உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப்.பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேள்வி 1: நான் எத்தனை முறை எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை ஏற்ற வேண்டும்?
பதில்: ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை வரை ஊதுபத்திகளை ஏற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு நபர் அல்லது வளாகம் அனுபவிக்கும் கஷ்டத்தின் அளவைப் பொறுத்தது. குறிப்பாக சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரத்தில் ஊதுபத்திகளை ஏற்றி வைப்பது நன்மை பயக்கும். சூரிய உதயத்தில் ஏற்றி வைப்பது, இரவில் உருவாகியிருக்கும் தீய கருப்பு சக்திகளை அகற்ற(அழிக்க) உதவுகிறது. மற்றும் சூரிய அஸ்தமனத்தில் ஏற்றி வைப்பது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஆவிகளால் உருவாக்கப்படும் கருப்பு சக்தியைக் குறைக்க உதவும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகும்.
ஒருவர் தூங்குவதற்கு முன் ஊதுபத்திகளை ஏற்றுவதால், தூக்கத்தின் போது ஆவிகள் அல்லது மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் தாக்குதல்களை குறைக்கலாம்.
கேள்வி 2: நான் ஒரு நேரத்தில் எத்தனை எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை ஏற்ற வேண்டும்?
பதில்: இது ஒருவரது ஆன்மீக நிலை மற்றும் அவர் அனுபவிக்கும் அல்லது அந்த வளாகத்தில் இருக்கும் தீயசக்திகளின் பாதிப்பின் அளவைப் பொறுத்தது. இங்கு ஆன்மீக நிலை என்பது ஒரு நபரின் ஆன்மீக முதிர்ச்சி அல்லது ஆன்மீகத் திறனைக் குறிக்கிறது, மேலும் இது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடனான நமது அடையாளத்தைக் குறைத்து, உள்ளிருக்கும் கடவுளை (ஆன்மாவை) அடையாளம் காணும் ஒரு செயவாகும்.
ஆன்மீக நிலை படி:
- 60% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ளவர்களது உள்ளார்ந்த ஆன்மீக பலம் அதிகமாக இருப்பதால் ஊதுபத்திகள் ஏற்ற தேவையில்லை.
- 50-60% ஆன்மீக நிலையில் உள்ளவர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஊதுபத்தியை ஏற்றினால் போதும்.
- 50% க்கு கீழே ஆன்மீக நிலையில் உள்ளவர்கள், அவர்களுக்கு உண்டான நன்மைகளை அடைய குறைந்தபட்சம் இரண்டு ஊதுபத்திகளையாவது ஏற்ற பரிந்துரைக்கப்படுகிறது.
கஷ்டங்களின் அளவைப் பொறுத்து: சராசரியாக எந்த நேரத்திலும் இரண்டு ஊதுபத்திகள் ஏற்றுவது போதுமானதாகும். இருப்பினும், கஷ்டங்கள் அதிகமாக இருந்தால், ஒரு நாளைக்கு ஐந்து முறை, ஐந்து ஊதுபத்திகளை ஏற்றி ஆன்மீக முறையில் வளாகத்தைச் சுத்தப்படுத்தலாம் அல்லது ஒரு நபரின் மேலுள்ள கருப்பு படலத்தை குறைக்கலாம்.
கேள்வி 3: நான் எவ்வாறு ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளைப் பயன்படுத்துவது?
பதில்: ஒரு வளாகத்தை ஆன்மீக ரீதியில் சுத்தம் செய்ய, ஒரு தட்டில் ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்திகளை வைத்து வீட்டைச் சுற்றி வரவேண்டும். இதனால் சாம்பலானது அந்தத்தட்டில் சேகரிக்கப்பட்டு மிதிபடாமல் தடுக்கப்படுகிறது. ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்திகளை கொண்ட தட்டுகளை வீட்டைச் சுற்றி வலஞ்சுழியில், சுவர்கள் மற்றும் மூலைகளுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்வது நல்லது. அவ்வாறு செல்லும்போது மனத்திற்குள்ளோ அல்லது சத்தமாகவோ கடவுளின் நாமத்தை ஜபித்துக் கொண்டு செல்லுவது கூடுதல் நன்மையைத் தரும்.
கடவுளின் எந்த நாமத்தை ஜபிப்பது என்ற எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.
ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி ஊதுபத்திகளை ஏற்றி வைப்பது நல்லது.
கேள்வி 4: ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் விளைவின்(பலன்) ஆரம் என்ன?
பதில்: ஒரு ஊதுபத்தியின் அதிகபட்ச விளைவு அனைத்து திசைகளிலும் 5 மீட்டர் ஆரம் ஆகும். மேல்தளம், கீழ்த்தளம் போன்ற அனைத்து திசைகளும் இதில் அடங்கும். இந்த விளைவு மாடிகளுக்கு இடையில் செல்வதற்கான காரணம் என்னவென்றால், ஆன்மீகத்தில் பெரும்பாலானவை சூட்சுமமானவை, அவற்றை நம்மால் பார்க்க முடியாது.
வீட்டைச் சுற்றி ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்தியை எடுத்துச் சென்று, அதை ஒரு மைய இடத்தில் வைத்தால், 2-4 படுக்கை அறைகள் கொண்ட சாதாரண வீட்டிற்கு போதுமானதாக இருக்கும். மேலும் சில அறைகளில் சூட்சும நிலையில் தீய சக்திகளின் அழுத்தத்தை உணர்ந்தால் அந்த அறைகளில் ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்திகளை வைக்கலாம்.
