சித்தம் செய்பவர் அதை எண்ணி வருந்துவதில் தான் உள்ளது. பிராயச்சித்தம் செய்பவர் ஒரு சபதத்தால் கட்டுப்பட்டுள்ளார். அவர் அந்த சபதத்தை கண்டிப்புடன் கடைப்பிடித்து, பின்னர் நற்குணமுள்ளவராக மாறிவிடுகின்றார்.

    மறுபுறம், வெறும் குற்றத்தை ஒப்புக்கொள்வது அல்லது அதற்கான தண்டனையை எதிர்கொள்வது, ஒருநபரை மீண்டும் மீண்டும் அந்த தவறுகள் செய்வதிலிருந்து தடுக்காது. பொதுவாக, செய்த குற்றத்திற்காக தண்டனையை எதிர்கொள்ளும் குற்றவாளிகள், இறுதியில் மேம்பட்டவராக மாறுவதில்லை. ஏனென்றால், அவர்கள் வருந்துவதுமில்லை மற்றும் அவர்கள் செய்த குற்றங்களின் பயங்கரமான விளைவுகளைப் பற்றி அறிவதுமில்லை.

    புண்ணியங்கள், பாவங்கள் மற்றும் தினசரி வாழ்வில் தர்மத்தைக் கடைபிடிப்பதைப் பற்றி தர்மம் கற்றுத்தருகின்றது. தர்மத்தைப் பின்பற்றுவதன் மூலம், ஒரு மனிதரின் அடிப்படை சுபாவமே ஸாத்வீகமாக ஸத்வ, ரஜ, தம என்ற மூன்று சூட்சும கூறுகள் அடிப்படையில் சாத்விக். மாறிவிடுகின்றது. அந்த மனிதர் ஒரு தவறான செயலை செய்ய ஒருபோதும் நினைப்பதில்லை மற்றும் பாவங்களை உருவாக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்கிறார். எனவே, தர்மம் நிலவும் இடத்தில் சட்டங்கள் தேவையில்லை பயிற்சிகள்இதுபோலத்தான் இருந்தது. அங்கு ஆட்சியாளரோ, சட்டங்களோ இல்லை, ஏனென்றால் அனைவரும் ஸாத்வீகமாக இருந்ததால் அதற்கு தேவையும் இருக்கவில்லை. – பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்.

    ஒரு நபர் தினசரி பாவங்களைச் செய்வதற்கும் அவற்றை ஒப்புக்கொள்வதற்கும் பழகிவிடுவதால் வருந்துவது அல்லது தவறுகளை ஒப்புக்கொள்வது அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

    ஒருமுறை ஒரு மகானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: ‘எந்த மனிதர் சிறந்தவர் – தனது தவறுகளை ஒப்புக்கொள்பவரா அல்லது அவற்றை மறைப்பவரா?’ அதற்கான பதில்: “இருவரிடையே அதிக பேதமில்லை. யார் தன்னை மாற்றிக்கொண்டு தவறுகளை மீண்டும் செய்வதில்லையோ, அவரே சிறந்தவர்.”

    6. நாமஜபம் மற்றும் பக்தியின் முக்கியத்துவம்

    நாமஜபம் எங்ஙனம் பக்தி மையத்தை ஆழ்மனதில் உருவாக்கி, விலகல் முறை மூலம் ஆழ்மனதில் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி எங்கள் கட்டுரைகளில் விளக்கியுள்ளோம்.

    நம் முற்பிறவிகளின் புண்ணியங்கள் மற்றும் பாவங்களின் கணக்குகளும் ஆழ்மனதில் சேமிக்கப்படுகிறது. மூடுபனியை அழிப்பது அல்லது பனியை உருகச் செய்வது எப்படி சூரியனின் செயலோ, அதுபோல நம் மனதிலுள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நாமஜபம் ,நம் பாவங்களையும் அழிக்கிறது.

    இன்னும் சொல்லப்போனால், பக்தியுடன் நாமஜபத்தை ஆரம்பிக்கும்போது, நம்மை பாவத்திற்கு இட்டுச் சென்ற ஆசைகளும் இறுதியில் அழிந்துபோகின்றன.

    பிராயச்சித்தம் பாவத்தை நீக்குகிறது, ஆனால் பாவம் செய்யும் ஆசையை நீக்குவதில்லை. மோக்ஷம் அடையும் ஆசை ஒரு தனிமனிதனுக்குள்ளே தூண்டப்பட்டவுடன், நாமஜபம் ஆசைகள் மற்றும் பாவம், ஆகிய இரண்டையும் அழித்துவிடுகிறது. – பரம் பூஜ்ய கானே மஹராஜ், நாராயண்காவ், பூனே, மகாராஷ்டிரா, இந்தியா.

    7. ஆளுமை குறைகளை களைதல் தொடர்பான பிராயச்சித்தம்

    ஆளுமை குறைகளை களையும் செயல்முறை என்பது குருக்ருபாயோகத்தில். செய்யும் ஆன்மீக பயிற்சியின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்த செயல்முறையில் உள்ள கருவிகளில் ஒன்று பிராயச்சித்தம் ஆகும், இது ஸாதாகர்களுக்கு தங்கள் தனிமனித மற்றும் கூட்டு தவறுகளின் தீய விளைவுகளைக் குறைக்க உதவுகின்றது.

    8. சுருக்கமாக – பாவத்திலிருந்து மீண்டு வருவதற்கு செய்யும் பிராயச்சித்தங்கள் மற்றும் ஆன்மீக பயிற்சி

    ஆசை, வெறுப்பு, பற்று, எதிர்பார்ப்பு, கோபம், பேராசை, அகம்பாவம், பொறாமை போன்றவையே பாவத்திற்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்கள் ஆகும். பாவம் செய்வதைப் பற்றிய விதிகள் மற்றும் பாவம் செய்வதன் விளைவுகளைப் பற்றி ஒருவர் அறிந்தால் மட்டுமே அவரை பாவம் செய்வதிலிருந்து தடுக்க முடியும்.

    பாவம் செய்யும் நம் ஆசையின் வேரை தண்டனை மற்றும் பிராயச்சித்தம் அறுப்பதில்லை என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும். எனினும், சீரான ஆன்மீக பயிற்சியின் எட்டு படிகள் மூலம், பாவத்திற்கு வழிவகுக்கும் ஆளுமை குறைகள் மற்றும் ஆசைகளை நீக்குவது சாத்தியமாகும்.