ஆடைகளில் இருந்து துர்நாற்றத்தை அகற்றி நமது உடமைகளை எப்படி பாதுகாப்பது

ஆடைகளில் இருந்து துர்நாற்றத்தை அகற்றி நமது உடமைகளை எப்படி பாதுகாப்பது

இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரையை நன்கு அறிந்திருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்

  • ஆடைகளும், வாசனையும்ஆடைகளில் நல்ல மற்றும் தீய சக்திகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

அட்டவணை

1. முன்னுரை

நம் உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஆடைகள் மற்றும் நமது தனிப்பட்ட உடமைகளேயாகும். நல்ல மற்றும் தீய சக்திகளால் வாசனை மட்டத்தில் ஆடைகளில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இன்றைய காலகட்டத்தில் தீய சக்திகள் மிகவும் செயல்பாட்டுடன் இருப்பதால், அவை நம் ஆடையில் விரும்பத்தகாத வாசனையையும், சூட்சும கருப்புசக்தி படலத்தை உருவாக்குதல் போன்ற பல வழிகளில் நம்மை பாதிப்படையச் செய்கின்றன.

நமது அன்றாட வாழ்க்கையிலும், ஆன்மீகப்பயிற்சியிலும் தடைகள் உருவாக்கும் இந்த சூட்சும வாசனை மற்றும் கருப்பு சக்தி படலத்தைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்து இருக்காது. ஆன்மீக பயிற்சியின் மூலம் பெறப்பட்ட ஆன்மீக சக்தியை 70% வரை நமது ஆடைகள் மற்றும் தனிப்பட்ட உடமைகள் மீது அவற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் பயன்படுத்தவேண்டும்.

இந்தக் கட்டுரை உங்கள் ஆடைகள் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிய உதவுவதோடு உடமைகளை ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்தவும், தீய சக்திகளின் தாக்குதல்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் பரிந்துரைக்கிறது.

தீய சக்திகளால் பாதிக்கப்படாத ஆடைகளுக்கு கூட ஆன்மீக நிவாரண முறைகள் ஒரு தடுப்பு நடவடிக்கையாக, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. நமது ஆடைகள் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறிவது

2.1 கண்களால் எளிதில் அடையாளம் காணக்கூடியது

உயிரற்ற பொருட்களின் மீதான தீய சக்திகளின் தாக்குதல்கள் என்ற பிரிவில், தீய சக்திகள் ஏற்படுத்தும் பார்வைக்கு புலப்படும் பல்வேறு வகையான பாதிப்புகளை பற்றி விளக்கியுள்ளோம்.

நமது ஆடைகளை பரிசோதிப்பதில் விழிப்புடன் செயல்பட்டு கீழே கூறியுள்ளபடி ஸ்தூல (பௌதீக) ரீதியான சாத்தியமான காரணங்களை அறிவுப்பூர்வமாக நிராகரிக்கலாம் :

  • ஆடைகள் அல்லது பொருட்களின் மீது எதையாவது தெளித்து அல்லது கொட்டிவிட்டேனா?

  • என்னை அறியாமல் காயம் அடைந்து அதனால் ஆடைகளில் இரத்தக் கறை ஏற்பட்டதா?

  • துவைக்கும் போது துணி மென்மையாக்கி, வாசனை திரவியம், அல்லது வேறு விதமான சோப்புகளைப் பயன்படுத்தியுள்ளேனா?

2.2 சூட்சும புலன்கள் மூலம் அடையாளம் காணக்கூடியவை

சூட்சும நிலையில், தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆடைகளை அடையாளம் காண, அவற்றிலிருந்து நாம் என்ன உணருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள சில நிமிடங்கள் செலவிடவேண்டும்.

அதற்கு முன்பு கீழ்கண்டவாறு பிரார்த்தனை செய்யலாம் :

கடவுளே, ஆன்மீக பரிமாணத்தின் இந்த அனுபவத்தில் இருக்கும் தடைகளை நீக்கி தீய சக்திகள் தலையிடாதவாறு செய்து ந்த ஆடைகள் கருப்பு சக்திகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க எனக்கு உதவுங்கள்.”

