ஆனந்தத்தை அடையும் நோக்கில், துரிதமான ஆன்மீக முன்னேற்றத்தினை எவ்வாறு நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்?
ஆன்மீக அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய நாம் ஆன்மீக பயிற்சியினை மேற்கொண்டால் விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடையலாம். பல்வேறு விதமான ஆன்மீக பயிற்சி வகைகள் இருந்தாலும், நமது ஆன்மீக பயிற்சி ஆன்மீகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதா என்பது, அதன் செயல்திறனை மதிப்பிடும் லிட்மஸ் பரிசோதனை போன்றதாகும். இல்லையென்றால், பல முயற்சிகள் செய்தும் அதற்கு ஈடான பலன் கிடைக்காமல் போகக்கூடிய அபாயத்தினை எதிர்நோக்குவோம்.
ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு
- எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன
- பலவற்றிலிருந்து ஒன்றுக்கு செல்வது
- ஸ்தூலத்திலிருந்து (உருவம்) சூட்சுமத்திற்கு (அருவம்) முன்னேறுதல்
- ஆன்மீக நிலை அல்லது திறனுக்கு ஏற்றவாறு ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளுதல்
- காலத்திற்கு தகுந்த பொருத்தமான ஆன்மீக பயிற்சி முறையை செய்யவேண்டும்
- ஒருவரின் ஆற்றல் அல்லது திறமைக்கு ஏற்றவாறு கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்