ஆன்மீக ஆராய்ச்சியின் நோக்கங்கள்

ஆன்மீக ஆராய்ச்சியின் நோக்கங்கள்

1. ஆன்மீக அறிவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி பற்றிய வரைவிலக்கணம்

ஆன்மீக ஆராய்ச்சியின் நோக்கங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பின்வரும் வரைவிலக்கணங்களை  முதலில் ஆராய்வோம்.

1.1 ‘ஆன்மீகம்’ என்பதன் பொருள் என்ன?

ஆக்ஸ்போர்டு(Oxford) அகராதி ஆன்மீகத்தை ஒரு அடைமொழி என வரையறுக்கிறது

  • பொருள் அல்லது ஸ்தூல விஷயங்கள் அல்லாது மனித ஆத்மாவுடன் தொடர்புடையது அல்லது பாதிப்பை ஏற்படுத்தவல்லது
  • மதம் அல்லது மத நம்பிக்கைக்குத் தொடர்பானது.

ஆன்மீகத்தின் வரைவிலக்கணம் : ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ். எஸ். ஆர்.எஃப்) ‘ஆன்மீகம்’ என்பது ஐம்புலன்கள்,மனம் (அதாவது நமது உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள்) மற்றும் புத்தி (அதாவது நமது முடிவெடுக்கும் மற்றும் பகுத்தறியும் திறன்) ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது.

1.2 அறிவியல் மற்றும் ஆன்மீக அறிவியல் :

ஆக்ஸ்போர்டு அகராதியின்படி, ‘அறிவியல்’ என்ற சொல் “லத்தீன்” வார்த்தையான ‘சயின்யா’ என்பதிலிருந்தும், ‘அறிதல் என்று பொருள்படும்’ ஸ்கியர் என்ற வார்த்தையிலிருந்து  உருவானது என்று கூறுகிறது. ஒரு பெயர்ச்சொல்லாக அறிவியலை,அகராதி பின்வருமாறு வரையறுக்கிறது

  • அறிவார்ந்த மற்றும் நடைமுறைசெயல்பாட்டின் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மூலம், இயற்பியல் சார்ந்த இயற்கை உலகின் கட்டமைப்பு மற்றும் நடத்தை பற்றிய முறையான ஆய்வை உள்ளடக்கியது.
  • எந்தவொரு விஷயத்தின் பொருளையும் முறையான ஞானம் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது

அறிவியலின் வரைவிலக்கணம் : ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை, மேலே உள்ள வரைவிலக்கணத்துடன் இணைந்து, ஸ்தூல உலகம்,இயற்கை மற்றும் ஆன்மீக உலகத்தை உள்ளடக்கி ‘அறிவியல்’ என்ற வார்த்தையின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது. இனம், பாலினம், மதம், தேசம் ஆகிய அனைத்திலும்,ஒரே மாதிரியான சோதனை நிலைமைகளின் கீழ் அனைவரும் மீண்டும் மீண்டும் அனுபவிக்கக்கூடிய ஒன்றாக அறிவியலைக் கருதுகிறது

ஆகையால், நாம் ஆன்மீக அறிவியலை (ஆன்மீகத்தை) ‘அறிவியல்’ என்று அழைக்கிறோம்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப். சூட்சும உலகம்\' அல்லது \'ஆன்மீக பரிமாணம்\' என்ற சொல்லை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்ட உலகம் என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது தேவதைகள், பேய்கள், சுவர்க்கம் போன்ற கண்ணுக்குத் தெரியாத உலகத்தை குறிக்கிறது, இது நமது ஆறாவது அறிவின் மூலமே உணர முடியும்.
  • ஆன்மீக பரிமாணமானது ஸ்தூல உலகத்தைப் போலவே முறையானதும், தர்க்கரீதியானதுமாகும்.
  • ஸ்தூல உலகைப் போல ஆன்மீக அல்லது சூட்சும பரிமாணத்தில் நடக்கும் அனைத்தின் காரணங்களையும் புரிந்து கொள்ள முடியும்
  • ஸ்தூலத்தைப் போலவே சூட்சும பரிமாணத்திலும் காரணமும் விளைவு தன்மையும் இருப்பது உண்மை. ஆன்மீக ஆராய்ச்சி என்பது இந்த சூட்சும மற்றும் தெளிவாகத் தெரியாத ‘காரணங்களை’ புரிந்துகொள்வதாகும்.
  • ஆன்மீகப்பரிமாணத்தின் கோட்பாடுகளை தேவையான கருவிகள் கொண்டு மீண்டும் மீண்டும் சோதிக்க முடியும். இயற்பியலுக்கும் உயிரியலுக்கும் ஆராய்ச்சிக் கருவிகள் எப்படி வேறுபடுகிறதோ, அதுபோலவே ஆன்மீகத்திற்கும் தனித்துவமான கருவிகள் தேவைப்படுகிறது. ஆன்மீக ஆராய்ச்சியில், பகுப்பாய்வு மற்றும் அளவீட்டிற்குத் தேவையான முக்கிய கருவியானது, சூட்சும உணர் திறன் ஆகும். இது ஆறாவது அறிவு (புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட உணர்வு) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது

1.3 ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி:

ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஆராய்ச்சி’ என்பது உண்மைகளை நிறுவுவதற்கும் புதிய முடிவுகளை எட்டுவதற்கு,பொருட்கள் மற்றும் ஆதாரங்களின் மூலம் செய்யப்படும் முறையான ஆய்வு என்று வரையறுக்கிறது. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வை ஆய்வு செய்வது முறையானதாக இருந்தாலும், நவீன அறிவியலில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, அதே பரிமாணத்தில் செய்யப்படுவதில்லை.

