ஒருவரை சுற்றியுள்ள கருப்பு சக்தி படலத்தை அகற்றுவது, அவருக்கு உடல், உளவியல் மற்றும் ஆன்மீக நிலையில் பலனளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உடல் மற்றும் மன நோய்களைக் கூட குறைக்கும்.
1. கருப்பு படலம் – அறிமுகம்
சிறுவயதிலிருந்தே, ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் குளிக்க வேண்டும் என்ற பழக்கத்தை நம் பெற்றோர்கள் நமக்குள் விதைத்து இருக்கிறார்கள். சில நேரங்களில் தேவைப்பட்டால், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கூட நாம் குளிக்கின்றோம். இது நமது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் ஓரளவுக்கு ஆன்மீகப் பலனும் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் தினமும் நம்மை ஆன்மீக நிலையில் சுத்தம் செய்ய கற்றுக்கொள்ளவில்லை. தினமும் நம்மைச் சுற்றி ஒரு கருப்பு சக்தி படலம் உருவாகிறது. இயற்கையிலேயே சூட்சும நிலையிலுள்ள இதை நம்மில் பெரும்பாலோரால் உணர முடிவதில்லை, ஆனால் அது உடல், உளவியல் மற்றும் ஆன்மீக நிலையில் எதிர்மறையாக (தீய வழியில்) நம்மை பாதிக்கிறது. இந்த கட்டுரையில், ஒருவருக்கு கருப்பு சக்தி படலம் உள்ளதா என்பதைக் கண்டறிவது மற்றும் அதை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில நடைமுறை உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளோம். இவை ஒருவருக்கு தினமும் குளிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2. கருப்பு சக்தி படலத்தின் அறிகுறிகள் மற்றும் உணர்வுகள் – நம்மைச் சுற்றி ஒரு கருப்பு சக்தி படலம் உருவாகியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது?
ஒருவருக்கு ஏற்படும் கருப்பு சக்தி படலத்தின் பாதிப்பை மிக துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கு, அவருக்கு ஆறாவது அறிவு விழிப்புடன் இருக்க வேண்டும்.(செயல்திறனுடன் இருத்தல் அவசியம்)
இருப்பினும், கருப்பு சக்தி படலம் இருப்பதற்கான சில உடல் மற்றும் உளவியல் ரீதியான அறிகுறிகள் பின்வருமாறு.
- உடலளவில் ஒரு இறுக்கமான ஒரு உணர்வு(மனச்சுமை)
- மந்தமாக உணர்தல்
- உடல் முழுவதும் கருப்பு படலம் ஏற்பட்டிருந்தால், நம் உடலைச் சுற்றி ஏதோ ஒருவித கவசம் இருப்பதாக உணரலாம்.
- உடலின் குறிப்பிட்ட பாகங்கள் கருப்பு சக்தியால் மூடப்பட்டிருந்தால், அந்த இடங்களில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் காணப்படலாம். உதாரணத்திற்கு :
- கருப்பு படலம் தலையில் இருந்தால், யாரோ ஒருவர் தலையை மேலே இருந்து அழுத்துவதை போன்று உணரலாம் அல்லது தலையில் கிரீடம் அல்லது தொப்பி இருப்பதை போன்று உணரலாம். இது பெரும்பாலும் புரிந்துகொள்ளும் மற்றும் முடிவெடுக்கும் திறன் குறைவதற்கும் குழப்பமாக உணருவதற்கும் வழிவகுக்கிறது.
- படலம் கண்களில் இருந்தால், கண்களுக்கு முன்னால் ஒரு சூட்சும திரை அல்லது மங்கலான பார்வையை உணரலாம்.
- படலம் மார்பில் இருந்தால், யாரோ ஒருவர் நம் சுவாசத்தில் தடையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவோ அல்லது மார்புப் பகுதியில் அசௌகரியம் ஏற்படுவதையோ உணரலாம்.
ஒருவர், ஆன்மீகப்பயிற்சியின் மூலம், கருப்பு சக்தி படலத்தை உணரும் சூட்சும திறனை பெறுகிறார். அப்படிப்பட்டவர்கள் கருப்பு சக்தி படலம் உள்ள ஒருவரைப் பார்க்கும்போது, அந்த நபரின் முகத்தை தெளிவாகப் பார்க்க முடியாததை போன்று உணருவார்கள். அது அவர்களுக்கு மங்கலாகத் தோன்றும். மேலும் கருப்பு படலம் உள்ளவருக்கு அருகாமையில் இருக்கும்போது, சூட்சும அழுத்தம், குமட்டல் மற்றும் சில சமயங்களில் துர்நாற்றத்தையும் அவர்கள் அனுபவிக்கலாம்.
3. தற்போது மக்கள் மீது கருப்பு சக்தி படலம் எந்த அளவிற்கு உள்ளது ?
