பலர் ஆன்மீக பயிற்சியை தொடங்குகின்றனர், ஆனால் இறுதிவரை முடிப்பவர் மிகச்சிலரே. ஒரு வருடம் ஆன்மீக பயிற்சியில் நிலைத்து நீடிப்பவர் கூட மிகச்சிலர், அதிலும் சிலரே ஆன்மீக முன்னேற்றம் அடைகின்றனர். ஏன் இவ்வாறு நடக்கின்றது? மெய்யான ஸாதகர்களுக்கு (ஆன்மீக பயிற்சி செய்பவர்கள்) பற்றாக்குறை என்பது அர்த்தமல்ல. உண்மையாக இறைவனை உணர விரும்பும் ஸாதகர்கள் நிச்சயமாக உள்ளனர். ஆன்மீகம் என்பது சிலருக்கு மட்டும் முன்னேற்றத்தைக்கொடுக்கும் என்பதுமல்ல. ஆன்மீகமென்பது உலகளாவியது. யாரும், ஏன் கெட்ட மனிதன் கூட மனமார நேர்மையாக ஆன்மீக பயிற்சி செய்யும்போது இறையுணர்வை பெறமுடியும். பலர் ஆன்மீகத்தை கைவிடுவதற்கு காரணம், அவர்களுடைய ஆன்மீக பயிற்சியானது உலகளாவிய பொதுக்கோட்பாடுகளுக்குட்பட்டதாக இல்லாமையாகும். ஒரு ஸாதகன் தெரிந்தோ தெரியாமலோ இக்கோட்பாடுகளை புறக்கணிக்கும்போது ஆன்மீக பயிற்சியில் முடக்கம் அல்லது பின்னடைவு கூட ஏற்படலாம். இது எவ்வாறென்றால், மலையேறுபவன் புவியீர்ப்புச்சக்தியை புறக்கணிப்பது போலாகும். காலப்போக்கில் அவ்வாறான ஸாதகர்கள் ஆன்மீகத்தில் பெரும் ஏமாற்றத்தையடைந்து இதில் ஒரு உண்மையுமில்லை என முடிவிற்கு வருகின்றனர். ஆகவே, இவ்வாறு ஸாதகர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற வாழ்க்கையை தவறான ஆன்மீக பயிற்சியில் வீணடிப்பதை தடுப்பதற்காக SSRF மிக முக்கியமான ஆன்மீகக்கோட்பாடுகளை இப்பகுதியில் ஒருங்கிணைத்துள்ளது.
ஸாதகர்களே! இக்கோட்பாடுகளை புரிந்து கொள்ளுங்கள். தினமும் நேர்மையாக பயிற்சி செய்யுங்கள். ஆன்மீக முன்னேற்றம் உங்களுடையதே!