ஆன்மீகத்தை அனுபவபூர்வமாக உணர வேண்டும்
ஆன்மீக விஷயங்களில், வார்த்தைகள் 2% முக்கியத்துவம் கொண்டவை, ஆனால் அனுபவமோ 98% முக்கியத்துவம் வாய்ந்தது.
வரைபடத்தில், நாம் இரண்டு குன்றுகளைக் காண்கிறோம், அவற்றுக்கு இடையே ஒரு பள்ளத்தாக்கு உள்ளது. ஒருவர் எவ்வாறு வெறுமனே அறிவுபூர்வமான ஞானத்திலிருந்து கடந்து சென்று மறு புறம் ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வது?
நீங்கள் பார்க்கும் இந்த பாலம் “ஆன்மீக பயிற்சியை” குறிக்கிறது. அதுவே அறிவுபூர்வமான ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வதற்கான திறவுகோல். ஆன்மீகத்தை படிக்கும் அல்லது செவிமடுக்கும் சிறந்த அறிவாளிக்கும் ‘ஆன்மீக பயிற்சி’ என்பது ஒரு தடைக்கல்லாக விளங்குகிறது. இதன் காரணம் பெரும்பாலான அறிவாளிகள் வார்த்தைகளில் சிக்குண்டு புனித நூல்களை பற்றிய விவாதங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இறுதியில் ஒருவர் ஆன்மீகத்தையும் புனித நூல்களில் கூறப்பட்டதையும் அனுபவபூர்வமாக உணர வேண்டும் (‘ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்)
அறிஞரும் படகோட்டியும் என்கிற பிரபலமான கதை மூலம் இதனை புரிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை ஒரு ஏழை படகோட்டி ஒரு அறிஞரை தன் படகில் ஏற்றி ஆற்றை கடந்து கொண்டிருந்தான். படகு சவாரியின் போது, அவர்கள் உரையாடலில் ஈடுபட்டார்கள். அறிஞர் பல புனித நூல்களைக் குறிப்பிட்டு, அவைகளை படித்திருக்கிறாயா என்று படகோட்டியிடம் கேட்டார். படகோட்டி இல்லை என்று பதிலளித்தபோது, ‘உன்னுடைய பாதி வாழ்நாளை நீ வீணடித்து விட்டாய்’ என்றார் அறிஞர். இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது படகில் ஒரு கசிவு ஏற்பட்டு, தண்ணீர் விரைவாக படகுக்குள் வந்தது. இதைப் பார்த்த படகோட்டி, ‘ஐயா, நீங்கள் நீந்துவீர்களா?’ என்று பண்டிதரிடம் கேட்டார். பண்டிதர் அதற்கு , ‘நீச்சல் பற்றி பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன், அது சம்பந்தமாக நிறைய தகவல்கள் சேகரித்து வைத்துள்ளேன், ஆனால் எனக்கு நீந்தத் தெரியாது’ என்று பதிலளித்தார். அதற்கு படகோட்டி ‘இந்த படகு மூழ்கப் போகிறது, உங்கள் முழு வாழ்நாளும் வீணாகிவிட்டதே!’ என்றான்.
அறிஞரின் ஏட்டறிவு அவருக்குப் பயன்படவில்லை. அதேபோல், இந்த வாழ்க்கை என்ற பரந்த கடலை கடக்க புத்தக அறிவை மட்டும் பெறாமல் ஆன்மீகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அதன் வழியாக மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்,