ஆன்மீக நிவாரணம் எனக்கு தேவை என்று எவ்வாறு அறிந்துகொள்வது?
உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) அறிவுறுத்துகிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாக தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆன்மீக ஆராய்ச்சியின் வாயிலாக வாழ்க்கையில் ஏற்படும் 80% பிரச்சனைகளின் அடிப்படைக் காரணம் ஆன்மீக பரிமாணத்தை சார்ந்துள்ளது என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப். வெளிப்படுத்தி உள்ளது. ஆதலால் இந்த பிரச்சனைகளிருந்து முற்றிலும் மீண்டுவர உலக முயற்சிகளுடன் ஆன்மீக பரிமாண நிவாரண முறைகள் மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்ப்பதில் ஆன்மீக நிவாரணத்தின் முக்கியத்துவத்தை இது விளக்குகிறது.
ஒரு ஒப்புமையைக் கொண்டு இதை மேலும் புரிந்து கொள்ளலாம். நாம் ஆரோக்கியமாக இருக்க சமநிலையான உணவை சாப்பிட வேண்டும். எனினும் நாம் நோய்வாய்ப்பட்டிருந்தால், சரியான உடல்நிலையை திரும்ப பெற, நமக்கு வழக்கமான உணவிற்கும் மேலாக கூடுதல் உணவு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு நமக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது வைட்டமின் சி எடுத்து கொள்ளுவது போன்றதாகும். அன்றாடம் பழங்கள் மூலம் நாம் உட்கொள்ளும் வைட்டமின் சியை விட, தேவைக்கு அதிகமாக சேர்த்து உட்கொள்ளும் வைட்டமின் சி போன்றதாகும்.
எனவே பிரச்சனை இல்லாத வாழ்க்கையை ஒருவர் விரும்பினால் உடல், உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். பெரும்பாலான மக்கள் உடல் மற்றும் உளவியல் அம்சங்களை மட்டுமே பார்க்கிறார்கள். ஆன்மீக அம்சங்களின் அடிப்படையில் சரியான புரிந்துகொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதலில் பற்றாக்குறை உள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் ஆன்மீக அம்சங்களைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. அதாவது தொடர்ந்து ஆன்மீக பயிற்சி மேற்கொள்வது மற்றும் ஆன்மீக நிவாரண முறைகளை மேற்கொள்வது போன்றதாகும்.
வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அடிப்படையான ஆன்மீக காரணிகளில் ஒன்றான விதி ஒருவரது வாழ்வில் சராசரியாக 65% நிகழ்வுகளை முடிவு செய்கிறது. அதாவது நம் வாழ்வில் 65% பிரச்சனைகள் விதிக்கப்பட்டவை. விதியை அல்லது விதிக்கப்பட்ட பிரச்சனைகளை ஆன்மீக பயிற்சி யால் மட்டுமே சமாளிக்க முடியும். வழக்கமாக ஆன்மீக வளர்ச்சி அடைவதற்கு மேற்கொள்ளும் ஆன்மீக பயிற்சி தவிர, ஒருவர் ஆன்மீக பயிற்சியை விதியினால் ஏற்படும் பிரச்சனைக்கான தடுப்பு நடவடிக்கையாகவும் சிகிச்சையளிக்கும் ஆன்மீக நிவாரணமாகவும் கருதவேண்டும்.
ஆகவே ஆன்மீக பயிற்சி நம் வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக திகழ்கிறது. ஒப்புமையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒரு சீரான வாழ்க்கைக்கு முக்கிய கருபொருளாகவும் திகழ்கிறது. ஆன்மீக பயிற்சிகளைச் செய்வதற்கு மக்கள் விரும்பினாலும், பெரும்பாலானவர்களுக்கு ஆன்மீக பயிற்சிகளைப் பற்றியோ அல்லது ஆறு அடிப்படை கோட்பாடுகளைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை.
மக்கள் குறைந்த ஆன்மீக இருப்புக்களைக் கொண்டிருக்கும்போது, தவிர்க்கமுடியாமல் ஆன்மீக பரிமாணத்தின் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவர். இது ஒரு நபர் வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏதுவாகிறது. இது போன்ற நேரத்தில்தான் ஒரு நபர் ஆன்மீக பயிற்சியுடன் ஆன்மீக நிவாரண முறைகளையும் செய்து முழுமையான பயன் பெறவேண்டும். இது ஒப்புமையில் கூறப்பட்டது போல் கூடுதல் உணவு எடுப்பதற்கு சமமாகும்.
ஆன்மீக பயிற்சியுடன் ஆன்மீக நிவாரண முறைகளையும் சேர்த்து கொள்ளுதல் அவசியம் என்பதை புத்தியின் உதவியுடன் தீர்-மானிப்பது கடினம். மகான்கள் மற்றும் வலுவான மிகைப்பட்ட புலன் உணர்வுடையர்கள் (ESP) அல்லது ஆறாவது உணர்வை கொண்டவர்கள் மட்டுமே ஆன்மீக நிவாரண முறைகள் தேவைப்-படுகிறாத என்பதை அதிகார பூர்வமாக சொல்ல முடியும், ஏனென்றால் அப்பிரச்சனைக்கு ஒரு ஆன்மீக மூல காரணம் உள்ளதா என்பதை அவர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.
இருப்பினும் ஒருவர் பின்வருவனவற்றின் மூலம் தனது புத்தியினை கொண்டு முடிவு எடுக்கலாம்;
- சிறந்த உலக முயற்சிகளாலும் விலகி போகாத பிரச்சனைகள்.
- வெளிப்படையான காரணங்கள் இல்லாத நீண்டகால அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள்.
- ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தில் பலரைப் பாதிக்கும் பிரச்சனைகள்.
- அமாவாசை மற்றும் பௌர்ணமி சமையத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகள்.
- பாதிக்கப்பட்ட நபர்கள், மகான்களின் ஸத்சங்கம் போன்ற நேர்மறையான ஆன்மீக சூழலில் இருக்கும் போது சிக்கல்கள் ஓரளவு மட்டுப்படுத்துப்படுவது.
எனவே சுருக்கமாக பின்வருமாறு பரிந்துரைக்கப்படுகிறது :
- ஆன்மீக நிவாரண முறையான ஆன்மீக பயிற்சியை தினமும் நடைமுறைப்படுத்தல்.
- வாழ்க்கையில் விவரிக்க முடியாத பிரச்சனைகள் அல்லது சிறந்த முயற்சிகள் இருந்த போதும் விலகாத பிரச்சனைகள் இருந்தால், ஆன்மீக நிவாரணங்களும் செய்யப்பட வேண்டும்.