அட்டவணை
1. ஆவிகள் என்றால் என்ன?
ஒருவர் இறக்கும் போது அவருடைய ஸ்தூல தேகம் மட்டுமே இல்லாமல் போகிறது. எனினும் அவரது சூட்சும தேகம் (ஆழ் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் ஆன்மா, அதாவது ஸ்தூல தேகம் தவிர) தொடர்ச்சியாக இருந்து பிரபஞ்சத்தின் ஏனைய பகுதிகளுக்கு நகர்கிறது. நாம் எவற்றை உள்ளடக்கியுள்ளோம் மற்றும் இறந்த பின் எவற்றை விட்டுச்செல்கின்றோம் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள விளக்கப்படத்தை பார்க்கவும்
இந்த சூட்சுமமான உடல்களில் சில ஆவிகளாக மாறுகின்றன. வரைவிலக்கணப்படி ஆவிகள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்திசெய்கின்றன.
- அவை சூட்சும உடல்கள்
- அவை புவர் லோகத்தை (பித்ரு லோகம்) அல்லது ஏழு பாதாள லோகங்களில் ஒன்றை சார்ந்திருக்கும். பூலோகத்திலும் அவை இருக்கலாம், காரணம் பிரபஞ்சத்தின் மிகவும் சூட்சுமமான பகுதிகளில் உள்ள ஆவிகளால் மிகவும் ஸ்தூலமான பூலோகத்திற்கு விருப்பத்தின் நிமித்தம் பயணம் செய்ய முடியும்.
-
அவை பிரபஞ்சத்தின் நேர்மறை உலகங்களான சுவர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள உலகங்களில் இருக்க முடியாது.
- அவை தீர்க்கப்படாத ஆசைகளை கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு மது, காமம் போன்ற ஸ்தூல உடலினால் மட்டும் அனுபவிக்க கூடிய விஷயங்கள், பழிவாங்கும் உணர்வு போன்றவை.
- அவை மனிதனையும் ஏனைய சூட்சும உடல் கொண்ட ஆத்மாக்களையும் சித்திரவதை செய்தும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்தும் சந்தோஷத்தை பெறுகின்றன. சமுதாயத்தில் அதர்மத்தை கொண்டு வருவதே அவைகளின் நோக்கமாகும்.
இறந்த பின் மேற்கூறிய காரணங்களால் ஒருவரின் சூட்சும உடல் ஆவியாக மாறுகின்றது. இதற்கென தனியாக எந்தவொரு செயல்முறைகளிற்கும் உட்படுத்தப்படுவதில்லை.
2. இறந்த பின் நாம் செல்லும் இடத்தையும் நாம் என்னவாக மாறுகிறோம் என்பதையும் தீர்மானிப்பது எது?
நம் மறுமை எவ்வாறு அமையும் என்பதை சில காரணிகள் நிர்ணயிக்கின்றன. இந்த காரணிகள் பின்வருமாறு:
- நம் வாழ்க்கையை வாழ்ந்துள்ள விதத்தை பொறுத்து நமது ஆழ்மனத்தில் ஸன்ஸ்காரங்கள் எனப்படும் எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. நம் அடிப்படை இயல்பு மற்றும் சுபாவத்தை தீர்மானிக்கும் ஆழ்மன ஸன்ஸ்காரங்கள் எனும் கட்டுரையை பார்க்கவும்.
- நமது அஹங்காரம்: இங்கு அஹங்காரம் எனும் வார்த்தை ஆன்மீக ரீதியில் கருதப்படுகிறது. ஆணவம் மற்றும் தற்பெருமை போன்ற அன்றாட உணர்வுகளுக்கு மேலாக, அஹங்காரம் என்பது இறைவனிடமிருந்து நாம் வேறு என்னும் த்வைத மனப்பான்மையையும் குறிக்கும். த்வைதம் என்பது கடவுள் வேறு நாம் வேறு என இருமை மனப்பான்மையுடன் நினைத்து கொள்வதாகும். அஹங்காரம் எனும் செயற்பாடானது, நமக்குள் உள்ள ஆத்மா அல்லது இறைவனை நாம் என கருதாது, ஐம்புலன்கள், மனம், புத்தி என்பவற்றால் நம்மை அடையாளப்படுத்தி கொள்வதையும் குறிக்கும்.