ஆறாவது அறிவின் மேம்பட்ட நிலையின் மூலம் மட்டுமே கருப்பு சக்தி படலத்தின் அளவை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆறாவது அறிவு பார்வை மேம்பட்ட நிலையில் உள்ளவர்களால் மட்டுமே படலத்தின் அளவை பார்வையினாலேயே கவனிக்க முடியும். சூட்சும அதிர்வலைகளை உணரும் திறன் உள்ளவர்கள் அவர்களின் கைகளால், ஒரு நபரை மூடியுள்ள படலத்தின் அளவை அவர்களின் சூட்சும கர்மேந்த்ரியங்கள் மூலமாக உணர முடியும். உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்களின் கருப்பு சக்தி அளவீட்டு கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும்
கீழே உள்ள அட்டவணையில், பல்வேறு நபர்களிடம் காணப்படும் கருப்பு சக்தி படலத்தின் தோராயமான மதிப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம்.
மனிதர்களின் வகை | சராசரியாக படலத்தின் அளவு (செமீ அல்லது மீட்டரில்) | அதிகபட்சமாக படலத்தின் அளவு (செமீ அல்லது மீட்டரில்) |
---|---|---|
தற்போதைய காலகட்டத்தில் சராசரி நபர் 1 | 20 செமீ | 30 செமீ |
சராசரி நபர் (கடுமையான கஷ்டம் உள்ளவர் அல்லது தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்) 2 | 1.5 மீட்டர் | 4 மீட்டர் |
ஸாதகர்கள் (ஸமஷ்டி ஸாதனா செய்பவர்) 3 | 3 செமீ | 5 செமீ |
ஸாதகர்கள் (ஸமஷ்டி ஸாதனா செய்பவர் மற்றும் கடுமையான கஷ்டம் உள்ளவர் அல்லது தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்) 4 | 2 மீட்டர் | 5 மீட்டர் |
தரவுகளின் ஆதாரம்: ஆறாவது அறிவின் மேம்பட்ட நிலை மூலம் மகரிஷி அத்யாத்மா விஸ்வவித்யாலயா (மகரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது), கோவா, இந்தியா வில், ஜூன் 2020, அன்று நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி மூலமாக நாம் கண்டறிந்தது பின்வருமாறு.
அடிக்குறிப்புகள்:
- உலக மக்கள் தொகையில் தோராயமாக 50% பேர் தீய சக்திகளால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலக மக்கள்தொகையில் தோராயமாக 30% பேர் தீய சக்திகளால் பீடிக்கபட்டுள்ளனர் அல்லது அவைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
- ஸமஷ்டி ஸாதனா என்பது சமூகம் ஆன்மீக வழியில் வளர்வதற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சியாகும். உயர்நிலை தீய சக்திகள் சமுதாயத்தில் ஆன்மீகத்தை பரப்புவதையும் அதனால் உருவாகும் நேர்மறையையையும் தடுப்பதற்காக அத்தகைய ஸாதகர்களைத் தாக்குகின்றன. அவர்கள் தீய சக்திகளால் தாக்கப்பட்டாலும், கடவுளிடமிருந்து தெய்வீக பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.
- சில ஸாதகர்கள் ஆன்மீகப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பே தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் ஆன்மீகப் பயிற்சியில் தடைகளை உருவாக்க அவை அவர்களை அதிக அளவில் தாக்குகின்றன. இருப்பினும், தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சியால், அவர்கள் மீது உள்ள தீயசக்திகளின் பிடி குறைகிறது. ஸமஷ்டி ஸாதனா என்பது அத்தகைய ஸாதகர்கள் தங்கள் கஷ்டங்களை உரிய நேரத்தில் சமாளித்து கடவுளின் அருளைப் பெற உதவுகிறது.
4. கருப்பு படலத்தின் வகைகள் மற்றும் அம்சங்கள்
கருப்பு சக்தி படலம் பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம். மேலும் ஒரு நபருக்கு பின்வரும் வகையான உணர்வுகளை உருவாக்கலாம்.
- ஒரு வட்ட வளையம்/கிரீடம் தலையைச் சுற்றி உள்ளது போன்ற உணர்வு
- கண்களுக்கு திரையிடப்பட்டது போன்ற உணர்வு
- உடலைச் சுற்றி ஒரு போர்வை மூடப்பட்டிருப்பது போன்ற உணர்வு
- இது உடலின் முன் பக்கம் அல்லது பின்பக்கத்தில் மட்டுமே இருக்க முடியும். மேலும் உடலின் மேல் அல்லது கீழ் பாதியிலும் இருக்கலாம். மற்ற நேரங்களில், முழு உடலையும் கூட மறைத்திருக்கலாம்.
- இது மிகவும் மெல்லியதாக பரவியிருக்கலாம், சில நேரங்களில், ரப்பர் போன்ற அமைப்பையும் கொண்டிருக்கலாம்.
5. ஒருவரைச் சுற்றி கருப்பு சக்தி படலம் எவ்வாறு உருவாகிறது ?
