1. வரைவிலக்கணங்கள்
சமஸ்க்ருதத்தில் ‘இச்சா’ என்பது இச்சையை குறிக்கும். அதன்படி:
- சுவெச்சா: ‘சுவ’ என்பது நான் அல்லது எனது. சுவெச்சாபடி நடப்பதென்பது ஒருவர் தன் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்தல் ஆகும்.
- பரெச்சா: ‘பர்’ என்பது மற்றையவர் என பொருள்படும். பரெச்சாபடி நடப்பதென்பது ஒருவர் மற்றையவர் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்தல் ஆகும்.
- ஈஷ்வரேச்சா: ‘ஈஸ்வர்’ என்பது இறைவனை குறிக்கும். ஈஷ்வரேச்சாபடி நடப்பதென்பது ஒருவர் இறைவன் விருப்பம் எதுவோ அதனை செய்தல் ஆகும்.
2. ஆன்மீக பயிற்சியிலும் முன்னேற்றத்திலும் சுய விருப்பம், மற்றயவர் விருப்பம் மற்றும் இறைவனுடைய விருப்பம் எனும் எண்ணக்கரு
பெரும்பாலான நாம் நமது உடல் (ஐம்புலன்கள்), மனம் மற்றும் புத்தியினை கொண்டு நம்மை அடையாளப்படுத்துகிறோம். இதுவே நமது அகம்பாவம் எனப்படுகிறது. இருப்பினும் ஆன்மீகம் நமக்கு சொல்வது நம்முள் இருக்கும் ஆன்மா அல்லது இறைதத்துவமே நமது உண்மையான இயல்பாகும். ஆன்மாவின் இயல்பு நிரந்தர பேரின்பமாகும், அதாவது எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் உணரும் மகிழ்ச்சியின் உச்சகட்ட நிலை. பரந்தளவில் நோக்கினால் ஆன்மீக பயிற்சியின் குறிக்கோள் :
- உடல் (ஐம்புலன்கள்), மனம் மற்றும் புத்தியினை கொண்டு நம்மை அடையாளப்படுத்துவது குறைந்து இறுதியில் இல்லாமல் போவது
- நம்முள் இருக்கும் ஆன்மாவினை (இறை தத்துவம்) அடையாளம் கண்டு உணர்தல்
இதனை செய்வதற்கு ஒரு வழி நமது ஆன்மீக பயிற்சியின் பகுதியாக சுய விருப்பதிலிருந்து மற்றையவர் விருப்பத்திற்கும் பின்பு இறைவனுடைய விருப்பத்திற்கும் இயங்குதல்.
நமது சுய விருப்பப்படி காரியங்கள் செய்யும்போது அது நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி விரும்பியதை செய்யதலாகும். இந்த ஆசைகளுக்கு இடம் கொடுத்துவர நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியின் மீது நமது நம்பிக்கையையும் அடையாளத்தையும் அதிகரிக்கிறோம். இது நம்மில் உள்ள ஆன்மாவை புரிந்து-கொண்டு அனுபவிப்பதை சாத்தியம் அற்றதாக்குகிறது. இவ்வாறான ஒருவரின் சொந்த ஆசை மற்றவர்களை பற்றி சிறிதும் அல்லது அறவே கவலையில்லாமல் இருக்கும் விலங்கு போல ஆக்குகிறது.
ஒரு விஷயத்தை புறக்கணிப்பதன் மூலம் அது நம்மீது ஏற்படுத்தும் விளைவுகளை நாம் குறைக்கிறோம் என்று ஒரு பழமொழி உள்ளது. நமது ஆன்மீக பயிற்சியிலும் இதே கொள்கையை பயன்படுத்தலாம். நாம் மற்றயவரின் விருப்பத்தை செவிமடுத்து இசைந்து கொடுப்பதால் தானாகவே நம் சொந்த விருப்பங்களுக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுத்து அதனை புறக்கணிக்கிறோம். மற்றவர்களின் விருப்பப்படி நாம் செயல்படுவது பழக்கமாகிவிட்டால், நமது அகம்பாவத்தை குறைக்க (அதாவது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி இல்லாமல் போதல்) ஆரம்பிக்கிறோம்.
ஒருவர் மற்றயவரின் விருப்பப்படி செயற்படுவதற்கு உதாரணம் ஒன்றை காண்போம்.
திருமணமான தம்பதிகளான மாணிக்கமும் அல்லியும் ஒரு வெள்ளிக்கிழமை இரவு வேறு வேறு விஷயங்களை செய்ய விரும்பினர். அல்லி கச்சேரி ஒன்றிற்கும் மாணிக்கம் கால்பந்து விளையாட்டு ஒன்றிற்கும் செல்ல விரும்பினர். ஆன்மீக பயிற்சி செய்யும் மாணிக்கம் மற்றையவர் விருப்பப்படி செயற்படுவதை பற்றி அறிந்திருந்ததால் அல்லியின் விருப்பப்படி நடக்கிறார். கால்பந்து விளையாட்டிற்கு செல்லாமல் அல்லியுடன் கச்சேரிக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் மாணிக்கம் தனது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியில் இருந்து ஏற்படும் சொந்த விருப்பத்தை புறக்கணித்ததால் ஆன்மீகத்தில் முன்னேற்றமடைகிறார்.