- நம் ஆயுட்காலத்தில் நாம் செய்த கர்மங்கள்
- நம் ஆயுட்காலத்தில் நாம் மேற்கொண்ட ஆன்மீக பயிற்சியின் அளவு மற்றும் வகை நம் விதி
- மரணமேற்பட்ட முறை – இயற்கையான மற்றும் அமைதியான, தற்செயலான அல்லது கொடூரமான
- இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்ட விதம்
- ஆன்மீக சாஸ்திரத்தின்படி இறந்த பின் நமது வழிவந்தவர்களால் நம்முடைய மறுவாழ்வில் உதவுவதற்காக செய்யப்படும் சடங்குகள்
3. ஆவிகளாக மாறும் வாய்ப்பு உடையவர்கள் யார்?
பின்வரும் காரணங்களால் மனிதர்கள் மரணத்தின்பின் ஆவிகளாக மாறுகிறார்கள்.
- பல நிறைவேறாத ஆசைகளை கொண்டிருத்தல்
- கோபம், பயம், பேராசை போன்ற பல குறைபாடுகள்
- மனதில் நிறைய எதிர்மறை ஸன்ஸ்காரங்கள்
- அதிகளவு அஹங்காரம்
- மற்றவர்களை துன்புறுத்தி இருப்பதோடு அடிப்படை இயல்பும் பிறரை துன்புறுத்துவதாக இருத்தல்
- இறைவனை உணரும் நோக்கத்துடன் படிப்படியாக உடல், மனம் மற்றும் புத்தியினை சரணடைய செய்யும் ஆன்மீக பயிற்சி குறைவாக காணப்படுதல்
சமஷ்டி ஸாதனையில் 50% அல்லது வியஷ்டி ஸாதனையில் (தனிநபரிற்கான ஸாதனை) 60% ஆன்மீக நிலையினை அடைந்திருப்பதுடன் மிகக்குறைந்த அஹங்காரம் உடையவரால் மட்டுமே சுவர்க்கம் மற்றும் அதற்கப்பால் உள்ள உயர்ந்த லோகங்களை அடைய முடியும். அத்துடன் அவர்கள் ஆவிகளாக மாறுவதும் இல்லை. மிகுதி மனிதர்கள் இறந்த பின் புவர் லோகத்திற்கும் (பித்ருக்களின் லோகம்) நரக லோகத்திற்கும் செல்கின்றனர். புவர் லோகத்திலுள்ள பெரும்பாலான சூட்சும உடலை கொண்டவர்கள் ஆவிகளாக அதிக வாய்ப்பு உள்ளது. நரகத்திலுள்ள சூட்சும உடல்கள் அனைத்தும் ஆவிகளே ஆகும்.
உண்மையில், ஒரு பண்புள்ள நபர் கூட ஸாதனை மூலம் போதுமான ஆன்மீக பலத்தை கொண்டிருக்காவிடில் இறந்த பின் ஆவியாக கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இவர்கள் அதிக சக்திவாய்ந்த ஆவிகளால் தாக்கப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் வருவதனால் ஆகும். பூலோகத்தை போலவே, பிரபஞ்சத்தின் ஏனைய லோகங்களிலும் ‘தக்கன பிழைக்கும், அல்லன மடியும்’ என்பதிற்கேற்ப வலிமையுள்ளவர்களே தப்பி பிழைப்பார்கள். அதிக பலம் கொண்ட ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் முதலியன), அவர்களின் அதிக ஆன்மீக பலம் கொண்டு குறைந்த ஆன்மீக வலிமை உள்ள பண்புள்ள நபர்களின் சூட்சும தேகத்தை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக காரியங்களை செய்ய வைக்கின்றன. இதனால் மறைமுகமாக அவர்களை ஆவிகளாக மாற்றுகின்றன. காலப்போக்கில், பண்புள்ள நபர்களின் சூட்சும தேகமானது இச்சூழ்நிலைக்கு பலியாகி ஆவிகளாக மாறுவதோடு மனிதர்களை சித்திரவதை செய்வது அல்லது மனிதர்களை ஆட்கொண்டு உலகாய ஆசைகளை தீர்த்து கொள்வது போன்றவற்றால் இன்பம் பெறுகின்றது.