தீய சக்திகள் ஒரு நபரின் சிந்திக்கும் அல்லது செயல்படும் திறன் அல்லது இரண்டையும் பாதிக்கும், தாக்கும், கட்டுப்படுத்தும் அல்லது சமரசம் செய்யும் நோக்கத்துடன் அந்நபரைச் சுற்றி ஒரு கருப்பு சக்தி படலத்தை உருவாக்குகின்றன. ஒரு நபரை வெளியில் இருந்து பாதிக்க இது பயன்படுகிறது. (மறுபுறம், ஒரு கருப்பு சக்தி மையத்தை நிறுவி அந்த நபருக்குள் ஒரு கட்டுப்பாட்டுப் புள்ளியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் அவரை உயர்நிலையிலான கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது அவர் மேல் ஆதிக்கம் செலுத்துவது போன்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.)
தீய சக்திகள் யாரை தாக்கி கருப்பு சக்தி படலத்தை உருவாக்கும்?
தீய சக்திகள் பொதுவாக ஒத்த அல்லது குறைவான ஆன்மீக வலிமை கொண்ட ஒருவரைத் தாக்குகின்றன (இது குறிப்பிட்ட நபரின் ஆன்மீக நிலையுடன் தொடர்புடையது).
எனவே, தாழ்ந்த நிலையிலுள்ள தீய சக்திகளால் சுலபமாக ஒரு சராசரி நபரை (ஆன்மீக நிலை 20%) சுற்றி கருப்பு சக்தி படலத்தை ஏற்படுத்த முடியும். இருப்பினும், 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவரை தாழ்ந்த நிலையில் உள்ள தீய சக்திகளால் தாக்க முடியாது, அதற்கேற்ற வலிமையுள்ள தீய சக்திகளால் மட்டுமே தாக்க முடியும்.
ஒரு ஸாதகர் ஆன்மீகப் பயிற்சியைச் செய்யும்போது, அவர்கள் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை பெறத் தொடங்குகிறார்கள். தீய சக்திகள் அவர்களைச் சுற்றி கருப்பு சக்தி படலத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதை இது கடினமாக்குகிறது.
கருப்பு சக்தி படலம் உருவாவதற்கான காரணம் என்ன ?
பொதுவாக கருப்பு சக்தி படலமானது, குறுகிய காலத்தில் இலக்கை அடையும் நோக்கத்தோடு ஒரு நபரைச் சுற்றி சில உடல்ரீதியான, மனோரீதியான அல்லது ஆன்மீக செயல்முறைகளை செய்வதற்கு உருவாக்கப்படுகிறது.
ஸ்தூல நிலையில்(மட்டத்தில்):
- எந்தவொரு உடல்ரீதியான செயல்பாடுகளின் திறனையும் குறைக்கிறது – எடுத்துக்காட்டாக, ஒருவரின் தொண்டையைச் சுற்றி கருப்பு சக்தி படலம் உருவாகும் போது அவரின் பாடும் திறன் குறைகிறது.
- நோயுற்ற உறுப்பின் நோயை அதிகரிக்கிறது
- நோயைக் கண்டறியும் திறனைத் தடுப்பது – எடுத்துக்காட்டாக, தீய சக்திகள் கருப்பு சக்தி படலத்தை எக்ஸ்ரே மேல் உருவாக்கும் பொழுது எக்ஸ்ரேவில் ஒழுங்கின்மை அல்லது உண்மைத்தன்மையை மறைத்துவிடும், இதனால் ஒரு மருத்துவருக்கு நோயின் உண்மைத்தன்மை புரியாமல் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதும் கடினமாகிறது. தீய சக்திகளால் நோய் அறிதலில் உருவாகும் தடைகள் பற்றிய ஆய்வைப் பார்க்கவும்
- மருந்தின் விளைவை அல்லது நிவாரணப்படுத்தும் செயல்முறையை குறைக்கும். மருந்தில் ஒரு கருப்பு சக்தி படலத்தை கூட உருவாக்க முடியும்.
மனோரீதியான மட்டத்தில் மற்றும் அறிவுசார்ந்த நிலையில்:
- கோபம், போதை பழக்கம், உணர்ச்சிவசப்படுதல், எதிர்மறை சிந்தனை போன்ற ஒருவரின் ஆளுமை குறைபாடுகளை அதிகரிக்கும்.
- ஒருவரின் அறிவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறைக்கும்.
ஆன்மீக நிலையில்:
- ஆன்மீக வளர்ச்சிக்கான ஒருவரின் விருப்பத்தை குறைக்கும்.
- ஒருவரை உடல், அல்லது மனோரீதியான அளவில் பாதித்து ஆன்மீகத்தைப் பரப்புவதைத் தடுக்கும்
தீய சக்திகள் எதைச் சுற்றி கருப்புப் படலத்தை ஏற்படுத்துகின்றன?
- தீய சக்திகள் ஒரு நபரை ஸ்தூல நிலையில் பாதிப்பதற்கான எளிதான வழி, அவர்களைச் சுற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட உறுப்பின் மீதோ கருப்பு சக்தி படலத்தை ஏற்படுத்துவதாகும். குறிப்பாக உடல் உறுப்பு ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த நோயை அதிகரிக்கச்செய்யும் அல்லது அதை குணப்படுத்த தடையாய் இருக்கும்.