உடல், மனம் மற்றும் அறிவுசார்ந்த நிலையில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்தலாம். தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களுக்கான சில அறிகுறிகள் :

  • ஒருவர் குமட்டல் உணர்வை உணருதல் அல்லது வாந்தி எடுப்பது

  • ஆடைகளை வைத்திருக்கும்போது கைகள் அல்லது தலையில் பாரமாக உணருவது

  • பல்வேறு தேவையற்ற எண்ணங்கள் மனதில் வர ஆரம்பித்தல் அல்லது மனமும் புத்தியும் மரத்துப் போக துவங்குதல்

  • நாமஜபம் அல்லது இறைச்சிந்தனை நின்றுவிடுதல்

ஒருவர் சூட்சும நுகர்வு, பார்வை, தொடுதல் போன்றவை மூலம் ஆடைகளில் கருப்பு சக்தி இருப்பதை எவ்வாறு உணரமுடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சூட்சும உணர்வு

எந்த பரிபூரண பிரபஞ்ச தத்துவதுடன் தொடர்புடையது அனுபவம்

சூட்சும மணம்

பரிபூரண நில தத்துவம்

ஆடைகளை 5-6 முறை முகர்ந்து துர்நாற்றம் ஏதும் உள்ளதா என்று பார்க்கவும். ஆடையின் நுனி மற்றும் கடைசிப்பகுதிகளில் கருப்பு சக்தி வெளிப்படுதல் அதிகமாக இருப்பதால், அப்பகுதிகளிலும் சட்டைகளில் கழுத்து, அக்குள்கள் மற்றும் சில சமயங்களில் நடுப்பகுதிலும் கூட துர்நாற்றம் வீசும்.

துர்நாற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் கருப்பு சக்திகளின் அளவை (அதாவது லேசானதா, மிதமானதா அல்லது தீவிரமானதா) என்று தீர்மானிக்க முடியும்.

  • மூக்கின் முன் ஆடையை வைத்துக்கொண்டு ஒருவர் முழுமையான மூச்சு எடுத்தால் (காற்று முழுமையாக நுரையீரலை அடைகிறது), அது லேசான பாதிப்பின் அறிகுறியாகும்.
  • மூக்கின் முன் பொருளைப் பிடித்துக் கொண்டு பாதி அளவு மட்டுமே காற்றை உள்ளிழுக்க முடிந்தால், அது மிதமான பாதிப்பின் அறிகுறியாகும்.
  • மூக்கின் முன்னால் துணிகளை வைத்திருக்கும் போது மூச்சை உள்ளிழுக்க முடியாவிட்டால், மூச்சுத் திணறல் அல்லது இருமல் இருந்தால், அது தீவிரமான பாதிப்பின் அறிகுறியாகும்.

சூட்சும பார்வை

பரிபூரண நெருப்பு தத்துவம்

மேம்பட்ட சூட்சும திறன் உள்ள ஒருவரால் ஆடையைப் பார்ப்பதன் மூலம் கருப்புசக்தி படலம் இருப்பதை உணரமுடியும். இந்த ஞானம் பரிபூரண நெருப்பு தத்துவத்தின் நிலையில் பெறப்படுகிறது.

சூட்சும தொடு

உணர்வு

பரிபூரண காற்று தத்துவம்

கருப்பு சக்தியால் தாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படாத ஆடைக்கு இடையே உள்ளே வித்தியாசத்தை ஒருவரால் ஆடையை தொடும்போது கவனிக்க முடியும். உதாரணமாகப் பட்டால் நெய்யப்பட்ட ஆடை கூட கடினமானதாக இருக்கும்.

மேலும், ஆடைகளை நம் கைகளில் வைத்திருக்கும் போது, ​​அவற்றின் உண்மையான எடையை விட கனமாக உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்கலாம். ஆடைகள் வழக்கத்தை விட கனமாக இருப்பதற்கு அதற்குள் இருக்கும் கருப்பு சக்தியின் அளவு அதிகரிப்பின் காரணமாக இருக்கலாம். இந்த ஞானம் பரிபூரண காற்று தத்துவத்தின் நிலையில் பெறப்படுகிறது.