இதன் தார்மீக கருத்து யாதெனில், நாம் ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீக பயிற்சி செய்யாமலும் நமது அஹங்காரத்தை குறைக்காமலும் இருப்போமானால் இறந்த பின் நாம் ஆவிகளாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
4. யார் ஆவிகளாக மாறுவதில்லை?
இவர்கள் பொதுவாக:
- இறைவனை உணரும் (ஆன்மீக வளர்ச்சியின் இறுதி நோக்கம்) நோக்கத்துடன் ஆன்மீக பயிற்சி செய்பவர்கள்
- மனதில் குறைவான ஸன்ஸ்காரங்களையும் குறைவான கெட்ட சுபாவங்களையுமே கொண்டிருப்பவர்கள்
- மிகக்குறைந்த அஹங்காரத்தை கொண்டிருப்பவர்கள்
- சமஷ்டி ஸாதனையில் 50% அல்லது வியஷ்டி ஸாதனையில் (தனிநபரிற்கான ஸாதனை) 60% ஆன்மீக நிலையினை அடைந்திருப்பவர்கள்
அத்தகைய நபர்கள் இறக்கும் போது அவர்கள் பிரபஞ்சத்தின் உயரிய லோகங்களை சென்றடைவார்கள், அதாவது சுவர்க்கம் மற்றும் அதற்கப்பால் உள்ள உயர்ந்த லோகங்கள். இவர்களுடைய ஆன்மீக சக்தி மற்றும் இறைவனுடைய பாதுகாப்பின் காரணமாக ஆவிகள் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை அல்லது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில்லை.
5. ஆன்மீக நிலையும் ஆவிகளும்
ஆவிகள் பற்றிய பகுதியில் நாம் குறிப்பிடுவது அதிக சக்தி வாய்ந்த ஆவிகளைப்பற்றி ஆகும். இவை தீவிர ஆன்மீக பயிற்சி மற்றும் கடும் தவத்தின் மூலம் அதிக ஆன்மீக ஆற்றலை பெற்றுள்ளன. இதன் காரணமாக இவை உயர் ஆன்மீக நிலையினையும் ஏராளமான ஆன்மீக சக்தியினையும் கொண்டிருக்கும். இது சிலருக்கும் முரண்பாடாக தோன்றலாம். “அதிக ஆன்மீக நிலையினை கொண்ட ஒருவர் எவ்வாறு ஆவியாக மாற முடியும்?” என கேட்கலாம். 70% ஆன்மீக நிலையினை கொண்ட மஹானின் ஆன்மீக சக்தியும் மாந்திரீகன் (சூட்சும மந்திரவாதி) எனக்கூறப்படும் ஐந்தாவது நரகத்தின் உயர்ந்த நிலையிலுள்ள ஆவியின் ஆன்மீக சக்தியும் சமமாக இருக்கலாம். எனினும், அவர்களுக்கு இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அவை:
- ஒரு மஹான் ஸாதனை செய்வதன் நோக்கம் தன்னுடைய உடல், மனம், செல்வம், அஹம் ஆகியவற்றை இறைவனிடத்தில் சரணடைய செய்து அவருடன் இரண்டற கலத்தல் ஆகும்.
- உயர் நிலையிலுள்ள ஆவி அல்லது அதிக ஆன்மீக சக்தி கொண்ட ஒருவர் (இறந்த பின் ஆவியாக மாறுபவர்) ஸாதனை செய்வதன் நோக்கம் இறைவனை போல் மாற பல மந்திர சக்திகளை பெறுவதாகும். இதனால் இவை மிக அதிகமான அஹங்காரத்தை கொண்டிருக்கும்.
மஹான் தனக்குள் இருக்கும் இறைவன் அல்லது ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்வார். மாறாக, சூட்சும உலக மந்திரவாதி தனக்கு இருக்கும் அபரிதமான ஆன்மீக சக்தியால் பெருமிதம் கொண்டு தன்னுடைய ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி என்ற அஹங்காரத்தோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்வார்.