- மனதில் உள்ள எண்ணப்பதிவுகளை சுற்றி ஒரு கருப்பு படலத்தை உருவாக்கலாம், இதனால் ஒருவரின் ஆளுமைக் குறைபாடுகளான கோபம், எதிர்மறை சிந்தனை போன்றவை அதிகரிக்கும்.
- கருப்பு சக்தி படலம் ஒருவரின் சக்கரங்களை பாதிக்கலாம். அவ்வாறு செய்யும்போது, அந்த சக்கரத்துடன் தொடர்புடைய உறுப்புகளுக்கான சூட்சும சக்தி ஓட்டத்தை அது பாதிக்கிறது. சக்கரங்களை தாக்குவது மிகவும் கடினமாக இருந்தாலும், உடலின் மீதான தாக்குதலுடன் ஒப்பிடும்போது சக்கரங்கள் மீதான தாக்குதலை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சராசரி நபருக்கு, கீழ் நிலை 3 சக்கரங்கள் பொதுவாக தாக்கப்படுகின்றன (குறிப்பாக ஸ்வாதிஷ்டான் சக்கரம் அல்லது மணிபூரக சக்கரம்). தீய சக்திகள் கருப்பு சக்தி படலத்தால் இந்த சக்கரங்களை மூடுவதன் மூலம், ஒரு நபரின் பாலியல் தொடர்பான ஆசைகள், உணவின் மீதான ஆசைகளை அதிகமாக அதிகரித்து அவரை பாதிக்கலாம் அல்லது தொந்தரவு செய்யலாம். ஸாதகர்களுக்கு, பொதுவாக ஆன்மீக பயிற்சி செய்வதைத் தடுப்பதற்காக மேல்நிலையிலுள்ள 4 சக்கரங்கள் தாக்கப்படுகின்றன. (ஏனெனில், மேல் நிலையிலுள்ள 4 சக்கரங்கள் ஆன்மீக வளர்ச்சியுடன் தொடர்புடையவை, அதே சமயம் கீழ் நிலையிலுள்ள 3 சக்கரங்கள் உலக ஆசைகளுடன் தொடர்புடையவை).
பல்வேறு சக்கரங்களைச் சுற்றி கருப்பு சக்தி படலம் உருவாக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பின்வரும் அட்டவணை விளக்குகிறது.
சக்கரத்தைச் சுற்றியுள்ள கருப்பு படலம் | விளைவு/தாக்கம் |
---|---|
ஸஹஸ்ரார சக்கரம் (கிரீட சக்கரம்) | ஆன்மீக ரீதியாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்களுக்கு தெய்வீகத்துடனான தொடர்பைத் தடுக்கிறது. |
ஆக்ஞா சக்கரம் (புருவ மைய சக்கரம்) | ஆன்மீக ரீதியான நன்மை தனக்கும், மற்றவர்களுக்கும் மற்றும் உலகத்திற்கு அப்பாற்பட்டவைகளுக்கும் அளிக்க உதவும் உயர்ந்த புத்தியின்(ஞானத்தின்) செயல்பாட்டைத் தடுக்கிறது |
விஷுத்தி சக்கரம் (தொண்டை சக்கரம்) | உலகம் சார்ந்த அறிவின் செயல்பாட்டைத் தடுக்கிறது |
அநாஹத சக்கரம் (இதய சக்கரம்) | மனதை நிலையற்றதாக்கும். உணர்ச்சிவசப்படுதல் அதிகரிக்கும். |
மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்) | உணவு மற்றும் பிற உலக ஆசைகள் மீது பேராசைப்படுதல் |
ஸ்வாதிஷ்டான் சக்கரம் | அதிகப்படியான பாலியல் உந்துதல் ஏற்படும் |
6. தற்போதைய காலகட்டத்தில் ஒருவர் எத்தனை முறை கருப்பு சக்தி படலத்தை அகற்ற வேண்டும் ?
நாம் தற்போது ஆன்மீக ரீதியாக மிகவும் பாதகமான காலத்தில் இருப்பதால், கருப்பு சக்தி படலத்தை அகற்றுவதை மக்கள் அடிக்கடி பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவர் கருப்பு சக்தி படலத்தை எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை அகற்ற வேண்டும் என்பதை விளக்க கீழே ஒரு அட்டவணையை வழங்கியுள்ளோம்.
