அட்டவணை
1. எப்படி இது ஆரம்பித்தது
SSRF-ன் ஊற்றுக்கண்ணாக விளங்கும், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகத்தின் ஸ்தாபகரான பராத்பர குரு, பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களால் இந்த தனித்துவமான வழிமுறை உருவாக்கப்பட்டது. அவரது வாழ்வின் முற்கட்ட பகுதியில் பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், வலுவான ஆராய்ச்சி பின்னணி அமைந்த க்ளினிகல் ஹிப்நோதேராபிஸ்ட்-ஆக இருந்தவர். அவர் இங்கிலாந்தில் பணியில் இருந்து கொண்டே இது பற்றிய ஆராய்ச்சியை 7 வருடங்கள் தொடர்ந்து செய்து அகில உலக அங்கீகாரம் பெற்றார். இது சம்பந்தமான ஆராய்ச்சி பத்திரிக்கைகளின் ஆசிரியராக விளங்கியவர். ஆளுமை முன்னேற்றம் மற்றும் க்ளினிகல் ஹிப்நோதேராபி பற்றிய கட்டுரைகள் பற்றிய அவரின் மதிப்பாய்வுரையை வெளியிட்டுள்ளார்.
அவர், வாழ்வின் பிற்பகுதியில் அவரின் குரு பக்தராஜ் மகாராஜ் அவர்களின் ஆசி மற்றும் வழிகாட்டுதலுடன் ஆன்மீகம் பக்கம் திரும்பினார். அப்பொழுது ஆன்மீகம் என்பது பரந்து விரிந்த விஞ்ஞானம் என்பதையும் நவீன விஞ்ஞானத்தைப் போலவே பகுத்தறிவு மிகுந்த விதிகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியது என்பதையும் அவர் உணர்ந்தார். ஒருவரின் ஆன்மீக பக்கம் அவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அதனால் சம்பவங்களை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்த 30 வருட காலகட்டத்தில் பல சாதகர்களோடு இணைந்து பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், ஆன்மீக பரிமாணம் சம்பந்தமாக ஈடு இணையில்லாத ஆராய்ச்சி செய்தார். இதன் மூலம் வாழ்வில் எம்மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது, மனித சரித்திரத்தின் போக்கை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் பதிவு செய்தார்.
2. மக்களின் ஆளுமை குறைகளின் பரிணாமம்
இன்று ஆண்களின் பெண்களின் ஆளுமை குறைகளால், அதிக அஹம்பாவத்தால், ஆன்மீக பரிமாணத்தை சேர்ந்த தீய சக்திகள் இவர்களைத் தூண்டி பல குரூர செயல்களை செய்ய வைக்கிறது. அதனால், மனிதன் இயற்கை மற்றும் சமூகத்திற்கு விரோதமாக நடக்கிறான். இதன் விளைவாக இயற்கை உத்பாதங்கள், கலவரங்கள், போராட்டங்கள், யுத்தங்கள் மற்றும் இனப்படுகொலைகள் போன்றவை உலகெங்கும் தீவிரமாக வெடிக்கின்றன. இந்த ஆளுமை குறைகளால் மனித இனம் 2017-ம் வருடத்தில் பெரும் மூன்றாம் உலக போரை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் உலகப் போரால் உலகம் சின்னாபின்னமாக்கப்பட்டு இயற்கை பேரழிவு ஏற்படும்போதே, மத கோட்பாடு என்ற போர்வையில் ஆளுமை குறைகளால் ஏற்பட்ட பேரழிவே இது என்று மக்கள் உணர்ந்து கொள்வர்.
இது போன்ற பேரழிவை எதிர்கொள்ளும்போது மனித இனம், திருந்த முயற்சித்து ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதலை நாடும். பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள் வகுத்துள்ள ஆளுமை குறைகளை நீக்கும் வழிமுறை, ஒட்டுமொத்த சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட உதவும். மனித மனம் மற்றும் ஆன்மீகத்தின் புரிதலுக்குரிய வலுவான ஆராய்ச்சி பின்னணி கொண்ட பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், மனித குலத்தின் ஆளுமை முன்னேற்றம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அதன் மூலம் சமூகத்தினரை புது யுகத்திற்கு அழைத்து செல்லும் தனித்துவ தகுதி பெற்றவர் என்பதை சரித்திரம் பதிவு செய்யும்.
3. ஆன்மீக முன்னேற்றத்தில் ஆளுமை குறைகளை களைதலின் ஊக்குவிக்கும் தாக்கம்
பிப்ரவரி 2017 வரை அவரின் வழிகாட்டுதலின் கீழ் 1002 சாதகர்கள் 60 சதவிகிதத்திற்கும் மேல் உயர் ஆன்மீக நிலை அடைந்துள்ளனர்; மற்றும் 69 சாதகர்கள் மகானின் நிலையை அடைந்துள்ளனர். உலக ஆன்மீக சரித்திரத்தில் இது போல் இதுவரை கண்டதில்லை. அதோடு ஆயிரக்கணக்கான சாதகர்கள், ஆளுமை குறைகளை களைதல் மற்றும் அஹம்பாவத்தை களைதல் வழிமுறைகளின் வெற்றிக்கு நேரடி நிரூபணமாக உள்ளனர். இவ்விரு வழிமுறைகளும் அவர்களின் ஆளுமை குறைகளான பயம், கோவம், பாதுகாப்பின்மை போன்றவற்றை வெற்றி கொள்ள வைத்து அவர்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அனைவரும் ஆனந்த வாழ்வு வாழவும் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும் இக்கட்டுரைகளை படிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.