தயவு செய்து கவனிக்கவும், இங்கே தீய சக்திகள் என்பது கூட்டு பெயர்ச்சொல்லாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இச்சொல் தனிமனிதனுக்கு மற்றும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணமுடைய பலதரப்பட்ட ஆன்மீக சக்திவாய்ந்த, பல்வேறு வகைப்பட்ட சூட்சும சக்திகளை குறிக்கிறது.
அட்டவணை
- 1. ஆவிகளால் பாதிக்கப்பட்ட உலக மக்கள் தொகையின் சதவிகிதம்
- 2. ஆவிகளால் பாதிக்கப்படுவது அல்லது பீடிக்கப்படுவது
- 3. உலக மக்கள் தொகையை பாதிக்கும் ஆவியின் வகைகள்
- 4. உலக மக்கள் தொகையும் பீடித்தலின் அளவும்
- 5. ஆன்மீக நிலை மற்றும் தீய சக்தியால் பாதிக்கப்பட்ட அல்லது பீடிக்கப்பட்ட மனிதர்களை கண்டறியும் திறன்
- 6. பல்வேறு யுகங்களில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையின் சதவிகிதம்
1. ஆவிகளால் பாதிக்கப்பட்ட உலக மக்கள் தொகையின் சதவிகிதம்
2013 -ல் உலகின் மக்கள் தொகை 710 கோடியாக மதிப்பிடப்பட்டது. (தகவல் : census.gov).
தற்போதைய காலத்தில் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) எண்ணிக்கை மனிதர்களின் எண்ணிக்கையைவிட பத்து மடங்கு அதிகமுள்ளது. ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) எண்ணிக்கை மனித இனத்தின் எண்ணிக்கையை இத்தனை பெரிய அளவில் மிஞ்சுவதால், அவை தற்போதைய காலத்தில், மக்கள் தொகையில் ஒரு பெரும் சதவிகிதத்தை மோசமாக பாதிக்கின்றன. ஆண்டுதோறும் இந்த சதவிகிதத்தில் ஏற்ற இறக்கம் உள்ளது. பெரும்பாலான மனித இனம் பாதிக்கப்பட்டபோதிலும், சிலர் அசுர சக்திகளால் பீடிக்கப்பட்டிருப்பதால் மற்றவர்களை விட அதிக அளவிற்கு துன்புறுகிறார்கள். தயவு செய்து ஆவியால் (பேய், பிசாசு, தீய சக்தி போன்றவை) பாதிக்கப்படுவதில் மற்றும் ஆவியால் (பேய், பிசாசு, தீய சக்தி போன்றவை) ஆட்கொள்ளப்படுவதில் உள்ள வேறுபாடு என்னும் கட்டுரையை பார்க்கவும்.
பின்வரும் பகுதிகளில், உலகின் மக்கள் தொகை எந்த அளவிற்கு அசுர சக்திகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது அல்லது பீடிக்கப்பட்டிருக்கிறது என்னும் நமது (ஆன்மீக ஆராய்ச்சியால் செய்யப்பட்ட) கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளோம்.
2. ஆவிகளால் பாதிக்கப்படுவது அல்லது பீடிக்கப்படுவது
2013 -ல்:
- ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 30% ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்
- 50% அவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
- 20% பாதிக்கப்படவில்லை. இதில்:
- 20%-ல் 50% ஒருபோதும் பாதிக்கப்பட்டதில்லை
- 20%-ல் 50% சில மாதங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள்
குறிப்பு: இந்த சதவிகிதங்கள் நிலையானது அல்ல. காலப்போக்கில் மாறுபவை.
இங்கே காண்பது போல உலக மக்கள் தொகையில் பெரும் சதவிகிதம் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் தற்போது உள்ள கலகத்திற்கு பின்னாலுள்ள முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அசுர சக்திகள் மக்களின் ஸ்வபாவத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, அவைகள் மூலம் வேலை செய்து, உலகில் தனிமனித, குடும்ப, சமூக மற்றும் தேசிய அளவில் சச்சரவு மற்றும் நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றன.