மனிதர்களின் வகை | ஒருவரது கருப்பு சக்தி படலத்தை எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை அகற்ற வேண்டும் |
---|---|
தற்போதைய காலத்தில் சராசரி நபர் | 2 முறை (காலை மற்றும் மாலை) |
சராசரி நபர் (கடுமையான கஷ்டம் உள்ளவர் அல்லது தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்) | 6 முறை (சில மணிநேரத்திற்கு ஒருமுறை) |
ஸாதகர்கள் (ஸமஷ்டி ஸாதனா செய்பவர்) | 4 முறை |
ஸாதகர்கள் (ஸமஷ்டி ஸாதனா செய்பவர் மற்றும் கடுமையான கஷ்டம் உள்ளவர் அல்லது தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்) | 8 முறை |
ஸமஷ்டி ஸாதனா செய்பவர்கள், அதாவது சமூகம் ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைய ஆன்மீக பயிற்சியை மேற்கொள்பவர்கள், ஆன்மீக ரீதியில் விரைவான வேகத்தில் வளர்ச்சி அடைவதால் தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு இலக்காகிறார்கள். மேலும் அவர்களின் ஆன்மீக பாதைகளில் தடைகள் ஏற்படுகின்றன. இந்த காரணத்திற்காகவே, கருப்பு சக்தி படலத்தை அகற்றுவதை அடிக்கடி பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
7. கருப்பு சக்தி படலத்தை எவ்வாறு அகற்றுவது
முன்னேற்பாடு
எந்த ஒரு ஆன்மீகச் செயலையும் கடவுளிடம் பிரார்த்தனையுடன் தொடங்க வேண்டும். கருப்பு சக்தி படலத்தை அகற்ற, கீழே குறிப்பிட்டுள்ளவாறு ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ளலாம்.
‘இறைவா, என் உடம்பில் படர்ந்திருக்கும் கஷ்டம் தரும் சூட்சுமமான கருப்பு சக்தி படலத்தை சரியான முறையில் அகற்ற அருள்புரிவாயாக. மேலும் நான் அகற்றும் இந்த படலத்தால் அருகில் உள்ள யாரும் பாதிக்கப்படா வண்ணமும், தீய சக்திகளால் நான் அனுபவிக்கும் இந்த கஷ்டங்கள் விரைவில் நீங்கவும் அருள்புரியுங்கள்.
கருப்பு சக்தி படலத்தை அகற்றிய பிறகு நன்றியுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
7.1 வழி முறை 1: நாமஜபம்
ஆன்மீக உணர்வுடன் கடவுளின் பெயரை நாமஜபம் செய்வது நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் / உருவாக்கவும் செய்கிறது. இதன் மூலம் உருவாகும் ஆன்மீக சக்தி எந்த கருப்பு சக்தி படலத்தையும் அழிக்க உதவுகிறது. அதை எந்த நேரத்திலும் செய்யலாம் என்பதே இந்த முறையில் உண்டாகும் பலனாகும்.
எங்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒருவர் கீழே குறிப்பிட்டுள்ள கடவுளின் நாமஜபத்தை உச்சரிக்க துவங்குவதன் மூலம் கருப்பு சக்தி படலத்தை அகற்றலாம் என்று கண்டறிந்துள்ளோம்.
- ஸ்ரீ குருதேவ தத்த
- ஓம் நமோ பகவதே வாசுதேவாய
- ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ
ஒருவர், மேலே குறிப்பிட்டுள்ள கடவுளின் நாமங்கள் ஒவ்வொன்றையும் மாதம் ஒன்று என்ற வீதத்தில் நாமஜபம் செய்ய தொடங்கலாம். 4 வாரங்கள் ஜபித்த பிறகும் முதல் நாமஜபமான ஸ்ரீ குருதேவ தத்த நாமஜபத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், வரிசைக்கிரமப்படி அடுத்த கடவுளின் பெயரை அதாவது ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஜபிக்கத் தொடங்க வேண்டும்.
நாங்கள் மூன்று நாமஜபங்களை வழங்கியதன் காரணமாவது, மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப சில சமயங்களில் மருந்தை மாற்றுவது போல் ஆகும். மூன்று மாதங்களுக்குப் பிறகும் மேலே உள்ள எந்த நாமஜபங்களினாலும் ஒருவர் நிவாரணம் பெறவில்லை எனில், ஆன்மீக ரீதியில் வளர்ந்த ஒருவரை அணுக வேண்டும் அல்லது எங்கள் நேரடி அளவளாதல் வசதி(லைவ் சாட்) மூலம் எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஐ அணுக வேண்டும்.
கருப்பு சக்தி படலத்தை அகற்றுவதற்கு கடவுளின் நாமத்தை உச்சரிப்பதோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள வேறு ஏதேனும் சூட்சும நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
7.2 வழி முறை 2: ஒருவரின் கைகளைப் பயன்படுத்தும் முறை
நம்மைச் சுற்றியுள்ள கருப்பு சக்தி படலத்தை நம் கைகளால் அகற்றுவது ஒரு வழியாகும். நாம் இந்த முறையை எந்த நேரத்திலும் செய்யலாம் என்பதே இதன் தலையாய பலனாகும்.
கைகளை பயன்படுத்தும் முறை: மேலே உள்ள படங்களை பார்த்து புரிந்துகொள்ளவும். ஒருவரின் கைகளால், கருப்பு சக்தி படலத்தை அகற்றுவதற்கு, நம்மைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை பிடுங்கி எறிவது போல் செய்யுங்கள். மாற்றாக, நமது உள்ளங்கைகள் மற்றும் விரல்களை கொண்டு அவற்றை விலக்குவது போலவோ அல்லது அகற்றுவது போலவோ கூட செய்யலாம். நமது விரல்கள் மற்றும் உள்ளங்கைகள் தொடர்ந்து பிரணசக்தியை வெளியிடுகின்றன.இவை நமது கைகளின் இயக்கத்தால் கருப்பு சக்தி படலத்தை அகற்ற உதவுகிறது.