உண்மையில் மற்றையவர் விருப்பப்படி நடத்தல் என்பது மற்றையவர் விருப்பத்தை தனது விருப்பமாக நினைத்து கொள்வதாகும்.
தொடர்ச்சியான அதிகரிக்கும் ஆன்மீக பயிற்சியுடன், மற்றையவர் விருப்பப்படி நடப்பதையும் சேர்த்துக்கொண்டால், காலப்போக்கில் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியின் மீது வைத்துள்ள அடையாளம் இல்லாமல் போகிறது. இந்த கட்டத்தில் சகுன ரூபத்தில் குரு ஒருவர் வாழ்வில் நுழைகிறார். குரு என்பவர் பிரபஞ்ச மனம் மற்றும் புத்தியை அணுக கூடியவரும் இறைவனின் விருப்பப்படி செயற்பட கூடியவரும் ஆவார். அவருக்கு செவிமடுத்தலும் அவரது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடத்தலும் ஒருவரை இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க வைக்கிறது. ஒருவரின் அகம்பாவம் தேவையான அளவு குறைந்த பின் (அதாவது மகானின் நிலை), ஒருவரால் பிரபஞ்ச மனம் மற்றும் புத்தியை நேரடியாக அணுகி இறைவனின் விருப்பப்படி செயற்பட வைக்கிறது. இறைவனின் விருப்பப்படி செயற்படுதல் இறைவனையே உணரும் அனுபவத்தை அளிக்கிறது.
3. இந்த எண்ணக்கரு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. எந்த அளவிற்கு மற்றயவரின் விருப்பத்தை நாம் பின்பற்ற வேண்டும்? தவறான ஒரு விஷயத்தை செய்யுமாறு ஒருவர் நம்மை கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். அச்சமயம் அதை பின்பற்ற வேண்டுமா அல்லது நமது பொது அறிவை பயன்படுத்தி முடியாது என கூற வேண்டுமா?
பதில்: இன்னொருவருடைய விருப்பம் நமது ஆன்மீக பயிற்சிக்கு தடையினை ஏற்படுத்துவதாக இருந்தால் அதனை பின்பற்றுவது தவறாகும். 50% சரியாகவும் 50% பிழையாகவும் இருந்தால் மற்றையவர் விருப்பத்தையே பின்பற்றலாம். மற்றையவர் விருப்பத்தை செவிமடுத்து அதன்படி நடத்தல் முற்றிலும் ஆன்மீக நிலைப்பாட்டில் ஒருவரின் அகம்பாவத்தை குறைப்பதே நோக்கமாகும். இது உலக கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. அடுத்த பந்தியில் உள்ள உதாரணம் இது பற்றி மேலும் விளக்குகிறது.
2. மற்றையவர் விருப்பப்படி நடத்தல் நமது குடும்பத்தினரோடு மாத்திரம் பின்பற்ற வேண்டுமா அல்லது நாம் காணும் யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டுமா?
பதில்: நமது ஆன்மீக பயிற்சிக்கு தடை ஏற்படாமல் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுது பின்பற்ற வேண்டும்.
உதாரணம் : யாரோ ஒருவர் நம்மிடம் தினமும் திரைப்படம் பார்க்க போக கேட்பாராக இருந்தால், அச்சமயம் நாம் கட்டுப்பாடாக இருக்கலாம். காரணம், வீட்டு வேலைகளுடன் ஆன்மீக பயிற்சியும் செய்ய வேண்டி இருப்பதால், தினமும் திரைப்படம் பார்பதற்குரிய நேரம் நம்மிடம் இல்லை. எனினும், நமது நண்பர் ஒருவர் வாரம் ஒரு தரம் திரைப்படம் பார்க்க கேட்டால், அது நேர விரயம் என நாம் நினைத்தால் கூட மற்றையவர் விருப்பப்படி நடக்கும் எண்ணத்தில் நாம் அவருடன் செல்லலாம்.
3. இன்னொருவர் விருப்பத்தை ஒருவர் கோவத்துடனும் எதிர்ப்புடனும் பின்பற்றினால் என்ன?
பதில் : மற்றையவர் விருப்பப்படி நடத்தலின் ஆன்மீக அனுகூலத்தை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும். புத்திபூர்வமாக புரிந்து கொண்டாலும் சில சந்தர்ப்பங்களில் மனதில் பல எதிர்ப்பும் எதிர் எண்ணங்களும் தோன்றலாம். இதை சரிசெய்ய சுய ஆலோசனைகளை வழங்கலாம்.