3. ஆன்மீக நிலையில் ஆடைகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது

3.1 துணிகளைத் துவைத்தல்

துணிகளைத் துவைப்பதன் மூலம் துர்நாற்றத்தின் தீவிரம் குறைகிறது. ஆடையில் இருக்கும் நிலத்தத்துவத்தின் மீது பரிபூரண நீர் தத்துவம் செயல்படுவதால் தீய சக்தி அழிக்கப்படுகிறது.

படி1 படி2 படி3
sea-salt prayer boxes-washing-machine
துணிகளை ஊறவைக்க அல்லது துவைக்கப் பயன்படும் தண்ணீருடன் கல் உப்பு அல்லது எஸ்.எஸ்.ஆர்.எஃப் தூபக் குச்சிகளிலிருந்து கிடைக்கும் புனித சாம்பலை (விபூதி) கலக்கவும். கல் உப்பு கிடைக்காவிட்டால் , கடல் உப்பு படிகங்கள்/ டேபிள் உப்பைப் பயன்படுத்தலாம், ஆனால் இதன் செயல்திறன் கல்லுப்பைப் பயன்படுத்திக் கிடைப்பதை விட 30% குறைவானதாக இருக்கும். கடவுளிடமும், துணிகளை ஊறவைப்பதற்கும் துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள தெய்வீக நீர் தத்துவத்திடமும், ஆடைகளில் உள்ள கருப்பு சக்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடையும் தூய்மையாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். வாஷிங் மெஷினின் மேல் இரண்டு சிறிய அளவிலான வெற்றுப்பெட்டிகளை வைக்கவும் (ஒரு பெட்டியின் திறந்த முனை துணிகளின் திசையையும், மற்ற பெட்டியின் திறந்த முனை மேல்நோக்கியும் இருக்குமாறு வைக்கவும்). துணிகள் மற்றும் வாஷிங் மெஷினிலிருந்துகருப்பு சக்தியை பெட்டிகளுக்குள் இழுக்க பிரார்த்தனை செய்யவும்.

வேறு சில முக்கியமான குறிப்புகள் :

  • சலவைப்பொடி/ டிடர்ஜெண்ட் மற்றும் துணி மென்மைப்படுத்திகள் வலுவான மணம் கொண்டிருக்கக் கூடாது, ஏனெனில் அதில் நிறைய இரசாயனங்கள் இருப்பதால் அவை கஷ்டம் தரும் சக்திகளை ஈர்க்கும். துணி மென்மைப்படுத்திகள் ஆடைகளுக்கு மாயை மணத்தை அளித்து அவற்றை எதிர்மறையாகப் பாதிப்பதால் முடிந்தளவு அதை பயன்படுத்த வேண்டாம்.

  • கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆடைகளை, மிதமான அல்லது லேசான பாதிப்புள்ள ஆடைகளுடன் கலக்கக்கூடாது. மிகவும் பாதிக்கப்பட்ட ஆடைகளில் இருந்து வரும் தீய சக்தி மற்ற ஆடைகளை பாதிக்கும்.

3.2 ஆடைகளை உலர்த்துதல்

ஆடைகளை வெயிலில் உலரவைத்தால் அவற்றிலுள்ள தீய சக்திகள் பரிபூரண நெருப்பு தத்துவத்தின் காரணமாக வேகமாக அழிக்கப்படுகின்றன.

படி 1 படி 2
keep-laundry-in-sun laundry-at-sunset
ஆடைகளை முடிந்தவரை வெளியே வெயிலில் அதிக நேரம் உலர விடவும். ஆடைக்குள் இருக்கும் கருப்பு சக்தி அனைத்தும் அழிக்கப்பட்டு, சைதன்யத்துடன் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று சூரிய தெய்வமிடம் நாம் பிரார்த்தனை செய்யலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தீய சக்திகளின் தாக்கம் இருப்பதால், ஆடைகளை சூரியன் மறைவதற்குள் உள்ளே எடுத்து வையுங்கள்.