எங்கிருந்து தொடங்குவது: உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கருப்பு சக்தி படலம் உருவாகுவதை நீங்கள் உணர்ந்தால் (கணமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர்ந்தால்), அந்த பகுதியில் இருந்து தொடங்கவும். உதாரணமாக, உங்கள் தலையைச் சுற்றி பாரமாக உணர்ந்தால், அங்கிருந்து தொடங்குங்கள்.
மார்பு போன்ற உடலின் ஒரு பகுதியில் மட்டும் கருப்பு சக்தி படலம் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ளபடி அதை அகற்றலாம். இருப்பினும், தலை முதல் மார்பு வரை உடலின் ஒரு பெரிய பகுதியில் படலம் இருந்தால், அதை கீழே இருந்து மேலே ஒவ்வொரு நிலையிலும் அகற்ற வேண்டும். உதாரணமாக, 2-3 நிமிடங்களுக்கு மார்பில் உள்ள படலத்தை அகற்றி, பின்னர் தலை பகுதியை நோக்கி செல்லவும்.
உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க தீய சக்திகள் எந்தந்த சக்கரங்களை பாதிக்கலாம் என்பதைப் பற்றி பிரிவு 5 இல் உள்ள அட்டவணையைப் பார்க்கவும். அதன்படி, மேலே விவரிக்கப்பட்ட அதே முறையில், அந்த சக்கரத்தின் பகுதியைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை அகற்ற முயற்சிக்கவும்.
7.3 வழி முறை 3: நிவாரண பொருட்களைப் பயன்படுத்துதல்
நேர்மறை ஆற்றலை உருவாக்கும் மற்றும் எதிர்மறை அதிர்வலைகளை அகற்றும் சில குறிப்பிட்ட ஆன்மீக நிவாரண பொருட்களைப் (தயாரிப்புகளைப்) பயன்படுத்தி கருப்பு சக்தி படலத்தை அகற்றலாம். சில முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வழி முறை 3அ: ஒளிரூட்டப்படாத எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தியை பயன்படுத்துதல்
கைகளால் கருப்பு சக்தி படலத்தை அகற்றுவது போன்றே, ஒளிரூட்டப்படாத எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தியை பயன்படுத்துவதன் மூலமும், நம்மைச் சுற்றியுள்ள கருப்பு சக்தி படலத்தை அகற்றலாம். எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்திகளின் எந்த நறுமணமும் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை அனைத்தும் ஆன்மீக நிவாரண நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. கருப்பு சக்தியை அகற்றுவதற்காக, ஊதுபத்தியை உடலின் மேல், மேலிருந்து கீழாகவும், மற்றும் பின்புறமும், உடல் முழுவதும் ஊதுபத்தியை காண்பிக்கும் பொழுது, கருப்பு சக்தி படலம் சிதையத் தொடங்குகிறது.
ஒரே ஊதுபத்தியை பல முறை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது, ஏனெனில் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் கருப்பு படலம் உருவாகலாம். ஒருவர் அதை சடங்கு முறையில் ஓடும் நீரில் மூழ்கடிப்பதற்கு அல்லது சடங்கு முறையில் அப்புறப்படுத்துவதற்கு முன் பின்வரும் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது.
- நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 30 நாட்களுக்கு உங்கள் கருப்பு சக்தியை அகற்ற அதே எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தியைப் பயன்படுத்தலாம்.
- நீங்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்தினால், அதிகபட்சம் 10 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
- ஊதுபத்தி வேலை செய்யவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், புதிய ஊதுபத்தியை மாற்றிவிடவேண்டும்.
இந்த நிவாரண முறைக்கு, எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்திகளை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கிறோம், ஏனெனில் அவை அதிகபட்ச ஆன்மீக நிவாரணத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒளி மற்றும் ஆற்றல் ஸ்கேனர்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்திகளின் ஆன்மீக நிவாரண பண்புகளை உறுதிப்படுத்துகின்றன. வேறு எந்த வகையான ஊதுபத்திகளையும் நாங்கள் பரிந்துரைக்க முடியாது, ஏனெனில் நாங்கள் அவற்றில் ஆன்மீக ஆராய்ச்சியை நடத்தவில்லை. வணிகரீதியில் கிடைக்கும் சில ஊதுபத்திகள் எதிர்மறையான அதிர்வலைகளை கூட வெளியிடுகின்றன, எனவே அவை ஆன்மீக நிவாரணத்தை அளிக்காது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
வழி முறை 3ஆ: கோமூத்திரம் பயன்படுத்துதல் (இந்தியப் பசுவின் சிறுநீர்)
உயிரற்ற பொருட்களைப் பயன்படுத்தி ஆன்மீக நிவாரணம் செய்வதில், கோமூத்திரம் அல்லது இந்திய பசுவின் சிறுநீர் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக நிவாரணப்படுத்தும் கருவிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஏனென்றால் தெய்வீக உணர்வை (சைதன்யம்) ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ள இது ஆன்மீக நிவாரணப்படுத்தும் பண்புகளை அளிக்கிறது. ஒரு சில துளிகள் கோமூத்திரத்தை சேர்த்து தண்ணீரில் குளிப்பது ஒருவரைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை அகற்ற உதவுகிறது. கோமூத்திரம் பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்.
