ஸங்கல்பத்தின் செயல்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின் மூலம் விவரிக்கப்படும்.
நம் மனதின் சக்தி 100 அலகுகள் என வைத்துக் கொள்வோம். நாள் முழுவதும் நம் மனதில் எண்ணங்களின் ஓட்டம் வெள்ளமாகப் பாய்கின்றது. நமது எண்ணங்கள் நமது வாழ்வின் நிகழ்வுகளைக் குறித்து பல்வேறு பரிமாணங்களில் சஞ்சரிக்கிறது. உதாரணமாக வேலை பார்க்கும் அலுவலக நிகழ்வுகள் குறித்தோ அல்லது நமது குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தோ அல்லது அந்த வார முடிவில் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிய திட்டம் குறித்தோ அதாவது, நான் அலுவலகம் செல்ல வேண்டும், இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும், இந்த நபரை சென்று சந்திக்க வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் எழலாம். ஒவ்வொரு சிந்தனைக்கும் அதை செயல்படுத்துவதற்கும் நமது 100 அலகுகள் சக்தியிலிருந்து சிறிது சக்தி செலவழிகிறது. நாள் முழுவதும் பற்பல எண்ணங்களால் மனம் அலைக்கழிக்கப்படுவதால் அதிக சக்தி செலவிட நேர்கிறது.
ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன் அந்த எண்ணப்பதிவுகள் ஆழ்மனதில் பதிவாக ஆரம்பிக்கின்றன. இது பற்றிய விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ள பின் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்கவும்.
- பக்தி மையத்தை உருவாக்குதல்.
- நாமஜபத்தின் மூலமாக எண்ண ஓட்டங்கள் எவ்வாறு தடுக்கப்படுகிறது.
ஆன்மீக பயிற்சியை அதிகரிப்பதன் மூலமாக ஆன்மீக எண்ணப்பதிவுகள் வலுவடைகின்றன. அதன் மூலம் தேவையில்லாத வேண்டாத எண்ணங்கள் எழுவது தடுக்கப்படுகிறது. இது ஆன்மீக பயிற்சிக்கு மேலும் வலுவூட்டுகிறது. அதனால் ஒருவர் தன்னைப் பற்றி இறைவன் எப்படி கருணையுடன் அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்னும் ஆன்மீக அனுபவத்தை உணரத் துவங்குகிறார். அதற்கேற்றாற்போல் எதிர்பார்ப்பும், தான் செய்கிறோம் என்ற அஹம்பாவமும் அவரது வாழ்க்கையில் குறைய ஆரம்பிக்கிறது. அஹம்பாவம் குறைதல் என்பதன் பொருள் என்னவெனில் நாம் இறைவனது சேவையில் தியாக உணர்வுடன் அதிகம் ஈடுபட ஆரம்பிக்கும்போது இறைவனே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறார் என்று உணர ஆரம்பிக்கிறோம்.
அதன் பயனாக, ஒருவர் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அதாவது 70%-க்கு மேல் அடைந்து எண்ணங்கள் அற்ற நிலையை நோக்கி செல்கிறார். இந்த எண்ணங்கள் அற்ற உயர்ந்த நிலையை அடைந்த பின், ‘இது நடக்கட்டும்’ என அவரது மனதில் ஒரு எண்ணம் எழுந்தால் 100% சக்தியின் உந்துதலினால் அந்த ஸங்கல்பம் நிகழ்ந்து உண்மையாக மாறுகிறது. அந்த எண்ணமும் இறைவன் தொடர்பான எண்ணமாக இருந்தால் அவரது ஆன்மீக பயிற்சி வீணாவதில்லை. அந்த காரியம் இறைவனது காரியமாக இருப்பதால், அதாவது ஸத்யத்தை பரப்பும் காரியமாக இருப்பதால் இறைவனே அதை நிறைவேற்றி விடுகிறார்.