வேறு சில முக்கியமான குறிப்புகள் :

  • ஆடைகளை துவைத்தபின் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அவைகளில் துர்நாற்றம் ஏற்படும். எனவே, அவற்றை விரைவில் உலரவைக்க வேண்டும். மேலும் அவை தீய சக்திகளால் தாக்கப்படாமல் இருக்க பிரார்த்தனை செய்யலாம்.
  • ஆடைகளை வெயிலில் காயவைக்க இடமில்லை என்றால், பரிபூரண காற்றுத் தத்துவத்தின் மூலம் ஆன்மீக நிவாரணமடைய பிரார்த்தனை செய்யலாம். ஊதுபத்தியிலிருந்து வரும் புகை துணிகளின் மேல் செல்லும் வகையில் தொங்கும் ஆடைகளுக்குக் கீழே ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம்.

3.3 உலர்த்திய பிறகு

படி 1: ஆடைகளை அதன் பாதிப்பு நிலைக்கு ஏற்ப வகைப்படுத்தவும் படி 2: ஆன்மீக நிவாரண முறையைப் பயன்படுத்துங்கள்
clothes-stack spiritual-healing-methods
இலேசான, மிதமான மற்றும் தீவிரமான பாதிப்புடைய ஆடைகளை தனித்தனியான இடங்களில் வைக்கலாம்.

> எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் சாம்பலை (விபூதி) துணிகளில்

> துணிகளைச் சுற்றி வெற்றுப் பெட்டிகளை வைக்கலாம். இதனால் பெட்டிகளில் செயலில் உள்ள பரிபூரண ஆகாயத் தத்துவத்தின் காரணமாக ஆடைகளில் உள்ள கருப்பு சக்தி அழிக்கப்படுகிறது.

> தெய்வங்களின் படங்கள் அல்லது நாமப்படிவங்களை ஆடைகளிலும் அவற்றைச் சுற்றிலும் வைக்கவும். தீய சக்திகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் ஆடையின் பாகங்களில் தெய்வத்தின் படங்களை வைக்கவும். உதாரணமாக ரவிக்கை மற்றும் சட்டைகளின் உள்ளே,மேலும் சட்டைகள், கோட்டுகள் அல்லது சூட்டுகள் போன்றவை பெரும்பாலும் ஹேங்கரில் தொங்கவிடப்படுவதால், ஒவ்வொரு ஹேங்கரிலும் நாமப்படிவங்களை பயன்படுத்தலாம்.

> தெய்வீக உணர்வு நிறைந்த இடத்தில் எப்போதாவது ஆடைகளை வைக்க முயற்சி செய்யலாம், உதாரணமாக வீட்டின் வழிபாட்டு அறை அருகில்.

3.3.1 நாமப்படிவங்கள் மற்றும் தெய்வங்களின் படங்களின் வழி ஆன்மீக நிவாரண அடையும் முறை

நாமப்படிவங்கள் என்றால் என்ன? தெய்வங்களின் படங்கள் என்றால் என்ன?
தெய்வீகத் தத்துவத்தின் பெயர்களை எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட காகிதத் துண்டுகளே நாமப்படிவங்களாகும். அவை குறிப்பிட்ட தெய்வத்தின் நாமஜபம் செய்ய நினைவுபடுத்துகின்றன. அவை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து ஆன்மீக நிவாரணமும் தருகின்றன. ஆன்மீக ஞானத்தின் படியோ அல்லது உன்னத ஆன்மீக நிலையில் உள்ளவர் மூலம் எழுதப்பட்ட தெய்வ நாமமுடைய படிவங்களின் ஆன்மீக நிவாரண திறமை அதிகளவு இருக்கும். தெய்வங்களின் படங்கள் கடவுளின் நேர்மறை அதிர்வலைகளை ஈர்க்கின்றன. அவை பக்தியை அதிகரிக்க உதவுவதோடு ஆன்மீக நிவாரணத்தையும் செய்கின்றன. ஆன்மீக ஞானத்தின் படி படங்கள் வரையப்பட்டால், இன்றைய காலகட்டத்தில் அந்த குறிப்பிட்ட தெய்வீகத் தத்துவத்தை 30% வரை ஈர்க்க முடியும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தெய்வங்களின் படங்கள் 1 – 2% தெய்வீகத் தத்துவத்தையே ஈர்க்கின்றன.
chanting-strips-one-set deities-pictures-small-shri-krishnadeities-pictures-datta