வழி முறை 3இ : பெட்டி சிகிச்சை முறை
பெட்டி நிவாரணப்படுத்தும் முறை பற்றிய எங்கள் கட்டுரையில், ஆன்மீக நிவாரணத்திற்கு எளிய வெற்று பெட்டிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறோம்.
வெற்று பெட்டிகளை சுற்றிலும் வைத்து அமர்ந்து கடவுளின் நாமத்தை உச்சரிப்பது கருப்பு சக்தி படலத்தை அகற்றுவதற்கான மிகவும் பயனுள்ள வழி என்பதை ஆன்மீக ஆராய்ச்சி மூலம் நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆன்மீக நிவாரணம் மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச தத்துவமான பரிபூரண ஆகாய தத்துவத்தின் மூலம் நடைபெறுகிறது. இந்த ஆகாய தத்துவம் பெட்டியின் வெற்றிடத்தில் உள்ளது. இந்த ஆன்மீக நிவாரணத்தில், நம்மைச் சுற்றியுள்ள கருப்புப் படலமானது, பெட்டியிலுள்ள வெற்றிடம் மூலம் உறிஞ்சி அழிக்கப்பட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஆன்மீக நிவாரண முறையில் பயன்படுத்தப்படும் பெட்டிகளை சூரிய ஒளியில் சில மணிநேரம் வைத்தோ அல்லது பெட்டியின் திறந்த உட்பகுதியினுள் ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தியை காண்பிப்பதன் மூலமாகவும், மேலும் பெட்டியைச் சுற்றி 5-7 முறையும் காண்பித்தும் சுத்திகரிக்க வேண்டும்.
வழி முறை 3ஈ: உப்பு நீர் நிவாரணம்
உப்பு நீர் நிவாரணம் என்பது ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த 15 நிமிட சிகிச்சையாகும், இது உடலில் இருந்து கருப்பு சக்தியை அகற்ற உதவுகிறது..
உப்பு நீர் தீர்வு பற்றிய முழுமையான தகவலுக்கு எங்கள் கட்டுரையை பார்க்கவும்.
வழி முறை 3உ: பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் தொகுத்த புனித நூல்களை பயன்படுத்துதல்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் தொகுத்துள்ள புனித நூல்கள் ஞான சக்தியுடன் (தியானசக்தி) தொடர்புடைய நேர்மறை ஆன்மீக ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. இந்த புனித நூல்களில் ஒளி மற்றும் ஆற்றல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி பல சோதனைகளை நடத்தியுள்ளோம். புனித நூல்கள் நேர்மறை ஆற்றலின் களஞ்சியமாக இருப்பதை கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த காரணத்திற்காக, நம்மைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை அகற்ற இந்த புனித நூல்களைப் பயன்படுத்தலாம். வழிமுறை 3அ வில் விவரிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்திகளைப் பயன்படுத்தும் அதே முறையை புனித நூல்களுக்கும் பின்பற்றவும்.
சில சமயங்களில், ஒரு உயர்நிலையிலுள்ள மகானால் எழுதப்பட்டிருந்தாலும் கூட, தீய சக்திகள் புனித நூல்களைச் சுற்றி கருப்பு சக்தி படலத்தை ஏற்படுத்தலாம். எனவே, ஒருவர் புனித நூல்களை பயன்படுத்திய பிறகு ஆன்மீக ரீதியில் அதை சுத்திகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்:
- ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்திகளை அதைச் சுற்றி காண்பித்து, அதிலிருந்து வரும் புகையை புத்தகத்தைச் சுற்றி பரவ (சூழ) விடவேண்டும்.
- எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தி கிடைக்கவில்லை என்றால், அதை 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்து சக்தி ஏற்றி, புனித உரையைச் சுற்றிக் குவிந்திருக்கும் தீயவற்றை நீக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம்.
- 30 நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு, மற்ற புனித நூல்களுடன் இந்த புனித நூலையும் வைத்துவிட்டு. அடுத்த 30 நாட்களுக்கு, ஆன்மீக நிவாரணத்திற்காக வேறு ஒரு புனித நூலைப் பயன்படுத்தலாம். இந்த முறையில் மாறி மாறி தொடரவும்.
