உடலின் பிராண மற்றும் சூட்சும சக்தி அமைப்புகள்
சுற்றோட்ட அமைப்பு, செரிமான அமைப்பு மற்றும் சுவாச அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் உடல் செயல்படுகிறது. அதுபோல ஸ்தூல(உடல்) மற்றும் சூட்சும தேஹத்திற்கு சக்தி வழங்க பிராண மற்றும் சூட்சும ஆன்மீக சக்தி அமைப்பு உள்ளது. கீழே உள்ள படத்தில் சூட்சும தேஹ கூறுகளுக்கு எதிராக நட்சத்திரக் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்தூல தேஹத்தை(உடலை) பிரிப்பதன் மூலம் மற்ற அமைப்புகளைக் காணலாம். சூட்சும மற்றும் பிராண சக்தி அமைப்புகள் ஸ்தூல கண்களுக்குப் புலப்படுவதில்லை. நுண்ணிய ஆறாவது அறிவு உடையவர்களால் மட்டுமே இதை உணர முடியும். சிலர் இந்த ஸ்தூல மற்றும் பிராண சக்தி அமைப்பை நரம்பு மண்டலத்தோடு ஒப்பிடுகிறார்கள், அது முற்றிலும் தவறானதாகும்.
இரத்த ஓட்ட அமைப்புக்கு இதயமும்,நரம்பு மண்டலத்திற்கு மூளையும் எவ்வாறு பிரதான மையமாக திகழ்கின்றதோ,அதுபோல சூட்சும சக்தி அமைப்பும் பல்வேறு சூட்சும சக்தி மையம் அல்லது சக்கரங்களைக் கொண்டுள்ளது. இவை குழாய்கள் மற்றும் மையங்கள்(சக்கரங்கள்) என்றழைக்கப்படுகிறது. அனைத்து குழாய்களும், மையங்களும், மைய நாடியில்(ஸுஷும்னா நாடி) அமைந்துள்ளன. பின்வரும் கட்டுரைகளில் பிராண மற்றும் சூட்சும சக்தி அமைப்புகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.