ஆன்மீக ஆராய்ச்சி என்பது ஒரு மேம்பட்ட ஆறாவது அறிவின் (புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட உணர்வு) உதவியுடன் ஆன்மீகப் பரிமாணம் அல்லது ஆன்மீக உலகத்தை ஆராய்ச்சி செய்வதாகும். சுவர்க்கம்,நரகம்,தேவதைகள்,ஆவிகள்,ஒளி மண்டலம்,ஆவிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆன்மீக உலகத்தை நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி மூலம் உணர முடியாது.

ஆன்மீக ஆராய்ச்சி 4வது மற்றும் 5 வது பரிமாணத்துடன் தொடர்புடையது. காலம் 4 வது பரிமாணத்திற்கு உரியது என்றும் கண்ணுக்குத் தெரியாத வெற்றிடம் 5 வது பரிமாணமாகவும் கருதப்படுகிறது

நான்காவது பரிமாணத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி என்பது இப்பிறவில் ஒருவர் எதிர்கொள்ளும் நேர்மறை அல்லது எதிர்மறை நிகழ்வுகளுக்கு அடித்தளமாக விளங்கும் முப்பிறவி நிகழ்வுகள் அல்லது செயல்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆகும். உதாரணமாக, முப்பிறவியில் ஆன்மீக பயிற்சியில் ஒருவர் ஈடுபட்டிருந்தால்,இப்பிறவில் அவர்களின் வெற்றிக்கு அது பங்களித்ததா என்பதை ஆன்மீக ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தலாம்.

ஐந்தாவது பரிமாணத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி, பிரபஞ்சத்தின் சூட்சும உயர் லோகங்கள்  மற்றும் எதிர்மறை பகுதிகளுக்கு விரிவடைந்து, நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மூல காரணங்களைக் கண்டறியும் ஆராய்ச்சியாகும்.உதாரணமாக, லூயிஸின் வாழ்க்கையில் ஐந்தாவது பரிமாணத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சியின் போது, சூட்சும சூனியக்காரியின் கைதேர்ந்த வேலையால், அவர் அதிகப்படியான பாலியல் எண்ணங்களின் தொந்தரவால் அவதிப்படுகிறார் என்ற ஆன்மீக மூல காரணம் கண்டறியபட்டது

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும், நவீன அறிவியலை சரியான திசையில் வழிநடத்தி செல்லவும் முதல் மூன்று பரிமாணங்களில் கூட ஆன்மீக ஆராய்ச்சி நடத்தப்படலாம். அறிவியல் ஆராய்ச்சிக்கு தேவையான உதவி ஆன்மீக ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்டால், எல்லோருக்கும் பலனளிக்கும் விதமாக ஆராய்ச்சி வெற்றிபெறவும்,ஒருவரின் பல வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பு தவறான திசை நோக்கி செல்வதிலிருந்து தவிர்க்கப்படலாம்

2. ஆன்மீக ஆராய்ச்சியின் நோக்கமும் குறிக்கோளும்

நமது வாழ்க்கையில் ஏற்படும் 80% பிரச்சனைகளுக்கு ஆன்மீக பரிமாணமே காரணமாக உள்ளது. இது 1985 ஆம் ஆண்டு முதல் ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய நமது ஆராய்ச்சியிலும், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின் மூல காரணங்களைப் பற்றிய ஆய்விலும் நிரூபிக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரமாகும். இதன் அர்த்தம் யாதெனில், நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மூல காரணத்தை கண்டுபிடிப்பதில் ஆன்மீக பரிமாணத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், 80% இழப்பு நேரிடலாம்.

வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் மூல காரணங்கள்’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் யின் ஆன்மீக ஆராய்ச்சியின் நோக்கம் :

  1. ஒருவரது வாழ்வில் ஆன்மீக பரிமாணம் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை சமூகத்திற்கு எடுத்துரைத்தல்
  2. இந்த புரிதலுக்கான கருவிகளை மக்களுக்கு வழங்கி :
    1. ஆன்மீக பரிமாணத்தைப் புரிந்துகொண்டு அனுபவிக்க உதவுதல்
    2. ஆன்மீக மூல காரணங்களால் எற்படும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு சமாளிக்க உதவுதல்
    3. நித்திய ஆனந்தத்தை பெற உதவுதல்.