கேள்வி 5: எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக் காரணம் என்ன?
பதில்: ஊதுபத்திகளின் நறுமணத்தால் ஒருசில மக்களுக்கு ஏற்படும் ஒவ்வாமைக்கு பின்வரும் காரணங்களை ஆன்மீக ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
பரிமாணம் | பங்களிப்பு | காரணத்திற்கான உதாரணம் |
---|---|---|
உடல் ரீதியாக |
30% |
உடல் ஒவ்வாமையினால் ஏற்படும் எதிர்வினை |
உளவியல் ரீதியாக | 20% | குழந்தைப் பருவத்திலோ அல்லது கடந்த பிறவியிலோ
சில தீப்பொறி அல்லது சிறிய தீயினால் எற்பட்ட அதிர்ச்சியுடன் தொடர்புடையவை |
ஆன்மீக ரீதியாக | 50% | உணர்வதால், அந்நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு,அதனால் அவர் ஊதுபத்திகளை ஏற்றமாட்டார். |
கேள்வி 6: எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் எனக்கு உகந்த (ஏற்ற) நறுமணம் எது?
பதில்: தற்காலத்தில் ஏற்படும் தீய சக்தியின் பாதிப்பிற்கேற்றவாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப்(SSRF) குறிப்பிட்ட நறுமணத்துடன் கூடிய ஊதுபத்திகளை உருவாக்கி வருகிறது. மேலும் அவை ஆன்மீக தூய்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன.
நமக்கு எந்த நறுமணத்துடன் கூடிய ஊதுபத்தி தேவை என்பதை சுய பரிசோதனை செய்து கண்டறிவதே மிக சிறந்த வழியாகும். உங்களுக்கு தலைவலி போன்ற அதிகபட்ச கஷ்டங்களைத் தரும் ஊதுபத்தியின் வாசனைகளே மிகவும் அவசியமானது. ஏனென்றால், அவற்றிலிருந்து வெளிப்படும் நல்ல சக்திகளுக்கும்,உங்களைத் தொந்தரவு செய்யும் தீயசக்திகளுக்கும் இடையே நடக்கும் சூட்சும யுத்தத்தின் காரணத்தாலேயே, தலைவலி, மூச்சுத் திணறல் அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
கீழே உள்ள அட்டவணையில், ஒருவருக்கு சராசரியாக நறுமணங்களில் கிடைக்கும் ஆன்மீக நிவாரணத்தின் சாத்தியக்கூறுகளை வழங்கியுள்ளோம். உங்களுக்கான பரிசோதனையை நித்யமல்லியின் நறுமணத்துடன் தொடங்கலாம்.
ஊதுபத்தியின் நறுமணம் | ஆன்மீக நிவாரண முறைக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு |
---|---|
நித்யமல்லி | 30% |
தாழம்பூ | 20% |
சந்தனம் | 20% |
குண்டுமல்லி | 10% |
இயற்கை சாறுகள் | 10% |
கேள்வி 7: நான் எத்தனை முறை எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை அடுத்தடுத்து ஏற்றி வைக்க வேண்டும்?
பதில்: ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தி முழுமையாக எரிவதற்கு சுமார் 40-45 நிமிடங்கள் ஆகும். அது எரிந்த பிறகு அந்த இடத்தில் நேர்மறை விளைவு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒருவர் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை எரித்த பிறகும் கஷ்டம் குறையவில்லை என்று உணர்ந்தால், இரண்டாவது முறை ஏற்றி வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதன் நேர்மறை விளைவு சுமார் 25 நிமிடங்களுக்கு நீடிக்கும். அதற்குப் பிறகு 3வது முறை ஏற்றி வைப்பது குறிப்பிடத்தக்க பலனைத் தராது.
கேள்வி 8: எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை ஏற்றி வைப்பதன் மூலம் நான் எந்த விதமான பலனை எதிர்பார்க்க முடியும்?
பதில்: முந்தைய கட்டுரையில் விளக்கியது போல், எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகள் எரியும்போது, அதில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட நறுமணங்களால், கடவுளின் குறிப்பிட்ட அம்சங்கள் ஈர்க்கப்படுகின்றன. அந்த தெய்வீகத் தத்துவங்களின், தெய்வீக உணர்வினால் (சைதன்யம்) அருகில் இருப்பவர்கள் பயனடைகிறார்கள். ஒருவருக்கு மறைந்த முன்னோர்கள் அல்லது பேய்களால்(பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஏதேனும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தால், இந்த தெய்வீக உணர்வு தீயசக்திகளை எதிர்த்துப் போராடுவதால், அந்த நபர் அனுபவித்த கஷ்டங்களுக்கான அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறுவார். ஆனால் ஒருவருக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என்றால், அவர் ஓய்வு நிலை, நாமஜபத்தில் முன்னேறிய நிலை, சிந்தனையற்ற நிலை, தியான நிலை போன்ற முறைகளில் நல்லனவற்றை அனுபவிப்பார்.
அதே போல வசிப்பிடத்தில் உள்ள தீயசக்திகள் அகற்றப்பட்டு நல்ல சக்திகள் நிறைந்து இருக்கும்.