3.3.2 ஆடைகள் மற்றும் தனிப்பட்ட உடமைகளுக்கான பல்வேறு ஆன்மீக நிவாரண முறைகளின் செயல்திறன்

நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு ஆன்மீக நிவாரண முறைகளின் செயல்திறனைப் பற்றிய தகவல்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:

வரிசை எண் ஆன்மீக நிவாரண முறை ஆன்மீக நிவாரண தீர்வின் காலம் (நாட்களில்) இந்த நிவாரணத்தால் எந்த பாதாளலோக நிலை வரையுள்ள தீய சக்திகள் பாதிக்கப்படும்?
1 பொருட்களை வெயிலில் வைத்திருத்தல் 15 3
2 எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் விபூதியைப் பொருட்களின் மீது பயன்படுத்துதல் 8 3-4
3 ஏற்றப்பட்ட ஊதுபத்திக்கு அருகில் உடமைகளை வைத்தல் 8 4
4 தெய்வங்களின் படங்களுக்கு இடையில் உடமைகளை வைத்தல் 8 4
5 ஆடைகளை நோக்கியவாறு அவற்றை சுற்றி நான்கு ஆன்மீக நிவாரண பெட்டிகளை வைப்பது 6 4
6 பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் கையெழுத்துடைய காகிதத்தை ஆடைகளில் வைத்து, அவற்றைச் சுற்றி இந்த நாமப் படிவங்களை வட்டமாக வைத்தல். 4 5
7 ஆடைகள் மீது சூன்யஎன்ற நாமப்படிவத்தை வைத்து அதே நாமப்படிவங்களை ஆடைகளை சுற்றி வட்டமாக வைத்தல். 4 5
8 ஆடைகள் மீது மஹாசூன்யஎன்ற நாமப்படிவத்தை வைத்து அதே நாமப்படிவங்களை ஆடைகளை சுற்றி வட்டமாக வைத்தல். 3 6
9

ஸந்த் பக்தராஜ் மஹராஜ் அவர்களின் பக்தி பாடல்கள் ஒலிக்கும் இடத்திற்கு அருகில் உடமைகளை வைப்பது

*ஸந்த் பக்தராஜின் பக்தி பாடல்கள் (பஜன்)

பதிவிறக்கம்

3 6
10

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சொற்பொழிவு ஒலிநாடா ஒலிக்கும் இடத்திற்கு அருகில் உடமைகளை வைப்பது

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதல்

பதிவிறக்கம்

3 6
11 ஆடைகள் மீது ஓம்என்ற நாமப்படிவத்தை வைத்து அதே நாமப்படிவங்களை ஆடைகளை சுற்றி வட்டமாக வைத்தல். 3 6
12 (இந்த அதிர்வலைகள் மூன்று அடிப்படை கூறுகளுக்கு அப்பாற்பட்டவை) 3 6

அனைத்து ஆடியோ கோப்புகள் © www.ssrf.org

* ஸந்த் பக்தராஜ் மஹராஜ் அவர்கள் ஒரு நிர்குண (வெளிப்படாத) நிலையிலுள்ள மகான் ஆவார். அந்நிலையில் இருந்து அவரால் அனைத்தையும் உருவாக்க முடியும். எனவே, அவரது பக்திப் பாடல்கள் ஆன்மீக உணர்வு, தெய்வீக சைதன்யம் மற்றும் அமைதி ஆகியவற்றின் ஆன்மீக அனுபவங்களை அளிக்கும். அவரது பக்திப் பாடல்களைக் கேட்பது பரிபூரண ஆகாயத்தத்துவதுடன் தொடர்புடைய ஒரு தீர்வாக அறிவுறுத்தப்படுகிறது.