சிலர் நினைக்கலாம் “நான் நிச்சயமாக பீடிக்கப்பட்டதாக உணரவில்லை”. ஏனென்றால் பீடிக்கப்படுவது என்னும் வார்த்தையை கேட்டால் நம் நினைவுக்கு வருவது ‘தி எக்சார்சிஸ்ட்’, ‘தி எக்சார்சிசம் ஆப் எமிலி ரோஸ்’ போன்ற திரைப்படங்களில் நாம் பார்த்த பீடிக்கப்பட்டுள்ள காட்சிகளே. இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலும் பீடிக்கப்பட்டிருக்கும் நபருக்கு தான் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே (அது எமிலி ரோஸிற்கு ஆனது போல் பகிரங்கமாக வெளிப்படும்வரை) தெரிவதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் பீடிக்கப்படுவது என்பது பல ஆண்டுகள் படிப்படியாக நடக்கும் ஒரு விஷயமாகும். மேலும் ஒரு மனிதனின் நினைவாற்றலின் மேல் இருக்கும் கட்டுப்பாட்டை அதிகரித்துக்கொண்டே போய் அந்த ஆவி பீடிக்கப்பட்ட மனிதனின் மனம் மற்றும் புத்தியை முற்றிலுமாக சிறைபடுத்திவிடும். இந்நிலையில் அவனின் எண்ணங்கள் மற்றும் சுபாவம் ஆட்கொள்ளும் சக்தியினுடையதே அன்றி அவனுடையது அன்று.
பொதுவாக பீடித்தல் என்றால் மக்கள் தீவிரமான பீடித்தலையே நினைப்பார்கள். ஆனால், பீடித்தல் என்பது குறைவாக, மிதமாக அல்லது தீவிரமாக இருக்கக்கூடும் – இது குறித்து கீழே உள்ள பகுதியை காணவும்.
3. உலக மக்கள் தொகையை பாதிக்கும் ஆவியின் வகைகள்
தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட அல்லது பீடிக்கப்பட்ட உலக மக்கள் தொகையின் 80 சதவிகிதத்தினரில் :
- 70% கீழ் நிலை ஆவிகளால் (அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 56%) ஆகும்
- 30% மாந்த்ரிகர்களை போல உயர் நிலை ஆவிகளால் (அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 24%) ஆகும்
4. உலக மக்கள் தொகையும் பீடித்தலின் அளவும்
தயவு செய்து பீடித்தலின் அளவுகள் கட்டுரையை படிக்கவும்.
மேலே உள்ள வரைபடத்தில் காண்பது போல, பீடிக்கப்பட்ட 30% மக்களில்:
- 14% மக்கள் தொகை குறைவான பீடித்தல் என்னும் வகையில் உள்ளடக்கம். இந்த வகை பீடித்தலை சுலபமாக வெறும் புத்தியின் மூலமே புரிந்துகொள்ள முடியும். இதை நாம் சரீர, மனம் சார்ந்த, புத்தி சார்ந்த அல்லது ஆன்மீக நடத்தையால் அல்லது வெளிப்படையான அறிகுறிகளால் புரிந்துகொள்ளலாம். குறைவான பீடித்தலில் பீடிக்கும் சக்தியின் ஆன்மீக சக்தி மற்றும் பீடிக்கப்பட்ட மனிதனின் மேல் உள்ள அதன் அதிகாரம் வேறு நிலை பீடித்தல்களைவிட மிகவும் குறைந்த அளவு இருக்கும்.
- தீவிரமாக பீடிக்கப்பட்ட 8% மக்களே மனித இனத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் இவ்வகை பீடித்தலில் பீடிக்கும் சக்தி உயர் நிலையில் இருக்கும் (மாந்த்ரிகனை போல) மற்றும் சமுதாயத்திற்கு பெருமளவில் தீங்கு விளைவிப்பதில் மிகுந்த ஆர்வமுடையதாக இருக்கும். ஆகவே இது தன்னை போல தீய சுபாவமுடைய மற்றும் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் போக்குடைய (உதாரணமாக சமுதாயத்தின் மேல் பயங்கரவாதம் செய்யும் சுபாவமுள்ள) மக்களை ஆட்கொள்ளும்.
