பொதுவாக நமது கொடுக்கல்-வாங்கல் கணக்கு, நமக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் நம் குடும்ப உறுப்பினர்களிடம் அதிகமாக இருக்கும்.
தயைக்கூர்ந்து கொடுக்கல்-வாங்கல் கணக்கு என்றால் என்ன? என்ற கட்டுரையைப் படிக்கவும்.
நமது வாழ்நாளில் நம்மை அறிந்தவர்களிடம் நாம் வைத்திருக்கும் அனைத்து கொடுக்கல்-வாங்கல் கணக்கையும் பரிசீலனை செய்தால், யாரிடம் நம்முடைய கொடுக்கல்-வாங்கல் கணக்கு மிக அதிகமாக இருக்கும்? என்று பார்ப்போம். பல்வேறு உறவுகளில் உள்ள நமது கொடுக்கல்-வாங்கல் கணக்கின் ஒப்பீட்டு தீவிரத்தின் முறிவை பின்வரும் அட்டவணை விளக்குகிறது :
யாரிடம் கொடுக்கல் -வாங்கல் கணக்குள்ளது: | % |
---|---|
கணவன்-மனைவி | 27 |
பெற்றோர்- குழந்தை உறவு | 25 |
உடன்பிறப்புகள் | 9 |
நெருங்கிய நட்புக்கள் | 9 |
அன்புக்குரியவர்கள்(காதலன்-காதலி) | 9 |
சக ஊழியர்கள் | 9 |
பிற உறவினர்கள் | 4 |
தெரிந்தவர்கள்(அண்டை வீட்டுக்காரர்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்) | 4 |
மற்றவர்கள் | 4 |
மொத்தம் | 100 |
பொதுவாக மிக அதிகமான கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஒரு கணவன் அல்லது மனைவியிடம் தான் உள்ளது என்று எங்கள் ஆன்மீக ஆராய்ச்சி காட்டியுள்ளது. கணவன் அல்லது மனைவி முன் ஒரு பிறவியில் ஒருவரையொருவர் அறிந்திருக்கலாம் மற்றும் அந்த இருவரிடையே முற்பிறவியில் (அல்லது முற்பிறவிகளிலிருந்து) நிலுவையிலுள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கை தீர்ப்பதற்க்காகவே ஒரு குறிப்பிட்ட பிறவியில் அவர்கள் ஒன்று சேர்கின்றனர். நாம் தேர்ந்தெடுக்கும் நபரையே திருமணம் செய்து கொள்கிறோம் என்று பலர் நினைத்தாலும், இதில் சிறிதும் உண்மை இல்லை. திருமணம் என்பது 100% விதிக்கப்பட்டதாகும், நம் வாழ்க்கையில் உள்ள தந்தை, தாய் மற்றும் உடன்பிறந்தவர்கள் போன்ற முக்கியமான உறவுகளும் அவ்வாறே விதிக்கப்பட்டதாகும். எனவே, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நாம் சொல்வது ஒரு விதத்தில் உண்மையே. இருவர் காதல் கொண்டதால் ஜோடி சேர்கின்றனர் என்று வெளிப்புறமாக தோன்றினாலும், ஆன்மீக அறிவியல்படி, அவர்கள் ஒன்று சேர்வதற்க்கான முதன்மையான காரணம், அவரிடையே உள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கை தீர்ப்பதே ஆகும்.