4. மேற்கூறிய வழிமுறைகளை தினமும் செயல்படுத்துதல்

மேற்கண்ட அனைத்து நிவாரணங்களையும் தினமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு முன், உங்களின் ஆடைகளைச் சரிபார்த்து, பாதிக்கப்படாத ஆடைகளை மட்டும் அணியுங்கள். அத்தகைய ஆடை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இலேசான பாதிப்புள்ள ஆடைகளை அணியலாம். ஆடைகள் தெய்வீக சைதன்யத்துடன் இருந்தாலும், அவை எந்த நேரத்திலும் தாக்கப்படலாம். எனவே, நாள் முழுவதும் ஒரு சீரான இடைவெளியில் ஆடைகளை நுகர்ந்து அதன் வாசனையை அறிந்து வைத்திருப்பது முக்கியம்.

ஒரு ஆடையின் நுனியை நாம் முகர்ந்து துர்நாற்றத்தை கண்டால், கஷ்டத்தின் தீவிரத்தை குறைக்க உதவும் விபூதியை அதில் தடவலாம்.

5. நமது மற்ற தனிப்பட்ட உடமைகளின் மீது ஆன்மீக தூய்மைப்படுத்துதல்

மேற்கூறிய அதே முறையை நாம் உபயோகிக்கும் மற்ற உடமைகளான துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிற பொருட்களான கண்ணாடிகள், கடிகாரங்கள், நகைகள், சீப்புகள், காலணிகள் போன்றவற்றையும் ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்தலாம் :

  • எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து வெளிப்படும் புகையை அந்த பொருட்கள் மேல் படரவிடுதல்.
  • எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து கிடைக்கும் விபூதியை அவற்றின் மீது தடவுதல்
  • பயன்பாட்டில் இல்லாத போது அவற்றை ஒரு பெட்டியில் வைப்பது
  • நாமப்படிவங்களை அதன் மேல் ஒட்டி வைத்தல்.
  • பயன்படுத்தப்படாத போது அவற்றை ஒரு புனித நூலினுள் வைப்பது.
  • சூரிய ஒளியில் அடிக்கடி(தொடர்ந்து) அவற்றை வைத்திருப்பது.

6. செயற்கையான வாசனை திரவங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்

ஆடைகள் நல்ல வாசனையுடன் இருக்க வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது. பெரும்பாலான மக்கள் வியர்வை நாற்றத்தைத் தடுக்க டியோடரண்டைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதற்குப் பதிலாக கைகளுக்குக் கீழே அக்குள் பகுதிகளில் ரசாயனம் இல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம்.

பிரபஞ்சத்தின் முந்தைய காலங்களில், மனிதர்கள் தவறாமல் ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டனர். அந்த காலங்களில், முனிவர்கள் மற்றும் துறவிகளின் உடல்கள் அவர்களின் ஆன்மீக பயிற்சியால் நல்ல வாசனையுடன் இருக்கும். தற்போதைய கலியுகத்தில், பெரும்பான்மையான மக்கள் ஆன்மீக பயிற்சியை செய்யாததால் செயற்கை வாசனை திரவங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கூட்டு ஆன்மீக நிலையின் சரிவால், ஸாத்வீ வாசனை திரவங்களுக்குப் பதிலாக ரஜதம ஆதிக்கம் உள்ளவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இவை ஒரு மாயையை அல்லது இயற்கைக்கு மாறான வாசனையைக் கொண்டுள்ளதால், அவை தீய சக்திகளை ஈர்க்கின்றன.

7. முடிவுரை

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் பயன்படுத்தும் உடைகள் மற்றும் உடமைகளின் மீது கருப்பு சக்தி படலத்தை உருவாக்குவதன் மூலம் தீய சக்திகள் எளிதில் நம்மை பாதிக்கலாம். மேற்கூறிய நிவாரணங்களைப் பின்பற்றுவதன் மூலமும், நமது உடமைகளை ஆன்மீக ரீதியில் தொடர்ந்து தூய்மைப்படுத்துவதன் மூலமும் இவற்றை தவிர்க்கலாம். மேலும் நமது ஆன்மீக பயிற்சியிலிருந்து தெய்வீக உணர்வைப் பெறுவதற்கான திறனையும் அதிகரிக்கலாம்.