5. ஆன்மீக நிலை மற்றும் தீய சக்தியால் பாதிக்கப்பட்ட அல்லது பீடிக்கப்பட்ட மனிதர்களை கண்டறியும் திறன்
பல முறை இறந்த முன்னோர்கள் மற்றும் தீய சக்திகளுக்கு உலகில் உள்ள சூழ்நிலைகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது தூண்டிவிடும் ஆற்றல் உண்டு. அதி நுட்ப ஆறாம் அறிவு இல்லாத (மற்றும் ஆவிகளால் நடக்கும் பாதிப்பு மற்றும் பீடித்தல் பற்றி தெரியாத) ஒருவரால் கீழ்கண்டவற்றை உணர சாத்தியமில்லை:
- ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது பீடிக்கப்பட்டுள்ளாரா என்று புரிந்துகொள்வது
- ஒரு சம்பவத்தின் உண்மையான மூல காரணத்தை அறிவது
- அந்த சம்பவம் சரீர, மனம் சார்ந்த அல்லது தீய சக்தியின் தாக்குதல் போன்ற ஆன்மீக காரணத்தால் நடந்தது என்று கண்டறிவது.
மாந்த்ரிகர்களை போல உயர் நிலை தீய சக்திகள் ஒரு சம்பவத்தை அல்லது சூழ்நிலையை உருவாக்கும்போது, அச்சம்பவத்தின் பின் அவைகளின் பங்கு இருப்பதை உணர்வது இன்னும் கடினமாகும். மாஃபியா தலைவர்கள் சாதாரண ரவுடிகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப்போல உயர் நிலை தீய சக்திகள் கீழ் நிலை ஆவிகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ரவுடியை பிடிப்பது சுலபமாகும், ஆனால் அச்சம்பவத்தை மாஃபியா தலைவனோடு இணைப்பது மிகவும் கடினமாகும்.
ஆயினும் உயர்ந்த ஆன்மீக நிலை மற்றும் ஆறாம் அறிவு திறன் உடைய ஒருவரால் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களின் பின்னாலுள்ள நிஜ காரணங்களை உணர முடியும். பொதுவாக, ஒருவரால் சம ஆன்மீக நிலையில் உள்ள ஆவியின் தாக்குதலையே அடையாளம் காண முடியும். உதாரணமாக, ஒருவரிடம் 50% ஆன்மீக நிலை மற்றும் விழிப்படைந்த ஆறாம் அறிவு இருக்குமானால், அவரால் 50% ஆன்மீக நிலை உள்ள ஒரு ஆவியை மட்டுமே அடையாளம் காண முடியும்.
இந்த அம்சத்தை பற்றி இன்னும் அறிய வேண்டுமானால் அமானுஷ்ய நடவடிக்கையை ஆறாம் அறிவால் கண்டறியும் திறன் என்னும் கட்டுரையை காணவும்.
6. பல்வேறு யுகங்களில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையின் சதவிகிதம்
பிரபஞ்சத்தின் துவக்கத்திலிருந்து இன்று வரை ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள் மற்றும் தீய சக்திகள் போன்றவை) மனித இனம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது அல்லது பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை கீழ்கண்ட வரைபடம் காட்டுகிறது.
குறிப்பு: சச்சரவு நிறைந்த காலமாகிய இக்கலியுகத்தில் கூறப்பட்டுள்ள 100% என்பது யுகத்தின் இறுதியில் உள்ள காலத்தை குறிக்கும்.
மனித இனத்தின் சராசரி ஆன்மீக நிலை காலப்போக்கில் குறைந்துள்ளதால் உலக மக்கள் தொகையின் மேல் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலே உள்ளவாறு சத்தியத்தின் யுகமான சத்யயுகத்தில் சராசரி ஆன்மீக நிலை 70% -ஆக இருந்தது. இதனால் அந்த யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தேவையான ஆன்மீக பாதுகாப்பு கிடைத்தது. ஆனால் சச்சரவு மிகுந்த இக்கலியுகத்தில் சராசரி ஆன்மீக நிலை 20% என்பதால் மக்கள் தொகையில் பெரும்பாலோருக்கு ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தன்னை காத்துக்கொள்ள போதுமான ஆன்மீக சக்தி இல்லை.
தலைமை கலியுகத்தின் உள்ளே இருக்கும் இந்த குறு யுகத்தில் 2012-2013 ஆண்டுகளில் தீய சக்திகளின் வலிமை அதிகபட்ச அளவை தொட்டது.
தயவு செய்து எங்களின் மூன்றாம் உலகப்போர் கணிப்புகள் மற்றும் நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகிய கட்டுரைகளை படிக்கவும்.