ஆசிரியர்கள் தாங்கள் எழுதும் புத்தகங்களின் ஆன்மீக அதிர்வலைக களால் எவ்வாறு பாதிப்படைக்கிறார்கள் என்பதற்கான ஆய்வு பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்
7.4 வழி முறை 4: சூரிய ஒளி நிவாரண முறை
சூரியன் வெளியிடும் பரிபூரண தேஜ தத்துவமானது (அக்னி தத்துவம்) ஆன்மீக நிலையில் தூய்மை அளிக்கிறது. நாம் சூரிய ஒளி படும் படி அமரும்போது, பரிபூரண தேஜ தத்துவத்தின் (அக்னி தத்துவம்) பலன் தானாகவே நமக்கு கிடைக்கும். இருப்பினும், சூரிய ஒளிபடுமாறு அமர்ந்து ஆன்மீக நிவாரணம் பெற, பிரிவு 7.1 இல் பரிந்துரைக்கப்பட்டபடி ஒருவர் கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும். இதை செய்ய சிறந்த நேரம் காலை 10 மணிக்கு முன், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இதை செய்யலாம். நமது உடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் இரண்டிலும் சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும் (முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிற்கும் 10 நிமிடங்கள் என்று நேரத்தை பிரிப்பது சிறந்த பலன் தரும்).
ஏனென்றால், காலை நேரத்தில், சுற்றுச்சூழலில் அதிக அளவு ஸாத்வீகம் (ஆன்மீக ரீதியான தூய்மையானது) மேலோங்கி இருக்கும். மற்றும் பிற்பகலில், சுற்றுச்சூழலில் அதிக அளவு (ரஜ-ஸத்வ) ராஜஸீகம்-ஸாத்வீகம் மேலோங்கியதாக (குறைவான ஆன்மீக தூய்மை) மாறும்.
8. கருப்பு சக்தியை அகற்றுவதற்கான நடைமுறை குறிப்புகள்
- மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக நிவாரண முறை நுட்பங்கள் அனைத்தும் பல்வேறு பரிபூரண பிரபஞ்ச தத்துவத்தின் மூலம் பெறப்படுகிறது. இதனால், நம்மை சுற்றியுள்ள கருப்பு படலத்தை அகற்ற இந்த நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்துவது நல்லது. ஒரு மருத்துவர் சில சமயங்களில் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளை மாற்றுவது போல, ஆன்மீக நிவாரண கண்ணோட்டத்தில், நாம் எப்படி உணர்கிறோம் மற்றும் நமக்கு எந்த ஆன்மீக நிவாரண முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள கருப்பு படலம் ஒரு கையின் நீளத்தை விட அதிகமாக இருக்கலாம், எனவே ஒருவரின் கைகளைப் பயன்படுத்தி அதை அகற்றுவது கடினமாக இருக்கலாம். நீங்கள் அத்தகைய நிலையில் இருந்தால், குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் ஆன்மீக உணர்வுடன் கடவுளின் நாமஜபத்தை உச்சரிக்கவும்.
- ஒருவர் கருப்பு படலத்தை அகற்றும் போது தனி அறையில் இருப்பது சிறந்தது. இதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை என்றால், கருப்பு சக்தியை அகற்றும் போது, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் சுமார் 2 மீட்டர் அளவு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க முயற்சிக்கவும். தொடர்ந்து நாமஜபம் மற்றும் பிரார்த்தனை செய்வது தன்னையும் பிறரையும் பாதுகாக்கும். மேலும் அகற்றப்படும் கருப்பு சக்தி படலத்தால் மற்றவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
9. ஒருவரின் கருப்பு படலத்தை அகற்றிய பிறகு சுற்றியுள்ள பகுதியை எவ்வாறு சுத்தப்படுத்துவது
கருப்பு சக்தி படலத்தை அகற்றிய பிறகு, ஒருவர் ஆன்மீக ரீதியில் வளாகத்தை சுத்தப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதைச் செய்ய சில வழிகள் உள்ளன.
- வீட்டின் உட்புற சுற்று வட்டத்தில் ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஊதுபத்தியை கடிகாரத்தின் எதிர்திசை சுற்றாக காண்பிக்கலாம். இவ்வாறு செய்வதால் கடவுளின் அழிக்கும் தத்துவம் செயல்பட்டு, இது தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பளித்து, அவற்றின் தாக்குதல்களை முறியடிக்கிறது .
- வளாகத்தில் குறைந்த ஒலியில் (மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) ஒரு நாமஜபத்தை (ஓம் நமோ பகவதே வாசுதேவாய) ஒலிக்க விடலாம். நாமஜபத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
- ஸந்த் பக்தராஜ் மஹராஜ் இசையமைத்து பாடிய பஜனைகளை (பக்திப் பாடல்கள்) ஒலிக்க விடலாம்.
10. நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துக்கள்
- நம்மைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை அகற்றுவது ஒவ்வொரு நாளும் செய்யப்பட வேண்டும்.
- அதைச் செய்யாமல் இருப்பது, நாம் செய்யும் எவ்வித ஆன்மீக முயற்சியின் பலனையும் கிடைக்காமல் செய்துவிடும்.
- மேற்கூறிய ஆன்மீக நிவாரண முறைகளை தொடர்ந்து செய்து வருவதால், லேசான தன்மை, தெளிவு, உற்சாகம் போன்ற உணர்வுகள் அதிகரித்து ஆன்மீக பயிற்சியில் முயற்சிகளை மேற்கொள்ள உதவுகிறது.