மூதாதையர் பிரச்சனைகளில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்பது ஆன்மீக ரீதியாக ஏற்படும் ஒரு குறிப்பிட்ட வகையான சிரமம் ஆகும். எனவே, ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிவாரணத்தைப் பயன்படுத்துவதன் மூலமே அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். மனோரீதியான மற்றும் உடல் ரீதியான நிவாரணங்கள் மூலம் அந்த பிரச்சனையின் மூல காரணத்தை முழுவதுமாகக் கடக்க முடியாது. நோய்க்குறி சார்ந்த ஒருசில நிவாரணங்களை மட்டுமே வழங்க முடியும். உதாரணமாக, ஒரு நபர் மூதாதையர்களால் ஏற்படும் தோல் வியாதியால் (வேனற்கட்டியால்) பாதிக்கப்பட்டிருந்தால், பொருத்தமான மருத்துவ சிகிச்சை சிறந்த நிவாரணத்தை அளிக்கும், ஆனால் அது கட்டியை முழுமையாகக் குணப்படுத்தவோ அல்லது மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கவோ இயலாது.
மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு பெற, ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற பாதுகாப்பு நாமஜபத்தை உச்சரிக்க பரிந்துரைக்கிறோம். இந்த நாமஜபம் கடவுளின் அம்சமான தத்தரின் பெயரைக் குறிக்கிறது. ஒருவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் நாமத்தை உச்சரிப்பதோடு இந்த நாமஜபமும் தினமும் செய்யப்பட வேண்டும்.
தத்தரின் நாமஜபம் ஒரு குறிப்பிட்ட வகையான ஆன்மீக பிரச்சனையை அதாவது மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கான ஒரு வைத்திய முறை நாமஜபமாகும். மறுபுறம், ஒருவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் நாமத்தை உச்சரிப்பது ஒட்டுமொத்த ஆன்மீக வளர்ச்சிக்கான பொதுவான ஆன்மீக ஊட்டமருந்தாகச் செயல்படுகிறது. தத்தரின் நாமத்தை உச்சரிப்பது பாதுகாப்பை மட்டுமே நல்குகிறது ஆன்மீக வளர்ச்சியை அல்ல.
உதாரணத்திற்கு தத்தரின் பெயரை உச்சரிப்பது என்பது, ஒருவர் ஜலதோஷம் இருக்கும்போது கூடுதல் பாதுகாப்பிற்காக வைட்டமின் ‘சி’ உட்கொள்வதற்கு சமமாகும். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக எடுக்கப்படும் வழக்கமான பல மல்டிவைட்டமின் மாத்திரையுடன் வைட்டமின் ‘சி’ எடுத்துக் கொள்ளப்படுகிறது (இது பிறந்த மதத்தின்படி ஜபிக்கும் தெய்வத்தின் பெயருக்கு சமமாகும்).
‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற பாதுகாப்பு நாமஜபத்தை நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, தத்தரின் பெயருடன் தொடர்புடைய தெய்வீக ஆற்றலை நாம் ஈர்க்கிறோம், அதன் விளைவாக பின்வரும் வழிகளில் நாம் பயனடைகிறோம்:
- நம்மைச் சுற்றி ஒரு சூட்சுமமான பாதுகாப்பு கவசம் உருவாகப்பட்டு நம் முன்னோர்களால் ஏற்படும் தடைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
- இது நம் முன்னோர்களிடம் இருக்கும் கொடுக்கல் வாங்கல் கணக்கைரத்து செய்ய உதவுகின்றது. இதன்மூலம் நம் மீது அவர்களின் செல்வாக்கு குறைகின்றது.
- சூட்சுமமான உலகில் நம் முன்னோர்களுக்கு அவர்களின் முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள தேவையான உதவியை வழங்குகின்றது.
எனினும், இதன் பலன்களின் அளவு மற்ற காரணிகள் விடுத்து, நமது நாமஜபத்தின் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தும், நமது ஆன்மீக நிலையைப்பொறுத்தும் அமைகின்றது.
துன்பத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஒருவர் தினமும் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற பாதுகாப்பு நாமஜபத்தை உச்சரிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரது வாழ்வில் உள்ள தடைகளை நீக்க உதவும் ஒரு வைத்தியமுறை நாமஜபமாகவும், அன்றைய முழு நாளுக்குத் தேவையான ஆன்மீகப் பாதுகாப்பையும் வழங்குவதால், தினமும் காலையில் செய்வது நல்லது. மற்ற நேரத்தில் அவரவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் பெயரை உச்சரிக்கலாம்.
மூதாதையர் பிரச்சனைகளால் ஏற்படும் துயரத்தின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை உச்சரிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். விச்வமனம் மற்றும் விச்வபுத்தியின் மூலம் மேம்பட்ட ஆறாவது அறிவின்(புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு வழியாகப் செய்யப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.
- லேசான கஷ்டங்கள் அல்லது கஷ்டம் இல்லாத தருணத்திலும், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், தினமும் 1 முதல் 2 மணிநேரம் வரை ஜபிக்கலாம்.
- கஷ்டங்கள் மிதமானதாக இருந்தால், தினமும் 2 முதல் 4 மணி நேரம் வரை ஜபிக்கவும்..
- கஷ்டம் கடுமையானதாக இருந்தால், ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிநேரம் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை ஜபிக்க வேண்டும்.
குறிப்பு: பரிந்துரைக்கப்பட்ட நாமஜபத்தின் அளவு சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னோர்களால் ஏற்படும் பிரச்சனைகள் மேலும் தற்போதைய மற்றும் வரவிருக்கும் காலங்களில் தீய சக்திகளின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாமஜபத்திற்கான கால அளவு அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மறைந்த நம் முன்னோர்களால் ஏற்படும் கஷ்டங்கள் அல்லது பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் என்ன என்ற கட்டுரையைப் படியுங்கள்.
கஷ்டங்களின் தீவிரத்தன்மையின் சில குறிகாட்டிகள் பின்வருமாறு
வகை | உதாரணம் |
---|---|
லேசான | தோல் பிரச்சினைகள், தாம்பத்ய தகராறுகள் |
மிதமான | விவாகரத்து, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை |
கடுமையான | கருச்சிதைவு, குழந்தை பருவத்தில் மரணம் |
குறிப்பு: சிரமங்கள் கடுமையானதாக இருந்தால், குறிப்பிட்ட ஆன்மீக சடங்குகளை செய்ய அறிவுறுத்தப்படலாம். இவை தொடர்பான தகவல்கள் பின்னர் கட்டுரைகளில் வெளியிடப்படும்.